வீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக அமைச்சர் விமல் வீரவன்ச, ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைக் குழுவை கலைக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.