அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

100 சதுர கிலோ மீற்றருக்குள் புலிகள் முடக்கம்; படைகளால் புதுக்குடியிருப்பு சுற்றிவளைப்பு

udaya_nanayakkara_.jpgமுல்லைத் தீவில் புலிகள் தற்போது 100 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் முடக்கப்பட்டிருப்பதாக இராணு வப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவி த்தார்.

இராணுவத்தின் இரண்டு படையணிகளும், மூன்று படைப்பிரிவுகளும் புதுக்குடி யிருப்பை சுற்றிவளைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

மூன்றாம் படையணி புதுக்குடியிருப்பின் தெற்காகவும், நான்காம் படையணி தென்மேற்காகவும் முன்னேறிவரும் நிலையில், 53 ஆம் படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பு நகருக்கு 800 மீற்றர் தொலைவை நெருங்கி விட்டதாகவும் பிரிகேடியிர் நாணயக்கார தெரிவித்தார்.

 புலிகளின் ஆயுத பலம் முற்றாக ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே வேளை, 20-22 சதுர கிலோ மீற்றர் பரப்பைக்கொண்ட பாதுகாப்பு வலயத்தை நோக்கி பெருந்தொகையான சிவிலியன்கள் வந்துள்ளதாகக் கூறிய பிரிகேடியர், இதுவரை 35,756 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஜனவரி மாதத்தில் 3848 பேரும், பெப்ரவரி மாதத்தில் இதுவரை 31,908 பேரும் வருகை தந்துள்ளதாக பிரிகேடியர் தெரிவித்தார்.

இவ்வாறு வருகை தந்தவர்களுள் 1117 நோயாளர்களும், 494 உதவியாளர்களுமாக 1611 பேர் 5 தடவைகளில் சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கொண்டு வரப்பட்டதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தற்போது புலிகளுக்கு வெள்ளையடிக்கிறார்கள் – கெஹலிய ரம்புக்வெல

kahaliya.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அண்மைக்காலமாக வெளியிடும் கருத்துக்கள் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றனர் என்ற சந்தேகத்தை எமக்குத் தோற்றுவித்துள்ளது.  முற்றிலும் பொறுப்பற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கி, புலிகள் இயக்கத்துக்கு பக்கச்சார்பாக சம்பந்தன் செயற்படுகிறாரென பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முல்லைத்தீவில் சிக்குண்டிருக்கும் பொதுமக்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றிக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருந்தும், அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகக் கூறுவது எந்த வகையிலும் நியாயமற்றதென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (18) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அவர் தெரிவித்த கூற்றுகளையிட்டுத் தாம் கவலையடைவதாகத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, இதன் மூலம் சம்பந்தனின் செயற்பாடுகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

சிவிலியன்கள் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள் என்பது முற்றிலும் பொறுப்பற்ற ஒரு கூற்றாகும். சிவிலியன்களைப் பாதுகாப்பாக மீட்டெடுக்கும் நடவடிக்கையிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு இல்லாவிட்டால், எஞ்சியிருக்கும் பகுதியை படையினர் எப்போதோ கைப்பற்றியிருப்பார்கள்.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு வலயமொன்றை முதலில் அரசாங்கமே ஏற்படுத்தியது. நிலப்பரப்பு குறுகக் குறுக கடற் பிரதேசத்தில் பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டது என்று தெரிவித்த அமைச்சர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தற்போது புலிகளுக்கு வெள்ளை யடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும் சம்பந்தன் புலிகளுக்காகக் குரல் எழுப்புகிறாரெனத் தயங்காமல் கூறமுடியும் என்றும் தெரிவித்தார்.

அரசாங்கம் போர் நிறுத்தமொனறை மேற்கொள்ளுமாக இருந்தால், புலிகளும் அதற்கு உடன்படுவார்கள் என்று சம்பந்தன் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. கடந்த காலங்களில் போர்நிறுத்தம் என்ற போர்வையில் புலிகள் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை முழு உலகுமே அறியும். ஆனால், சம்பந்தன் சிறுபிள்ளைத்தனமாகக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றார். உண்மையில் இது வெட்கத்துக்கும், வேதனைக்கும் உரிய விடயமாகும். சம்பந்தன் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக புலிகள் இயக்கத்துக்காகக் குரல்கொடுத்து வந்துள்ளார். தற்போதும் அதனைச் செய்கின்றார் என்ற அமைச்சர்

அப்பாவி மக்களை எல். ரி. ரி. ஈயினர் சுடுகிறார்கள் என்பதை ஏற்க முடியாது என்கிறார். என்ன நடக்கிறது என்பது உலகறிந்த விடயமாக இருந்தாலும், சம்பந்தன் புலிகளின் பயங்கரவாதத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றார். இதிலிருந்து அவர் புலிகளுக்காக ஆஜராகின்றார் என்பதில் சந்தேகமில்லை என்று கூறினார். சிவிலியன்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு புலிகளுக்கும் கோரிக்கை விடுக்கும் தார்மீக கடமையும், பொறுப்பும் கூட்டமைப்பினருக்கு இருக்கின்றது. எனினும், அதனைச் செய்கிறார்கள் இல்லை. பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதென்ற ஒரு கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகின்றது. அதற்கு நடந்துமுடிந்த மாகாண சபைத் தேர்தலிலும் மக்கள் மீளவும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள்.

வரலாற்றில் முதன் முறையாக 70% மக்கள் தேர்தலில் வாக்களித்து அரசாங்கத்தின் செயற்பாடுகளை மீள உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்று தெரிவித்த அமைச்சர், சிவிலியன்களுக்காக 40 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை விநியோகிக்கும் பணியில் படையினர் ஈடுபட்டுள்ளார்க ளென்றும் தெரிவித்தார்.

வன்னியில் 3,50,000 சிவிலியன்கள் இருப்பதாக சம்பந்தன் கூறுகிறார். வேறு சிலர் 250,000 என்கிறார்கள். 1,30,000 என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். என்றாலும் சம்பந்தனின் கூற்று முற்றிலும் புலிகளுக்குப் பக்கச் சார்பானதாகும் என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

சிவிலியன்களின் வருகை மந்தமாகவில்லை. வேகமடைந்துள்ளது. என்றாலும் படையினர் தமது இலக்கை நோக்கி மிகவும் தந்திரோபாயமான முறையில் முன்னேறி வருகின்றனர். இது மிகவும் கடினமானது. சிவிலியன்களைப் புலிகள் விடுவித்தால் பிரச்சினை தீர்ந்துவிடும். புலிகளுடன் நேரடியாகப் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் கூறினார்.

இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரம்புக்வெல்லவுடன் ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார, கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி. கே. பி. தசநாயக்க, விமானப்படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ். எஸ். பீ. ரஞ்சித் குணசேகர உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்றில் விடுமுறை பெற்று நாட்டுக்கு எதிரான நடவடிக்கை
அரசு கவலை தெரிவிக்கிறதென்கிறார் அமைச்சர் தினேஷ்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத் திலிருந்து விடுமுறை பெற்றுக் கொண்டு நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையிட்டு அரசாங்கம் கவலை தெரிவிக்கின்றது என ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கே. சிவாஜிலிங்கத்தின் விடுமுறை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்ட போதே அமைச்சர் தினேஷ் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். பி. சொலமன் சிறில், சிவாஜிலிங்கம் எம். பிக்கான மூன்று மாத விடுமுறை கோரி பிரேணையை சமர்ப்பித்தார். அத்துடன் அதற்கான அனுமதியைச் சபையில் கோரினார்.

அவ்வேளையில், குறுக்கிட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை வழங்குவது பற்றி எமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. எனினும் இத்தகைய விடுமுறையைப்பயன்படுத்தி நாட்டிற்கும் நாட்டின் இறைமைக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதே கவலைக்குரிய விடயம் எனவும் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபை தேர்தல் முடிவு ஐ.தே.க. வழக்குத் தொடரத் திட்டம்

justice.jpgமத்திய மாகாண சபைத் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி வழக்குத் தொடரத்திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட உறுப்பினர்கள் பல்வேறு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணசபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துகள் மிகவும் மோசமான வகையில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக கட்சி குற்றஞ் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து தேர்தல் சட்ட விதிகளுக்கு புறம்பான வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையில் நேற்று விசேட சந்திப்பொன்றும் நடைபெற்றுள்ளது.

‘முல்லைத்தீவுக்கு உணவுப் பொருட்கள் சென்றடைந்தன’

red-cross-srilanka.jpgஇலங்கை அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் இன்று முல்லைத்தீவை வந்தடைந்ததாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன் பல நோயாளர்கள் நேற்று (18) கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை இன்னமும் அங்கு உணவுப்பற்றாக்குறையும், குடிநீருக்கான தட்டுப்பாடும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றும் எறிகணை வீச்சுக்கள் நடந்து, அங்கு பலர் கொல்லப்பட்டதாகவும், 12 பேரது சடலங்கள் நேற்று புதுமாத்தளனில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் டாக்டர் சத்திய மூர்த்தி கூறினார்.

கடுமையான வெயில் காரணமாகவும், தூய்மையற்ற சூழ்நிலை காரணமாகவும் பல தொற்று நோய்கள் அங்கு பரவிவருவதாகவும், அவற்றை எதிர்கொள்வதற்கான மருத்துப் பொருட்களோ அல்லது ஏனைய மருத்துவ வசதிகளோ தம்மிடம் கிடையாது என்றும் அவர் கூறினார்.

வடமாகாணத்தையும் முழுமையாக மீட்ட பின்னர் முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யத் திட்டம்- அமைச்சர் பந்துல குணவர்தன

பயங்கரவாதிகளிடமிருந்து வட மாகாணத்தை முழுமையாக மீட்கப்பட்ட பின்னர் முழு நாட்டையும் உரிய முறையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். அண்மையில் கலேவள நகரில் நடைபெற்று கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

எமது தாய் நாடான இலங்கையில் சில பிரதேசங்களை புலிப்பயங்கரவாதிகள் பல வருடங்களாக ஆக்கிரமித்து வந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த வழிகாட்டலில் முப்படையினர் பயங்கரவாதிகளுக்கெதிராக கடுமையாக போராடி அப்பிரதேசங்களை மீட்டுள்ளன. மீட்கப்பட்ட பிரதேசங்கள் உட்பட நாடு முழுவதையும் அபிவிருத்தி செய்வதில் அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்புண்டு.

விவசாய உற்பத்திக்கு தம்புள்ள பிரதேசம் சிறந்ததாக விளங்கி வருகின்றது. இங்கு அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் ஊடாக நாடு முழுவதும் விவசாய உற்பத்திப் பொருட்கள் சென்றடைகின்றன. விவசாயிகளுக்கான பல சலுகைகளை இன்றைய அரசு வழங்கியுள்ளது.

விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே குருநாகலிருந்து தம்புள்ள ஊடாக ஹபரணவரைக்குமான ரயில் பாதையொன்றும் அமைக்கப்படவுள்ளது. பெரும்போக நெற்செய்கை இம்முறை கிழக்கு, வடமேல் மாகாணங்களில் கூடிய விளைச்சலைத் தரக்கூடியதாக உள்ளது. இதன் காரணமாக அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என்றார்.

மன்னாரில் கடற்படையின் தரைப்படைப் பிரிவொன்று பாதுகாப்பு நடவடிக்கையில்!

sri-lanka-navy.jpgமன்னார் –  முருங்கன் வீதியில் கடற்படையின் தரைப்படைப் பிரிவொன்று பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படைக்கான ஊடகப் பேச்சாளர் கெப்டன் டீ.கே.பி. தஸநாயக்க தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு கெப்டன்  மேலும் கூறியதாவது,

முல்லைத்தீவில் 7 கடல் மைல்களுக்கான பிரதேசம் யுத்த சூனிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில்  படகுகள் மூலம் புலிகள் தாக்குதல்களை நடத்த முடியாதளவில் கடற்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கிறீன் ஓஷன் கப்பல் மூலம் காயமடைந்த பொது மக்கள் மூன்று முறை திருகோணமலைத் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று 40 தொன் உணவுப் பொருட்கள் இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வள்ளங்கள் மூலம் முல்லைத்தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. புலிகளிடமிருந்து தப்பி கடல் மார்க்கமாக வரும் பொது மக்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்க சிறு படகுகள் கொண்ட கற்படை உறுப்பினர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 72 மணி நேரத்தில் 77 பொது மக்கள் கடல்வழியாகத் தப்பி வந்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

சிதம்பரத்தின் கருத்து புலிகள் மீது பழியைப்போட்டு திசைதிருப்பும் முயற்சி -திருமாவளவன்

thirumavalavan-1601.jpgவிடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் தான் இலங்கையில் போரை நிறுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியிருப்பது புலிகள் மீது பழிபோட்டு திசை திருப்பும் முயற்சி என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் நிலைகுறித்து விளக்குவதற்காக நேற்று முன்தினம் மயிலாப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த இந்திய அரசால் முடியும்; ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதாக உறுதியளிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

ஒரு முறைக்கு பல முறை போர் நிறுத்தத்திற்கு தயார் என்றும், இந்தியாவுடன் நட்புறவையே விரும்புகிறோம் என்றும் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

இந்த உண்மையை மறைத்துவிட்டு போர் நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசு தயார் என்பதுபோலவும், புலிகள் தான் அதற்குத் தயாராக இல்லை என்பது போலவும் கருத்தை பரப்பி தமிழர்களைக் குழப்பும் முயற்சியில் சிதம்பரம் ஈடுபட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காமல், தீர்வு காண்பதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்பது கொழும்பின் குரலையே எதிரொலிப்பதாகும்.

இதன் மூலம் உண்மையான அரசியல் பின்னணிகளை மக்களுக்கு விளக்காமல் புலிகள் மீது பழிபோட்டு திசைதிருப்புவதில் சிதம்பரம் முனைப்பாக இருக்கிறார் என்பது தெரியவருகிறது.

மனிதநேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை சிதம்பரத்திற்கோ, இந்திய அரசுக்கோ இருப்பது உண்மையானால் ஜனநாயக அடிப்படையிலான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அதற்கான பேச்சுவார்த்தைக்கு முன் ஏற்பாடுகளை உடனடியாக செய்யவேண்டும்.

அவ்வாறு இல்லாமல் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று சிதம்பரம் போன்றவர்கள் கூறுவது இனவெறியர்களின் கூற்றாகவே அமையும்.

ஆகவே உண்மைகளை திசை திருப்பி பிரச்சினையை மென்மேலும் நீடிக்காமல் இலங்கைத் தமிழர்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு சுமுகமான அரசியல் தீர்வுக்குரிய வரைவுத் திட்டத்தை இந்திய அரசு முன்வைக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 1,2 ஆகிய இரு நாட்களில் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணி பொறுப்பாளர்கள் தலைமையில் “ஈழம் காப்போம்’ என்ற முழக்கத்துடன் ஊர்ஊராய் நடைப்பயணம் நடைபெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

மக்களை வெளியேற அனுமதிக்க விடுதலைப்புலிகளுக்கு அமெரிக்க அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் -இலங்கைத் தூதுவர் வேண்டுகோள்

srilanka_displaced.jpgவன்னியில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலிருந்து அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் அனுமதிப்பதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென இலங்கை அரசு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கே மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் அங்கிருந்து மக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் தடுத்து வருவதாக ஐ.நா. அறிவித்து ஒருநாள் கடந்த நிலையில் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜாலிய விக்ரம சூரிய இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு எதிர்பார்க்கின்றனர். இந்தநிலையில் அங்கிருந்து அம்மக்கள் வெளியேற முடியாதவாறு விடுதலைப்புலிகள் தடுத்து வருகின்றனர். இந்த மக்கள் வெளியேறுவதற்கான அழுத்தத்தை குறிப்பாக அமெரிக்கா கொடுக்கவேண்டுமென இலங்கைக்கான தூதுவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த மனோநிலையை மக்களிடம் வலுப்படுத்தி தற்காலிக வெற்றியையே அரசு பெற்றுள்ளது -காமினி ஜயவிக்ரம பெரேரா எம்.பி.

election_ballot_.jpgயுத்த மனநிலையை முழு நாட்டிலும் ஏற்படுத்தவோ, மக்களை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அன்பளிப்புப் பொருட்களை வழங்கி விருந்தளித்து மக்களை ஏமாற்றும் வாய்ப்பு ஜனாதிபதிக்கு இனிக்கிடைக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நிறைவேற்றுக் குழுத் தலைவர் காமினி ஜயவிக்ரம பெரேரா திங்கட்கிழமை குருநாகலில் தெரிவித்தார்.

வடமேல்மாகாண சபையின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது;

யுத்தத்தின் மூலம் பெறும் வெற்றிகளைக்காட்டியவாறு எப்போதும் தேர்தல்களில் வெற்றி கொள்ள முடியாது. நடந்து முடிந்துள்ள மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைத் தேர்தல்களில் அரசாங்கம் தற்காலிக வெற்றியொன்றையே பெற்றிருக்கின்றதேயொழிய வேறு குறிப்பிடத்தக்கவை எதுவும் இல்லை.

அரசாங்கத்தின் தற்காலிக வெற்றி குறித்து நாம் அச்சம் கொள்ளவோ அதைரியம் கொள்ளவோ தேவையில்லை. எதிர்வரும் தேர்தல்களில் நாம் சிறந்த வியூகங்களை வகுத்து எமது கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்து வெற்றி பெறுவோம் கட்சியை மேலும் பலப்படுத்துவோம்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கமும் ஜனாதிபதியும் அனைத்து அரசவளங்களையும் பயன்படுத்தி அரச ஊடகங்களின் மூலம் மக்களிடையே யுத்த மனநிலையை வலுப்படுத்திக் காட்டித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த தேர்தலில் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட போதிலும் அவ்விருவரும் மத்திய மாகாணத்தில் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்றுள்ளனர்

வடமேல்மாகாண சபைத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர் தமது வாக்குகளைப் பயன்படுத்தத் தவறியமையாலேயே ஐ.ம சு. முன்னணி அங்கு அதிக ஆசனங்களைப் பெறமுடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

போர்நிறுத்தம், சமாதானப் பேச்சுக்கு புலிகள் தயார் இந்திய அமைச்சரின் நிபந்தனையை ஏற்க முடியாது -ஜெயானந்தமூர்த்தி

jeyananthamoorthy-mp.jpgவிடுதலைப் புலிகள் போர்நிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளனர். ஆனால், இந்திய உள்துறை அமைச்சரின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முதலில் ஆயுதங்களை களையவேண்டும் என்ற இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் இந்தியாவில் வைத்து கூட்டமொன்றில் தெரிவித்த கருத்துத் தொடர்பாக லண்டன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஜெயானந்தமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெயானந்தமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளதாவது;

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா நடுநிலையாளராக கடமையாற்ற முன்வருவதாகவும், ஆனால் இதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களையவேண்டுமென அமைச்சர் சிதம்பரம் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மத்தியஸ்தத்தை நாம் வரவேற்கின்றோம். ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமென அவர் நிபந்தனை விதிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவும் தமிழினத்தின் உரிமையை வென்றெடுப்பதற்குமே ஆயுதத்தைத் தூக்கியுள்ளனர். அப்போது தமிழ் மக்கள் தங்களது பாதுகாப்பு என்பது விடுதலைப் புலிகளும் அவர்கள் வைத்திருக்கும் ஆயுதமுமே என்பதை பல தடவைகளில் சொல்லியுள்ளனர். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டுமென இந்திய அமைச்சர் கூறும் கூற்றை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வரை விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டுமென யார் கூறினாலும் அது அர்த்தமற்றதாகவே அமையும். இந்த ஆயுத ஒப்படைப்பு என்ற விடயம் போராட்ட வரலாற்றில் புதிய விடயமல்ல. இது தமிழ் மக்களுக்கு இந்தியாவின் மூலமாக கடந்த காலத்தில் நல்ல பாடத்தையும் கற்றுத் தந்தது என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா விடுதலைப் புலிகளின் ஆயுதத்தைக் களைந்தது. அதன் பின் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப் புலிகளுடன் இந்திய சமாதானப்படை போர் புரிந்தது. இந்த ஒப்பந்தமும் ஆயுதக் களைவும் தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்குவதற்கு இந்தியா போட்ட திட்டமாகும்.

ஆனால், இதில் விடுதலைப் புலிகள் பல சவால்களுக்கு மத்தியில் வெற்றிபெற்றனர். அப்படியான ஒரு திட்டத்தை இந்தியா செயல்படுத்த மீண்டும் முனைகின்றது. தற்போது மிகமோசமான போரை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது நடத்தி வருகின்றது. இதற்கு இந்தியாவும் துணை போகின்றது. இப்போரினால் தினமும் நூற்றுக் கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இந்தியா போரை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இதைவிடுத்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டுமென கூறுவது ஒருதலைப்பட்சமான நடவடிக்கையாகும்.

எனவே இந்தியா பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தம் வகிக்க முன்வருவதானால் போரை நிறுத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர விடுதலைப் புலிகளுக்கு நிபந்தனை விதிப்பது ஆரோக்கியமானதாக அமையாதெனவும் தெரிவித்துள்ளார்.