இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வரையில் ஊவா மாகாணசபையைக் கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் நந்தி மெத்திகொட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். இம்மாகாணசபையின் பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகின்றது.
ஊவா மாகாணசபைக்கான இறுதித் தேர்தல் 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது. இது இம்மாகாணத்துக்கான நான்காவது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.