![]()
முன்னேறிவரும் படையினர் மீது இரசாயனத் தாக்குதல் ஒன்றை நடத்த புலிகள் திட்டமிட்டமிட்டிருந்தனர் என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. உடையார் கட்டுக்குளம் வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தின் 57 ஆவது படையணியினர் கடந்த 05 ஆம் திகதி நடத்திய தேடுதலில் இரசாயயனத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் 17 முகமூடிகள் மற்றும் 16 ஆடைகள் என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த இரண்டு வருட காலங்களாக புலிகள் இராசயன வாயுவை படையினருக்கு எதிராக பாவித்துள்ளபோதிலும் படையினர் அந்தச் சவாலுக்கு முகம் கொடுக்கும் முன்னேற்பாடுகளுடன் செயற்பட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறவித்துள்ளது.
கட்டுரைகள்
கட்டுரைகள்
கட்டுரைகளும் விவாதங்களும்
புதுக்குடி யிருப்பில் நேற்று இடம்பெற்ற மோதல்களின் போது படையினரின் பீரங்கித் தாக்குதலில் புலிகளின் நிதிப் பொறுப்பாளரான தமிழேந்தி என அழைக்கப்படும் சபாரட்ணம் செல்லதுரை கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பில் நேற்றுக் காலை படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதுடன் பெரும் எண்ணிக்கையான புலி உறுப்பினர்கள் உயிரிழந்திருப்பதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
மோதல்களில் தமிழேந்தி உயிரிழந்திருப்பதனை இராணுவத்தின் புலனாய்வுத் துறையினர் ஊர்ஜிதம் செய்திருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
பலத்த மழைக்கு மத்தியிலும் படையினர் சற்றும் தளராது தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் படையினரின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து முகம் கொடுக்க முடியாத புலிகள் காயமடைந்தவர்களையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
._._._._._.
க.மகாதேவன் என்கிற புனைபெயரில் தேனீ இணையத்தளத்தில் நட்சத்திரன் செவ்விந்தியன் எழுதிய முதல் கட்டுரை (சாத்தானுக்கு இரண்டு நாக்கு (சிக்மன்) பிராயிட்டுக்கு ஆயிரம் நாக்கு சேரனுக்கு பல்லாயிரம் நாக்கு) சேரன் மீதான விமர்சனமாக அமைகிறது. இரண்டாவது கட்டுரை முதல் கட்டுரைக்கு சேரன் எழுதிய பதில். ( Cheran’s_reply_for_Nadchathiran_Sevindian ) மேற்கூறிய இரண்டு கட்டுரைகளும் 2006 ம் ஆண்டு தேனீ இணையத்தில் பிரசுரமானவை. இக்கட்டுரை சேரனின் பதிலுக்கு நட்சத்திரன் செவ்விந்தியன் எழுதிய எதிர்வினை. இது இப்போது தேசம்நெற்றில் பிரசுரிக்கப்படுகிறது.
._._._._._.
Successful seductions rarely begin with an obvious maneuver or strategic device. That is certain to arouse suspicion. Successful seductions begin with your character, your ability to radiate some quality that attracts people and stirs their emotions in a way that is beyond their control. Hypnotized by your seductive character, your victims will not notice your subsequent manipulations. It will then be child’s play to mislead and seduce them.
From ‘The Art of seduction’ by Robert Greene.
வசியப்படுத்த வைக்கிற சூழ்ச்சிகரமான மாயத்திறமைகளைப் பயன்படுத்தியும் சூழ்ச்சிகளைக் கொண்டும் எழுதப்பட்டதே சேரன் எனது கட்டுரைக்கு எழுதிய பதிலாகும். சேரன் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு மனிதனை வசியப்படுத்த வேண்டும் என்பதற்கு பயன்படுத்துகிற வசிய மொழியும் (Language of Seduction) உண்மையைக் கண்டடைய வேண்டும் என்பதற்காக நடாத்தப்படுகிற ஒரு அரசியல் பெருங்கதையாடலுக்கான மொழியும் (Language of Political Discourse) ஒன்று அல்ல என்பதைத்தான். முன்னையதில் பொய்களும் திரிக்கப்பட்ட உண்மையும் குதர்க்கங்களும் சூழ்ச்சியும் இருக்கும். பின்னையதில் உண்மையும் தர்க்கமும் இருக்கும்.
சேரனைப் பற்றி நான் எழுதிய கட்டுரை உறுதியான ஆதாரங்களுடன் எழுதப்பட்ட உண்மைகளின் தொகுப்பு. அதற்கு சேரன் எழுதிய பதிலில் இருக்கிற பொய்களையும் திரிக்கப்பட்ட உண்மைகளையும் குதர்க்கங்களையும் சூழ்ச்சிகளையும் பின்வரும் பகுதிகளில் தெளிவுற விளக்குகிறேன்.
1. வின்சர் பல்கலைக்கழகத்தில் சேரனின் உண்மையான பதவி tenure நிரந்தரத் தகுதி இல்லாத ஆரம்ப விரிவுரையாளர் என்பதே. ஆரம்ப விரிவுரையாளர்களை வட அமெரிக்கப்பல்கலைக் கழகங்களில் Assistant Professor என்று குறிப்பிடுவதே வழக்கம். என்னுடைய கட்டுரையில் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் இப்பதவிகள் சம்பந்தமான சொற்களையும் அவற்றின் வேறுபாடுகளையும் விளங்கப்படுத்தியுள்ளேன். இவ்வளவு செய்த பின்னரும் சேரன் தான் நிரந்தரமான ஒரு பேராசிரியராக வின்சர் இல் இருப்பதாகவும் கூகிளில் தன் பெயரைப்போட்டுத் தேடினால் தன்னைப் பற்றிய எல்லா விவரமும் வருகிறது என்று மொட்டையாகவும் தந்திரமாகவும் படுபொய் சொல்லிவிட்டு நழுவுகிறார். இன்றைக்கு யாருமே பிழையான தகவல்களைக் கொண்டு ஒரு இணைவலையை ஆரம்பிக்கலாம். இதற்கு நல்ல ஒரு உதாரணம் புலிகளின் நிதர்சனம் டொட் கொம். முதலில் நாங்கள் ஒரு தகவல் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த அது நம்பகரமான அதிகாரபூர்வமான மூலத்தூடாக வருகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வட அமெரிக்கப்பல்கலைக் கழகங்களில் Professor என்ற பதம் பல்கலைக்கழகங்களில் படிப்பிக்கின்ற அனைவரையும் கௌரவமாக விளிப்பதற்கும் (அதாவது இலங்கைப் பல்கலைக் கழகங்களில் படிப்பிக்கின்ற அனைவரையும் பல்கலைக்கழக மாணவர்கள் “சேர்” என்று விளிப்பதைப் போல) பயன்படுத்தப்படுகிறது. விளிப்பதற்கு மட்டுமே அவ்வாறு பயன்படுத்தப்படுவதே தவிர அவ்வாறு விளிக்கப்படுகிற எல்லோருமே பேராசிரியர் அல்ல. இது பற்றிய விரிவான விளக்கத்துக்கு பார்க்க : http://en.wikipedia.org/wiki/Professor
ஆனால் வட அமெரிக்காவில் இருக்கிற எந்தவொரு நேர்மையான விரிவுரையாளரும் இந்த மயக்கத்தைப் பயன்படுத்தி தன்னை ஒரு பேராசிரியர் என்று வேணுமென்றே அறிமுகப்படுத்தி புழுகி மோசடி செய்யமாட்டார்கள். அல்லது எந்த ஒரு அமெரிக்கப் பதிப்பகமும் ஒரு விரிவுரையாளரால் எழுதப்பட்ட புத்தகத்தில் அவரைப் பற்றி அறிமுகப்படுத்துகிறபோது அவரை பேராசிரியர் என்று தவறாக அறிமுகப்படுத்த மாட்டாது. இந்த சொல் மயக்கத்தினால் வெகுஜன ஊடகங்களில் சில தடவைகள் பேராசிரியர் பதவிக்கும் கதிரைக்கும் சொந்தமில்லாத பலர் பேராசிரியர் என்று தவறுதாலாக எழுதப்படுவது உண்டு. கூகிள் இணையத்தளத்தில் சேரனின் பேரைப்போட்டுத் தேடினால் முதலில் வருவது மேலே கூறியமாதிரியான தவறான அர்த்தத்தில் சேரன் பேராசிரியர் என்று எழுதப்பட்ட பக்கங்களே. சேரனே தன்னை பேராசிரியர் என்று எழுதி பல இணைய பக்கங்களை ஆரம்பிக்கலாம். உண்மையிலேயே சேரன் முதலியவர்களால் அண்மையில் கனடாவில் நடாத்தப்பட்ட மாநாட்டுக்காக சேரன் முதலியவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்ட பின்வரும் இணையத்தளத்தில் சேரன் தன்னைத்தானே பேராசிரியர் என்றே புழுகி எழுதியுள்ளார். பார்க்க http://www.chass.utoronto.ca/~tamils/tsc2006/about/committee.html
ஆகவே நாங்கள் சேரனின் உண்மையான தகுதியை அறிய அவர் பணியாற்றுகிற வின்சர் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வமான பின்வரும் இணையத்தளத்துக்கே சென்று பார்க்க வேண்டும். www.uwindsor.ca/units/socanth/sociology.nsf/831fc2c71873e46285256d6e006c367a/b09aaaab44a4671885256c750064ec58!OpenDocument
இதில் சேரன் Assistant Professor (விரிவுரையாளர்) என்றே மிகத்தெளிவாக உள்ளது. இதைவிட Assistant Professor இல் இருக்கிற Professor என்ற சொல்லைக்கொண்டு ஒருவர் தான் Professor என்பாராயின் அது ஒரு இராணுவ மேஜர் ஜெனரல் தன்னை ஒரு ஜெனரல் என்று சொல்வதற்கு ஒப்பானது. கூகிளின் தேடும் இயந்திரத்தை பயன்படுத்தி சேரன் எப்படி சுத்துகிறார் என்பது இப்போது யாவருக்கும் புரிந்திருக்கும். மேலும் சேரனின் (விரிவுரையாளர்) Assistant professor பதவி நிரந்தரமான Tenure தகுதி இல்லாதது. காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தமிழினி 2000 மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பிலும் ‘மீண்டும் கடலுக்கு’ நூலிலும் சேரன் ஒரு சமூகவியல் மானுடவியல் பேராசிரியர் என்று அறிமுகம் தரப்படுவதும் சேரன் தன்னை ஒரு பேராசிரியர் என்று திசைகள் பேட்டியில் கூறுவதும் சந்தேகத்துக்கிடமின்றி அறிவுத்துறை சார்ந்த மோசடிகள்.
2. Tigers of Lanka என்ற நூலின் மூன்றாவது பதிப்பில் (1995) 28 ஆவது பக்கத்தில் வருபவை இவைதான்.
“He was a restless character” added Rudramoorthy Cheran, a former Jaffna university student who had moved closely with Sivakumaran in 1973 – 1974. “He would discuss all night, emphasising the need for an armed struggle”
அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பு வருமாறு.
“அவர் ஒரு அமைதியற்ற பிறவி ” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் மாணவரும் 1973 – 1974 காலப்பகுதிகளில் சிவகுமாரனுடன் நெருங்கிப் பழகியவருமான உருத்திரமூர்த்தி சேரன் கூறினார். “அவர் (சிவகுமாரன்) ஒரு இரவு முழுவதுமே ஆயுதப் போராட்டம் ஒன்றின் தேவையை வலியுறுத்தி விவாதித்துக் கொண்டிருப்பார்” என்று மேலும் தொடர்ந்து சொன்னார் சேரன்.
இங்கே மிகத்தெளிவாகவே சேரனின் மோசடி வெளிப்படுகிறது. அதாவது சேரன் ஆசிரியர் நாராயணசாமியிடம் 1973 -1974 காலப்பகுதியில் சிவகுமாரனுடன் நெருங்கிப் பழகியதாகப் பொய் சொல்லியிருக்கிறார். இங்கு சேரனின் மோசடிகள் இரண்டு.
(1) 1973 -1974 காலப்பகுதியில் அதாவது 2 வருடங்கள் சிவகுமாரனுடன் தான் நெருங்கிப் பழகியதாக பொய் சொன்னது
(2) மேற்கூறிய பொய்யின் அடிப்படையில் சிவகுமாரனைப் பற்றி சான்றிதழ் பத்திரம் (character certificate) வழங்கக்கூடிய அதிகாரம் தனக்கு இருப்பதாக காட்டிக் கொண்டமையும் அப்போலி அதிகாரத்தை மோசடியாக பிரயோகித்தமையும்.
உண்மை மேற்கூறியவாறு இருக்க சேரன் தனது பதிலில்
சிவகுமாரனோடு நடந்த ஒரு சந்திப்பை அடிப்படையாகக்கொண்டே சிவகுமாரனைப் பற்றி தான் நாராயண்சுவாமியின் புத்தகத்தில் கருத்துச் சொன்னதாக கயிறு திரிக்கிறார். சேரன் ஆதவனோடு நெருங்கிப் பழகியவர் என்பதில் எமக்கு எதிர்க்கருத்து இல்லை. அதுதான் ஆதவனின் குணம் சேரனிலும் வந்திருக்கிறதே.
சேரன் தனது இரண்டாந்தரக் கல்வியை தமிழ் மொழிமூலமே கற்றவர். அவர் Saturday Review பத்திரிகையில் வேலை செய்தகாகக் கூறுகிற 1984 – 1987 காலப்பகுதியில் ஆங்கிலத்தில் எழுதக்கூடிய அளவுக்கு அவருக்கு ஆங்கிலப் புலமை இருக்கவில்லை. 1987 ம் ஆண்டுக்குப் பின்னர் ஆங்கில மொழிமூலம் அரசியல் விஞ்ஞானம் கற்றபின்னரே தனக்கு ஆங்கிலத்தில் எழுதும் புலமை வந்ததாக அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். எம்முடைய வாதம் என்னவென்றால் தனக்கு இல்லாத தகுதியான Deputy editor of Saturday Review என்பதை டொரண்டோ எங்கும் வெகு சகஜமாகச் சொல்லி வருவதுதான் தவறு என்கிறோம். சேரனே தன்னைப் பற்றி எழுதிய பின்வரும் http://www.cheran.net/english.html
சேரனின் இணையத்திலும் கனேடிய யோர்க் பல்கலைக்கழக இணையமான பின்வரும் http://www.yorku.ca/hdrnet/images/uploaded/cheran_tsunamimemorial.pdf
இணையத்திலும் சேரன் தானே Saturday review பத்திரிகையின் Deputy Editor ஆக இருந்ததாக முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிற மகா பொய் சொல்லியுள்ளார். Deputy Editor என்றால் அதன் அர்த்தம் பத்திரிகையின் ஆசிரியர் தற்காலிகமாக இல்லாதபோது தற்காலிகமாக ஆசிரியர் பொறுப்பை எடுப்பவர். ஆங்கிலத்தில் எழுதக்கூடிய அளவுக்கு புலமை இல்லாத ஒருவரை ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் Deputy Editor ஆக்குவதானது துவிச்சக்கர வண்டியே ஓட்டத் தெரியாதவனை Harley Davidson motor bike ஓட்டும்படி கேட்பதற்கு சமனானது. எனது கட்டுரையின் பின்னரே சேரன் 1984 இல் தான் Saturday Review இல் வேலைக்குச்சேர்ந்தபோது தனக்கு ஆசிரியர் பகுதி உதவியாள் (இன்னொரு வகையில் சொன்னால் ஆசிரியர் பகுதி எடுபிடி) என்ற பொறுப்பு இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். சேரனே மேலும் 1987 ஜூலையில்தான் தனது பொறுப்பு இணை ஆசிரியர் (இணை ஆசிரியருக்கான ஆங்கிலம் Associate Editor என்பதே.) ஆனது என்கிறார்.அவர் சொல்வது சரி என்று கொண்டாலும் அவர் ஆக ஒரே ஒரு மாதம் மட்டுமே இணை ஆசிரியராக இருந்துள்ளார். ஆங்கிலத்தில் எழுதுகிற அளவுக்கு ஆங்கிலத்தில் முழுப்புலமை இலலாத ஒருவர் இணை ஆசிரியர் ஆகக் கூட வருவது என்பது நகைப்புக்குரிய விடயமே.
1958 இல் பிறந்த சேரன் தான் 1960 இல் பிறந்ததாக பிற்பாடு கூறிவரும் மோசடியை ஆதாரங்களுடன் முன்வைத்திருந்தோம். இதற்கு சேரன் கொங்கு தேர் வாழ்க்கை 2 ம் தொகுதியில் தனது பிறந்த ஆண்டு 1954 என்று தரப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார். இதன் மூலம் சேரன் விவாதத்தை பொறுக்கித்தனமாக திசை திருப்புகிறார். அதாவது பொறுப்பற்ற கவலையீனமான அச்சுப்பிழைகளே தனது வயது மோசடிகளுக்கான காரணம் என்ற மறைக்கப்பட்ட செய்தியினை செருகுகிறார். சேரன் ஒரு ஒழுங்கான மனிதன் என்றால் தான் பிறந்த ஆண்டு எது என்பதை தெரிவித்திருக்க வேண்டும். அவ்விதம் சேரனால் செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் அவர் தனது வயது மோசடியில் கையும் களவுமாக வசமாக மாட்டுப்பட்டமையே. காலச்சுவடு வெளியீடாக 2000 ஆம் ஆண்டுக்குப்பிறகு வந்த சேரனின் புத்தகங்களில் எல்லாம் சேரன் பிறந்தது 1960 என்றே சேரனால் கண்ணனிடம் சொல்லப்பட்டே அறிமுகத்தில் எழுதப்படுகிறது. மேலும் சேரன் எம்மிடம் தனது கடவுச்சீட்டையும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தையும் பார்வைக்கு தர வேண்டும் என்று கேட்பதுதான் மிக வேடிக்கையானது. இதற்கூடாக ஒரு திசைதிருப்புகிற வாதத்தை வைக்கிறார். சேரன் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மேற்கூறிய ஆவணங்கள் எவற்றையுமே பிழையான வயதுகளுடன் பெயர்களுடன் மோசடியாக (Identity fraud) எவருமே தயாரிக்க முடியும். ஆவணங்களை வைத்து யாருமே உண்மைகளை நிறுவ முடியாது. சேரனின் மூத்த சகோதரத்தினதும் இளைய சகோதரத்தினதும் வயதை சேரனின் வயதுடன் ஒப்பீட்டுச் சரிபார்ப்பதன் மூலமும் சேரன் படித்த வகுப்பை சேர்ந்த சக மாணவர்களின் வயதுகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதன் மூலமுமே உண்மையை நிறுவ முடியும். கல்லூரியில் சேரனோடு சேர்ந்து படித்த மாணவர்கள் எல்லோருக்குமே சேரன் பிறந்தது 1958 என்பது மிகத் தெளிவாகவே தெரியுமே. இவர்களிடம் ஒரு கள்ள சேட்டிபிக்கட்டைக் காட்டி சேரன் தான் பிறந்தது 1960 தான் என்றால் அவர்கள் நம்புவார்களா? அல்லாவிடில் சேரன் தனது தம்பியான சோழனிடம் ஒரு கள்ள சேட்டிபிக்கட்டைக் காட்டி “இதன்படி நான் உன்னைவிட இரண்டு ஆண்டுகள் கழித்தே பிறந்தேன். ஆகவே இனிமேல் நான் உனக்கு தம்பி, நீ எனக்கு அண்ணன்” என்று சொல்லி உறவு முறைகளைகளையும் உண்மையையும் மாற்ற முடியுமா? கொங்குதேர் வாழ்க்கை 2 இல் தனது பிறந்த ஆண்டு 1954 (பிரபாகரனும் பிறந்த ஆண்டு 1954) என்று தரப்பட்டிருக்கிறது என்று சேரன் சொல்வதற்குப் பின்னால் இன்னொரு கிரிமினல் ஐடியாவும் இருக்கிறது. இனி அடுத்து சேரன் வழங்கப்போகும் பேட்டியில் தேசியத்தலைவரும் தானும் ஒரே வயதினர் என்றும் பாலசிங்கத்துக்கு முதலே தான் தேசியத் தலைவருக்கு ஆலோசகராக இருந்தேன் என்றும் தனது ஆலோசனைப்படியே துரையப்பாவை பிரபாகரன் சுட்டுக்கொன்றார் என்றும் சேரன் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தான் முன்னர் சொன்ன எழுதிய விடயங்களை தான் சொல்லவில்லை என்றும் நாங்கள் அவற்றைத் திரிக்கிறோம் என்றும் பச்சை பச்சையாக அழாப்புகிற மகா மோசடிக்காரன் சேரன். சேரன் ஒரு Demagogue. அதாவது உணர்ச்சிகரமானதும் நியாயமற்றதுமான வாதங்கள் மூலம் மக்களின் ஆதரவைப்பெறுகிற ஒரு மூன்றாந்தரமான அரசியல்வாதி. தீராநதி குமுதத்தினால் வெளியிடப்பட்டு கணிசமான பிரதிகள் விலைப்படுகின்ற இலக்கிய இதழாகும். அதில் சேரன் கூறியவைகள் எதனையும் நாங்கள் திரிக்கவில்லை என்பதையும் சேரனின் பொய் புரட்டல்களையும் நீங்கள் அதில் ஐயம் திரிபுறக்காணலாம். தமிழ் கூறும் நல்லுலகம் எங்குமே எவருமே மேற்சொன்ன பழைய தீராநதி இதழை எடுத்து சரிபார்க்கலாம். சேரன் சொல்கிறார் தீராநதி கிடைக்கிற இணையத்தளத்தை நாங்கள் தந்திருக்க வேண்டுமாம். சேரனைப் பொறுத்தவரையில் இணையத்தளத்தில் வந்தால் தான் அது உண்மையாம். மேற்கூறிய சேரனின் பேட்டி இப்போது இணையத்தளத்தில் இல்லை என்பதுபோக நாங்கள்தான் அச்சில் வந்த தீராநதியை ஆதாரமாகக் காட்டியிருந்தோமே. மேலும் இதே தீராநதிப்பேட்டி 2006 ம் ஆண்டு காலச்சுவடு வெளியிட்ட சேரன் நேர்காணல்கள் என்ற நூலிலும் இணைக்கப்பட்டுள்ளது. சேரன் தன்னுடைய சூழ்ச்சிகரமான வாதத்துக்கு ஆதாரமாக பின்னர் திசைகளில் வெளிவந்த தன்னுடைய பேட்டியைக் காட்டுகிறார். திசைகள் பேட்டியில் சேரன் தான் நடுநிலமையாளர் என்று சொல்கிறாரே தவிர அவர் நடுநிலமையாளர் அல்ல புலிகளுக்கு உண்மையான நடுநிலமையாளர்கள் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள். உண்மையான நடுநிலமையாளர்கள் புலிகளால் கொல்லப்பட்டும் கொல்லப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். நடுநிலமையாளரான ராஜினி திராணகம புலிகளால் கொல்லப்பட்டது போக நடுநிலமையாளர்களான ராஜன் கூலும் சிறீதரனும் புலிகளால் ஆபத்தை எதிர்நோக்கியிருக்க, வன்னிக்குள் கால்வைக்க முடியாமல் இருக்க சேரன் மட்டும் வன்னிக்குள் போய் உயிரோடு திரும்பி வரமுடிந்தது எப்படி? (மேலும் கசிகின்ற நம்பகரமான வட்டாரங்களின் செய்திப்படி விடுதலைப் புலிகளின் ஆயுட்கால நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தியின் “தரிசனத்தில்” வன்னியில் கட்டப்பட்டு வந்த தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் தனக்கு ஏதாவது. போட்டுத்தருமாறு கேட்டு வழிந்திருக்கிறார் சேரன்.) உண்மையில் சேரன் நடுநிலமையாளர் அல்ல. அவர் ஒரு நழுவுநிலமையாளர். பொய்யை பலமுறை சொல்வதன் மூலம் அதனை உண்மை ஆக்கலாம் என்பதே சேரனின் கணிப்பு.
தீராநதிப் பேட்டி பற்றி நாங்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்குமே பதிலளிக்காமல் அவ்வாறான ஒரு பேட்டியே இருக்கவில்லை என்று மறைக்க முயல்கிறார் சேரன். உண்மையில் சேரனால் அவற்றுக்குப் பதிலளிக்க முடியாது என்பதுபோக நாங்கள் மேலும் செய்த கடுமையான ஆராய்ச்சி, விசாரணைகளின் பின்னர் சேரன் குடும்பத்தினரின் ஊழல்கள் வெளியேவரத் தொடங்கியுள்ளன. இலங்கை அரசு தமிழர்களின் கல்வி வாய்ப்பைப் பாதிக்கிற வகையில் “தரப்படுத்தல்” சட்டத்தைக் கொண்டு வந்ததாகவும் தன்னுடைய தமையன் கூடுதலான புள்ளிகள் எடுத்தும் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முடியாமல் வெளிநாடு போனார் என்றும் தன்னுடைய தம்பி தங்கையும் மேலும் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் வெளிநாட்டுக்குப் போனார்கள் என்றும் சேரன் தீராநதிப் பேட்டியில சொல்கிறார். சேரன் இதில் சொல்லாமல் விட்டது என்னவென்றால் சேரனின் சகோதரர்கள் எவ்வாறு வெளிநாடு போனார்கள் என்பதைத்தான். சேரன் சொல்வது போல சேரனின் வெளிநாடு போன சகோதரர்கள் கூடுதலான புள்ளிகள் எடுக்கவில்லை. அவர்கள் mediocre ஆன மாணவர்களாகவே உயர்கல்வி படிக்கும்போது இருந்தார்கள். அவ்வாறு இருக்க 2 சகோதரனும் ஒரு சகோதரியும் புலமைப்பரிசில் பெற்று முன்னைய சோவியத் ஒன்றியத்துக்கு படிக்கச்சென்றது எவ்வாறு? இலங்கையில் வெளிநாட்டுப் புலமைப்பரிசில்களை வழங்கத் தீர்மனிக்கிற முறையில் நீதியும் Transparency ம் இருப்பதில்லை. ஊழல், இலஞ்சம், செல்வாக்கு என்பனவே புகுந்து விளையாடும். 1971 இல் அரச உயர் அதிகாரியாகவிருந்த சேரனின் தந்தையார் மகாகவி இறந்தார். இக்காலத்தில் சுதந்திரக்கட்சி, இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியில் இருந்தது. மகாகவியின் நண்பர்களாக இருந்த சில அரச அதிகாரிகளினதும் சில இடதுசாரி மற்றும் TULF அரசியவாதிகளின் செல்வாக்கினாலுமே நியாயப்படி சேரனின் சகோதரர்களுக்கு வழங்கப்பட முடியாத புலமைப்பரிசில் (அதுவும் ஒரே குடும்பத்தில் மூவருக்கு) வழங்கப்பட்ட்டது. சேரன் குடும்பம் ஒரு மத்தியதரவர்க்கக் குடும்பம். இவர்களை விட எவ்வளவோ திறமையான மிகவும் வறிய சில தலித் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சமதர்ம நாட்டுப் புலமைப் பரிசில் சேரன் குடும்பத்துக்கு மொத்த வியாபாரமாக வழங்கப்பட்டது மிகப்பெரிய அநீதி.
சேரன் சொல்வதுபோல நாங்கள் எதனையும் திரிக்கவில்லை. சேரன் மிகத்தெளிவாகவே “மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் (யாழ்) [UTHR(J)] சொல்வதுபோல புலிகளை பாசிஸ்டுகள் (fascists) என்று முத்திரை குத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பது மட்டுமல்ல, இத்தகைய முத்திரையிடல்களுக்கு பின்னால் பலமான அரசியல் காரணங்களும் உள்ளன” என்று கூறியுள்ளார். அதாவது சேரன் புலிகள் பாசிஸ்டுகள் இல்லை என்கிறார். அதுகாலவரையும் புலிகளை மிகச்சரியாகவே கடுமையாக விமர்சித்து வந்த சேரன் இக்கட்டுரையில் புலிகளின் பக்கம் சாய்வதற்கான ஆரம்ப வேலைகளைச் செய்கிறார். புலிகளை கடுமையாக விமர்சிக்கிறவர் திடீரென்று புலி ஆதரவாளராக மாறமுடியாதல்லவா. அவ்விதம் திடீரென்று அவர் மாறுவாராயின் அவரைத் தெரிந்தவர்களுக்கு அவரின் சித்த சுவாதீனம் மீது சந்தேகம் ஏற்படும். படிப்படியாகத்தான் மாறமுடியும். 1999 ம் ஆண்டு ஜூன் ஆகஸ்டு மூன்றாவது மனிதன் இதழில் “85 இன் பிற்பாடு தமது சிறப்பான ‘இயக்க விதி’ யின் பயனாக எல்லா இயக்கங்களையும் புலிகள் பலாத்காரமாக ஒழித்து மேலாதிக்கத்துக்கு வந்தபின் தேசியவிடுதலைப் போராட்டம் என்ற கருத்து பின்னுக்கு போய் தேச விடுதலை, இன விடுதலை என்று வருகிறது. அதில் வெறும் இனத்துவமும் தமிழர் அடையாளமும் மட்டும் தான் சம்பந்தப்பட்டிருக்கிறது. அப்படிப்பார்க்கிற போது ஒரு உன்னதமான, நியாயமான இலட்சியங்களில் இருந்து இப்போது ஒரு வகையான பின்னடைவு இன்னும் உரத்துச் சொல்வதானால் சீரழிவே நடந்திருக்கிறது. தமிழ் தேசியவாதம் ஒரு காலத்தில் முஸ்லிம் சிங்கள மலையக மக்களைப் பற்றிப் பேசியிருக்கிறது. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு வெறும் தமிழன் என்ற உணர்ச்சியைத்தான் இப்போது மேலாட்சி பெற்றிருக்கிற தேசியவாதம் பேசுகிறது. அந்தத் தேசியவாதம் தான் யார் தமிழன்( ஆண்பால்) என்பதைத் தீர்மானிக்கிறது. வெளியில் இருந்து யார் வந்தாலும் தள்ளிவிடும். இது தேசியவாதம் இல்லை. நான் முன்பே சொல்லியதுபோல் இது ஒருவகையான பேரினவாதமும் ஆபத்தானதுக் கூட. இது ஆரோக்கியமானதல்ல. இவ்வகையான தேசியவாத்திற்கும் எனக்குமிடையே ஒரு வகையான உறவும் கிடையாது.”
என்று கூறிய சேரன் 2002, பெப்பிரவரி 17 நிகரி இதழில்
“சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகள் மீது ‘பயங்கரவாத’ முத்திரை குத்தப்படுவதற்கு சர்வதேச அரசியலில் தாரளமாகவே விரவியிருக்கும் நாடுகளின் சுயநலம், பூகோள அரசியல் போன்றவை மட்டுமே காரணம் அல்ல. Amnesty International, Human Rights Watch ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமை மீறல்களைப் பற்றி தொடர்ந்து வெளியிட்டு வந்த அறிக்கைகளும் காரணம் தான். இந்தக் காரணத்தை விடுதலைப் புலிகள் அசட்டை செய்வதோ அல்லது ஒதுக்கி விடுவதோ எமது அரசியல் நலன்களுக்கு உதவாது.” என்கிறார்.
கவனித்துப் பாருங்கள். முன்னையதில் தனக்கு எவ்வகையான உறவும் கிடையாது என்ற சேரன் பின்னையதில் “எமது” என்று கூறுவதன் மூலம் புலிகளின் தேசியவாதத்தின் பங்காளியாகிறார். மேலும் இதே நிகரி கட்டுரையில் UTHR(J) இன் தலையில் ஒரு குட்டுவைப்பதன் மூலம் தனது பகுதியளவிலான புலிச்சார்பை அறிவிக்கிறார்.
இவ்வாறாக படிப்படியாக தனது வண்ணங்களை சூழலுக்கேற்ப மாற்றி வந்த பச்சோந்தியான சேரன் தீராநதிப் (2002 செப்) பேட்டியில்
“விடுதலைப் புலிகளின் ஆட்சிக்குள் இருக்கிற மக்களின் அனுபவங்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல இயலாது. நான் அந்தப் பகுதிகளுக்குப் போய் வரவில்லை. சமூகவியலாளர்கள் இது குறித்து என்ன சொல்கிறார்கள் என்றால் “தேர்தல்நடைபெறாமல் ஒரு இயக்கம் நீண்ட காலமாக ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமென்றால் பயங்கரத்தைப் பாவித்து இருக்க முடியாது” என்று சொல்கிறார்கள். அடக்குமுறை ஏதாவது ஒரு விதத்தில் பிரயோகிக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த மக்களின் ஆதரவில்லாமல் நீண்ட காலத்துக்கு ஒரு நிலப்பரப்பைத் தங்களது ஆட்சிக்குக்கீழ் வைத்து வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பது சாத்தியப்படாது. வியட்னாம் உட்பட பல நாடுகளில் இத்தகைய நிலமையைப் பர்த்திருக்கிறோம். அந்த வகையில் வடக்கு கிழக்கில் புலிகளுக்குட்பட்ட பிரதேசங்களில் ஏராளமான மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றுதான் நம்புகிறேன். அதே சமயத்தில் புலிகள் சில மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்று சொல்லமுடியாது. அம்மாதிரி தவறுகள் நடப்பதாக அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு தூரம் அடிப்படையான ஜனநாயக, மனித உரிமைகள் சார்ந்து அரசாங்கம் அமைக்கப்படப்போகிறது என்பதில்தானிருக்கிறது எதிர்காலம். ”
என்று கூறியதன் மூலம் தான் 100% புலி வண்ணங்களைப் பெற்றதை அறிவிக்கிறார். 2006 ல் கனடா ஈழநாடு இதழில்
“தெளிவும் செறிவும் சாரமும் காரமும் பொருந்தியதாக அமைந்திருந்தது பிரபாகரன் அவர்களின் உரை. தளராத படைத்திறன், போர்வலு என்பவற்றின் மீது உறுதியாகக் கட்டப்பட்ட நம்பிக்கையும் பெருமிதமும் அவருடைய பேச்சினூடக வெளிப்பட்டன. அவருடைய கருத்துக்கள், நெறிமுறைகளோடு உடன்படாத பல சிங்கள ஆங்கில ஊடகவியலாளர்கள் மற்றும் கருத்தியலாளர்கள் கூட அவருடைய உரையின் தர்க்கத்தையும் பொருத்தப்பாட்டையும் சுட்டிக் காட்டி எழுதிய குறிப்புக்களும் கட்டுரைகளும் ஆங்காங்கே வெளியாயின”
என்று தலைவருக்கு சொக்குப்பொடி போட்டுப் புகழ்ந்த சேரன் தானும் தலைவருக்கு கழுவ “ரெடி” என்று அறிவித்தார். இதன் மூலம் சேரன் தான் 200% புலியாக மாறி விட்டதை அறிவித்தார். (கிட்லரின் உரையொன்றை தலைசிறந்த சிந்தனையாளரும் யூதருமான நோம் சோம்ஸ்கி அதிசிறந்ததாக இருந்ததாகப் புகழ்ந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கிறது சேரன் பிரபாகரனின் உரையை புகழ்வது)
ஆனந்த சங்கரியின் கடந்தகால கூட்டணி அரசியலில் எங்களுக்கு விமர்சனங்கள் இருந்தாலும் இன்று ஆனந்தசங்கரி முழு இலங்கையினதும் மனச்சாட்சியின் கைதியாக இருக்கிறார். ஆனால் சேரனோ வெட்கமின்றி “ஆனந்த சங்கரி அவர்களின் கண்மூடித்தனமான எதிர் அரசியலைப் பற்றி எனக்குத் தீவிரமான விமர்சனம் இருக்கிறது” என்று மேற்குறிப்பிட்ட அதே கட்டுரையில் சங்கரிக்கு தலையில் குட்டு வைத்து எழுதுகிறார். வன்னிப் புலிகளுக்கு தனது புதிய புலிவிசுவாசத்தில் சிறிது கூட சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக புலிகளுக்குப் புரிகிற மொழியிலேயே சேரன் எழுதியதுதான் அது.
இதே சேரன் தான் காலச்சுவடு பேட்டியில் (1999) கனடாவில் இருந்து வருகிற விடுதலைப் புலிகளின் பத்திரிகையான “உலகத் தமிழரையும்” இன்னொரு புலி ஆதரவுப் பத்திரிகையான “முழக்கத்தையும்” அவற்றினுடைய குறுகிய தேசியவாத மற்றும் stereo type ஆன கட்டுரைகளுக்காக அவற்றை கடுமையாக விமர்சித்திருந்தார். இன்று அதே பத்திரிகைகளில் சேரனே (சொந்தப் பெயரிலும் புனைபெயரிலும்) தலைவரை பப்பாசி மரத்தில் ஏற்றுகிறமாதிரி புகழ்ந்தும் புலிப்பாசிசத்தை ஆதரித்தும் கட்டுரைகள் எழுதுகிறார்.
ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை என்றானாம். அதே போலத்தான் சேரன் தனது புலமை மோசடிகளை மறைக்க UTHR(J) மீது ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டுகளை சகட்டு மேனிக்கு வைக்கிறார். UTHR(J) இன் உறுப்பினர்களாக ராஜன் கூலும் சிறீதரனுமே இருந்தார்கள். மனோரஞ்சனும் ராம் மாணிக்கலிங்கமும் UTHR(J) ன் உறுப்பினர்களாக இருக்கவில்லை. மனோரஞ்சனும் மாணிக்கலிங்கமும் கூல் முதலியவர்களின் நண்பர்களாக இருந்தார்கள் என்பது உண்மைதான். மேற்கூறிய இருவரையும் UTHR(J) உடன் தொடுப்பதன் மூலம் அதற்கு சேறு பூசலாம் என்பது சேரனின் பரிதாபத்துக்குரிய முயற்சி. மனோரஞ்சன் மாணிக்கலிங்கம் இருவருமே நல்ல நோக்கம், நல்விசுவாசம் (Good intentions and Good faith) என்பவற்றின் அடிப்படையிலேயே சந்திரிகா அரசில் நம்பிக்கை வைத்திருந்தார்கள். உண்மையிலேயே சந்திரிகா நம்பிக்கை ஊட்டுபவராகவே இருந்தார். சேரனே தன்னுடைய காலச்சுவடு பேட்டியில் சந்திரிகாவைப் பற்றி நன்றாகவே சொல்லியுள்ளார். பக்கச்சார்பற்ற எவருமே சந்திரிக்கா ஆட்சிக்கு வந்திருந்தபோது கூடவே கொணர்ந்த நல்ல நோக்கங்களை (Good intentions) சந்தேகிக்க மாட்டார்கள். கொலைகாரர்களான கிட்டு, சந்தோசம் முதலியவர்களோடு ஒப்பிடுகிறபோது மனோரஞ்சனும் மாணிக்கலிங்கமும் ஒரு கொலையுமே செய்யாதவர்கள். கொலைகாரர்களான கிட்டுவோடும் சந்தோசத்தோடும் நட்பு பேணியதாகக் கூறுபவர் சேரன். கூலும் சிறீதரனும் ரஞ்சனுடனும் மாணிக்கலிங்கத்துடனும் நட்பு பேணியதில் என்ன தப்பு.
புலிகளின் குரலில், புலிகளின் வேலைத் திட்டங்களின் (Agenda) அடிப்படையில் சந்திரிகா மீது சேரன் குற்றஞ்சாட்டுவது சரியான மதிப்பீடு அல்ல. சந்திரிகா ஊழல் நிறைந்த அரசியல் வாதியாக இருந்தும் குமார் பொன்னம்பலம் பத்திரிகையாளர் றோகண குமார போன்றவர்களின் கொலைக்கு பொறுப்பானவர்களின் மேலாளராக இருந்தது உண்மை என்றாலும் ஜெயவர்த்தனா, பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் மீது Crimes against humanity என்ற குற்றச்சாட்டை சுமத்துவதுபோல சந்திரிகாமீது மீது Crimes against humanity என்ற குற்றச்சாட்டை யாருமே சுமத்த முடியாது என்பதோடு ஒப்பீட்டு அடிப்படையில் முன்னையவர்களைவிட ஜனநாயகத்தில் சந்திரிகா அதிகம் நம்பிக்கை உடையவராக இருந்தார். ஜெயவர்த்தனா, பிரேமதாச, விக்கிரமசிங்க முதலியோர் திட்டமிட்டு தமிழ் மக்களை அழித்தவர்கள் (1983 ஜூலை படுகொலைகள்) என்பது போக ஜெயவர்த்தனாவும் பிரேமதாசவும் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் என்பதை அவர்களது அரசியல் வாழ்வு சொல்லும். சந்திரிகா அரசாங்கத்தின் மீது 1995 ஏப்பிரிலில் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து புலிகளால்தான் போர் தொடுக்கப்பட்டது. அதே காலப்பகுதியில்தான் சந்திரிகா அரசாங்கத்தின் பணிப்பின் பேரில் நீலன் திருச்செல்வமும் பீரிசும் இணைந்து இந்திய மாநில சுயாட்சியை ஒத்த அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சித்திட்டமொன்று தயாரிக்கப்பட்டது. கொடுமையான போர் ஒன்று இலங்கை அரசின் மீது தொடுக்கப்பட்டு விட்டதால் சந்திரிக்கா அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழிகளைப் பற்றி சிந்திப்பதற்கே சந்தர்ப்பம் சந்திரிக்காவிற்குக் கிடைக்கவில்லை. இவ்வளவு நெருக்கடி இருந்தும் கிருசாந்தி படுகொலை, செம்மணிப்படுகொலைகள் முதலியன மீது குறைந்தபட்சமேனும் ஒரு சுயாதீனமான நீதிவிசாரணைகள் சந்திரிகா ஆட்சியின்போது நடத்தப்பட்டது. (நீதி முழுமையாக வழங்கப்படாவிட்டாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டாலும்) ஜயவர்த்தன மற்றும் பிரேமதாச ஆட்சிகளின் போது இந்தளவுக்கு எந்தவொரு சுதந்திரமான நீதி விசாரணையுமே நடத்தப்பட்டதில்லை. மேலும் 2004 ஏப்பிரலில் கருணா புலிகளைவிட்டுப் பிரிந்தபோது சந்திரிகா நடந்து கொண்டமுறையும் (போர் நிறுத்தத்தைக் கருத்தில் கொண்டு கருணா அணியினருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இதனை சாதகமாகப் பயன்படுத்தி வன்னிப்புலிகள் பெரியவெள்ளி தினத்தன்று கருணா அணிமீது தாக்குதல் தொடுத்தார்கள்) தன்னுடைய ஆட்சியின் இறுதிக்காலத்தில் பலருடைய எதிர்ப்புக்கு மத்தியில் வட கிழக்கின் சுனாமி மீள்கட்டுமானப் பணியை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்க முன்வந்தமையும் அவரது ஜனநாயக நடத்தைகளுக்கான உதாரணங்கள்.
UTHR(J) சந்திரிகா ஆட்சிக்கு வந்தபோது சந்திரிகா அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது என்றும் 1995 இல் யுத்தம் ஆரம்பித்த போது அதனை வழிமொழிந்து ஒரு அறிக்கையை UTHR(J) வெளியிட்டது என்றும் UTHR(J) நடுநிலமை தவறிய அமைப்பு என்றும் சேரன் சொல்வது சேரனின் திரிப்புக்கள். சேரன் புலிப்பினாமிகளின் பாணியில் UTHR(J) மீது தாக்குகிறார். UTHR(J) ஒருபோதுமே சந்திரிகா அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. UTHR(J) ஒரு மனித உரிமை அமைப்பே தவிர அரசாங்கங்களின் மீது ஆதரவு நிலைப்பாடு எடுக்கிற அரசியல் கட்சியல்ல. எப்பொதுமே சுயாதீனத்தைப்பேணுகிற அமைப்பு அது. மேலும் ஒருபோதுமே 1995 இல் ஆரம்பித்த யுத்தத்தை UTHR(J) வழிமொழியவில்லை என்பதை UTHR(J)இன் இணையத்தளத்துக்கு செல்வதன்மூலம் யாரும் கண்டுகொள்ளலாம். மறுதலையாக குறித்த யுத்தத்தில் இராணுவத்தால் மீறப்பட்ட மனித உரிமைகளை எல்லாம் விலாவாரியாக ஆவணப்படுத்தியது UTHR(J) அறிக்கைகளே.
சேரன் கிழக்கு மாகாணத்தில் நடந்த கட்டாய (குழந்தைகள்) இராணுவ ஆட்சேர்ப்பு, முஸ்லீம் மக்கள் மீதான ஒடுக்குமுறை படுகொலைகள் என்பவற்றுக்கு கேணல் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார். இதன் மூலம் புலிகளில் இருந்து கருணா வெளியேறிய பின்னர் முழுத்தவறுகளையும் கருணாவின்மீது புலிகள் சுமத்தியதைப்போல தானும் சுமத்துகிறார்.
யூதர் எதிர்ப்பு இனவாதம் (Anti-Semitism) என்பது ஒரு மத்திய கிழக்கு கருத்துருவாக்கம் அல்ல. அது ஒரு ஐரோப்பிய கருத்துருவாக்கமாகும். அதே போலவே இலங்கையிலும் முஸ்லீம் எதிர்ப்பு இனவாதம் என்பது ஒரு யாழ்ப்பாணியக் கருத்துருவாக்கமே தவிர அது ஒரு கிழக்கு மாகாண கருத்துருவாக்கமல்ல. மூவின மக்களும் வாழ்கிற கிழக்கு மாகாணத்தில் இன சகிப்புத்தன்மை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. கிழக்கில் தமிழ், முஸ்லிம் கிராமங்கள் குழல் புட்டும் தேங்காய்ப்பூவும் போலப் பின்னிப் பிணைந்திருந்தன. முஸ்லிம் எதிர்ப்பு இனவாதத்தை தமது பாசிச அரசியலுக்காகக் கிழக்கு தமிழர்களிடையே பரப்பியது புலிகளின் யாழ்ப்பாணத் தலைமையே. இங்கு நாங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் டெலோ மீது தாக்குதல் தொடுத்து அதன் உறுப்பினர்களைக் கொன்றபோது புலிகளின் இதே கொள்கையை கிழக்கு மாகாணத்திலும் அமுல்படுத்த கிழக்கு மாகாண புலித்தலைவரான “கடவுள்” ஒத்துழைக்கவில்லை. இதன் பின்னர் பிரபாகரன் குமரப்பாவையும் பொட்டரையும் அனுப்பியே டெலோ உறுப்பினர்களின் மீதான படுகொலைகளை ஒப்பேற்றினார். பிரபாகரன் 1987 ம் ஆண்டுவரையும் வடமாகாணத்தவர்களையே புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகளாக நியமித்து கிழக்கு மாகாண புலி உறுப்பினர்களிடமும் புலிப்பாசிச மற்றும் முஸ்லீம் எதிர்ப்பு இனவாத அரசியல் ஊட்டப்பட்டது. கருணா பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலராக இருந்தவர். பொன்னம்மான், ராதா ஆகிய இருவரின் தலைமையின் கீழ் இராணுவப்பயிற்சி பெற்றவர். இதனைவிட கருணா மட்டக்களப்பு தளபதியாக வருவதற்கு முதல் பசீர் காக்கா, அருணா, குமரப்பா, பொட்டம்மான் ஆகிய யாழ்ப்பாண புலித்தலைவர்களின் கீழ் மட்டக்களப்பில் இயங்கியவர். இவைகள் அனைத்தும் போதுமே 17 வயதில் கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகளோடு இணைந்த உலகம் அறியாத அப்பாவி வாலிபனான கருணாவிடம் புலிப் பாஸிச வெறியைப் புகுத்துவதற்கு. இந்தப் பின்னணியிலேயே நாங்கள் கருணாவைப் புரிந்து கொள்கிறோம். சேரன் சொல்வது போல நாங்கள் அப்பழுக்கற்ற தூயவிடுதலைப் போராளி என்ற விம்பத்தை கருணா மீது கட்டவில்லை.
UTHR(J) க்கு தேனீ உத்தியோகபூர்வமாகவே இணைப்புக்கொடுத்துள்ளது. சேரன் குறிப்பிட்ட UTHR(J) இன் கிழக்கு மாகாண அறிக்கையை மறைக்க வேண்டிய எந்த தேவையும் தேனீக்கு இருந்ததில்லை.
சேரன் 2003 இல் யாழ்ப்பாணத்துக்குப் போய் யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பதவிக்கு கண் வைத்து யாழ் திருநெல்வேலிப்பகுதியைச் சுற்றிச் சுற்றி நாய் பேயாய் அலைந்தது. இதற்கு ஆதரவு தேடி யாழ் பல்கலைக்கழக வட்டாரங்களில் Manoeuvring செய்தது எல்லாம் உண்மை. யாழ் பல்கலைக்கழக வட்டாரங்களில் எல்லோருக்கும் இது தெரியுமே. சேரன் யாழ்ப்பாணத்தில் நின்ற இதே காலப்பகுதியில்தான் EPRLF வரதரணி சுபத்திரன் உட்பட எண்ணற்ற மாற்று இயக்க காரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டார்கள். 1999 காலச்சுவடு பேட்டியில் சேரன் விடுதலைப் புலிகளுக்கும் தனக்கும் இடையே இருந்த கருத்து முரண்பாடுகளின் விளைவாகவே தான் 1990 இல் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டி வந்தது என்றும் யாழ்ப்பாணத்திலேயே தங்கி நின்ற தன்னுடைய நண்பர்களில் பலர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றும் கூறினார். நிலமை இவ்வாறு இருக்க சேரன் மட்டும் எவ்வாறு (வன்னிப் புலிகளுக்கும் சேரனுக்கும் இடையில் கள்ள ஒப்பந்தம் இலாமல்) கொல்லப்படாமல் திரும்பிவர முடிகிறது?
சேரனுக்கு கலாநிதிப் பட்டத்துக்கான புலமைப் பரிசிலைப் பெற்றுக்கொடுக்க காரணமாக (Instrumental) இருந்தவர் நீலன் திருச்செல்வம்தான். நீலன் திருச்செல்வத்தின் “அணைவோடு” தான் ஏ.ஜே. வில்சனினதும் குமாரி ஜெயவர்த்தனாவினதும் சிபார்சுக் கடிதங்களை சேரன் பெற்றார். பல வகைகளில் சேரனைவிடத் தகுதியான பலர் புலமைப்பரிசில் பெற இருந்தார்கள்.
1. சேரனின் முதல் B.Sc பட்டம் Honours ம் class ம் இல்லாத mediocre தரத்திலேயே இருந்தது.
2. சேரனின் இரண்டாவது M.Sc ம் Class எதுமில்லாத Mediocre பட்டம்தான்.
இந்த நிலையில் “செல்வாக்கு” இல்லாமல் நீதியான முறையில் யோர்க் பல்கலைக்கழகத்தில் சேரனால் புலமைப்பரிசில் பெற்றுக் கொண்டிருக்கவே முடியாது. நீலன் திருச்செல்வமும் ICESம் இலாவிடில் சேரன் ஒரு nobody. இதனைப் பல பல்கலைக்கழக அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சேரன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வைத்திருந்த நேர்மையான விமர்சகர் என்ற விம்பமும் இப்போது வெளுத்து விட்டது.
1986 இல் டெலோ உறுப்பினர்களை புலிகள் வேட்டையாடிக் கொன்று கொண்டிருந்த போது நுPசுடுகு தங்கள் உயிரையே துச்சமாக மதித்து பெருமளவான டெலோ உறுப்பினர்களைக் காப்பாற்றினர். இது நடந்து சிறிது காலத்தின் பின்னர் தமிழ்நாட்டில் வரதராஜப் பெருமாளை சேரன் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பின்போது சேரன் பெருமாளிடம் கொள்ளை முதலியயவற்றைச் செய்த ரெலோ இயக்கத்துக்காக EPRLF ஏன் வக்காலத்து வாங்கி டெலோ உறுப்பினர்களைக் காப்பாற்றி தஞ்சமளித்தது என்று கேட்டாராம். இவற்றை வரதராஜப் பெருமாள் கண்ணோட்டம் இதழில் எழுதும் கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார். இதே சேரன் தான் ‘மனித உரிமைப் போராளி’ என்ற முகமூடியை அணிந்துகொண்டு பின்னர் படம் காட்டியவர்.
1986 ம் ஆண்டு வெளிவந்து 106 நாட்கள் ஓடிய பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ ஈழத்தமிழரின் பிரச்சினையை சிறிது வெளிப்படுத்தியது. ஈழப் போராளிகளின் தமிழ்நாட்டு இருப்பிடம் ஒன்றை காட்டுகிற கட்டத்திலே சில மனிதர்கள் சித்திரவதை செய்யப்படுவது காட்டப்படுகிறது. இதனைப் பார்த்து “டென்சன்” ஆன சேரன் இக்காட்சி ஈழப் போராளிகளைக் கொச்சைப்படுத்துகிறது என்று ஈரோஸ் இயக்கத்தினால் வெளியிடப்பட்ட பாலம் இதழில் எழுதியிருந்தார். உண்மை என்னவென்றால் இதே காலப் பகுதியில்தான் புளட் இயக்கத்தினால் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட உட்கட்சி சித்திரவதை, கொலைகள் அம்பலமாகியிருந்தன. இதனைத்தான் பாலச்சந்தர் புன்னகை மன்னனில் வெளிப்படுத்தியிருந்தார். ஒரு வியாபார திரைக்கலைஞரே உண்மையை வெளிப்படுத்துகிறபோது சேரன் அதனை தணிக்கை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். புன்னகை மன்னன் படத்திலும் வில்லன் கமலஹாசனை “நான் ஆறடி இரண்டங்குலம், கோபுரம்” என்று மிரட்டுகிறான். சேரனும் தனது பதிலில் “மாடுமுட்டி கோபுரங்கள் சாய்வதில்லை” என்று நம்மை மிரட்டுகிறான். சேரன் மாடா, கோபுரமா என்பதை சமகாலமும் வரலாறும் முடிவு செய்யும்.
சேரன் இந்தப் பதிலிலும் கூசாமல் பொய்சொல்லி தன்னைப் பற்றிய பிரமைகளைக் கட்டமைக்கிறார். அதிலும் சேரனின் அண்டப்புழுகு என்னவென்றால் தனக்கும் புலித் தளபதி கிட்டுவுக்கும் நட்பு இருந்தது என்று குறிப்பிடுவதுதான்.
கிட்டுவையும் சேரனையும் தெரிந்தவர்களுக்கு இருவரும் நண்பர்களாக இருக்கவில்லை என்பது தெரியும். நட்பு இருக்கவில்லை. ஆனால் சேரனுக்கு கிட்டுவில் எரிச்சல் இருந்தது. கிட்டுவைப்போல காதலோடு வீரத்தையும் அனுபவித்த பாக்கியசாலியாக தான் இல்லையே (பக்.188, உயிர் கொல்லும் வார்த்தைகள்) என்பதால் சேரனுக்கு எரிச்சல் இருந்தது.
NLFT இன் கூட்டங்களில் பெரும்பாலானவை அளவெட்டியில் சேரனின் வீடான “நிழல்” இல் தான் கூட்டப்பட்டன. NLFT தலைவரான விசுவானந்ததேவன், உருத்திரமூர்த்தி குடும்பத்தில் ஒரு குடும்ப நண்பராகவே கருதப்பட்டவர். சேரனின் தங்கையான அவ்வை NLFT இன் மகளிர் அணியில் இருந்தவர். NLFT தலைவர்களில் ஒருவரான எஸ்.கே விக்கினேஸ்வரனையே இக்காலப்பகுதியில் அவ்வை காதலித்து பின்னர் மணந்து கொண்டார். 1990 இலிருந்து வடக்கு கிழக்கில் தங்கியிருந்த NLFT இயக்க உறுப்பினர்கள் 100 க்கு மேற்பட்டவர்கள் புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட தப்பியோட முடிந்தவர்கள் தென்னிலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றார்கள். சேரனும் எஸ்.கே விக்கினேஸ்வரனும் 1990 முற்பகுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார்கள். விக்கினேஸ்வரனின் மூத்த தம்பி NLFT உறுப்பினர் என்று யாழ்ப்பாணத்தில் புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சேரன், எஸ்.கே.விக்கினேஸ்வரன் (இந்த விக்கினேஸ்வரன் தான் காலச்சுவட்டில், ஈழத்தின் இன்றைய உண்மை நிலவரங்களைத் திரிபுபடுத்தி புலிகளின் வேலைத் திட்டங்களுக்கிசைவாக கட்டுரைகள் எழுதி வருபவர்) ஆகியோர் 1990 க்குப்பின்னர் யாழ்ப்பாணத்தில் நின்றிருந்தால் புலிகளால் கொல்லப்பட்டிருப்பார்கள். இவ்விருவரும் 1990 இல் புலிகள் மாற்று இயக்க காரரை வேட்டையாடிய போது கொழும்புக்கு ஓடிவந்தவர்கள். இன்று இவர்கள் மனச்சாட்சியின்றி புலிகளால் கொல்லப்பட்ட தங்கள் நண்பர்களின் சடலங்களில் காலால் மிதித்து முன்னேறி தனிப்பட்ட நலன்களுக்காக புலிகளுக்காக வெட்கமின்றி விபச்சாரம் செய்கிறார்கள்.
சேரனும் சேரனைப் போலச் சார்ந்ததன் வண்ணமாக இயங்கும் பச்சோந்திகளுக்கும் சேரனே எழுதிய பின்வரும் கவிதை அச்சொட்டாய் பொருந்துகிறது.
மனிதத்தை
துப்பாக்கி முனையில்
நடத்திச்சென்று
புதைகுழி விளிம்பில்
வைத்துச் சுட்டுப்
புறங்காலால் மண்ணைத் தள்ளி
மூடிவிட்டு வந்து
தெருவோரச் சுவரில்
குருதியறைந்து
நியாயம் சொல்கிறார்கள்
நியாயம்!
யார் கேட்டார் உம்மிடத்தில்
நியாயத்தை?
முல்லைத் தீவு பிரதேசத்தில் புலிகளுக்கெதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் இன்று காலை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டு வந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு முன்னரங்கப் பகுதிகளில் நேற்று இரவு தாக்குதல்களை ஆரம்பித்த படையினர் இன்று காலையில் இந்த வைத்தியசாலையைக் கைப்பற்றியுள்ளதோடு அப்பிரதேசத்தில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
புலிகளுக்கு முக்கியமானதாகக் காணப்பட்ட இந்த வைத்தியசாலை கைப்பற்றப்பட்டுள்ளமை படை நடவடிக்கைகளில் ஈட்டப்பட்ட மற்றுமொரு பாரிய வெற்றி என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹ{லுகல்ல தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவராக குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேசிய தெரிவுக் குழு இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியின் உப தலைவராக நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் தலைவராக இதுவரை கடமையாற்றிய மஹேல ஜயவர்தனää அண்மையில் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி மேற்கொண்ட கிரிக்கட் சுற்றுலாவுடன் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கிணங்க அணியின் புதிய தலைவர் மற்றும் உப தலைவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் ஜுன் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் வரை இலங்கை அணி எவ்வித சர்வதேச ஆட்டங்களிலும் கலந்துகொள்ளாது என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வருகிற மே 13-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் பணியை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்தவும், வாக்காளர்கள் அச்சமின்றி, குழப்பமின்றி வாக்களிக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரசாரத்துக்கு நோட்டீஸ் அடிக்கும் அச்சகங்களுக்கும் தேர்தல் தொடர்பாக வெளியிடும் நோட்டீஸ்கள், சுவரொட்டிகள் தொடர்பாகவும் புதிய விதிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
-வன்முறை, கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக நோட்டீஸ் அடித்துக் கொடுக்கக்கூடாது.
-ஜாதி, மத அமைப்புகள் கொடுக்கும் உணர்ச்சியை, கிளர்ச்சியை தூண்டும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் அச்சடிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
-மத உணர்வை தூண்டும் சட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் கேலி சித்தரங்களை அச்சடிப்பதை கைவிட வேண்டும்.
-தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புக்கும், ஜனநாய கத்துக்கும் எதிரான சுவரொட்டிகள் அடிக்கவே கூடாது.
-இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வித வாசகமும் இடம்பெறவே கூடாது.
-அச்சகங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தணிக்கை செய்து கொள்ள வேண்டும்.
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற போது என் உடல் வலியையும் மீறி, உள்ளத்தை வலிக்கச் செய்யும் அளவுக்கு முத்துக்குமார் தீக்குளித்து மரணமடைந்த செய்தி வந்தது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய உடல் வலியையும் மீறி – உள்ளத்தை வலிக்கச் செய்கின்ற அளவிற்கு சென்னையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர், முத்துக்குமார் என்பவர் இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்து மாண்டுவிட்டார் என்ற செய்தி மருத்துவமனையிலே உள்ள என்னை அடைந்து மனதை பெரிதும் பாதித்தது. கழகப் பொதுச் செயலாளரைத் தொடர்பு கொண்டு, அத்தகைய தற்கொலைகளை ஊக்கப்படுத்தக் கூடாது என்ற வகையில் அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்தேன். பொருளாளர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு, பேரவையில் அவர் உரையாற்றும்போது – தீக்குளித்து மாண்ட முத்துக்குமாரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கச் செய்தேன். ஆனால் அவரது மறைவுக்கு கழகத்தின் சார்பில் இரங்கல் செலுத்தச் சென்ற வடசென்னை மாவட்ட செயலாளர் மீது அரசியல் கண்ணோட்டத்தோடு அ.தி.மு.க., ம.தி.மு.க.வினர் கற்களை வீசி தாக்க முயன்றதாகவும், அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியினைக் கூட வாங்க மறுத்துவிட்டதாகவும் செய்தி வந்து, ஒரு இளைஞரின் தியாகச் செயலைக் கூட அரசியல் ஆக்குகிறார்களே என்றெண்ணி வேதனையடைந்தேன். இவ்வாறு கூறியுள்ளார்
இலங்கைத் தமிழர் விவகாரம் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் திட்டவட்டமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து தமிழ்நாட்டிலுள்ள சகல தரப்பினரும் அதிகளவுக்கு உடல், உள ரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைத் தமிழருக்கு ஆதரவை வெளிப்படுத்தி திங்கட்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமிருந்த ஜெயலலிதாவிடம் இலங்கைத் தமிழர் பிரச்சினையானது தேர்தல் விவகாரமாக அமையுமா என்று கேட்கப்பட்ட போது, “அவர்கள் தொடர்பாகவே தேர்தல் பெறுபேறுகள் அமையும். தமது சகோதரர்கள், சகோதரிகள், பிள்ளைகள் கொல்லப்படுவது குறித்து தமிழக மக்கள் அதிகளவுக்கு கவலை அடைந்துள்ளனர்’ என்று “இந்து’ பத்திரிகைக்கு ஜெயலலிதா கூறியுள்ளார்.
அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் இலங்கைத் தமிழருக்கு எந்த உதவியும் அளிக்கவில்லையென்ற பரவலான அபிப்பிராயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. அரசுக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் அவர்கள் துரிதமாக உணவு, மருந்துப் பொருட்களை இப்போது அனுப்பியிருப்பார்கள். இனப் படுகொலையை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் வெற்று வார்த்தைகளையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இரு அரசுகளுமே இலங்கைத் தமிழருக்கு நிவாரணம் வழங்குவதைப் புறக்கணித்து குற்றம் இழைத்திருக்கின்றன என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இலங்கை அரசுக்கு நவீன ஆயுதங்கள், உபகரணங்களையும் இராணுவத்திற்கு பயிற்சியையும் இந்திய அரசாங்கம் விநியோகித்து வருவது தொடர்பான செய்திகளை சுட்டிக்காட்டிய ஜெயலலிதா ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு இதனை செய்வது பொதுவான விடயமாக இருந்தாலும் யாருக்கு எதிராக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதே இங்குள்ள கேள்வியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கை அரசு தனது இராணுவப் பலத்தை தமிழர்களுக்கு எதிராக பிரயோகிக்கின்றது என்பதே உண்மையாகும். புலிகளுடன் தான் சண்டையிடுவதாக அது கூறக்கூடும். ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கையானது அப்பாவித் தமிழர்களும் இலக்காக்கப்படுகின்றனர் என்பதையே தெளிவாகக் காட்டுகின்றது என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தனது உண்ணாவிரதம் தொடர்பாக கருணாநிதியின் விமர்சனம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர் நான் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பேன் என்பது யாருக்கும் தெரியும்’. என்னால் செய்ய முடியாதது தொடர்பாக நான் ஒருபோதும் உறுதிமொழி அளிக்கமாட்டேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பழரசம் கொடுத்து ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். கட்சிச் செயலாளர் என்ற முறையில் 1 கோடி ரூபாவும் தனிப்பட்ட ரீதியில் 5 இலட்சம் ரூபாவும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதியத்திற்கு ஜெயலலிதா வழங்கியுள்ளார்.
உண்டியல் நிதிக்கு வைகோவும் ரூபா 5 இலட்சம் வழங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய (மார்க்ஸிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன், புதிய தமிழகத் தலைவர் கே.கிருஷ்ணசாமி , தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட அ.தி.மு.க. தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
போரை நிறுத்தாமல், மக்களை மீட்கிறோம் என்று அமெரிக்க படைகளை அனுப்பினால் தோல்விதான் ஏற்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:-
இலங்கை போர்ப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டால், அவர்களது உரிமைகளுக்காக போராட்டக் களத்தில் நிற்கும் போராளிகளை அழிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று இலங்கை அரசு கருதுகிறது.
இதற்கு இந்தியாவின் ஆதரவையும், அமெரிக்காவின் உதவியையும் பாசிச ராஜபக்சே அரசு நாடியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் அமெரிக்கா சென்றிருக்கிறார்.
வன்னிப் பகுதியில் உள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்காவின் தலைமையில் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக சிவசங்கர மேனன், அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
தமிழ் மக்களை அவர்களது பிறந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லுவதும், அவர்களை கட்டாயமாக வெளியேற்ற முற்படுவதும் ஈழத் தமிழர்களின் அரை நூற்றாண்டுகால போராட்டத்தை அவமதிப்பதாகும்.
தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடத்தில் இருந்து வெளியேற்றி இலங்கை படையினரின் சித்ரவதை முகாம்களில் அடைத்திட முற்படும் எந்த நடவடிக்கைக்கும் இந்தியா ஆதரவு அளிக்கக் கூடாது.
பாகிஸ்தான் ஒரு பக்கம் பகையாக இருக்கிறது. வங்கதேசம் இன்னொரு பக்கத்தில் பகைமை பாராட்டுகிறது. சீனா எந்த நேரத்திலும் பகை கொள்ளும் என்ற நிச்சயமற்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில் இந்தியாவின் தெற்கு பக்கத்தில் இருக்கும் இலங்கையும் தனக்கு பகையாக மாறிவிடக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காக, இனப்படுகொலை நடத்தும் ராஜபக்சே அரசுக்கு இந்தியா துணை போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலைப்பாடு இந்திய வெளியுறவுத்துறை மேற்கொள்ளும் மிகப்பெரிய மோசமான தவறாகும்.
ராஜபக்சே அரசின் பாசிச அராஜக நடவடிக்கைகளுக்கு இந்தியா வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ துணை நிற்பதை தமிழ்நாட்டில் இருக்கும் 7 கோடி தமிழர்களும் விரும்பவில்லை.
தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களின் 14 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இன்று தயாராக இருக்கிறது. இந்த உணர்வை புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்கும் வகையில், இந்திய அரசு தனது கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
முன்பு இந்திரா காந்தி காலத்திலும், அதன்பிறகு ராஜீவ் ஆட்சியின் போது, தொடக்க காலத்திலும் மேற்கொண்ட நிலைப்பாட்டை இந்திய அரசு இப்போது மேற்கொள்ள வேண்டும் என்பது தமிழர்களின் விருப்பம் ஆகும்.
இந்திராகாந்திக்கு இருந்த நம்பிக்கை, அவருக்கு இருந்த துணிச்சல், ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஈடுபாடு இப்போதுள்ள அரசுக்கு வரவேண்டும். இதுவும் ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமும், வேண்டுகோளும் ஆகும்.
போர்ப்பகுதியில் அகப்பட்டிருக்கும் மக்களை மீட்க வேண்டும் என்று இலங்கை அரசு விரிக்கும் வலையில் இந்தியா விழுந்து விடக் கூடாது. இந்த வஞ்சக செயலுக்கு அமெரிக்காவின் துணையையும் இந்தியா நாடக் கூடாது.
அமெரிக்காவும் முன்பு சோமாலியாவில் மேற்கொண்ட முயற்சியை இலங்கையில் மேற்கொள்ள முயலக் கூடாது. ஆய்த மோதலுக்கு தீர்வு காணாமல் மக்களை மட்டும் மீட்கப் போகிறோம் என்று படையை அனுப்பி வைத்ததால்தான் சோமாலியாவில் தோல்வி ஏற்பட்டது.
இப்போதும் இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளாமல், போர்ப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களை மட்டும் மீட்க போகிறோம் என்று புறப்பட்டால், சோமாலியாவில் ஏற்பட்ட தோல்விதான் இலங்கையிலும் ஏற்படும் என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை நடத்த தெற்காசிய நாடுகளுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு பயங்கரவாத பிரச்சினைகள் காரணமாக விலகிச் சென்று விடக் கூடிய ஆபத்து இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க சுட்டிக் காட்டினார்.
பாகிஸ்தான், லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தாக்குதலுக்கு இலக்கானமை தொடர்பாக அர்ஜுன ரணதுங்க இந்த கருத்தை வெளியிட்டார்.
“கிரிக்கெட் விளையாட்டு இன்று பிளவடைந்து காணப்படுகிறது. அத்துடன், நடவடிக்கைகளின் போது, எமது ஒத்துழைப்புகளும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. பயங்கரவாத பிரச்சினை காரணமாக 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் இங்கிருந்து (தெற்காசியாவிலிருந்து) விலகிச் சென்று விடக் கூடும். எனவே இது விடயத்தில் நாம் மேலும் நன்கு ஆராய்ந்து செயற்பட வேண்டும். என்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இடைக்கால நிர்வாக சபை முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.