பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 256 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது காங்கிரஸ் கூட்டணி.
இதனால் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. சரியான முடிவையே எடுத்திருக்கிறார்கள். மன்மோகன்சிங்தான் மீண்டும் இந்தியாவின் பிரதமர்.
இதில் எந்தவித மாற்றமும் இல்லை’’ என்று உறுதியாக தெரிவித்தார்