பேரா தனை பல்கலைக்கழக மாணவர்கள் பேராதனை கலஹா சந்தியில் நேற்று புதன்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இணைந்த சுகாதார கற்கை பீடத்தினை திறக்கக் கோரியும், இப்பீட மாணவர்களும் செய்முறை பயிற்சிக்காக கண்டி, பேராதனை மற்றும் கம்பளை ஆஸ்பத்திரிகளில் அனுமதி பெற்றுத்தரக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு 3 மணி நேரம் கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இணைந்த சுகாதார கற்கை பீட மாணவர்களுக்கு போதனா வைத்தியசாலைகள் செயல்முறை பயிற்சிக்கான அனுமதியை மறுத்ததனால் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்தே பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டது.