இன்று பாராளுமன்றத்தில் 2010ம் ஆண்டு வரவு செலவு திட்டம் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 139 வாக்குகளும் எதிராக 71 வாக்குகளும் அளிக்கப்பட்டது எதிர்வரும் 6 மாதகாலத்திற்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் பிரதி, நிதி அமைச்சர் சரத் அமுனுகமவினால் ஜூன் 29ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை அரசாங்கத்தின் மொத்த செலவினம் 97,474 கோடி 83 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என்று கணக்கிடப்பட்டுள்ளது.