அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பாலத்தீன தனி நாடுக்கு போப் ஆதரவு

pope_afp.jpgபாலத்தீன தனி நாடுக்கான தனது ஆதரவை போப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

பாலத்தீனர்களுக்கான தனிநாடாக பாலத்தீனம் நாடு உருவாக்கப்படுவதற்கு வாத்திகனின் ஆதரவு உண்டு என்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரைப் பகுதியான பெத்லஹேமில் பிரார்தனை ஒன்றை நடத்திய பாப்பரசர் மீண்டும் வலியுறுத்தினார்.

காசாவின் மீதான இஸ்ரேலின் முற்றுகை விரைவில் அகற்றப்பட வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக கூறிய போப்பாண்டவர், அங்கு கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுபவித்து வரும் பொதுமக்களுக்கு தமது இதயபூர்வமான ஆசிகளை தாம் அனுப்புவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த பிரார்த்தனையில், காசாவில் இருந்து வர இஸ்ரேலால் அனுமதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கலந்து கொண்டனர். பெத்லஹேம் நகருக்கு அருகேயுள்ள ஒரு அகதிகள் முகாம் ஒன்றுக்கும் போப்பரசர் விஜயம் செய்துள்ளார்.

திருமலையில் மேலுமொரு தொகுதி பொதுமக்கள் இன்று குடியேற்றப்படவுள்ளனர்.

images-house.jpg
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருக்கும் ஒரு தொகுதி மக்கள் இன்று மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.

சேருவில  பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரியமாங்கேணி தங்க நகர் சிவபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் அவர்களுடைய சொந்த வதிவிடங்களில்; குடியமர்த்தப்படவுள்ளனர். இதுதவிர  மூதூர் பிரதேச செயலாளர் பிரிவைச்சேர்ந்த சந்தோசபுரம் மற்றும் சம்பூர் கிராமங்களை சேர்ந்தவர்கள் கிளிவெட்டி இடைதங்கல் முகாமிற்கும் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மீள்குடியேற்ற உதவித் திட்ட பணிப்பாளர் யூ.எல்.எம்.செரீப் தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்றத்திற்காக 57 குடும்பங்களை சேர்ந்த 237 பேர் 10 பேருந்துகளில் வெருகல் ஊடாக மீள்குடியேற்ற கிராமங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டவுள்ளனர். தற்போது இவர்கள் கிரான் கிரிமுட்டி பாம் முகாம் மற்றும் மாவடி வேம்பு பலாச்சோனை சத்துருக்கொண்டான் கோயில் குளம் ஆகிய நலன் புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்

அரசாங்கத்தின் நிவாரண சேவைக்கு உலக நாடுகள் பாராட்டு – அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தகவல்

gl_peris.jpgவடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண சேவைகளை குறுகிய காலத்தில் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான அரசின் இயலுமையை சர்வதேச நாடுகள் வரவேற்பதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

25வது முதலமைச்சர்கள் மாநாடு

ibatticaloa-sri-lanka-01.jpgஇலங்கையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறும் 25வது முதலமைச்சர்கள் மாநாடு நாளையும், நாளை மறுநாளும் மட்டக்களப்பு மாநகரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளதையிட்டு மட்டக்களப்பு மாநகரமானது விழாக்கோலம் பூண்டிருக்கின்றது. மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ள இம் மாநாட்டினை ஒட்டி மட்டக்களப்பு நகர் அதி உயர் பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. 3.000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்

நலன்புரி நிலையங்களுக்கு ‘யூனிசெப்’ 1000 மலசலகூடங்கள் அன்பளிப்பு

unicef.jpgஅரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குத் தப்பி வந்து வவுனியாவில் உள்ள நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கு 1000 மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்க  ‘யுனிசெப்’ நிறுவனம் முன்வந்துள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அணர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் யு.எல்.எம். ஹால்தீன் தெரிவிக்கையில், வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கு மலசலகூட வசதிகளைச் செய்துகொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று , அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது. மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் யுனிசெப் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோருக்கு அரசாங்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அவர்களது தேவைகள் இனங்காணப்பட்டு நாளாந்தம் அவை நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் யுனிசெப் நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ள 1000 மலசலகூடங்கள் முதற்கட்டமாக தற்போது இயங்கி வரும் நலன்புரி நிலையங்களிலேயே அமைக்கப்படும். இவ்வாறு அமைக்கப்பட்டு எஞ்சுகின்றவை புதிதாக அமைக்கப்படவுள்ள நிவாரணக் கிராமங்களுக்கு வழங்கப்படும் எனக் கூறினார்.

உள்ளூராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டாலும் வேறு வடிவத்தில் அது மீண்டும் கொண்டுவரப்படலாம்

batticaloa-sri-lanka.jpgஉள்ளூராட்சி சபைகள் திருத்த சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அது தொடர்பில் நாம் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது வேறொரு உருவில் மீண்டும் கொண்டு வரப்படலாமென எச்சரித்துள்ள இ.தொ.கா. சிரேஷ்ட தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஆர். யோகராஜன், இந்த சட்டமூலத்தை கடுமையாக எதிர்த்ததன் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் பாதுகாத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உள்ளூர் அதிகார சபைகள் திருத்த சட்டமூலத்தின் மூலம் சிறுபான்மை இனங்களுக்கும் சிறிய கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் விளக்கும் முகமாக மு.கா. தலைமையகமான தாருஸ்ஸலாமில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த யோகராஜன் மேலும் கூறியதாவது;

“கிழக்கு மாகாண சபை, உள்ளூர் அதிகார சபைகள் திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இன்று முறியடித்திருக்கிறது. இம் மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க., ஜே.வி.பி. கட்சிகளுக்கு அரசாங்கத்தை விட 2 ஆசனங்கள் குறைவாக 17 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் அரச தரப்பில் 2 பேர் இச்சட்டமூலத்தை எதிர்த்தால் அல்லது வாக்களிக்காமல் தவிர்த்துக்கொண்டால் சட்டமூலம் நிராகரிக்கப்பட்டதாகிவிடும். தானிருந்து வந்த அமைப்பைக் காட்டிக் கொடுத்து வந்தவர் என்று என்னால் விமர்சிக்கப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனை முழுமையாக எதிர்த்ததினால் தான் இது சாத்தியமாகியுள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தென்னிலங்கையில் வாழும் எல்லாச் சிறுபான்மை மக்களையும் காப்பாற்றி இருக்கிறார். அதற்கு அவரை நான் பாராட்டாதிருக்க முடியாது.

காங். எதிராக பிரசாரம் செய்த சீமான் விரட்டியடிப்பு

india-elc.jpg
காரைக்குடியில் ஒரு வாக்குச் சாவடிக்கு வந்து இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்த இயக்குனர் சீமானை திமுகவினரும் காங்கிரஸாரும் விரட்டியடித்தனர்.

வாக்குச் சாவடிக்கு அருகே வந்த சீமான், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்துக்கு வாக்களிக்காதீர்கள், அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று அங்கிருந்த மக்களிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் திமுகவினரும் அவரைச் சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர். அடிதடி நடக்கும் சூழல் ஏற்பட்டதால் பொலிஸார் அவரை ஒரு ஜீப்பில் அழைத்துச் சென்று தூர இடத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்தனர். இதையடுத்து தனது சொந்த ஊரான அரணையூர் சென்று வாக்களித்தார் சீமான்.

அமீருக்கு வாக்கு இல்லை…

அதே போன்று இலங்கைத் தமிழர் விஷயத்தில் தீவிரம் காட்டி வரும் இன்னொரு இயக்குனரான அமீரின் குடும்பத்தினர் மதுரை கே.கே. நகரில் ஒரு அபார்ட்மென்டில் வசிக்கின்றனர். ஆனால் இம்முறை வாக்காளர் பட்டியலில் அமீரின் பெயர் இல்லை. இதனால் வாக்களிக்க வந்த அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.

தற்போது கிடைத்த செய்தி: கிளேமோர் மீட்பு

claymore.jpgகொழும்பு, கிராண்டன்பாஸ் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட தொட்டலங்க லூக்கஸ் வீதியிலுள்ள கராஜ் ஒன்றிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த 18 கிளேமோர்களைப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

புலிகளின் முயற்சி படையினரால் முறியடிப்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgபடையினரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள்ளிருக்கும் முல்லைத்தீவு, சரவாத்தோட்டம் பிரதேசத்தைக் மீண்டும் கைப்பற்றுவதற்காக விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை மேற்கொண்ட முயற்சி இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் சில படகுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. இதில் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது சரவாத்தோட்டம் பகுதியில் நிலைக்கொண்டுள்ள படையினரின் பாதுகாப்பு அரணைத் தகர்த்து அந்தப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியிலேயே விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை முயற்சித்தனர். இதில் நான்கு தற்கொலைப் படகுகள், 15 தற்கொலைக் குண்டுதாரிகள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று இரவு 9 மணிமுதல் அதிகாலை 1.30 வரையான சுமார் நான்கு மணிநேரமாக இடம்பெற்ற படையினரின் இந்த முறியடிபபுத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஷெல் தாக்குதலில் பலி

medical_lorry.jpgசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஒருவர் மோதல் இடம்பெறும் பகுதியில் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.ஷெல் தாக்குதலில் உயிரிழந்தவர் நீர் விநியோகம் தொடர்பான தொழில்நுட்பவியலாளராக கடமையாற்றியவர் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான இவரும், இவரது தாயாரும் ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதல் வலயத்தில் இதுவரை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் 3 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.