சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்தை சமூக விரோதிகள் சிலர் நேற்றிரவு சூறையுள்ளனர். திரைப்பட இயக்குநர் பாரதிராஜா இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவது குறித்து பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். குறிப்பிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் இவரும், இயக்குநர் சீமானும் பேசியது வாக்காளர்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சனிக்கிழமை மக்களவைத் தேர்தல் முடிவுகளில் சில குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியைத் தழுவினர். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் ஒரு தனியார் வணிக வளாகத்தில் உள்ள பாரதிராஜாவின் அலுவலகத்திற்குள் சனிக்கிழமை இரவு 7.50 மணி அளவில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்தது.
வந்தவர்கள் யார் என அங்கிருந்த ஊழியர்கள் விசாரிப்பதற்குள், அவர்கள் அலுவலகத்தில் இருந்த கண்ணாடி கதவுகள், கம்ப்யூட்டகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.