::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பதவியை துறக்க அத்வானி முடிவு

indian-election.jpgபா. ஜனதா கூட்டணி தோல்வி அடைந்த தால் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பத வியை ஏற்கப் போவதில்லை என்று அத்வானி அறிவித்துள்ளார். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தி வருகின்றனர். கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலில் பா. ஜனதா கட்சி மட்டும் தனியாக 138 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்த தேர்தலில் அதைவிட குறைவான இடங் களையே கைப்பற்றியதால் பா. ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பா. ஜனதா கூட்டணி சார்பாக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எல். கே. அத்வானியும் வருத்தம் அடைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக பா. ஜனதா கட்சியின் தற்போதைய எம்.பிக்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அத்வானி தலைமையில் அந்த கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் பேசிய அத்வானி, ‘தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்தார். தற்போதும் காங்கிரஸை அடுத்து பா. ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது. எனவே, பாராளுமன் றத்தில் அதன் தலைவராக இருப்பவரே எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார். அந்த பதவிக்கு மத்திய காபினேட் மந்திரி பதவிக்கு இணையான அந்தஸ்து அளிக்கப்படும். அதை அத்வானி ஏற்க மறுத்துள்ளார்.

இது குறித்து கட்சியின் பொது செயலாளர் அருண் ஜெட்லி கூறுகையில், ‘எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று அத்வானி கூறியதை கட்சியின் பாராளுமன்ற குழு நிராகரித்து விட்டது. தொடர்ந்து பதவியில் நீடிக்க அவரை சமாதானப்படுத்து மாறு கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் கூறப்பட்டுள்ளது என்றார்.

மேலும் புதிய தலைவரை தேர்ந்தெடுத்து கொள்ளுமாறும், தன்னை பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியின் தலைவர்களை அத்வானி கேட்டுள்ளார். தோல்வியை தொடர்ந்து கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பா. ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அடுத்த தலைமுறை தலைவர்களை நியமிக்கலாம் என்று தெரிகிறது.

ராஜ்நாத் சிங்குக்கு பிறகு கட்சியின் புதிய தலைவருக்கான பட்டியலில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தலைமை மற்றும் கொள்கைகளில் பெரிய அளவில் மாற்றங்களை செய்ய பா. ஜனதா தீர்மானித்து இருக்கிறது.

இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் சூறை

indian-election.jpgசென்னை தேனாம்பேட்டையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்தை சமூக விரோதிகள் சிலர் நேற்றிரவு சூறையுள்ளனர்.  திரைப்பட இயக்குநர் பாரதிராஜா இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவது குறித்து பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். குறிப்பிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் இவரும், இயக்குநர் சீமானும் பேசியது வாக்காளர்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சனிக்கிழமை மக்களவைத் தேர்தல் முடிவுகளில் சில குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியைத் தழுவினர். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் ஒரு தனியார் வணிக வளாகத்தில் உள்ள பாரதிராஜாவின் அலுவலகத்திற்குள் சனிக்கிழமை இரவு 7.50 மணி அளவில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்தது.

வந்தவர்கள் யார் என அங்கிருந்த ஊழியர்கள் விசாரிப்பதற்குள், அவர்கள் அலுவலகத்தில் இருந்த கண்ணாடி கதவுகள், கம்ப்யூட்டகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.

மக்களவைத் தேர்தலில் செருப்பு வீச்சு வாங்கிய அனைவரும் வெற்றி

indian-election.jpgஷூ மற்றும் செருப்பு வீச்சு வாங்கிய அனைவரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
 
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு, பொதுக் கூட்டம் போன்றவற்றில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் சிதம்பரம், பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி, தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் மீது காலணிகள் வீசப்பட்டன. இச்சம்பவங்கள் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செருப்பு வீசும் அளவுக்கு அவர்கள் வெறுப்பைச் சம்பாதித்துள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் காலணியால் குறி பார்க்கப்பட்ட சிதம்பரம், அத்வானி, நவீன் ஜிண்டால் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். மன்மோகன் சிங் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் அவர் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் செருப்பு வீச்சுக்கு ஆளானார். ஆனால் கர்நாடகத்தில் அவரது மகன் ராகவேந்திராவும், அவர் சார்ந்த பாஜகவும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

அமெரிக்கப் படையினர் 140 பேரைக் கொன்றதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது

ஆப்கானிஸ்தானில் இந்த மாத முற்பகுதியில் அமெரிக்க படையினரால் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை ஆய்வு செய்த ஆப்கானிய பாதுகாப்பு அமைச்சு, அந்த தாக்குதல்களில் அமெரிக்கர்கள், 140 பொதுமக்களை கொன்றுள்ளதாக உறுதி செய்துள்ளது.

அமெரிக்க மரைன் படையினரும், ஆப்கான் படையினரும் தலிபான்களுடன் மோதலில் ஈடுபட்ட வேளையில், அமெரிக்க விமானங்கள் ஃபாரா மாகாணத்தில் உள்ள கிராமங்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதல்கள் காரணமாக, ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாய் அவர்கள், அமெரிக்கா தனது வான் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று கோரும் நிலை உருவானது.

இந்த சம்பவத்தின் பின்னர், ஆப்கானிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதைப் பார்க்கிலும், இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்று அமெரிக்கா கூறியிருந்தது. ஆனாலும், புலன் விசாரணைகளுக்கு முன்னதாக பலரது சடலங்கள் புதைக்கப்பட்டு விட்டதால், கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை அவர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை.

வருணை எதிர்த்த அனைவரின் டெபாசிட் காலி

varun.jpgஉ.பி.  மாநிலம் பிலிபிட் தொகுதியில் வருண் காந்தி போட்டியிட்ட பிலிபித் தொகுதியில் வருண் காந்தியைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்தனர். இவர்களில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் வேட்பாளர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் காந்தி இத்தேர்தலில் 4,19,539 வாக்குகள் பெற்று, 2,81,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.காங்கிரஸ் கட்சிக்கு 2வது இடமும், சமாஜ்வாடிக் கட்சிக்கு 3வது இடமும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4வது இடமும் கிடைத்தது. வருண் காந்தியைத் தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

சோனியாகாந்தி அமோக வெற்றி

06-sonia.jpgஉத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3 – 3/4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு 4 லட்சத்து 81 ஆயிரத்து 490 ஓட்டுகள் கிடைத்தன.  இது, இந்த தொகுதியில் சோனியாகாந்தி பெற்ற 3-வது வெற்றியாகும்.

சோனியாவை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் குஷ்வாகா 2 லட்சத்து 9 ஆயிரத்து 324 வாக்குகள் பெற்றார். மேலும் களத்தில் இருந்த 15 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.  ரேபரேலி தொகுதி,  மறைந்த இந்திராகாந்தி, பெரோஸ் காந்தி ஆகியோர் போட்டியிட்ட தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

சுனாமி போல பாய்ந்து வந்த பணத்தால் சாகடிக்கப்பட்ட ஜனநாயகம்-வைகோ

vaiko00001.jpgதமிழகத்திலும், புததுவையிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி சுனாமி வெள்ளமாக செலுத்திய ஊழல் பணத்தால் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டு விட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவு குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை..

தமிழகத்திலும், புதுவையிலும் திமுக, காங்கிரஸ் கூட்டமி சுனாமி வெள்ளமாக செலுத்திய ஊழல் பணத்தால் பல தொகுதிகளில் ஜனநாயகம் சாகடிக்கப்பட்டது. இருப்பினும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தலைமையில் அமைந்த இந்த கூட்டணி பெற்ற வெற்றி ஜனநாயகத்திற்கு சூட்டப்பட்ட மகுடமாகும்.

விருதுநகர் தொகுதியில், எனது வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணிக் கட்சியினருக்கும், எனக்காக வாக்களித்த வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள். கூட்டணியின் நலன் காக்கவும், ஈழத் தமிழர் துயர் துடைக்கவும், இந்திய ஜனநாயகத்திற்கு வலுவூட்டவும், முன்பை விட முனைப்புடன் செயல்படுவோம் என்று கூறியுள்ளார் வைகோ.

மன்மோகன் தான் மீண்டும் பிரதமர்: சோனியா

06-sonia.jpgபாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 256 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது காங்கிரஸ் கூட்டணி.

இதனால் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ‘’காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.  சரியான முடிவையே எடுத்திருக்கிறார்கள்.   மன்மோகன்சிங்தான் மீண்டும் இந்தியாவின் பிரதமர்.

இதில் எந்தவித மாற்றமும் இல்லை’’ என்று உறுதியாக தெரிவித்தார்

ராகுல்காந்தியும் அமைச்சரவையில் இடம்பெறுவார்: மன்மோகன்சிங்

karunanithi-apalo-hos1.jpgபாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 256 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது காங்கிரஸ் கூட்டணி. இதனால் இன்று  பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,   ‘’சோனியா, ராகுல் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.  அதனால் தான் வெற்றீயை தந்திருக்கிறார்கள். அமைச்சரவையில் ராகுல்காந்தியும் இடம்பெறூவார்.   மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும்’’ என்று தெரிவித்தார்.

நாளை வாக்கு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தயார்

india-elc.jpgமக்களவைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே ஆட்சியமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பெற்று, மாநில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைப்பது குறித்த முயற்சிகளில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தனித்தனியாக ஈடுபட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், முடிவுகள் பிற்பகலுக்குள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடுமுழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான முடிவுகளை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தேர்தல் முடிவுகளை தெரிவிக்க ஏதுவாக சுமார் ஆயிரத்து 80 பத்திரிகை தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணைய நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் பணிகளிலும், முடிவுகளைத் தெரிவிக்கும் பணிகளிலும் நாடு முழுவதும் சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இரு மின்னணு தகவல் பலகைகள் வைக்கப்பட்டு, அவ்வப்போது வெளியாகும் முடிவுகள் வெளியிடப்படும். மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒரிஸ்ஸா மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாகின்றன.