அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

hulugala.jpgஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பான எமது நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் கிடையாது. இந்தக் குழுவின் செயற் பாட்டுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவோ விசாரணைக்காக இலங்கை வரவோ இடமளிக்கமாட்டோம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது என பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று விசேட ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது;

மனிதாபிமான நடவடிக்கை இடம்பெற்ற போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி விசாரணை செய்ய முன்னாள் சட்டமா அதிபர் தலைமையில் ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். உள்நாட்டில் இவ்வாறு குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கையில் சர்வதேச குழுவொன்று தேவையில்லை. இவ்வாறு குழுவொன்று அமைக்கத் தேவையில்லையென சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளும் கூறியுள்ளன.

ஜனாதிபதி நியமித்துள்ள குழுவிற்கு இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை வெளியாக முன் சர்வதேச விசாரணைக் குழுவொன்று அமைக்கத் தேவையில்லை. எமது விசாரணையில் குறைபாடுகள் இருந்தால் ஐ.நா. குழுவை நியமித்திருக்கலாம். உலகின் பல நாடுகள் யுத்தத்திற்கு

முடிவு காணமுடியாத நிலையில் இலங்கை வெற்றிகரமாக யுத்தத்திற்கு முடிவு கட்டியது. இதனை தாங்க முடியாத சில நாடுகள் இலங்கை தொடர்பில் இரட்டை வேடமிட்டு வருகின்றன. புலிகளுக்கு ஆதரவான சில சக்திகளின் அழுத்தம் காரணமாகவே ஐ.நா. செயலாளர் குழுவொன்றை நியமித்தார். ஒரு வருடத்திற்கு முன் இலங்கை தொடர்பில் ஆணைக்குழுவொன்றை நியமிக்க ஐ.நா. முயன்றது. அணிசேரா நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சியை தோற்கடித்தோம். சரத் பொன்சேகாவின் ‘வெள்ளைக் கொடி’ கதையினால் மீண்டும் இலங்கை குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கை மீண்டும் தலைதூக்கியது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை. எனவே விசாரணை நடத்தத் தேவையில்லை என அரசாங்கம் தெளிவாக தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்ச ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக ஐ.நா. அலுவலகம் மூடப்படவில்லை. இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கலந்துரையாடலுக்காகவே ஐ.நாவுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார். ஐ. நா. நடவடிக்கைகள் வழமைபோல சுமுகமாக இடம்பெறுகின்றன. ஜனநாயக வட்டத்திற்குள் எவருக்கும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. தமது கட்சி நிலைப்பாட்டின் படியே விமல் வீரவங்ச உண்ணாவிரதம் இருக்கிறார் என்றார்.

ஐ.நா. பிரதிநிதியை நியுயோர்க் அழைத்தமை பான் கீ மூனின் அவசரப்பட்ட நடவடிக்கை – ஜீ.எல்

gl.jpgஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலக விவகாரத்தில் செயலாளர் நாயகம் பான் கீ-மூன் அவசரப்பட்டு விட்டதாக அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.

ஐ.நா. வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி நீல் பூஹ்னேயை கலந்துரையாட லுக்காக நியூயோர்க் அழைத்தமை பான் கீ மூனின் அவசரப்பட்ட நடவடிக்கையாகு மென்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எஸ்.பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பான் கீ மூனின் இந்த நடவடிக்கையை யிட்டு அரசாங்கம் கவலையடைவதாகவும் வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின்போது பேராசிரியர் தெரிவித்தார். ஐ. நா. சபையின் கொழும்பு அலுவலகப் பணிகள் இடை நிறுத்தப்பட்டு வதிவிடப் பிரதிநிதி திருப்பி அழைக்கப் பட்டதாக வெளியான செய் திகளை நிராகரித்த பேராசிரியர் பீரிஸ், நீல் பூஹ்னே கலந் துரையாடலுக்காகவே அழைக் கப்பட்டுள்ளதாகவும் அது வழமையான செயற்பாடென்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு அலுவலகத்திற்குப் பூரண பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியிருக்கிறது என்று தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், ஐ.நா. கொழும்பு அலுவலகத்திற்கு எந்தத் தீங்கோ, ஆபத்தோ, அச்சுறுத்தலோ ஏற்படாது என்று அரசாங்கம் நியூ யோர்க்கிற்கு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“ஐ. நா. அலுவலகப் பணிகள் மீண்டும் தொடரும்.  இது ஓரிரண்டு மணித்தியாலத்தில் தீர்க்கக் கூடிய பிரச்சினையன்று. எவ்வாறெனினும், இந்த வார இறுதிக்குள் அரசாங்கம் முடிவொன்றை எடுக்கும்” என்று குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று எட்டப்படுமென்றும் சொன்னார்.
 

கண்டி நுகவலையில் படை வீரர்களுக்கு நாளை வீடுகள் கையளிப்பு

நமக்காக நாம் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் நிர்மாணிக்கப் பட்ட 25 வீடுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் படை வீரர்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் லக்க்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

கண்டி, நுகவலையில் நிர்மாணிக்கப் பட்டுள்ள இந்த வீடுகளுக்காக 22 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. குருநாகலையில் 28 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. வசதி குறைந்த படை வீரர்கள் அங்கவீனமுற்ற படை வீரர்கள் மற்றும் இறந்த படை வீரர்களின் உறவினர்கள் ஆகியோருக்கே முதற் கட்டத்தின் போது வீடுகள் வழங் கப்படுகின்றன.

அரசியலுக்கு வரும் எண்ணமில்லை என்கிறார் முரளி

muralitharan.jpgகிரிக் கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் தன்னிடமில்லை என சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வியாழனன்று {08 ஜூலை} மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். அரசியலும் ஊடகங்களும் தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே பேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆனால் தனது மனதைப் பொறுத்தவரை அனைவரும் சமமானவர்களே எனவும் முரளிதரன் கூறியுள்ளார். நலநிதிய அமைப்பொன்றுடன் பணியாற்றும் முரளி, சில திட்டங்களுக்காக வடக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து காணியொன்றையும் பெற்றுக்கொண்டுள்ளார். எனினும் சமூக சேவை செய்வதற்கு அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை இல்லை எனக் கூறியுள்ளார்.

கே.பி.யின் 18 கப்பல்களுக்கும் என்ன நடந்தது? – நாடாளுமன்றத்தில் ரணில் கேள்வி

Kumaran_Pathmanathanகே.பி.  என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் கப்பல்களுக்கும் ஏனைய சொத்துக்களுக்கும் என்ன நடந்தது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம்  கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

கே.பியின் 18 கப்பல்களுக்கும் என்ன நடந்தது? அவருக்குச் சொந்தமான 500 பெற்றோல் நிலையங்களுக்கும் என்ன நடந்தது? என நாம் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். என ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். மேற்படி சொத்துக்களை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்குப் பயன்படுத்த  முடியும் எனவும் அவர் கூறினார்.

ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்து பேரணி

wwww.jpgஇலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்து தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் ரஷியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதாகைகளை தாங்கிக் கொண்டும், ஆதரவுக் கோஷங்களை முழங்கிக் கொண்டும் ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்தின் ஊடாக சென்றார்கள்.

அவர்கள் ரஷ்ய தூதரகத்துக்கு பேரணியாக சென்று நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

wwww.jpg

வரவு செலவு திட்டம் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

parliament.gifஇன்று பாராளுமன்றத்தில் 2010ம் ஆண்டு வரவு செலவு திட்டம் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 139 வாக்குகளும் எதிராக 71 வாக்குகளும் அளிக்கப்பட்டது  எதிர்வரும் 6 மாதகாலத்திற்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் பிரதி, நிதி அமைச்சர் சரத் அமுனுகமவினால் ஜூன் 29ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை அரசாங்கத்தின் மொத்த செலவினம் 97,474 கோடி 83 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என்று கணக்கிடப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச அமைச்சுப் பதவியை இராஜினாமா

ww.jpgவீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக அமைச்சர் விமல் வீரவன்ச, ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைக் குழுவை கலைக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ww-i.jpg

ஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மூடப்பட்டது

ya.jpgஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மீதான தேசிய சுதந்திர முன்னணியினரின் நடவடிக்கைகளால் கொழும்பு அலுவலகத்தை மூடிவிட்டு தமது பிரதான அலுவலரை நாடு திரும்புமாறு ஐநா செய்லாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஐ.நா ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அலுவலகத்தை ஐநா செய்லாளர் நாயகம் மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புக்னேயை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு வர வேண்டும் என்றும் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென அமெரிக்காவிடம் ரணில்‘. பொறுப்பு வாய்ந்தவர் இவ்வாறு நடந்து கொள்வது கேவலம்’ – ஜீ. எல். பீரிஸ்

gl.jpgபயங்கர வாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற சம்பவங்களின் அறிக்கையை Incidents Report  வெளியிடுமாறும் இது தொடர்பாக இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்குமாறும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க செனட் சபைக்கு தெரிவித்துள்ளார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகள் குறித்த குழு 2009 டிசம்பர், மாதம் 7 ஆம் திகதி வெளியிட்டுள்ள ’Sri Lanka Recharting U.S Strategy after The War” என்ற அறிக்கையை மேற்கோள்காட்டியே அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார். வெளிநாட்டமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு நடந்துகொண்டிருக்கக் கூடாது. நாடு என்றதும் கட்சி, நிறம், பேதம் எதுவும் இன்றி வெளிநாட்டுக் கொள்கையை மதித்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும். இதற்கு எமது அண்டைய நாடான இந்தியாவை எடுத்துக்கொள்ளலாம்.

ஜனாதிபதி இந்தியா சென்றிருந்தபோது நெருங்கிய நண்பனாக எம்மை வரவேற்றது மட்டுமல்ல, பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றிகண்டவர்கள் என பாராட்டியதுடன் இந்த நாட்டை மீண்டும் முழுமையாக கட்டியெழுப்ப பூரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர். இதேபோன்று எதிர்க் கட்சி உறுப்பினர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்தோம். அவர்கள் இந்தியாவுக்காக குரல் கொடுத்தார்கள். தாங்கள் எதிர்க் கட்சி என வேறுபட்டு பேசவில்லை. இந்தியா கொண்டுள்ள வெளிநாட்டுக் கொள்கையை மதிக்கிறோம். அதனடிப்படையிலேயே செயற்படுகிறோம் என்றார்கள். இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிக்கும் இலங்கையிலுள்ள எதிர்க் கட்சிக்கும் வேறுபாடு இதுதான். இவ்வாறு செயற்படக் கூடாது. இறுதி யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படையினர் மீது குற்றம் சுமத்தி அவர்களை வேட்டையாடும் எண்ணத்தில் இவை முன்வைக்கப்பட்டனவா?

யுத்தம் என்ற இருட்டிலிருந்து இலங்கை இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிக்கிறது. முதலீடுகள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன.அரசியல் இருக்கலாம். எனினும் எதிர்க் கட்சியினர் அதிலிருந்து விடுபட்டு எமது வெளிநாட்டு கொள்கையின்படி நடந்துகொள்ள வேண்டும். யுத்தம் என்ற சாம்பல் மேட்டிலிருந்து எழுந்து வரும் எங்களுக்கு எமது வெளிநாட்டு கொள்கையின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் உதவுகின்றன. கட்சி, நிறம் பற்றி பாராமல் சிந்தியுங்கள் என எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

“2008 ஆம் ஆண்டுகளில் தான் நான் அமெரிக்கா சென்றேன். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் பற்றி நான் எப்படி அமெரிக்க செனட் சபைக்கு கூற முடியும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வி எழுப்பினார்.நீங்கள் கூறியதாகத்தான் செனட் சபையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதோ என் கையில் இருக்கிறது என ஜீ. எல். பீரிஸ் கையிலுள்ள ஆவணமொன்றையும் காட்டினார்.