::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

2 மகள்களை 10 வருடமாக கற்பழித்த காமவெறி தந்தை கைது

19-father.jpgநெஞ்சை உறைய வைக்கும் வகையில், தனது இரு மகள்களை கடந்த பத்து வருடங்களாக கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்து கற்பழித்து வந்த காமக் கொடூர தந்தையை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

சமீபத்தில்தான் ஆஸ்திரியாவில் ஜோசப் பிரிட்ஸல் என்பவரை அங்குள்ள போலீஸார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் என்னவென்றால், தனது மகளை 25 ஆண்டுகளாக வீட்டின் இருட்டறையில் அடைத்து வைத்து கற்பழித்தார் என்பதே.  இந்த நிலையில் மும்பையில் இப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் 61 வயதாகும் ஒரு தொழிலதிபர். இந்த கொடும் குற்றத்திற்கு அவரது மனைவியும் துணை போயுள்ளார் என்பதுதான் நெஞ்சை பதற வைக்கும் செய்தியாக உள்ளது. அந்த தொழிலதிபர் தனது 21 வயது மகளை கடந்த பத்து வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார். மேலும் 15 வயதாகும் 2வது மகளையும் கடந்த சில மாதங்களாக இதே செயலுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். தனது தங்கையையும் தந்தை கேவலப்படுத்த ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த மகள் தனது தாய் வழி பாட்டியிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். இதையடுத்து இந்த அசிங்கமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

ஹஸ்முக் ரத்தோட் என்ற மடச் சாமியார் ஒருவர் கொடுத்த அட்வைஸ்படிதான் இந்த அசிங்கமான செயலை செய்து வந்துள்ளார் அந்த தொழிலதிபர். அந்த கேடிச் சாமியார்தான், உங்களது மகள்களை கற்பழித்தால் குடும்பம் விருத்தி அடையும் என கூறினாராம். தனது மூத்த மகளை 11வயதிலிருந்து கற்பழித்து வந்துள்ளார் அந்தத் தந்தை. மேலும் சாமியாரின் பேச்சைக் கேட்டு தனது இளைய மகளையும் கற்பழிக்க ஆரம்பித்தார். இதில் கொடுமை என்னவென்றால், அந்த சாமியாரும், தொழிலதிபரின் 2வது மகளை சிலமுறை கற்பழித்துள்ளார் என்பதுதான். தற்போது போலீஸார் அந்த கொடூர தந்தை, அத்தனையும் தெரிந்தும் அமைதியாக இருந்து வந்த அவரது மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளனர் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மகளுடன் கூடா உறுவுகொண்ட தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்

ஆஸ்டிரியாவில் தன் சொந்தப் புதல்வியுடன் தகாத உறவு கொண்டு அவரை இருபது ஆண்டுகளுக்கும் மேல் பூட்டிவைத்து, அவர் மூலம் 7 குழந்தைகளப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜோசப் பிரிட்சில் என்ற ஆஸ்டிரிய குடிமகன் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந்த திடிர் மாற்றத்துக்கான காரணம் என்ன என்று நீதிபதி கேட்டபோது, வீடியோ ஒலிபதிவில் தனது புதல்வியின் சாட்சியத்தை தாம் கேட்டமையே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

பிரிட்சில்லுக்கு தற்போது வயது 73. இவருக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கப்படலாம். குடும்பத்துக்குள் கூடா உறவு மற்றும் கற்பழிப்பு, தவறாக தடுத்து வைத்தல் ஆகிய குற்றங்களை ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்த பிரிட்சில் புதல்வியை அடிமைப் படுத்தி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்துவந்தார். மகளுக்கு பிறந்த குழந்தைகளில் ஒன்றை, அது பிறந்த சில நாட்களுக்குள்ளாகவே கொலை செய்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்து வந்தார்.

புதிய குடியேற்ற கட்டணத்தை அறிமுகப்படுத்துகிறது பிரிட்டன்

uk.jpgஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத பிறநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரித்தானியாவிற்குள் உட்பிரவேசிப்பதற்கு முன்னர் குடியேற்றக் கட்டணமாக 50 ஸ்ரேலிங் பவுண்களை செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது. இப்புதிய சட்டம் குடியேற்ற முறைமையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக அடுத்த மாதத்தில் அறிமுகமாகவுள்ளது. இதன் மூலம் பெறப்படும் பணம் குடியேற்றவாசிகளின் பொதுச் சேவைக்கான மேலதிக செலவை ஈடு செய்யும் பொருட்டு உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு பெறப்படும் குடியேற்றக் கட்டணத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு 70 மில்லியன் டொலர்களை பெற முடியுமென அந்நாட்டு அரசாங்கம் கருதுகிறது. பெருமளவிலான குடியேற்றவாசிகளால் தமது வளங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் அதிகார சபைகளிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இப்புதிய குடியேற்றக் கட்டண முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் சமூகம் மற்றும் உள்ளூர் அரசாங்கத்தின் உயரதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்; எமது சமூகத்தில் குடியேற்றவாசிகள் முக்கிய பங்கை வகிக்கின்றனர்.இவர்கள் எமது சமூகத்திற்கு செய்யும் பங்களிப்பு தொடர்பில் விவாதங்கள் தேவைப்படுகின்றன. தற்போது குடியேற்றக் கட்டணத்தின் மூலம் அறவிடப்படும் பணம் குடியேற்றவாசிகள் செறிந்து வாழும் பிரதேசங்களிற்கே வழங்கப்படும் என்றார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளின் மாணவர்கள் தமது முதல் வருடக் கல்விக்கும் 9 மாதங்களுக்குரிய வாழ்க்கைச் செலவிற்கும் போதுமான பணம் உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கோரப்படுகின்றனர். இச்சட்டத்தின் படி இத்தொகை பணமாக இருக்க வேண்டும். பங்குகளாகவோ ஓய்வூதியத் தொகையாகவோ இருக்கும் பட்சத்தில் தூதுவராலயம் இதனை ஏற்றுக் கொள்ளாது. அத்துடன், அவர்களது பணம் வங்கிக் கணக்கிலிருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இப்பணத்தின் தொகை அவர்கள் தொடரவுள்ள கற்கை நெறியின் காலம் மற்றும் அவர்கள் லண்டனிலா அல்லது புறநகர்களிலா தங்கியிருக்கப் போகின்றனர் என்பதற்கேற்ப மாறுபடும்.

வருண் காந்திக்கு மேலும் சிக்கல்-2 வழக்குகள்

varun-gandhi.jpgபிலிபித் தொகுதியின் பாஜக வேட்பாளர் வருண் காந்தி முஸ்லீம்கள் குறித்து விஷமத்தனமாக பேசி சிக்கலில் மாட்டியுள்ள நிலையில் மேலும் சிக்கலாக மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லீம்களைக் கொல்வேன் என்று பேசியது தொடர்பாக அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான பதட்டத்தை ஏற்படுத்துதல், வன்முறையை உருவாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தப் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.

முதல் வழக்கைப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டவுடனேயே வருண் காந்தி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தனது பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நாளை முற்பகல் 11 மணிக்குள் வருண் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே வருண் காந்தியின் பேச்சு இடம் பெற்றுள்ள வீடியோ டேப்புகளை தடவியல் சோதனைக்கு அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் கலந்து கொண்ட, பேசிய அனைத்து கூட்டங்களின் வீடியோ பதிவுகளையும் கண்டுபிடித்து சமர்ப்பிக்கவும் உ.பி. மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்: இதற்கிடையே, உ.பி. மாநிலம் பிசால்பூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஒரு புதுப் புகார் வருண் காந்தி மீது கிளம்பியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அக்தர், பிசால்பூருக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார். அவர்களது வாக்குமூலத்தைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

திருவாளர், திருமதிக்கு இனிமேல் தடை

eu_flag.jpgஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு; திருமதி உள்ளிட்ட பல வார்த்தைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் பேதத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான இந்த வார்த்தைகளை இனிமேல் உறுப்பினர்கள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம பாலின மொழி என்ற தலைப்பில் கையேடு ஒன்றை ஐரோப்பிய நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது. அதில், பெண் உறுப்பினர்களை முழுப் பெயரையும் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என முக்கியமாக கூறப்பட்டுள்ளது.

மேலும், , ‘sportsmen’ என்ற வார்த்தைக்குப் பதில் இனிமேல், ”athletes’ ‘என்று அழைக்க வேண்டும். அதேபோல அரசியல்வாதிகளை குறிப்பிடுவதாக இருந்தால், ”statesmen’ என்ற வார்த்தைக்குப் பதில் ‘political leaders’ எனக் கூப்பிட வேண்டுமாம். அதேபோல ‘man-made’ என்ற பதத்திற்குப் பதில் sportsmen அல்லது ‘synthetic’ என்று கூற வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், fireman, airhostess, headmaster, policeman, salesman, manageress, cinema usherette, male nurse ஆகிய பதங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் waiter’, ‘waitress’ ஆகிய பதங்களுக்கு பொதுவான வார்த்தை இந்த கையேட்டில் பரிந்துரைக்கப்படவில்லை. பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஸ்டிராஸ்பர்க் நகரங்களில் நடந்த நிகழ்ச்சியி?ல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 785 உறுப்பினர்களுக்கும் இந்த கையேட்டை, நாடாளுமன்ற செயலாளர் ஹரோல்ட் ரோமர் வழங்கினார்.

இந்த புதிய உத்தரவுக்கு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. ஸ்டுருவான் ஸ்டீவன்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். எங்களது பாஷை ஆங்கிலம். அதில் எந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று எங்களுக்கே கற்றுத் தருகிறார்கள். இது முட்டாள்தனமாக இருக்கிறது என்றார்.

அதேபோல பிலிப் பிராட்பார்ன் என்ற எம்.பி, மக்களின் வரிப்பணத்தை வீணடித்து விட்டனர். எனது பாஷைய எனது இஷ்டப்படிதான் நான் பேசுவேன். இதில் உள்ள ஒரு மாற்றத்தைக் கூட நான் பின்பற்ற மாட்டேன். எனது பாஷையை எப்படி பேச வேண்டும் என எனக்கு யாரும் ஆலோசனை சொல்ல முடியாது என்றார் காட்டமாக.

இதை விட முக்கியமாக மேடம் என்ற சொல்லைப் பயன்படுத்தவும் இந்த கையேடு தடை செய்கிறது.

ஆஸ்திரியாவில் மகளை அடைத்துவைத்து பிள்ளைகள் தந்தவர் மீது வழக்கு ஆரம்பம்

austria_incest.jpgசென்ற வருடம் ஆஸ்திரியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிருந்த யோசஃப் ஃப்ரிட்ஸல், பாலியல் வல்லுறவு மற்றும் குடும்பத்துக்குள் கூடா உறவு ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் தனது மகளையே பல ஆண்டுகள் நிலவறையில் அடைத்து வைத்ததோடு மகளுடனே உறவுகொண்டு ஏழு பிள்ளைகளை பெற்றிருந்தார் என்ற விபரங்கள் சென்ற ஆண்டு வெளியாகியிருந்தன. வியன்னாவுக்கு மேற்காக செயிண்ட் பொயல்டன் என்ற நகரில் ஃபிரிட்ஸல் மீதான வழக்கு திங்களன்று ஆரம்பமானது.

மகளை அடிமைப்படுத்திவைத்திருந்தது மற்றும் பிறந்தவுடன் இறந்துபோன ஒரு குழந்தையின் மரணத்துக்கு அவரே பொறுப்பு என்பது போன்ற குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

நீதிமன்றத்திற்குள் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டபோது, ஒரு நீல நிற ஆவணக் கோப்பினால் அவர் தனது முகத்தை மறைத்துக்கொண்டார். இந்த வழக்கின் பெரும்பகுதி பொதுமக்கள் பார்வைக்கு இடமின்றி நடக்கிறது. விசாரணை ஒரு வாரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு தடை : ரசிகர்கள் மொட்டையடித்து நூதனப்போராட்டம்

jallikattu.jpgசுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. பல உயிர்கள் பலியாகின்றன. எனவே, ஜல்லிக் கட்டுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்காலத் தடை விதித்தது. விரைவில் இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு வர இருக்கிறது. இந்நிலையில், தொடர்ந்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஈழத்தில் இனப் படுகொலையை கண்டித்து நேற்று முன்நாள் தீக்குளித்த இருவரும் மரணம்

நேற்று முன்தினம் ஈழத்தமிழருக்காக தீக்குளித்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த பா.ம.க. உறுப்பினர் ராஐசேகரன், தஞ்சை மருத்துவமனையில் இன்று காலை 9 மணியளவில் உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு, கடலூரில் தீக்குளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரான ஆனந்த் (23) என்கிற ஆனந்தராஜ் புதுவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் உயிரிழந்தார்.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் பொதுமக்களே ஆஜராகி தமிழில் வாதாடினார்கள்

chennai-highcourt.jpgகாக்கிச் சட்டைகள்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஒரு மாதமாக வழ‌க்க‌றிஞ‌‌ர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வழக்குகள் தகுதி அடிப்படையில் விசாரிக்க உயர் நீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்பினைக் கண்டித்து பல வழ‌க்க‌றிஞ‌ர்கள் தாங்கள் வழக்குகளின் வக்காலத்துக்களை வாப‌ஸ் பெற்று வருகின்றனர்.

வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தற்போது சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் பொதுமக்களே ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் ஆஜராகி தமிழில் வாதாடி வருகிறார்கள். விசாரணையும் தமிழில் நடைபெற்றது. நீதிபதி கலிபுல்லா மற்றும் ‌நீ‌திப‌தி ‌பி.ஆ‌ர்.சிவகுமா‌ர் தமிழிலேயே 146 வழக்குகளை விசாரித்து முடித்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்கு விசாரணை நடப்பது இதுவே முதன்முறையாகும்.

“முஸ்லீம்களின் தலையை வெட்டுவேன்”‘: வருண் காந்தி

varun-gandhi.jpg‘இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும்”  என மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பேசிய பேச்சால் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார் எனத் தெரிகிறது.

இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலையை வெட்ட வேண்டும் என்று அவர் பேசியதால் தேர்தல் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. வருண் காந்தி பேச்சால் பாஜகவுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மேனகா காந்தியின் மகனான வருண் காந்தி, பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடுகிறார். லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

தனது மகனுக்காக தான் வழக்கமாக போட்டியிட்டு வெல்லும் பிலிபித்தை விட்டுக் கொடுத்துள்ளார் மேனகா காந்தி.

இந்த நிலையில் பிலிபித் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வருண் காந்தி அங்கு பேசுகையில்,  இது கை (காங்கிரஸ் சின்னத்தைக் குறிப்பிட்டு) அல்ல. தாமரையின் சக்தி. இது இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் தலைகளை வெட்டி எறியும் ஜெயம் ஸ்ரீராம் என்று பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய் விட வேண்டும்.

ஒரு இந்துவுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால், அவரது கையை இந்த வருண் காந்தி வெட்டுவான். வருண் காந்தி ஒரு புயலைப் போல. அடுத்த சஞ்சய் காந்திதான் இந்த வருண் காந்தி என்றார் வருண் காந்தி.

வருண் காந்தி புயலோ என்னவோ அவரது பேச்சு பெரும் புயலைக் கிளப்பி விட்டு விட்டது.

முஸ்லீம்கள் குறித்து அவர் பேசியது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் பேசியிருப்பது உண்மையாக இருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிபித் தொகுதியில் மேனகா காந்தி ஐந்து முறை எம்.பியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மீட்சி 2010ல் தான்

us-flag.jpg‘இன்னும் ஒரிரு ஆண்டுகளுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் இதே தடுமாற்றத்துடன்தான் இருக்கும். வருகிற 2010 முதல் மீட்சி நிலை ஆரம்பமாகும்’ என அமெரிக்க நிதித் துறைத் தலைவர் பென் பெர்னான்க் கூறியுள்ளார். அமெரிக்க டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கிட்டத்தட்ட உடைந்து போயுள்ளது அமெரிக்கப் பொருளாதாரம். மூன்றாண்டுகள் வரை இந்த நிலை நீடிக்கும். இதைத் தூக்கி நிறுத்த பெரிய மனோவலிமை கொண்ட, எப்படிப்பட்ட இடர்பாட்டையும் சமாளிக்கக் கூடிய அரசியல் தலைமை அவசியம். ஒருவிதத்தில் நம்மை நாமே சுயமாக சரிசெய்து கொள்ள இப்போதைய வீழ்ச்சி உதவியிருப்பதாகவே நம்புகிறேன்.

ஆனால் எல்லோரும் சொல்வதுபோல இந்த ஆண்டே பொருளாதார வீழ்ச்சி சரியாகிவிடாது. இந்த ஆண்டுதான் உச்சத்திலிருக்கும். அடுத்த ஆண்டு முதல் மீட்சி நிலை தொடங்கலாம்.

முன்பு போல மீண்டும் முழு வேலை நிலை என்ற சூழலுக்கு நாடு திரும்புவதும் கஷ்டம்தான். ஆனால் வலுவான ஒரு பொருளாதாரத்தைக் கட்டியமைக்க இந்த வீழ்ச்சி உதவும். கிடைக்கும் வேலையைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் கீழை நாட்டு மனோபாவம் அமெரிக்கர்களுக்கும் வரும். அதற்கு இந்த வீழ்ச்சியும் மீட்சியும் காரணமாக அமையும்.

இந்த சூழலில் என் கவலையெல்லாம், வங்கி அமைப்பு மீது அமெரிக்க மக்களும் அரசியல் தலைவர்களும் நம்பிக்கை இழந்து போயிருப்பதுதான். வங்கித் துறை விரைவில் சீரடைவதுதான், நாட்டின் பொருளாதார மீட்சியைத் துரிதப்படுத்தும், என்றார் பெர்னான்க்.