சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் ஒருவர் மோதல் இடம்பெறும் பகுதியில் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.ஷெல் தாக்குதலில் உயிரிழந்தவர் நீர் விநியோகம் தொடர்பான தொழில்நுட்பவியலாளராக கடமையாற்றியவர் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தையான இவரும், இவரது தாயாரும் ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதல் வலயத்தில் இதுவரை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் 3 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.