அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் நிறைவேற்றத் தவறியது இலங்கை தமிழர்களைப் பாதிக்குமா?

uno.jpgஇலங் கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி இலங்கை அரசு மீது சர்வதேச தமிழ் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக, மேற்குலக நாடுகள் கொண்டுவந்த கண்டனத் தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ளது.

இலங்கையில் போரின் பொழுது இலங்கைப் படைகளாலும், விடுதலைப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியும், இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு உதவி நிறுவனங்கள் சென்றுவர தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரியும், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடந்த அவசர மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றிபெறவில்லை.

மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் நிறைவேற்றவில்லை என்பதால் இலங்கைக்குள்ளே இருக்கும் தமிழ் மக்களின் நலன்கள் பெரிதாக பாதிக்கப்படும் நிலை உருவாகாது என்றே தான் கருதுவதாக லண்டனில் உள்ள இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய அரசியல் போராட்ட நிலைபாட்டிலும் வழிமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியம் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

யூதக் குடியேற்றம்: அமெரிக்க கோரிக்கையை நிராகரித்தது இஸ்ரேல்

israeli-settlements.jpgமத்திய கிழக்கின் மேற்குக் கரையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலப் பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இஸ்ரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

குடியேற்றங்களின் எதிர்காலம் பற்றி இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான பேச்சுவார்த்தைகளில்தான் முடிவுசெய்ய வேண்டும் என்று இஸ்ரேலியப் பிரதமர் சார்பாகப் பேசவல்ல அதிகாரி கூறியுள்ளார். விதிவிலக்கு எதுவுமின்றி தனது அனைத்து விதமான குடியேற்ற நடவடிக்கைகளையும் இஸ்ரேல் நிறுத்திக்கொள்வதை அதிபர் ஒபாமா காண விரும்புவதாக அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஹில்லரி கிளிண்டன் புதனன்று கூறியிருந்தார்.

அதிபர் ஒபாமாவை வாஷிங்டனில் சந்திக்கின்ற பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸும் குடியேற்றம் தொடர்பாக கோரிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் தொடர்ந்தும் யூதக் குடியேற்றங்களை உருவாக்கிவருவது பாலஸ்தீன தனிநாடு என்ற இலட்சியம் எட்டப்படுவதை தடுத்துவிடும் என்று முஸ்லிம் நாடுகள் அஞ்சுகின்றன.

ம‌னித குல‌த்‌தி‌ற்கே இ‌ந்த‌ியா துரோக‌ம் செ‌ய்து ‌வி‌ட்டது : பழ.நெடுமாற‌ன்

pala-nedu-maran.jpg”ஐ.நா. சபை ம‌னித உ‌ரிமை‌க்குழு‌வி‌ல் இல‌ங்கை அரசு‌க்கு எ‌திராக கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கு இ‌ந்‌தியா ஆதரவு அ‌ளி‌த்தது த‌மிழ‌ர்களு‌க்கு ம‌ட்டும‌ல்ல, ம‌னித குல‌த்‌தி‌ற்கே இ‌ந்‌தியா துரோக‌ம் செ‌ய்து ‌வி‌ட்டது” எ‌ன்று இல‌‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ”இல‌ங்கை‌யி‌ல் ஒரு ல‌ட்ச‌த்து‌க்கு மே‌ற்ப‌ட்ட அ‌ப்பா‌வி த‌மி‌ழ் ம‌க்க‌ள் ‌சி‌ங்க இராணுவ‌த்‌தினரா‌ல் ‌தி‌ட்ட‌‌மி‌ட்டு கொலை‌க்கு ஆளா‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌‌க்‌கிறா‌ர்க‌ள்.  3 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு மே‌ற்ப‌ட்ட ம‌க்க‌ளி‌ன் ‌வீடுக‌ள் கு‌ண்டு ‌வீ‌ச்‌சினா‌ல் அடியோடு தக‌ர்‌க்க‌ப்ப‌ட்டு, சொ‌ந்த ம‌ண்‌ணிலேயே அக‌திகளாக‌ ஆ‌க்கப்ப‌ட்டு இராணுவ முகா‌ம்க‌ளி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டு தொட‌ர்‌ந்து ‌சி‌த்ரவதை செ‌ய்ய‌‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

25,000‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட த‌மிழ‌ர்க‌ள் படுகாய‌ம் அடை‌ந்து மரு‌த்துவ வச‌தி இ‌ல்லாம‌ல் இற‌ந்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். சமாதான‌ம் பேச வருமாறு இராணுவ‌த்‌தினரா‌ல் அழை‌க்க‌ப்ப‌ட்டு வெ‌ள்ளை‌க்கொடி ஏ‌ந்‌தி வ‌ந்த ‌விடுதலை‌ப்பு‌லிக‌ளி‌ன் தலைவ‌ர்க‌ள் நடேச‌ன், பு‌லி‌த்தேவ‌ன் உ‌ள்பட அவ‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌த்‌தினரு‌ம் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு இரு‌க்‌கிறா‌ர்க‌‌ள்.

இ‌வ்வாறு அ‌ப்ப‌ட்டமாக ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்களை செ‌ய்த ராஜப‌க்சேவை போ‌ர் கு‌ற்றவா‌ளியாக ‌விசா‌ரி‌க்க வே‌ண்டு‌ம் என அமெ‌ரி‌க்காவு‌ம், மே‌ற்கு நாடுகளு‌ம் கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கு எ‌திராக இ‌ந்‌‌தியா வா‌க்க‌ளி‌த்து அதை தோ‌ற்கடி‌த்‌திரு‌ப்பது த‌மிழ‌ர்களு‌க்கு பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. இது வெ‌ந்த பு‌ண்‌ணி‌ல் வே‌ல் பா‌ய்‌ச்சுவதாக உ‌ள்ளது.

இல‌ங்கை‌க்கு ‌மிக அரு‌கி‌ல் இரு‌க்க‌க்கூடிய ஒரே நாடான இ‌‌ந்‌தியாவு‌க்கு இ‌ந்த உ‌ண்மைக‌ள் தெ‌ரியாம‌ல் இரு‌க்க முடியாது. எ‌‌ல்லா உ‌ண்மைக‌ளு‌ம் தெ‌ரி‌ந்து‌ம் மனசா‌ட்‌சி‌க்கு எ‌‌திராக இ‌ந்‌தியா ‌சி‌ங்கள வெ‌றி அரசு‌க்கு ஆதரவாக செய‌ல்ப‌ட்டிரு‌ப்பதை த‌மி‌ழ்‌ச் சமுதாய‌ம் ஒருபோது‌ம் ம‌‌ன்‌னி‌க்காது. த‌மிழ‌ர்களு‌க்கு ம‌ட்டும‌ல்ல, ம‌னித குல‌த்‌தி‌ற்கே இ‌ந்‌தியா துரோக‌ம் செ‌ய்து ‌வி‌ட்டது. போ‌ர் கு‌ற்ற‌ம் பு‌ரி‌ந்த ராஜப‌‌க்சேவை பாதுகா‌‌ப்ப‌தி‌ன் மூல‌ம் அ‌ந்த கு‌ற்ற‌த்த‌ி‌ற்கு இ‌ந்‌‌தியாவு‌ம் உட‌ந்தையாக இரு‌க்‌கிறது எ‌ன்பதை உலக‌ச் சமுதாய‌ம் உண‌ர்‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். இ‌ந்‌திய அர‌சி‌ன் இ‌ந்த போ‌க்கை நா‌ன் வ‌ன்மையாக க‌ண்டி‌க்‌கிறே‌ன்” எ‌ன்று பழ.நெடுமாற‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இலங்கைக்கு ஆதரவாக ஓட்டு போட்டு இந்தியா மீண்டும் தவறு செய்துள்ளது: வைகோ

vaiko00001.jpgஐ.நா. சபையில் நடந்த ஓட்டெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக ஓட்டு போட்டுள்ளதன் மூலம் இந்திய அரசு இப்போது மீண்டும் ஒரு தவறை செய்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,

ஈழத்தில் நடைபெற்ற துயரங்களுக்கு இந்திய அரசுதான் காரணம். துயரம் என்று நான் சொன்னதற்கு காரணம் இலங்கை தமிழர்களை கருவறுக்கும் இந்த செயலுக்கு இந்த அரசு துணை போகும்போது நாம் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதை தான் துயரம் என்றேன்.

இந்திய விடுதலைக்கு முதலில் போராடியது தென்னாடுதான். அந்த வீர சரித்திரம் இந்த மண்ணுக்கு உண்டு. அப்படிப்பட்ட இந்த மண்ணில் இன்று தமிழ் உணர்வு அழிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்கள் வரலாற்றில் இது ஒரு சிறிய இடைவெளி. நாடாளுமன்றத்தில் என் குரல் ஒலிக்காவிட்டாலும் மக்கள் மன்றத்தில் என் குரல் ஓங்கி ஒலிக்கும்.

இ‌ந்‌திய அரசு இப்போது ‌மீ‌ண்டு‌ம் ஒரு தவறு செ‌ய்து‌ள்ளது. ஐ.நா.சபை‌யி‌ல் ந‌ட‌ந்த ஓ‌ட்டெடு‌ப்‌பி‌ல் இல‌‌ங்கை‌க்கு ஆதரவாக இ‌ந்‌தியா ஓ‌ட்டு போ‌ட்டு‌ள்ளது. உல‌கி‌ல் யாரு‌க்கு‌ம் ஏ‌ற்படாத கொடுமை த‌மிழ‌ர்களு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இல‌ங்கை‌க்கு இது த‌ற்கா‌லிக வெ‌ற்‌றிதா‌ன். அதுவு‌ம் இ‌ந்‌தியா உத‌வி செ‌ய்து ஆயுத‌ங்களை, ‌வீர‌ர்களை அனு‌ப்‌பியதா‌ல் ‌கிடை‌த்த வெ‌ற்‌றி.

கட‌ந்த 5 மாத‌த்‌தி‌ல் ம‌ட்டு‌ம் ஒரு ல‌ட்ச‌த்து 45 ஆ‌யிர‌ம் த‌மிழ‌ர்க‌ள் அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். மூ‌ன்றரை ல‌ட்ச‌ம் த‌மிழ‌ர்க‌ள் பாதுகா‌ப்பு இ‌ல்லாம‌ல் உ‌ள்ளன‌ர். இது இ‌ந்‌‌திய அர‌சி‌ன் துரோக‌ம். இ‌தி‌லிரு‌ந்து அவ‌ர்க‌ள் ‌விரை‌வி‌ல் ‌மீ‌ளுவா‌ர்க‌ள். முத‌‌லி‌ல் ‌பிரபாகர‌ன் த‌ப்‌பி ஓடு‌ம் போது சு‌ட்டதாக கூ‌றினா‌ர்க‌ள். அத‌ன்‌பிறகு உடலை க‌ண்டு‌பிடி‌த்ததாக கூ‌றினா‌ர்க‌ள்.

உ‌ண்மை‌யிலே ‌பிரபாகரனை இல‌ங்கை இராணுவ‌ம் சு‌ட்டு‌க்கொ‌ன்‌றிரு‌ந்தா‌ல் மரபணு சோதனை நட‌‌த்‌தி இரு‌க்கலாமே. இ‌ன்னு‌ம் ‌பிரபாகர‌ன் த‌ந்தை வேலு‌ப்‌பி‌ள்ளை உ‌யிரோடு இரு‌க்‌‌கிறா‌ர். அ‌ப்படி‌யிரு‌ந்து‌ம் மரப‌ணு சோதனை நட‌த்த ஏ‌ன் மு‌ன்வர‌வி‌ல்லை. ‌பிரபாகர‌ன் மறு‌ப்பு தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லையே எ‌ன்று கூறு‌கிறா‌ர்க‌ள். மறு‌ப்பு அ‌றி‌க்கை வெ‌ளி‌யிட அவ‌ர் எ‌ன்ன அர‌சிய‌ல் க‌ட்‌சியா நட‌‌த்து‌கிறா‌ர். அவ‌ர் குர‌ல் வெ‌ளியே வ‌ந்தாலே அவரை அ‌ழி‌க்க தயாராக இரு‌க்‌கிறா‌ர்க‌ள். எனவே நா‌ங்க‌ள் ஆரா‌ய்‌ந்து இ‌ந்த முடிவை வெ‌ளியே சொன்னோம். தே‌ர்த‌லி‌ல் பண‌ம் கொடு‌த்து வாக்குகளை வா‌ங்‌கினா‌ர்க‌ள். பண‌ம் கொடு‌ப்பதை யாரு‌ம் க‌ண்டி‌க்க‌வி‌ல்லை. தோ‌ற்று போன கவலை என‌க்கு து‌‌ளியு‌ம் ‌கிடையாது. இ‌தி‌லிரு‌ந்து த‌மிழக‌ம் ‌மீ‌ட்க‌ப்பட வே‌ண்டு‌ம். மு‌த்து‌க்குமா‌‌ர் உ‌ள்பட 14 பே‌ர் செ‌ய்த ‌தியாக‌ம் ‌வீ‌ண் போகாது. த‌மிழக‌‌ம் ‌விரை‌‌வி‌ல் ‌மீ‌ட்க‌ப்படு‌ம் என்றார்.

புலிகள் தாக்கிவிட்டு ஓடுகின்ற செயற்பாடுகளைத் தொடர்வர். – இராணுவத்தளபதி

fonseka-000.jpgஇடம் பெற்று முடிந்துள்ள யுத்தத்தில் பங்குபற்றிய படைவீரர்களை கௌரவிக்கும் பொருட்டு இன்று இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற வைபவத்தில் பேசிய இலங்கை இராணுவத்தளபதி புலிகள் தாக்கி விட்டு ஓடுகின்ற செயற்பாடுகளை முன்னெடுப்பர் என தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், நாம் புலிகளிக்கத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைத்தலைமைகளை முற்றாக அழித்தொழித்துள்ளோம். அவர்களால் எதிர்வரும் காலத்தில் ஓர் இராணுவக் கட்டமைப்பை மீழ் கட்டியெழுப்ப முடியாது. ஆனால் சிறு சிறு குழுக்களாக ஒழிந்திருக்க கூடிய ஒரு சிலர் சிறு சிறு தாக்குதல்களை நாடாத்திவிட்டு ஓடுகின்ற தந்திரோபாயங்களை கையாளமுடியும் என தெரிவித்தார்.

அங்கு பேசிய 53ம் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், நடந்து முடிந்த யுத்தம் மிகவும் கடினமானதாகவே இருந்தது, ஆனால் நாம் எமது மேலதிகாரிகளின் வழிநடத்தலில் மனவுறுதியுடன் முன்னேறினோம் என்றார்.

58ம் படையணியின் தளபதி பிரிகேடியர் ஷாவேந்திர சில்வா பேசுகையில், யுத்தத்தில் மக்களை எவ்வித பாதிப்புக்களும் இல்லாமல் மீட்டெடுப்பது என்பது மிகவும் சாவாலாகவே இருந்தது, மக்களை மீட்கும் பணியில் முன்னணியில் நின்ற எமது படையினர் பலர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. ஆனால் மக்கள் குறைந்தளவு இழப்புக்ளுடன் மீட்கப்பட்டதென்பது பெரு வெற்றியே என்றார்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தலைவர் இலங்கைக்கு பாராட்டு

anurapriyadarsanayapa.jpgஇலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதிலை முன்வைப்பதில் அரசாங்கம் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தலைவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் ஒரு முக்கியமான கட்டத்தைத் தாண்டிவிட்டது. அதுதான் ஜெனீவா நகரில் நேற்று இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை முன்வைத்த தீர்மானத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். இந்த மாநாட்டில் இரண்டு பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று ஐரோப்பிய யூனியன் சமர்ப்பித்த பிரேரணை. அடுத்தது இலங்கை முன்வைத்த பிரேரணை.

இந்த வாக்கெடுப்பின்போது இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகளும் 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. கடந்த முறை 18 நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தபோதும் இம்முறை அது 12 ஆகக் குறைந்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாகவே மறுத்துரைப்பதற்கும் அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வதற்கும் இந்த மாநாடு நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்தது. எமது படைவீரர்கள் இராணுவ ஒழுக்க விழுமியங்களைப் பேணி சிவிலயன்களுக்கு மிகக் குறைந்த இழப்புக்களோடு புலிகளுக்கெதிரான போரில் வெற்றி பெற்றதை உலக நாடுகள் பாராட்டியுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளிலிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களை கைதுசெய்வதற்கு சர்வதேசம் உதவி

rohithaogollagama.bmp
வெளிநாடுகளிலிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கைதுசெய்வதற்கு அந்தநாட்டுப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கையை தடுப்பதற்கு சர்வதேச நாடுகளிலிருக்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் முயற்சிப்பதாகவும், எனினும், இத்தகையவர்களை கைதுசெய்வதற்கு சர்வதேச நாடுகளின் உதவி கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அநேகமான வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பவர்கள் இருப்பதாகவும் ரோஹித்த போகல்லாகம தெரிவித்தார்.

ஊவா மாகாணசபை இன்று கலைக்கப்படும்

sri-lanka.jpgஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வரையில் ஊவா மாகாணசபையைக் கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் நந்தி மெத்திகொட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். இம்மாகாணசபையின் பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகின்றது.

ஊவா மாகாணசபைக்கான இறுதித் தேர்தல் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. இது இம்மாகாணத்துக்கான நான்காவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஜேர்மன் நிறுவனம் உதவி

rizad_baduradeen1.jpg வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு ஜேர்மன் ஜொனிட்டர் சர்வதேச உதவி நிறுவனம் 6.45 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியவசியப் பொருட்களை வழங்கியுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சென். ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் நிறுவனத்தினூடாக வழங்கப்பட்ட இந்த அத்தியவசியப் பொருட்கள் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டது. அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் சென். ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் ஈ.என். ராஜா தலைமையிலான குழுவினர் இப்பொருட்களை அமைச்சரிடம் கையளித்தனர் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

பின்லாந்தில் இலங்கைக்கு உதவி வழங்கும் ஐநாவின் மாநாடு

finland.jpgஇலங்கையில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நிதிவழங்குவது தொடர்பான ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நிதி வழங்கல் நிறுவனங்களின் மாநாடு பின்லாந்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 1ம் 2ம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்லாந்து தலைமை வகிப்பதோடு 2 பில்லியன் யூரோக்களையும் வழங்கியுள்ளது.

இதில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அமைப்பின் அங்கத்துவ நாடுகளான 21 நிதிவழங்கல் நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவி திணைக்களமும் கலந்து கொள்கின்றன.

இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகளுக்கான உதவிச் செயலர் ஜோன் கோம்ஸ் பங்குபற்றவுள்ளார். இதன் போது பாகிஸ்தானில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி புரிவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.