இலங்கையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறும் 25வது முதலமைச்சர்கள் மாநாடு நாளையும், நாளை மறுநாளும் மட்டக்களப்பு மாநகரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளதையிட்டு மட்டக்களப்பு மாநகரமானது விழாக்கோலம் பூண்டிருக்கின்றது. மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ள இம் மாநாட்டினை ஒட்டி மட்டக்களப்பு நகர் அதி உயர் பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. 3.000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்