13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

da-de.gifஇலங்கை இந்திய ஓப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்த கோரியும், அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்க கோரியும் ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரமைச்சரவை அங்கீகாரத்திற்கான பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது போல் வடக்கிலும் விரைவாக மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் சர்வகட்சி தலைவர் விதாரண அவர்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களிடம் தெரிவித்திருந்த ஆலோசனைக்கு இணங்க மாகாண சபைகளுக்கான உரிமைகள் நிறைவானதாகவும் உயரிய பயன்பாடுடையதாகவும் இருக்க வேண்டும் என்றும் அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுகையில் சர்வகட்சி தலைவர் திசவிதாரண அவர்கள் மேற்குறித்த தீர்வுத்தட்டத்தை சமர்ப்பித்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது என்றும் புலித்தலைமையின் நடவடிக்கைகள் இல்லாதெழிக்கப்பட்ட போதிலும் புலித்தலைமைக்கு சார்பான தமிழ் அரசியல் கட்சிகள் அழிவுப்பாதையிலேயே தொடர்ந்தும் மக்களை இழுத்து செல்வதாகவும் தெரிவித்திருந்ததோடு அரசு இத்தருணத்தில் தீர்க்கமான அரசியல் தீர்வினை விருப்பத்துடன் முன்வைக்க வேண்டும் என்றும் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது அமைச்சரவை பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • Nila
    Nila

    உந்தப்பதின்மூன்றைச் சொல்லியே காலத்தைக் கடத்துங்கோ

    Reply
  • rohan
    rohan

    13 எல்லாம் சரி.

    ஆனால், அட்கைச் சரியாகநடை முறைப் படுத்தும் வழியைப் பார்க்க வேண்டும்.

    மகிந்தபுரம், தேவானந்தபுரம், கருணாபுரம் தான் உங்கள் மனங்களில் முதலில் நிற்பதாக எனக்குப் படுகிறது.

    Reply
  • dmx
    dmx

    தலைவா நீதான் எனி எங்கள் தமிழர்களின் தலைவன். உன்னுடன் போட்டியிட யாரும் இல்லை. தமிழ் மக்களுக்கு நீ நினைத்தபடியே நசேவை செய்யலாம். வாழ்க ஜனநாயகம்.

    Reply
  • தாழவெட்டுவான்
    தாழவெட்டுவான்

    ஐயா டக்ளஸ் தேவானந்தா அவர்களே

    கழுதை தேய்ந்து கட்டேறும்பான கதையாய் பஸ் டிக்கட் அளவில் இந்தப் பதின்மூன்று ஆகமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

    தாழவெட்டுவான்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    “மெல்லெனபாயும் தண்ணீர் கல்லையும் ஊடுருவிப்பாயும்”.

    Reply
  • palli.
    palli.

    பொட்டர்மலையில் இருந்த பிரபாபுரம் காணாமல் போனதில் சிலருக்கு வருத்தம். ஆனால் விரைவிலேயே ரொகன் சொல்லிய புரங்களும் தடம்
    புரண்டால் காணாமல் போய் விடும். ஆகவே புரம்களை எண்ணி கவலை கொள்ளாமல் தமிழ்மக்கள் எதிர்காலம் என்ன??

    Reply
  • palli.
    palli.

    டக்கிளஸும் தமிழரின் நிர்வாகத்தில் இருந்து மிக விரைவாக அகற்றபட வேண்டிய யென்மம்தான். இன்று பல புளொட் உறுப்பினர்கள் டக்கிளஸின் அமைப்பு ராணுவத்துடன் சேர்ந்து கைது செய்துள்ளது. அவர்கள் செய்த குற்றம் வன்னியில் இருந்து வந்த மக்களை கவனித்தத்துதான். வவுனியாவில் இயக்கஙளுக்கும் அப்பால் புளொட் அமைப்பினர் அந்த இடத்து மக்களுடன் அன்பாக பழகுவது அனைவரும் அறிந்ததே. அதனால் தான் இன்றுவரை புலி கூட அவர்களை எதுவும் செய்ய முடியாமல் அந்த மக்கள் பாதுகாத்தனர். பல்லி சொல்லுவது புளொட் தலமைகளையல்ல. அங்கு நின்று மக்களுடன் மக்களாக வேலை செய்பவர்களை. புளொட் பற்றி மிக கேவலமான விமர்சனம் பல்லிக்கும் உணடு. விமர்சித்தும் இருக்கிறேன். தொடர்ந்தும் விமர்சிப்பேன்.

    ஆனால் இன்று வன்னியில் இருந்து வரும் மக்களுக்கு ஏதோ சிறு உதவியாவது அவர்கள் செய்வதாக புலிசார்ந்த மக்கள் கூட சொல்லுகிறார்கள். இப்போது நல்லவரோ கெட்டவரோ அந்த மக்களுக்கு உதவுபவர்கள் பாராட்டபட வேண்டியவர்களே. இதில் டக்கிளசின் அணியினர் அடுத்த புலியாக ராணுவத்துடன் சேர்ந்து செயல்படுவது பல்லி சொல்லவில்லை. உங்களுக்கு யாராவது உறவு வவுனியாவில் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

    கண்டிப்பாக டக்கிளஸையும் சர்வதேச கோட்டில் நிறுத்த வேண்டும். வன்னியில் இருந்து வவுனியாவந்து ராணுவத்தின் பிடியில் சிக்கி இருக்கும் பிள்ளைகளை வெளியில் எடுத்து அங்கேயேவிட அவர்கள் (டக்கிளஸ் அமைப்பினர்) வேண்டும் தொகை ஒரு லட்ச்சம். அதே கொழும்பில் கொண்டு வந்து விடுவதானால் மூன்று லட்ச்சம். இது பலருக்கு தெரியும் இதில் கொடுமை என்னவெனில் புலிகுடும்பங்களே இந்த தொகையை கொடுத்து வருகின்றனர். எதுக்கும் முடியாத குடும்ப பிள்ளைகள் ராணுவத்தையும் இந்த அமைப்பினரையும் மகிழ்விப்பதுக்கும் சமைப்பதுக்கும் பிரயோசனபடுத்துகிறார்கள். இது சில வேளை தோழருக்கு தெரியாமல் நடப்பதானால் தோழர் இது மீது உடனடி நடவெடிக்கை எடுக்கலாமே. அதைவிட்டு தன்னோடு திரிந்தவர்கள்தானே அனுபவிக்கட்டும் என இருந்தால் பிரபாவை விட துன்பங்களை இவர்களும் சந்திப்பார். எத்தனையோ உதவி அமைப்புகளை கூட செயல்பட தடா போட்டுள்ளது இந்த அரசுடன் சேர்ந்திய்ங்கும் அமைப்பு. நன்பர்களே பல்லிக்கு பதில் எழுதுமுன் வவுனியாவுக்கு யாருடனாவது தொடர்பு கொண்டு நிலமைகளை அறிந்து கொள்ளுங்கள். உன்மையை எழுதுங்கள்.

    Reply
  • VANTHIYADEVAN
    VANTHIYADEVAN

    I 100% AGREE WITH PALLI
    I ALSO GOT EVIDENCE FOR THIS

    Reply