இலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்து தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் ரஷியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதாகைகளை தாங்கிக் கொண்டும், ஆதரவுக் கோஷங்களை முழங்கிக் கொண்டும் ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்தின் ஊடாக சென்றார்கள்.
அவர்கள் ரஷ்ய தூதரகத்துக்கு பேரணியாக சென்று நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
