பேச்சு , கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யும் குழுக்களை அடையாளப்படுத்தி அவர்களின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கான சட்டசீர்திருத்தங்கள் உருவாக்கப்படுகின்றன.” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ள போது ,
சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அரசாங்கத்தின் திட்டங்களிற்கு எதிராகவும் சிலகுழுக்கள் தவறான தகவல்களை பரப்புகின்றன எனவும் இந்த தவறான தகவல்கள் பொதுமக்களை பிழையாக வழிநடத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சு , கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்வதை சகித்துக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ள அவர், இந்த குழுக்களை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கான சட்டசீர்திருத்தங்களை உருவாக்கிவருவதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இவ்வாறான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர் இந்த சட்டங்கள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் இலங்கையின் சூழமைவிற்கு பொருத்தமான சட்டமுறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.