முல்லைத் தீவு பிரதேசத்தில் புலிகளுக்கெதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் இன்று காலை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ்க்கொண்டு வந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு முன்னரங்கப் பகுதிகளில் நேற்று இரவு தாக்குதல்களை ஆரம்பித்த படையினர் இன்று காலையில் இந்த வைத்தியசாலையைக் கைப்பற்றியுள்ளதோடு அப்பிரதேசத்தில் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
புலிகளுக்கு முக்கியமானதாகக் காணப்பட்ட இந்த வைத்தியசாலை கைப்பற்றப்பட்டுள்ளமை படை நடவடிக்கைகளில் ஈட்டப்பட்ட மற்றுமொரு பாரிய வெற்றி என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹ{லுகல்ல தெரிவித்தார்.