இலங் கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி இலங்கை அரசு மீது சர்வதேச தமிழ் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக, மேற்குலக நாடுகள் கொண்டுவந்த கண்டனத் தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ளது.
இலங்கையில் போரின் பொழுது இலங்கைப் படைகளாலும், விடுதலைப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியும், இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு உதவி நிறுவனங்கள் சென்றுவர தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரியும், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நடந்த அவசர மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றிபெறவில்லை.
மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் நிறைவேற்றவில்லை என்பதால் இலங்கைக்குள்ளே இருக்கும் தமிழ் மக்களின் நலன்கள் பெரிதாக பாதிக்கப்படும் நிலை உருவாகாது என்றே தான் கருதுவதாக லண்டனில் உள்ள இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் யுவி தங்கராஜா தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய அரசியல் போராட்ட நிலைபாட்டிலும் வழிமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியம் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.