படையினர் மீது இரசாயனத் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்! 17 முகமூடிகள் 16 ஆடைகள் படையினரால் மீட்பு

chemical_.png
முன்னேறிவரும் படையினர் மீது  இரசாயனத் தாக்குதல் ஒன்றை நடத்த புலிகள் திட்டமிட்டமிட்டிருந்தனர் என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. உடையார் கட்டுக்குளம் வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தின் 57 ஆவது படையணியினர் கடந்த 05 ஆம் திகதி நடத்திய தேடுதலில் இரசாயயனத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் 17 முகமூடிகள் மற்றும் 16 ஆடைகள் என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
 
கடந்த இரண்டு வருட காலங்களாக புலிகள் இராசயன வாயுவை படையினருக்கு எதிராக பாவித்துள்ளபோதிலும் படையினர் அந்தச் சவாலுக்கு முகம் கொடுக்கும் முன்னேற்பாடுகளுடன் செயற்பட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    இதை வைத்தே புலிகள் செய்வதாக சொல்லி அரசு இரசாயனதாக்குதலை நடத்தினாலும் ஆச்சரிய படுவதுக்கில்லை. அல்லது தாக்குவதுக்கு கொண்டு வந்து விட்டு இது புலியினுடையது என (அஸ்ரப் கவனிக்கவும்) நாடகமோ தெரியவில்லை.

    Reply
  • thanam
    thanam

    ஏன் ஜயா இரசாயனத் தாக்குதல் புலிகளின் கதை தானே முடிந்து விட்டதே?
    அதை விட்டு கப்பல் விடுவதேல்லாம் இங்கு தமிழ் மக்களை காட்டி பிச்சை எடுப்பதாகும். தேவையில்லா இரசாயன இது புலம் பெயர்ந்த மக்களிடம் இங்கு நிறைய உண்டு …..

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பாடசாலை பக்கத்தில்லுள்ள தொன்னந்தோப்புக்கு இரசாயனம் தெளித்ததின் விளைவாக நுhற்றுக்கணக்கான மாணவிகள் தலையை சுற்று வயிற்றுகுமட்டல் போன்ற விளைவுகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இது ஒரு முறையல்ல இருமுறை நடந்தேறியிருக்கிறது.
    முப்பது வருட புலிவரலாற்றை நிமிடக்கணக்காக கங்காணித்து வருகிறோம். இது மன்னிக்கமுடியாத சர்வதேசகுற்றமாகும். இது பற்றி ஏற்கனவே “தேசம்நெற்றில்” விட்டிருந்தேன். முடிந்தால் ஜெயபாலன் தேடி வெளிக்கொண்டு வரலாம். தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதமாக்கி பேரினவாதத்தை வெல்ல முடியாதவாறு திசைதிருப்பி தமிழ்மக்களை நடுத்தெருவில் நிறுத்தி அவலப்படுத்தியவர்கள் புலிகள். புலிகள் தமது இறுதியழிவில் இதையும் பரீச்சித்துப் பார்பார்கள். அன்றும் இன்றும் இதே கருத்துத்தான் என்னிடத்தில்லுள்ளது. இதை மாறி புரிந்து கொண்டு கருத்து சொல்லுபவர்கள் வன்னிமக்களின் கழுத்துக்கு மேல்லுள்ள கத்தியை கூர்மைப்படுத்துபவர்களே !

    Reply