‘நியாயம் சொல்கிறார்கள். நியாயம்!’ சேரனின் எதிர்வினைக்கு பதில் : நட்சத்திரன் செவ்விந்தியன்

Cheran._._._._._.
க.மகாதேவன் என்கிற புனைபெயரில் தேனீ இணையத்தளத்தில் நட்சத்திரன் செவ்விந்தியன் எழுதிய முதல் கட்டுரை (சாத்தானுக்கு இரண்டு நாக்கு (சிக்மன்) பிராயிட்டுக்கு ஆயிரம் நாக்கு சேரனுக்கு பல்லாயிரம் நாக்கு) சேரன் மீதான விமர்சனமாக அமைகிறது. இரண்டாவது கட்டுரை முதல் கட்டுரைக்கு சேரன் எழுதிய பதில். ( Cheran’s_reply_for_Nadchathiran_Sevindian ) மேற்கூறிய இரண்டு கட்டுரைகளும் 2006 ம் ஆண்டு தேனீ இணையத்தில் பிரசுரமானவை. இக்கட்டுரை சேரனின் பதிலுக்கு நட்சத்திரன் செவ்விந்தியன் எழுதிய எதிர்வினை. இது இப்போது தேசம்நெற்றில் பிரசுரிக்கப்படுகிறது.
._._._._._.          

Successful seductions rarely begin with an obvious maneuver or strategic device. That is certain to arouse suspicion. Successful seductions begin with your character, your ability to radiate some quality that attracts people and stirs their emotions in a way that is beyond their control. Hypnotized by your seductive character, your victims will not notice your subsequent manipulations. It will then be child’s play to mislead and seduce them.

From ‘The Art of seduction’ by Robert Greene.

வசியப்படுத்த வைக்கிற சூழ்ச்சிகரமான மாயத்திறமைகளைப் பயன்படுத்தியும் சூழ்ச்சிகளைக் கொண்டும் எழுதப்பட்டதே சேரன் எனது கட்டுரைக்கு எழுதிய பதிலாகும். சேரன் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு மனிதனை வசியப்படுத்த வேண்டும் என்பதற்கு பயன்படுத்துகிற வசிய மொழியும் (Language of Seduction) உண்மையைக் கண்டடைய வேண்டும் என்பதற்காக நடாத்தப்படுகிற ஒரு அரசியல் பெருங்கதையாடலுக்கான மொழியும் (Language of Political Discourse) ஒன்று அல்ல என்பதைத்தான். முன்னையதில் பொய்களும் திரிக்கப்பட்ட உண்மையும் குதர்க்கங்களும் சூழ்ச்சியும் இருக்கும். பின்னையதில் உண்மையும் தர்க்கமும் இருக்கும்.

சேரனைப் பற்றி நான் எழுதிய கட்டுரை உறுதியான ஆதாரங்களுடன் எழுதப்பட்ட உண்மைகளின் தொகுப்பு. அதற்கு சேரன் எழுதிய பதிலில் இருக்கிற பொய்களையும் திரிக்கப்பட்ட உண்மைகளையும் குதர்க்கங்களையும் சூழ்ச்சிகளையும் பின்வரும் பகுதிகளில் தெளிவுற விளக்குகிறேன்.

1. வின்சர் பல்கலைக்கழகத்தில் சேரனின் உண்மையான பதவி tenure நிரந்தரத் தகுதி இல்லாத ஆரம்ப விரிவுரையாளர் என்பதே. ஆரம்ப விரிவுரையாளர்களை வட அமெரிக்கப்பல்கலைக் கழகங்களில் Assistant Professor என்று குறிப்பிடுவதே வழக்கம். என்னுடைய கட்டுரையில் மிகத் தெளிவாகவும் விரிவாகவும்  இப்பதவிகள் சம்பந்தமான சொற்களையும் அவற்றின் வேறுபாடுகளையும் விளங்கப்படுத்தியுள்ளேன். இவ்வளவு செய்த பின்னரும் சேரன் தான் நிரந்தரமான ஒரு பேராசிரியராக வின்சர் இல் இருப்பதாகவும் கூகிளில் தன் பெயரைப்போட்டுத் தேடினால் தன்னைப் பற்றிய எல்லா விவரமும் வருகிறது என்று மொட்டையாகவும் தந்திரமாகவும் படுபொய் சொல்லிவிட்டு நழுவுகிறார். இன்றைக்கு யாருமே பிழையான தகவல்களைக் கொண்டு ஒரு இணைவலையை ஆரம்பிக்கலாம். இதற்கு நல்ல ஒரு உதாரணம் புலிகளின் நிதர்சனம் டொட் கொம். முதலில் நாங்கள் ஒரு தகவல் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த அது நம்பகரமான அதிகாரபூர்வமான மூலத்தூடாக வருகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வட அமெரிக்கப்பல்கலைக் கழகங்களில் Professor  என்ற பதம் பல்கலைக்கழகங்களில் படிப்பிக்கின்ற அனைவரையும் கௌரவமாக விளிப்பதற்கும் (அதாவது இலங்கைப் பல்கலைக் கழகங்களில் படிப்பிக்கின்ற அனைவரையும் பல்கலைக்கழக மாணவர்கள் “சேர்” என்று விளிப்பதைப் போல) பயன்படுத்தப்படுகிறது. விளிப்பதற்கு மட்டுமே அவ்வாறு பயன்படுத்தப்படுவதே தவிர அவ்வாறு விளிக்கப்படுகிற எல்லோருமே பேராசிரியர் அல்ல. இது பற்றிய விரிவான விளக்கத்துக்கு பார்க்க : http://en.wikipedia.org/wiki/Professor

ஆனால் வட அமெரிக்காவில் இருக்கிற எந்தவொரு நேர்மையான விரிவுரையாளரும் இந்த மயக்கத்தைப் பயன்படுத்தி தன்னை ஒரு பேராசிரியர் என்று வேணுமென்றே அறிமுகப்படுத்தி புழுகி மோசடி செய்யமாட்டார்கள். அல்லது எந்த ஒரு அமெரிக்கப் பதிப்பகமும் ஒரு விரிவுரையாளரால் எழுதப்பட்ட புத்தகத்தில் அவரைப் பற்றி அறிமுகப்படுத்துகிறபோது அவரை பேராசிரியர் என்று தவறாக அறிமுகப்படுத்த  மாட்டாது. இந்த சொல் மயக்கத்தினால் வெகுஜன ஊடகங்களில் சில தடவைகள் பேராசிரியர் பதவிக்கும் கதிரைக்கும் சொந்தமில்லாத பலர் பேராசிரியர் என்று தவறுதாலாக எழுதப்படுவது உண்டு. கூகிள் இணையத்தளத்தில் சேரனின் பேரைப்போட்டுத் தேடினால் முதலில் வருவது மேலே கூறியமாதிரியான தவறான அர்த்தத்தில் சேரன் பேராசிரியர் என்று எழுதப்பட்ட பக்கங்களே. சேரனே தன்னை பேராசிரியர் என்று எழுதி பல   இணைய பக்கங்களை ஆரம்பிக்கலாம். உண்மையிலேயே சேரன் முதலியவர்களால் அண்மையில் கனடாவில் நடாத்தப்பட்ட மாநாட்டுக்காக சேரன் முதலியவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்ட பின்வரும் இணையத்தளத்தில் சேரன் தன்னைத்தானே பேராசிரியர் என்றே புழுகி எழுதியுள்ளார். பார்க்க http://www.chass.utoronto.ca/~tamils/tsc2006/about/committee.html

ஆகவே நாங்கள் சேரனின் உண்மையான தகுதியை அறிய அவர் பணியாற்றுகிற வின்சர் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வமான பின்வரும் இணையத்தளத்துக்கே சென்று பார்க்க வேண்டும். www.uwindsor.ca/units/socanth/sociology.nsf/831fc2c71873e46285256d6e006c367a/b09aaaab44a4671885256c750064ec58!OpenDocument

இதில் சேரன் Assistant Professor (விரிவுரையாளர்) என்றே மிகத்தெளிவாக உள்ளது. இதைவிட Assistant Professor இல் இருக்கிற  Professor என்ற சொல்லைக்கொண்டு ஒருவர் தான் Professor என்பாராயின் அது ஒரு இராணுவ மேஜர் ஜெனரல் தன்னை ஒரு ஜெனரல் என்று சொல்வதற்கு ஒப்பானது. கூகிளின் தேடும் இயந்திரத்தை பயன்படுத்தி சேரன் எப்படி சுத்துகிறார் என்பது இப்போது யாவருக்கும் புரிந்திருக்கும். மேலும் சேரனின் (விரிவுரையாளர்) Assistant professor பதவி நிரந்தரமான Tenure தகுதி இல்லாதது. காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தமிழினி 2000 மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பிலும் ‘மீண்டும் கடலுக்கு’ நூலிலும் சேரன் ஒரு சமூகவியல் மானுடவியல் பேராசிரியர் என்று அறிமுகம் தரப்படுவதும் சேரன் தன்னை ஒரு பேராசிரியர் என்று திசைகள் பேட்டியில் கூறுவதும் சந்தேகத்துக்கிடமின்றி  அறிவுத்துறை சார்ந்த மோசடிகள்.

2. Tigers of Lanka என்ற நூலின் மூன்றாவது பதிப்பில் (1995) 28 ஆவது பக்கத்தில் வருபவை இவைதான்.

“He was a restless character” added Rudramoorthy Cheran, a former Jaffna university student who had moved closely with Sivakumaran in 1973 – 1974. “He would discuss all night, emphasising the need for an armed struggle”

அதனுடைய தமிழ் மொழிபெயர்ப்பு வருமாறு.

“அவர் ஒரு அமைதியற்ற பிறவி ” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் மாணவரும் 1973 – 1974 காலப்பகுதிகளில் சிவகுமாரனுடன் நெருங்கிப் பழகியவருமான உருத்திரமூர்த்தி சேரன் கூறினார். “அவர் (சிவகுமாரன்) ஒரு இரவு முழுவதுமே ஆயுதப் போராட்டம் ஒன்றின் தேவையை வலியுறுத்தி விவாதித்துக் கொண்டிருப்பார்” என்று மேலும் தொடர்ந்து சொன்னார் சேரன்.

இங்கே மிகத்தெளிவாகவே சேரனின் மோசடி வெளிப்படுகிறது. அதாவது சேரன் ஆசிரியர் நாராயணசாமியிடம் 1973 -1974 காலப்பகுதியில் சிவகுமாரனுடன் நெருங்கிப் பழகியதாகப் பொய் சொல்லியிருக்கிறார். இங்கு சேரனின் மோசடிகள் இரண்டு.

(1) 1973 -1974 காலப்பகுதியில் அதாவது 2 வருடங்கள் சிவகுமாரனுடன் தான் நெருங்கிப் பழகியதாக பொய் சொன்னது
 
(2) மேற்கூறிய பொய்யின் அடிப்படையில் சிவகுமாரனைப் பற்றி சான்றிதழ் பத்திரம் (character certificate) வழங்கக்கூடிய அதிகாரம் தனக்கு இருப்பதாக காட்டிக் கொண்டமையும் அப்போலி அதிகாரத்தை மோசடியாக பிரயோகித்தமையும்.

உண்மை மேற்கூறியவாறு இருக்க சேரன் தனது பதிலில்

சிவகுமாரனோடு நடந்த ஒரு சந்திப்பை அடிப்படையாகக்கொண்டே சிவகுமாரனைப் பற்றி தான் நாராயண்சுவாமியின் புத்தகத்தில் கருத்துச் சொன்னதாக கயிறு திரிக்கிறார்.  சேரன் ஆதவனோடு நெருங்கிப் பழகியவர் என்பதில் எமக்கு எதிர்க்கருத்து இல்லை. அதுதான் ஆதவனின் குணம் சேரனிலும் வந்திருக்கிறதே.

சேரன் தனது இரண்டாந்தரக் கல்வியை தமிழ் மொழிமூலமே கற்றவர். அவர் Saturday Review பத்திரிகையில் வேலை செய்தகாகக் கூறுகிற 1984 – 1987 காலப்பகுதியில் ஆங்கிலத்தில் எழுதக்கூடிய அளவுக்கு அவருக்கு ஆங்கிலப் புலமை இருக்கவில்லை. 1987 ம் ஆண்டுக்குப் பின்னர் ஆங்கில மொழிமூலம் அரசியல் விஞ்ஞானம் கற்றபின்னரே தனக்கு ஆங்கிலத்தில் எழுதும் புலமை வந்ததாக அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். எம்முடைய வாதம் என்னவென்றால் தனக்கு இல்லாத தகுதியான Deputy editor of Saturday Review என்பதை டொரண்டோ எங்கும் வெகு சகஜமாகச்  சொல்லி வருவதுதான் தவறு என்கிறோம். சேரனே தன்னைப் பற்றி எழுதிய பின்வரும் http://www.cheran.net/english.html

சேரனின் இணையத்திலும்   கனேடிய யோர்க் பல்கலைக்கழக இணையமான பின்வரும் http://www.yorku.ca/hdrnet/images/uploaded/cheran_tsunamimemorial.pdf

இணையத்திலும் சேரன் தானே Saturday review பத்திரிகையின் Deputy Editor ஆக இருந்ததாக முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிற மகா பொய் சொல்லியுள்ளார். Deputy Editor என்றால் அதன் அர்த்தம் பத்திரிகையின் ஆசிரியர் தற்காலிகமாக இல்லாதபோது தற்காலிகமாக ஆசிரியர் பொறுப்பை எடுப்பவர். ஆங்கிலத்தில் எழுதக்கூடிய அளவுக்கு புலமை இல்லாத ஒருவரை ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் Deputy Editor ஆக்குவதானது துவிச்சக்கர வண்டியே ஓட்டத் தெரியாதவனை Harley Davidson motor bike ஓட்டும்படி கேட்பதற்கு சமனானது. எனது கட்டுரையின் பின்னரே சேரன் 1984 இல் தான் Saturday Review இல் வேலைக்குச்சேர்ந்தபோது தனக்கு ஆசிரியர் பகுதி உதவியாள் (இன்னொரு வகையில் சொன்னால் ஆசிரியர் பகுதி எடுபிடி)  என்ற பொறுப்பு இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். சேரனே மேலும் 1987 ஜூலையில்தான் தனது பொறுப்பு இணை ஆசிரியர் (இணை ஆசிரியருக்கான ஆங்கிலம் Associate Editor என்பதே.) ஆனது என்கிறார்.அவர் சொல்வது சரி என்று கொண்டாலும் அவர் ஆக ஒரே ஒரு மாதம் மட்டுமே இணை ஆசிரியராக இருந்துள்ளார். ஆங்கிலத்தில் எழுதுகிற அளவுக்கு ஆங்கிலத்தில் முழுப்புலமை இலலாத ஒருவர் இணை ஆசிரியர் ஆகக் கூட வருவது என்பது நகைப்புக்குரிய விடயமே.
     
1958 இல் பிறந்த சேரன் தான் 1960 இல் பிறந்ததாக பிற்பாடு கூறிவரும் மோசடியை ஆதாரங்களுடன் முன்வைத்திருந்தோம். இதற்கு சேரன் கொங்கு தேர் வாழ்க்கை 2 ம் தொகுதியில் தனது பிறந்த ஆண்டு 1954 என்று தரப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார். இதன் மூலம் சேரன் விவாதத்தை  பொறுக்கித்தனமாக  திசை திருப்புகிறார். அதாவது பொறுப்பற்ற கவலையீனமான அச்சுப்பிழைகளே தனது வயது மோசடிகளுக்கான காரணம் என்ற மறைக்கப்பட்ட செய்தியினை செருகுகிறார். சேரன் ஒரு ஒழுங்கான மனிதன் என்றால் தான் பிறந்த ஆண்டு எது என்பதை தெரிவித்திருக்க வேண்டும். அவ்விதம் சேரனால் செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் அவர் தனது வயது மோசடியில் கையும் களவுமாக வசமாக மாட்டுப்பட்டமையே. காலச்சுவடு வெளியீடாக 2000 ஆம் ஆண்டுக்குப்பிறகு வந்த சேரனின் புத்தகங்களில் எல்லாம் சேரன் பிறந்தது 1960 என்றே சேரனால் கண்ணனிடம் சொல்லப்பட்டே அறிமுகத்தில் எழுதப்படுகிறது. மேலும் சேரன் எம்மிடம் தனது கடவுச்சீட்டையும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தையும் பார்வைக்கு தர வேண்டும் என்று கேட்பதுதான் மிக வேடிக்கையானது. இதற்கூடாக ஒரு திசைதிருப்புகிற  வாதத்தை  வைக்கிறார். சேரன் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மேற்கூறிய ஆவணங்கள் எவற்றையுமே பிழையான வயதுகளுடன் பெயர்களுடன் மோசடியாக (Identity fraud) எவருமே தயாரிக்க முடியும். ஆவணங்களை வைத்து யாருமே உண்மைகளை நிறுவ முடியாது. சேரனின் மூத்த சகோதரத்தினதும் இளைய சகோதரத்தினதும் வயதை சேரனின் வயதுடன் ஒப்பீட்டுச் சரிபார்ப்பதன் மூலமும் சேரன் படித்த வகுப்பை சேர்ந்த சக மாணவர்களின் வயதுகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பதன் மூலமுமே உண்மையை நிறுவ முடியும். கல்லூரியில்  சேரனோடு சேர்ந்து படித்த மாணவர்கள் எல்லோருக்குமே சேரன் பிறந்தது 1958 என்பது மிகத் தெளிவாகவே தெரியுமே. இவர்களிடம் ஒரு கள்ள சேட்டிபிக்கட்டைக் காட்டி சேரன் தான் பிறந்தது 1960 தான் என்றால் அவர்கள் நம்புவார்களா? அல்லாவிடில் சேரன் தனது தம்பியான சோழனிடம் ஒரு கள்ள சேட்டிபிக்கட்டைக் காட்டி  “இதன்படி நான் உன்னைவிட இரண்டு ஆண்டுகள் கழித்தே பிறந்தேன். ஆகவே இனிமேல் நான் உனக்கு தம்பி, நீ எனக்கு அண்ணன்” என்று சொல்லி உறவு முறைகளைகளையும் உண்மையையும் மாற்ற முடியுமா? கொங்குதேர் வாழ்க்கை 2 இல் தனது பிறந்த ஆண்டு 1954 (பிரபாகரனும் பிறந்த ஆண்டு 1954) என்று தரப்பட்டிருக்கிறது என்று சேரன் சொல்வதற்குப் பின்னால் இன்னொரு கிரிமினல் ஐடியாவும் இருக்கிறது. இனி அடுத்து சேரன் வழங்கப்போகும்  பேட்டியில் தேசியத்தலைவரும் தானும் ஒரே வயதினர் என்றும் பாலசிங்கத்துக்கு முதலே தான் தேசியத் தலைவருக்கு ஆலோசகராக இருந்தேன் என்றும் தனது ஆலோசனைப்படியே துரையப்பாவை பிரபாகரன் சுட்டுக்கொன்றார் என்றும் சேரன் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தான் முன்னர் சொன்ன எழுதிய விடயங்களை தான் சொல்லவில்லை என்றும் நாங்கள் அவற்றைத் திரிக்கிறோம் என்றும் பச்சை பச்சையாக அழாப்புகிற மகா மோசடிக்காரன் சேரன். சேரன் ஒரு Demagogue. அதாவது உணர்ச்சிகரமானதும் நியாயமற்றதுமான வாதங்கள் மூலம் மக்களின் ஆதரவைப்பெறுகிற ஒரு மூன்றாந்தரமான அரசியல்வாதி. தீராநதி குமுதத்தினால் வெளியிடப்பட்டு கணிசமான பிரதிகள் விலைப்படுகின்ற இலக்கிய இதழாகும். அதில் சேரன் கூறியவைகள் எதனையும் நாங்கள் திரிக்கவில்லை என்பதையும் சேரனின் பொய் புரட்டல்களையும் நீங்கள் அதில் ஐயம் திரிபுறக்காணலாம். தமிழ் கூறும் நல்லுலகம் எங்குமே எவருமே மேற்சொன்ன பழைய தீராநதி இதழை எடுத்து சரிபார்க்கலாம்.  சேரன் சொல்கிறார் தீராநதி கிடைக்கிற இணையத்தளத்தை நாங்கள் தந்திருக்க வேண்டுமாம். சேரனைப் பொறுத்தவரையில் இணையத்தளத்தில் வந்தால் தான் அது உண்மையாம். மேற்கூறிய சேரனின் பேட்டி இப்போது இணையத்தளத்தில் இல்லை என்பதுபோக நாங்கள்தான் அச்சில் வந்த தீராநதியை ஆதாரமாகக் காட்டியிருந்தோமே. மேலும் இதே தீராநதிப்பேட்டி 2006 ம் ஆண்டு காலச்சுவடு வெளியிட்ட சேரன் நேர்காணல்கள் என்ற நூலிலும் இணைக்கப்பட்டுள்ளது. சேரன் தன்னுடைய சூழ்ச்சிகரமான வாதத்துக்கு ஆதாரமாக பின்னர் திசைகளில் வெளிவந்த தன்னுடைய பேட்டியைக் காட்டுகிறார். திசைகள் பேட்டியில் சேரன் தான் நடுநிலமையாளர் என்று சொல்கிறாரே தவிர அவர் நடுநிலமையாளர் அல்ல புலிகளுக்கு உண்மையான நடுநிலமையாளர்கள் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள். உண்மையான நடுநிலமையாளர்கள் புலிகளால் கொல்லப்பட்டும் கொல்லப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். நடுநிலமையாளரான ராஜினி திராணகம புலிகளால் கொல்லப்பட்டது போக நடுநிலமையாளர்களான ராஜன் கூலும் சிறீதரனும் புலிகளால் ஆபத்தை எதிர்நோக்கியிருக்க, வன்னிக்குள் கால்வைக்க முடியாமல் இருக்க சேரன்  மட்டும் வன்னிக்குள் போய் உயிரோடு திரும்பி வரமுடிந்தது எப்படி? (மேலும் கசிகின்ற நம்பகரமான வட்டாரங்களின் செய்திப்படி விடுதலைப் புலிகளின் ஆயுட்கால நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தியின் “தரிசனத்தில்” வன்னியில் கட்டப்பட்டு வந்த தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் தனக்கு ஏதாவது. போட்டுத்தருமாறு கேட்டு வழிந்திருக்கிறார் சேரன்.) உண்மையில் சேரன் நடுநிலமையாளர் அல்ல. அவர் ஒரு நழுவுநிலமையாளர். பொய்யை பலமுறை சொல்வதன் மூலம் அதனை உண்மை ஆக்கலாம் என்பதே சேரனின் கணிப்பு.

தீராநதிப் பேட்டி பற்றி நாங்கள் எழுப்பிய எந்தக் கேள்விக்குமே பதிலளிக்காமல் அவ்வாறான ஒரு பேட்டியே இருக்கவில்லை என்று மறைக்க முயல்கிறார் சேரன். உண்மையில் சேரனால் அவற்றுக்குப் பதிலளிக்க முடியாது என்பதுபோக நாங்கள் மேலும் செய்த கடுமையான ஆராய்ச்சி, விசாரணைகளின் பின்னர் சேரன் குடும்பத்தினரின் ஊழல்கள் வெளியேவரத் தொடங்கியுள்ளன. இலங்கை அரசு தமிழர்களின் கல்வி வாய்ப்பைப் பாதிக்கிற வகையில் “தரப்படுத்தல்” சட்டத்தைக் கொண்டு வந்ததாகவும் தன்னுடைய தமையன் கூடுதலான புள்ளிகள் எடுத்தும் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முடியாமல் வெளிநாடு போனார் என்றும் தன்னுடைய தம்பி தங்கையும் மேலும் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் வெளிநாட்டுக்குப் போனார்கள் என்றும் சேரன் தீராநதிப் பேட்டியில சொல்கிறார். சேரன் இதில் சொல்லாமல் விட்டது என்னவென்றால் சேரனின் சகோதரர்கள் எவ்வாறு வெளிநாடு போனார்கள் என்பதைத்தான். சேரன் சொல்வது போல சேரனின் வெளிநாடு போன சகோதரர்கள் கூடுதலான புள்ளிகள் எடுக்கவில்லை. அவர்கள் mediocre ஆன மாணவர்களாகவே உயர்கல்வி படிக்கும்போது இருந்தார்கள். அவ்வாறு இருக்க 2 சகோதரனும் ஒரு சகோதரியும் புலமைப்பரிசில் பெற்று முன்னைய சோவியத் ஒன்றியத்துக்கு படிக்கச்சென்றது எவ்வாறு? இலங்கையில்  வெளிநாட்டுப் புலமைப்பரிசில்களை வழங்கத் தீர்மனிக்கிற முறையில் நீதியும் Transparency ம் இருப்பதில்லை. ஊழல், இலஞ்சம், செல்வாக்கு என்பனவே புகுந்து விளையாடும். 1971 இல் அரச உயர் அதிகாரியாகவிருந்த சேரனின் தந்தையார் மகாகவி இறந்தார். இக்காலத்தில் சுதந்திரக்கட்சி, இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியில் இருந்தது. மகாகவியின் நண்பர்களாக இருந்த சில அரச அதிகாரிகளினதும் சில இடதுசாரி மற்றும் TULF அரசியவாதிகளின் செல்வாக்கினாலுமே நியாயப்படி சேரனின் சகோதரர்களுக்கு வழங்கப்பட முடியாத புலமைப்பரிசில் (அதுவும் ஒரே குடும்பத்தில் மூவருக்கு) வழங்கப்பட்ட்டது. சேரன் குடும்பம் ஒரு மத்தியதரவர்க்கக் குடும்பம். இவர்களை விட எவ்வளவோ திறமையான மிகவும் வறிய சில தலித் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சமதர்ம நாட்டுப் புலமைப் பரிசில் சேரன் குடும்பத்துக்கு மொத்த வியாபாரமாக வழங்கப்பட்டது மிகப்பெரிய அநீதி.

சேரன் சொல்வதுபோல நாங்கள் எதனையும் திரிக்கவில்லை. சேரன் மிகத்தெளிவாகவே “மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் (யாழ்) [UTHR(J)] சொல்வதுபோல புலிகளை பாசிஸ்டுகள் (fascists) என்று முத்திரை குத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பது மட்டுமல்ல, இத்தகைய முத்திரையிடல்களுக்கு பின்னால் பலமான அரசியல் காரணங்களும் உள்ளன” என்று கூறியுள்ளார். அதாவது சேரன் புலிகள் பாசிஸ்டுகள் இல்லை என்கிறார். அதுகாலவரையும் புலிகளை மிகச்சரியாகவே கடுமையாக விமர்சித்து வந்த சேரன் இக்கட்டுரையில் புலிகளின் பக்கம் சாய்வதற்கான ஆரம்ப வேலைகளைச் செய்கிறார். புலிகளை கடுமையாக விமர்சிக்கிறவர் திடீரென்று புலி ஆதரவாளராக மாறமுடியாதல்லவா. அவ்விதம் திடீரென்று அவர் மாறுவாராயின் அவரைத் தெரிந்தவர்களுக்கு அவரின் சித்த சுவாதீனம் மீது சந்தேகம் ஏற்படும். படிப்படியாகத்தான் மாறமுடியும். 1999 ம் ஆண்டு  ஜூன் ஆகஸ்டு மூன்றாவது மனிதன் இதழில் “85 இன் பிற்பாடு தமது சிறப்பான ‘இயக்க விதி’ யின் பயனாக எல்லா இயக்கங்களையும் புலிகள் பலாத்காரமாக ஒழித்து மேலாதிக்கத்துக்கு வந்தபின் தேசியவிடுதலைப் போராட்டம் என்ற கருத்து பின்னுக்கு போய் தேச விடுதலை, இன விடுதலை என்று வருகிறது. அதில் வெறும் இனத்துவமும் தமிழர் அடையாளமும் மட்டும் தான் சம்பந்தப்பட்டிருக்கிறது. அப்படிப்பார்க்கிற போது ஒரு உன்னதமான, நியாயமான இலட்சியங்களில் இருந்து இப்போது ஒரு வகையான பின்னடைவு இன்னும் உரத்துச் சொல்வதானால் சீரழிவே நடந்திருக்கிறது.  தமிழ் தேசியவாதம் ஒரு காலத்தில் முஸ்லிம் சிங்கள மலையக மக்களைப் பற்றிப் பேசியிருக்கிறது. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு வெறும் தமிழன் என்ற உணர்ச்சியைத்தான் இப்போது மேலாட்சி பெற்றிருக்கிற தேசியவாதம் பேசுகிறது. அந்தத் தேசியவாதம் தான் யார் தமிழன்( ஆண்பால்) என்பதைத் தீர்மானிக்கிறது. வெளியில் இருந்து யார் வந்தாலும் தள்ளிவிடும். இது தேசியவாதம் இல்லை. நான் முன்பே சொல்லியதுபோல் இது ஒருவகையான பேரினவாதமும் ஆபத்தானதுக் கூட. இது ஆரோக்கியமானதல்ல. இவ்வகையான தேசியவாத்திற்கும் எனக்குமிடையே ஒரு வகையான உறவும் கிடையாது.”

என்று கூறிய சேரன் 2002, பெப்பிரவரி 17 நிகரி இதழில்

“சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகள் மீது ‘பயங்கரவாத’ முத்திரை குத்தப்படுவதற்கு சர்வதேச அரசியலில் தாரளமாகவே விரவியிருக்கும் நாடுகளின் சுயநலம், பூகோள அரசியல் போன்றவை மட்டுமே காரணம் அல்ல. Amnesty International, Human Rights Watch ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமை மீறல்களைப் பற்றி தொடர்ந்து வெளியிட்டு வந்த அறிக்கைகளும் காரணம் தான். இந்தக் காரணத்தை விடுதலைப் புலிகள் அசட்டை செய்வதோ அல்லது ஒதுக்கி விடுவதோ எமது அரசியல் நலன்களுக்கு உதவாது.” என்கிறார்.

கவனித்துப் பாருங்கள். முன்னையதில் தனக்கு எவ்வகையான உறவும் கிடையாது என்ற சேரன் பின்னையதில் “எமது” என்று கூறுவதன் மூலம் புலிகளின் தேசியவாதத்தின் பங்காளியாகிறார். மேலும் இதே நிகரி கட்டுரையில் UTHR(J) இன் தலையில் ஒரு குட்டுவைப்பதன் மூலம் தனது பகுதியளவிலான புலிச்சார்பை அறிவிக்கிறார்.

இவ்வாறாக படிப்படியாக தனது வண்ணங்களை சூழலுக்கேற்ப மாற்றி வந்த பச்சோந்தியான சேரன் தீராநதிப் (2002 செப்) பேட்டியில்

“விடுதலைப் புலிகளின் ஆட்சிக்குள் இருக்கிற மக்களின் அனுபவங்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல இயலாது. நான் அந்தப் பகுதிகளுக்குப் போய் வரவில்லை. சமூகவியலாளர்கள் இது குறித்து என்ன சொல்கிறார்கள் என்றால் “தேர்தல்நடைபெறாமல் ஒரு இயக்கம் நீண்ட காலமாக ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமென்றால் பயங்கரத்தைப் பாவித்து இருக்க முடியாது” என்று சொல்கிறார்கள். அடக்குமுறை ஏதாவது ஒரு விதத்தில் பிரயோகிக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த மக்களின் ஆதரவில்லாமல் நீண்ட காலத்துக்கு ஒரு நிலப்பரப்பைத் தங்களது ஆட்சிக்குக்கீழ் வைத்து வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பது சாத்தியப்படாது. வியட்னாம் உட்பட பல நாடுகளில் இத்தகைய நிலமையைப் பர்த்திருக்கிறோம். அந்த வகையில் வடக்கு கிழக்கில் புலிகளுக்குட்பட்ட பிரதேசங்களில் ஏராளமான மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றுதான் நம்புகிறேன். அதே சமயத்தில் புலிகள் சில மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்று சொல்லமுடியாது. அம்மாதிரி தவறுகள் நடப்பதாக அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு தூரம் அடிப்படையான ஜனநாயக, மனித உரிமைகள் சார்ந்து அரசாங்கம் அமைக்கப்படப்போகிறது என்பதில்தானிருக்கிறது எதிர்காலம். ”

என்று கூறியதன் மூலம் தான் 100% புலி வண்ணங்களைப் பெற்றதை அறிவிக்கிறார். 2006 ல் கனடா ஈழநாடு இதழில்

“தெளிவும் செறிவும் சாரமும் காரமும் பொருந்தியதாக அமைந்திருந்தது பிரபாகரன் அவர்களின் உரை. தளராத படைத்திறன், போர்வலு என்பவற்றின் மீது உறுதியாகக் கட்டப்பட்ட நம்பிக்கையும் பெருமிதமும் அவருடைய பேச்சினூடக வெளிப்பட்டன. அவருடைய கருத்துக்கள், நெறிமுறைகளோடு உடன்படாத பல சிங்கள ஆங்கில ஊடகவியலாளர்கள் மற்றும் கருத்தியலாளர்கள் கூட அவருடைய உரையின் தர்க்கத்தையும் பொருத்தப்பாட்டையும் சுட்டிக் காட்டி எழுதிய குறிப்புக்களும் கட்டுரைகளும் ஆங்காங்கே வெளியாயின”

என்று தலைவருக்கு சொக்குப்பொடி போட்டுப் புகழ்ந்த சேரன் தானும் தலைவருக்கு கழுவ “ரெடி” என்று அறிவித்தார். இதன் மூலம் சேரன் தான் 200% புலியாக மாறி விட்டதை அறிவித்தார். (கிட்லரின் உரையொன்றை தலைசிறந்த சிந்தனையாளரும் யூதருமான நோம் சோம்ஸ்கி அதிசிறந்ததாக இருந்ததாகப் புகழ்ந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கிறது சேரன் பிரபாகரனின் உரையை புகழ்வது)

ஆனந்த சங்கரியின் கடந்தகால கூட்டணி அரசியலில் எங்களுக்கு விமர்சனங்கள் இருந்தாலும் இன்று ஆனந்தசங்கரி முழு இலங்கையினதும் மனச்சாட்சியின் கைதியாக  இருக்கிறார். ஆனால் சேரனோ வெட்கமின்றி “ஆனந்த சங்கரி அவர்களின் கண்மூடித்தனமான எதிர் அரசியலைப் பற்றி எனக்குத் தீவிரமான விமர்சனம் இருக்கிறது” என்று மேற்குறிப்பிட்ட அதே கட்டுரையில் சங்கரிக்கு தலையில் குட்டு வைத்து எழுதுகிறார். வன்னிப் புலிகளுக்கு தனது புதிய புலிவிசுவாசத்தில் சிறிது கூட சந்தேகம்  வரக்கூடாது என்பதற்காக புலிகளுக்குப் புரிகிற மொழியிலேயே சேரன் எழுதியதுதான் அது.

இதே சேரன் தான் காலச்சுவடு பேட்டியில் (1999) கனடாவில் இருந்து வருகிற விடுதலைப் புலிகளின் பத்திரிகையான “உலகத் தமிழரையும்” இன்னொரு புலி ஆதரவுப் பத்திரிகையான “முழக்கத்தையும்” அவற்றினுடைய குறுகிய தேசியவாத மற்றும் stereo type ஆன கட்டுரைகளுக்காக அவற்றை கடுமையாக விமர்சித்திருந்தார். இன்று அதே பத்திரிகைகளில் சேரனே (சொந்தப் பெயரிலும் புனைபெயரிலும்) தலைவரை பப்பாசி மரத்தில் ஏற்றுகிறமாதிரி புகழ்ந்தும் புலிப்பாசிசத்தை ஆதரித்தும் கட்டுரைகள் எழுதுகிறார்.

ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை என்றானாம். அதே போலத்தான் சேரன் தனது புலமை மோசடிகளை மறைக்க UTHR(J) மீது ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டுகளை சகட்டு மேனிக்கு வைக்கிறார். UTHR(J) இன் உறுப்பினர்களாக ராஜன் கூலும் சிறீதரனுமே இருந்தார்கள்.  மனோரஞ்சனும் ராம் மாணிக்கலிங்கமும் UTHR(J) ன் உறுப்பினர்களாக இருக்கவில்லை. மனோரஞ்சனும் மாணிக்கலிங்கமும் கூல் முதலியவர்களின் நண்பர்களாக இருந்தார்கள் என்பது உண்மைதான். மேற்கூறிய இருவரையும் UTHR(J) உடன் தொடுப்பதன் மூலம் அதற்கு சேறு பூசலாம் என்பது சேரனின் பரிதாபத்துக்குரிய முயற்சி. மனோரஞ்சன் மாணிக்கலிங்கம் இருவருமே நல்ல நோக்கம், நல்விசுவாசம் (Good intentions and Good faith) என்பவற்றின் அடிப்படையிலேயே சந்திரிகா அரசில்  நம்பிக்கை வைத்திருந்தார்கள். உண்மையிலேயே சந்திரிகா நம்பிக்கை ஊட்டுபவராகவே இருந்தார். சேரனே தன்னுடைய காலச்சுவடு பேட்டியில் சந்திரிகாவைப் பற்றி நன்றாகவே சொல்லியுள்ளார். பக்கச்சார்பற்ற எவருமே சந்திரிக்கா ஆட்சிக்கு வந்திருந்தபோது கூடவே கொணர்ந்த நல்ல நோக்கங்களை (Good intentions)  சந்தேகிக்க மாட்டார்கள். கொலைகாரர்களான கிட்டு, சந்தோசம் முதலியவர்களோடு ஒப்பிடுகிறபோது மனோரஞ்சனும் மாணிக்கலிங்கமும் ஒரு கொலையுமே செய்யாதவர்கள். கொலைகாரர்களான கிட்டுவோடும் சந்தோசத்தோடும் நட்பு பேணியதாகக் கூறுபவர் சேரன். கூலும் சிறீதரனும் ரஞ்சனுடனும் மாணிக்கலிங்கத்துடனும் நட்பு பேணியதில் என்ன தப்பு.

புலிகளின் குரலில், புலிகளின் வேலைத் திட்டங்களின் (Agenda) அடிப்படையில் சந்திரிகா மீது சேரன்  குற்றஞ்சாட்டுவது சரியான மதிப்பீடு அல்ல. சந்திரிகா ஊழல் நிறைந்த அரசியல் வாதியாக இருந்தும் குமார் பொன்னம்பலம் பத்திரிகையாளர் றோகண குமார போன்றவர்களின் கொலைக்கு பொறுப்பானவர்களின் மேலாளராக இருந்தது உண்மை என்றாலும் ஜெயவர்த்தனா, பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் மீது Crimes against humanity என்ற குற்றச்சாட்டை சுமத்துவதுபோல சந்திரிகாமீது மீது Crimes against humanity என்ற குற்றச்சாட்டை யாருமே சுமத்த முடியாது என்பதோடு ஒப்பீட்டு அடிப்படையில் முன்னையவர்களைவிட ஜனநாயகத்தில் சந்திரிகா அதிகம் நம்பிக்கை உடையவராக இருந்தார். ஜெயவர்த்தனா, பிரேமதாச, விக்கிரமசிங்க முதலியோர் திட்டமிட்டு தமிழ் மக்களை அழித்தவர்கள் (1983 ஜூலை படுகொலைகள்) என்பது போக ஜெயவர்த்தனாவும் பிரேமதாசவும் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் என்பதை அவர்களது அரசியல் வாழ்வு சொல்லும். சந்திரிகா அரசாங்கத்தின் மீது 1995 ஏப்பிரிலில் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து புலிகளால்தான் போர் தொடுக்கப்பட்டது. அதே காலப்பகுதியில்தான் சந்திரிகா அரசாங்கத்தின் பணிப்பின் பேரில் நீலன் திருச்செல்வமும் பீரிசும் இணைந்து இந்திய மாநில சுயாட்சியை ஒத்த அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சித்திட்டமொன்று தயாரிக்கப்பட்டது. கொடுமையான போர் ஒன்று இலங்கை அரசின் மீது தொடுக்கப்பட்டு விட்டதால் சந்திரிக்கா அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழிகளைப் பற்றி சிந்திப்பதற்கே சந்தர்ப்பம் சந்திரிக்காவிற்குக் கிடைக்கவில்லை. இவ்வளவு நெருக்கடி இருந்தும் கிருசாந்தி படுகொலை, செம்மணிப்படுகொலைகள் முதலியன மீது குறைந்தபட்சமேனும் ஒரு சுயாதீனமான நீதிவிசாரணைகள் சந்திரிகா ஆட்சியின்போது நடத்தப்பட்டது. (நீதி முழுமையாக வழங்கப்படாவிட்டாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டாலும்) ஜயவர்த்தன மற்றும் பிரேமதாச ஆட்சிகளின் போது இந்தளவுக்கு எந்தவொரு சுதந்திரமான நீதி விசாரணையுமே நடத்தப்பட்டதில்லை. மேலும் 2004 ஏப்பிரலில் கருணா புலிகளைவிட்டுப் பிரிந்தபோது சந்திரிகா நடந்து கொண்டமுறையும் (போர் நிறுத்தத்தைக் கருத்தில் கொண்டு கருணா அணியினருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. இதனை சாதகமாகப் பயன்படுத்தி வன்னிப்புலிகள் பெரியவெள்ளி தினத்தன்று கருணா அணிமீது தாக்குதல் தொடுத்தார்கள்) தன்னுடைய ஆட்சியின் இறுதிக்காலத்தில் பலருடைய எதிர்ப்புக்கு மத்தியில் வட கிழக்கின் சுனாமி மீள்கட்டுமானப் பணியை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்க முன்வந்தமையும் அவரது ஜனநாயக நடத்தைகளுக்கான உதாரணங்கள்.

UTHR(J) சந்திரிகா ஆட்சிக்கு வந்தபோது சந்திரிகா அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது என்றும் 1995 இல் யுத்தம் ஆரம்பித்த போது அதனை வழிமொழிந்து ஒரு அறிக்கையை UTHR(J) வெளியிட்டது என்றும் UTHR(J) நடுநிலமை தவறிய அமைப்பு என்றும் சேரன் சொல்வது சேரனின் திரிப்புக்கள். சேரன் புலிப்பினாமிகளின் பாணியில் UTHR(J) மீது தாக்குகிறார். UTHR(J) ஒருபோதுமே சந்திரிகா அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. UTHR(J) ஒரு மனித உரிமை அமைப்பே தவிர அரசாங்கங்களின் மீது ஆதரவு நிலைப்பாடு எடுக்கிற அரசியல் கட்சியல்ல. எப்பொதுமே சுயாதீனத்தைப்பேணுகிற அமைப்பு அது. மேலும் ஒருபோதுமே 1995 இல் ஆரம்பித்த யுத்தத்தை UTHR(J) வழிமொழியவில்லை என்பதை UTHR(J)இன் இணையத்தளத்துக்கு செல்வதன்மூலம் யாரும் கண்டுகொள்ளலாம். மறுதலையாக குறித்த யுத்தத்தில் இராணுவத்தால் மீறப்பட்ட மனித உரிமைகளை எல்லாம் விலாவாரியாக ஆவணப்படுத்தியது UTHR(J) அறிக்கைகளே.

சேரன் கிழக்கு மாகாணத்தில் நடந்த கட்டாய (குழந்தைகள்) இராணுவ ஆட்சேர்ப்பு, முஸ்லீம் மக்கள் மீதான ஒடுக்குமுறை படுகொலைகள் என்பவற்றுக்கு கேணல் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார். இதன் மூலம்  புலிகளில் இருந்து கருணா வெளியேறிய பின்னர் முழுத்தவறுகளையும் கருணாவின்மீது புலிகள் சுமத்தியதைப்போல தானும் சுமத்துகிறார்.

யூதர் எதிர்ப்பு இனவாதம் (Anti-Semitism) என்பது ஒரு மத்திய கிழக்கு கருத்துருவாக்கம் அல்ல. அது ஒரு ஐரோப்பிய கருத்துருவாக்கமாகும். அதே போலவே இலங்கையிலும் முஸ்லீம் எதிர்ப்பு இனவாதம் என்பது ஒரு யாழ்ப்பாணியக் கருத்துருவாக்கமே தவிர அது ஒரு கிழக்கு மாகாண கருத்துருவாக்கமல்ல. மூவின மக்களும் வாழ்கிற கிழக்கு மாகாணத்தில் இன சகிப்புத்தன்மை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. கிழக்கில் தமிழ், முஸ்லிம் கிராமங்கள் குழல் புட்டும் தேங்காய்ப்பூவும் போலப் பின்னிப் பிணைந்திருந்தன. முஸ்லிம் எதிர்ப்பு இனவாதத்தை தமது பாசிச அரசியலுக்காகக் கிழக்கு தமிழர்களிடையே பரப்பியது புலிகளின் யாழ்ப்பாணத் தலைமையே. இங்கு நாங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் டெலோ மீது தாக்குதல் தொடுத்து அதன் உறுப்பினர்களைக் கொன்றபோது புலிகளின் இதே கொள்கையை கிழக்கு மாகாணத்திலும் அமுல்படுத்த கிழக்கு மாகாண புலித்தலைவரான “கடவுள்” ஒத்துழைக்கவில்லை. இதன் பின்னர் பிரபாகரன் குமரப்பாவையும் பொட்டரையும் அனுப்பியே டெலோ உறுப்பினர்களின் மீதான படுகொலைகளை ஒப்பேற்றினார். பிரபாகரன் 1987 ம் ஆண்டுவரையும் வடமாகாணத்தவர்களையே புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகளாக நியமித்து கிழக்கு மாகாண புலி உறுப்பினர்களிடமும் புலிப்பாசிச மற்றும் முஸ்லீம் எதிர்ப்பு இனவாத அரசியல் ஊட்டப்பட்டது. கருணா பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலராக இருந்தவர். பொன்னம்மான், ராதா ஆகிய இருவரின் தலைமையின் கீழ் இராணுவப்பயிற்சி பெற்றவர். இதனைவிட கருணா மட்டக்களப்பு தளபதியாக வருவதற்கு முதல் பசீர் காக்கா, அருணா, குமரப்பா, பொட்டம்மான் ஆகிய யாழ்ப்பாண புலித்தலைவர்களின் கீழ் மட்டக்களப்பில் இயங்கியவர். இவைகள் அனைத்தும் போதுமே  17 வயதில் கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகளோடு இணைந்த உலகம் அறியாத அப்பாவி வாலிபனான கருணாவிடம் புலிப் பாஸிச வெறியைப் புகுத்துவதற்கு. இந்தப் பின்னணியிலேயே நாங்கள் கருணாவைப் புரிந்து கொள்கிறோம்.   சேரன் சொல்வது போல நாங்கள் அப்பழுக்கற்ற தூயவிடுதலைப் போராளி என்ற விம்பத்தை கருணா மீது கட்டவில்லை.

UTHR(J) க்கு தேனீ உத்தியோகபூர்வமாகவே இணைப்புக்கொடுத்துள்ளது. சேரன் குறிப்பிட்ட UTHR(J) இன் கிழக்கு மாகாண அறிக்கையை மறைக்க வேண்டிய எந்த தேவையும் தேனீக்கு இருந்ததில்லை.

சேரன் 2003 இல் யாழ்ப்பாணத்துக்குப் போய் யாழ் பல்கலைக்கழகத்தின்  விரிவுரையாளர் பதவிக்கு கண் வைத்து யாழ் திருநெல்வேலிப்பகுதியைச் சுற்றிச் சுற்றி நாய் பேயாய் அலைந்தது. இதற்கு ஆதரவு தேடி யாழ் பல்கலைக்கழக வட்டாரங்களில் Manoeuvring செய்தது எல்லாம் உண்மை. யாழ் பல்கலைக்கழக வட்டாரங்களில் எல்லோருக்கும் இது தெரியுமே. சேரன் யாழ்ப்பாணத்தில் நின்ற இதே காலப்பகுதியில்தான்  EPRLF வரதரணி சுபத்திரன் உட்பட எண்ணற்ற மாற்று இயக்க காரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டார்கள். 1999 காலச்சுவடு பேட்டியில் சேரன் விடுதலைப் புலிகளுக்கும் தனக்கும் இடையே இருந்த கருத்து முரண்பாடுகளின் விளைவாகவே தான் 1990 இல் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டி வந்தது என்றும் யாழ்ப்பாணத்திலேயே தங்கி நின்ற தன்னுடைய நண்பர்களில் பலர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றும் கூறினார். நிலமை இவ்வாறு இருக்க சேரன் மட்டும் எவ்வாறு (வன்னிப் புலிகளுக்கும் சேரனுக்கும் இடையில் கள்ள ஒப்பந்தம் இலாமல்) கொல்லப்படாமல் திரும்பிவர முடிகிறது?

சேரனுக்கு கலாநிதிப் பட்டத்துக்கான புலமைப் பரிசிலைப் பெற்றுக்கொடுக்க காரணமாக (Instrumental) இருந்தவர் நீலன் திருச்செல்வம்தான். நீலன் திருச்செல்வத்தின் “அணைவோடு” தான் ஏ.ஜே. வில்சனினதும் குமாரி ஜெயவர்த்தனாவினதும் சிபார்சுக் கடிதங்களை சேரன் பெற்றார். பல வகைகளில் சேரனைவிடத் தகுதியான பலர் புலமைப்பரிசில் பெற இருந்தார்கள்.
 
1. சேரனின் முதல் B.Sc பட்டம் Honours ம் class ம் இல்லாத mediocre தரத்திலேயே இருந்தது.
2. சேரனின் இரண்டாவது M.Sc ம் Class எதுமில்லாத Mediocre பட்டம்தான்.

இந்த நிலையில் “செல்வாக்கு” இல்லாமல் நீதியான முறையில் யோர்க் பல்கலைக்கழகத்தில் சேரனால் புலமைப்பரிசில் பெற்றுக் கொண்டிருக்கவே முடியாது. நீலன் திருச்செல்வமும் ICESம் இலாவிடில் சேரன் ஒரு nobody. இதனைப் பல பல்கலைக்கழக அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சேரன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வைத்திருந்த நேர்மையான விமர்சகர் என்ற விம்பமும் இப்போது வெளுத்து விட்டது.

1986 இல் டெலோ உறுப்பினர்களை புலிகள் வேட்டையாடிக் கொன்று கொண்டிருந்த போது நுPசுடுகு தங்கள் உயிரையே துச்சமாக மதித்து பெருமளவான டெலோ உறுப்பினர்களைக் காப்பாற்றினர். இது நடந்து சிறிது காலத்தின் பின்னர் தமிழ்நாட்டில் வரதராஜப் பெருமாளை சேரன் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பின்போது சேரன் பெருமாளிடம் கொள்ளை முதலியயவற்றைச் செய்த ரெலோ இயக்கத்துக்காக EPRLF ஏன் வக்காலத்து வாங்கி டெலோ உறுப்பினர்களைக் காப்பாற்றி தஞ்சமளித்தது என்று கேட்டாராம். இவற்றை வரதராஜப் பெருமாள் கண்ணோட்டம் இதழில் எழுதும் கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார். இதே சேரன் தான்  ‘மனித உரிமைப் போராளி’ என்ற முகமூடியை அணிந்துகொண்டு பின்னர் படம் காட்டியவர்.

1986 ம் ஆண்டு வெளிவந்து 106 நாட்கள் ஓடிய பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ ஈழத்தமிழரின் பிரச்சினையை சிறிது வெளிப்படுத்தியது. ஈழப் போராளிகளின் தமிழ்நாட்டு இருப்பிடம் ஒன்றை காட்டுகிற கட்டத்திலே சில மனிதர்கள் சித்திரவதை செய்யப்படுவது காட்டப்படுகிறது. இதனைப் பார்த்து “டென்சன்” ஆன சேரன் இக்காட்சி ஈழப் போராளிகளைக் கொச்சைப்படுத்துகிறது என்று ஈரோஸ் இயக்கத்தினால் வெளியிடப்பட்ட பாலம் இதழில் எழுதியிருந்தார். உண்மை என்னவென்றால் இதே காலப் பகுதியில்தான் புளட் இயக்கத்தினால் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட உட்கட்சி சித்திரவதை, கொலைகள் அம்பலமாகியிருந்தன. இதனைத்தான் பாலச்சந்தர் புன்னகை மன்னனில் வெளிப்படுத்தியிருந்தார். ஒரு வியாபார திரைக்கலைஞரே உண்மையை வெளிப்படுத்துகிறபோது சேரன் அதனை தணிக்கை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். புன்னகை மன்னன் படத்திலும் வில்லன் கமலஹாசனை “நான் ஆறடி இரண்டங்குலம், கோபுரம்” என்று மிரட்டுகிறான். சேரனும் தனது பதிலில் “மாடுமுட்டி கோபுரங்கள் சாய்வதில்லை” என்று நம்மை மிரட்டுகிறான். சேரன் மாடா, கோபுரமா என்பதை சமகாலமும் வரலாறும் முடிவு செய்யும்.

சேரன் இந்தப் பதிலிலும் கூசாமல் பொய்சொல்லி தன்னைப் பற்றிய பிரமைகளைக் கட்டமைக்கிறார். அதிலும் சேரனின் அண்டப்புழுகு என்னவென்றால்  தனக்கும் புலித் தளபதி கிட்டுவுக்கும் நட்பு இருந்தது என்று குறிப்பிடுவதுதான்.
கிட்டுவையும் சேரனையும் தெரிந்தவர்களுக்கு இருவரும் நண்பர்களாக இருக்கவில்லை என்பது தெரியும். நட்பு இருக்கவில்லை. ஆனால் சேரனுக்கு கிட்டுவில் எரிச்சல் இருந்தது. கிட்டுவைப்போல காதலோடு வீரத்தையும் அனுபவித்த பாக்கியசாலியாக தான் இல்லையே (பக்.188, உயிர் கொல்லும் வார்த்தைகள்) என்பதால் சேரனுக்கு எரிச்சல் இருந்தது.

NLFT இன் கூட்டங்களில் பெரும்பாலானவை அளவெட்டியில் சேரனின் வீடான “நிழல்” இல் தான் கூட்டப்பட்டன. NLFT தலைவரான விசுவானந்ததேவன், உருத்திரமூர்த்தி குடும்பத்தில் ஒரு குடும்ப நண்பராகவே கருதப்பட்டவர். சேரனின் தங்கையான அவ்வை NLFT இன் மகளிர் அணியில் இருந்தவர். NLFT தலைவர்களில் ஒருவரான எஸ்.கே விக்கினேஸ்வரனையே இக்காலப்பகுதியில் அவ்வை காதலித்து பின்னர் மணந்து கொண்டார். 1990 இலிருந்து வடக்கு கிழக்கில் தங்கியிருந்த NLFT இயக்க உறுப்பினர்கள் 100 க்கு மேற்பட்டவர்கள் புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட தப்பியோட முடிந்தவர்கள் தென்னிலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றார்கள். சேரனும் எஸ்.கே விக்கினேஸ்வரனும் 1990 முற்பகுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார்கள். விக்கினேஸ்வரனின் மூத்த தம்பி NLFT உறுப்பினர் என்று யாழ்ப்பாணத்தில் புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சேரன், எஸ்.கே.விக்கினேஸ்வரன் (இந்த விக்கினேஸ்வரன் தான் காலச்சுவட்டில், ஈழத்தின் இன்றைய உண்மை நிலவரங்களைத் திரிபுபடுத்தி புலிகளின் வேலைத் திட்டங்களுக்கிசைவாக கட்டுரைகள் எழுதி வருபவர்) ஆகியோர் 1990 க்குப்பின்னர் யாழ்ப்பாணத்தில் நின்றிருந்தால் புலிகளால் கொல்லப்பட்டிருப்பார்கள். இவ்விருவரும் 1990 இல் புலிகள் மாற்று இயக்க காரரை வேட்டையாடிய போது கொழும்புக்கு ஓடிவந்தவர்கள். இன்று இவர்கள் மனச்சாட்சியின்றி புலிகளால் கொல்லப்பட்ட தங்கள் நண்பர்களின் சடலங்களில் காலால் மிதித்து முன்னேறி தனிப்பட்ட நலன்களுக்காக புலிகளுக்காக வெட்கமின்றி விபச்சாரம் செய்கிறார்கள்.

சேரனும் சேரனைப் போலச் சார்ந்ததன் வண்ணமாக இயங்கும் பச்சோந்திகளுக்கும் சேரனே எழுதிய பின்வரும் கவிதை அச்சொட்டாய் பொருந்துகிறது.

                மனிதத்தை
                துப்பாக்கி முனையில்
                நடத்திச்சென்று
                புதைகுழி விளிம்பில்
                வைத்துச் சுட்டுப்
                புறங்காலால் மண்ணைத் தள்ளி
                மூடிவிட்டு வந்து
                தெருவோரச் சுவரில்
                குருதியறைந்து
                நியாயம் சொல்கிறார்கள்
                நியாயம்!

                யார் கேட்டார் உம்மிடத்தில்
                நியாயத்தை?

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

27 Comments

  • பேராசிரியர் க அன்பழகன்
    பேராசிரியர் க அன்பழகன்

    /இவர்களிடம் ஒரு கள்ள சேட்டிபிக்கட்டைக் காட்டி சேரன் தான் பிறந்தது 1960 தான் என்றால் அவர்கள் நம்புவார்களா? அல்லாவிடில் சேரன் தனது தம்பியான சோழனிடம் ஒரு கள்ள/– ஏன் இந்தப் புலம்பல்கள்! இது போன்ற புலம்பல்கள் இந்திய பல்கலைக் கழகங்களில் மில்லிய்ன் கண்க்கில்.ஆனால் தற்பொது பல்கிப் பெருகியிருக்கும் வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்திய பேராசிரியர்களின் எழுத்துக்களில்,அந்தந்த நாடுகளின் செய்திகளும்,பெருமளவு கலந்திருக்கும்.அனால் இங்கு சுத்தமான இலங்கைத் தமிழ் அரசியல் மட்டும் உள்ளது.ஒன்றை கவனிக்க வேண்டும்!,நீங்கள் இருக்கும் “தளத்திற்கு”,இன்னும் பல பத்தாண்டுகளுக்கு,இலங்கைத் தமிழ் இளைஞர்கள் வர முடியாத அளவுக்கு(அவர்கள் எவ்வளவு திறமை உள்ளவ்ர்களாக இருந்தாலும்)கல்வித்துறை குழப்பப்பட்டுள்ளது.உண்மையான உங்கள் சமூகத்தை(புலம் பெயர் கமாகோ சிக்காகோ அல்ல)பிரதிபலிக்க வேண்டுமென்றால்,இந்த இளைஞர்களின் “திறமைகளுக்கு” நீங்கள் இடமளிக்க வேண்டு–அவர்களிடம் “சேர்ட்டிபிக்கட்டுகள்” கேட்க கூடாது,ஆமா சொல்லிப் புட்டேன்..

    Reply
  • Suresh M.M.A
    Suresh M.M.A

    என்னாச்சு…? திரும்பவும் பங்காளிச் சண்டையா?! வாங்கோ. இணைபிரியா நண்பர்களான சேரனும் நட்சத்திரனும் மீண்டும் குடுமிபிடி சண்டையோடு களத்துக்கு வருகிறார் பராக்! பராக்!!

    என்னட்டையும் கொஞ்சம் உண்மைகள் இருக்குதுங்கோ. ஒரு பத்துப்பேராவது வரட்டும். பேசுவோம். சனம் கூடினால்த்தானே சந்தை களை கட்டும். ஆனால் சந்தையை நாறடிச்சுப் போடாதேங்கோ சொல்லிப்போட்டன்.

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • P.V.Sri Rangan
    P.V.Sri Rangan

    புலிகளுக்கு மிக நெருக்கமாகச் சித்தாந்த முண்டுகொடுத்துப் புரட்சிகரச் சக்திகளை இக் குடும்பம் சிதைத்ததென்பதுதாம் உண்மை. சேரனும் அவரது மைத்துனர் விக்கினேஸ்வரனும் தூண்டில் சஞ்சிகையைச் சிதைத்தவர்களில் முதன்மையானவர்கள் என்றே கருதுகிறேன். இது, குறித்து மேலுஞ் சிலவற்றைச் சொல்வது இன்றைக்கு அவசியமானதே!

    1988 இல் ஜேர்மனியில் தென்னாசிய நிறுவனத்தின் சார்பில் வெளியான தூண்டில் சஞ்சிகையின் “உண்மைகளைச் சொல்லுதல்” எனும் போக்கிலிருந்து அது புரட்சிகரமான கருத்துக்களை உள்வாங்க முனைந்தபோது, இதைக்கண்ட புலிகள் தமது இயக்க இருப்புக்கு ஆட்டம் கொடுக்கும் அணிவுருவாவதைத் தடுப்பதற்காக, மேற்கூறிய விக்னேஸ்வரன், சேரன், சிவகுமார் கூட்டைப் பயன்படுத்தித் தூண்டிலில் பிரஜைகள் எனும் புனைபெயரில் தொடர் உரையாடலை நிகழ்த்தினார்கள். அது, அப்பட்டமாகப் புலிக்கு ஆதரவான தளத்தை நிறுவுவதற்கும், தூண்டிலைப் புலிகள் உள்வாங்குவதற்கும், அதன் வாசகர்களைப் புரட்சிகர எண்ணங்களிலிருந்து திசை திருப்பிப் புலிகளது தேசியவாதத்துக்குச் சார்பானதாக மாற்ற முனைந்தார்கள். இதை அன்றைக்குப் பல தூண்டில் வாசகர்கள் அம்பலப்படுத்தினார்கள். குறிப்பாக வீ.நடராஜன் மிகச் சரியாகவே இதை இனங்கண்டார்.

    இப்படியான பல மோசடிகளை இன்றும் நாம் பல தளங்களில் இனங்காணமுடியும். புலிகளது குறுந்தேசியவாதத்துக்குச் சித்தாந்த விளக்கமளிக்கப் பலர் புரட்சிகரச் சக்திகளாகத்தம்மை இனம்காட்டிப் புரட்சிகரச் சூழலை இல்லாதாக்குவது குறித்து, நிறையக் கதையாடல்கள் வருகிறது. இதில், யாரை நம்பி யாரோடு மக்கள் விடுதலைக்காகத் தோழமை உறவு கொள்ளமுடியும்?

    புரட்சிகரச் சக்திகளையெல்லாம் உதிரிகளாக்கிய புலிகள், இன்றும் தமது கைவரிசையைக் காட்டியே வருகிறார்கள் என்பதற்கு புலம் பெயர் சூழலில் மாற்றுக் கருத்தாளர்களின் மூன்றாவது அணிச் சூழல் நல்ல உதாரணம்.

    நட்ஷத்திரன் செவ்விந்தியனின் தகவல்களில் உண்மைகள் நிறைந்தே இருக்கிறது. சேரன் குடும்பம் ஐக்கிய இலங்கைப்புரட்சிக்கு எதிரான சதிகாரக் குடும்பம் என்பது உண்மை.

    சேரன், விக்கினேஸ்வரன், சிவகுமார் போன்றவர்கள் புலிகளது பல ஆயிரம் கொலைகளுக்கு உடந்தையானவர்கள் மட்டுமல்ல, ஐக்கிய இலங்கைக்கான சோசலிசப் புரட்சிக்குக் குறுக்கே நின்று புலிகளது அந்நியச் சேவைக்குச் சித்தாந்த வலுக்கொடுத்தவர்கள். எனவே, இவர்கள் புலிகளுக்கு விசுவாசகக் காரியமாற்றியதென்பது, மறைமுகமாக அந்நியத் தேசங்களது நலனை இலங்கையில் அறுவடைசெய்ய அழிவு யுத்தத்தைத் தமிழீழத்தின் பெயரால் செய்ய உடந்தையான மக்கள் விரோதிகளே எனக் குற்றஞ்சாட்டுவது அவசியமானது.

    எவரொருவர் இங்ஙனம், நமது மக்களுக்கு விரோதமான இந்தத் “தமிழீழ”அழிவு யுத்தத்துக்கு உடந்தையாக இருந்தாரோ-அவர் மக்கள் விரோதியே. ஏனெனில், இன்றுவரை இலட்சம் மக்கள் சாவதற்கான சித்தாந்தவலுவைச் செய்து, மக்கள் விடுதலையை அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக்கொடுத்தும், புலிகள் மூலமாக அந்நியத் தேசங்களுக்கு ஏவல் நாய்களாக நமது மக்களது குழந்தைகளை உருவாக்கியும், இன்று கொன்று குவிப்பதற்கும், துரோகிகளாக அழிப்பதற்கும் இவர்கள் உடந்தையானவர்கள்.

    இவர்கள் குறித்துமட்டமல்ல, புலம்பெயர் சூழலில் இங்ஙனம் பலர் புரட்சிகரக் கருத்துக்களோடு உலா வருகிறார்கள். இவர்களில்பலர் புரட்சிகரச் சூழலை அழித்துப் புலிக்கு விசுவாசமாகக் காரியமாற்றுவதைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவது அவசியம்.

    இதை நான் தொடர்வேன்.

    ப.வி.ஸ்ரீரங்கன்
    12.03.2009

    Reply
  • palli
    palli

    பல்லியை பொறுத்த மட்டில் சேரனுக்கு செருக்கு அதிகம். தன்னை விட்டால் எழுத்துலகமே இருண்டு விடும் என்னும் கொக்கரிப்பு.
    இவர் ஒரு எழுத்தாளனா?? இல்லை.
    சரி ஒரு பாடல் ஆசிரியரா?? இல்லை.
    ஒரு மனிதநேயமிக்கவரா?? இல்லை.
    கல்வி கற்றவரா அதிகம்?? ஆம்.
    இவர் அரசியல் தெரிந்தவரா?? தெரியாது.

    இறுதி கேள்வி சரியான பதில் வேண்டும்.
    இவர் …………? அப்படியாயின் காட்டி கொடுப்பவரா?? அதுமட்டுமே உன்மை.

    Reply
  • palli
    palli

    //இவர்கள் குறித்துமட்டமல்ல, புலம்பெயர் சூழலில் இங்ஙனம் பலர் புரட்சிகரக் கருத்துக்களோடு உலா வருகிறார்கள். இவர்களில்பலர் புரட்சிகரச் சூழலை அழித்துப் புலிக்கு விசுவாசமாகக் காரியமாற்றுவதைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவது அவசியம்//

    உதவ பல்லி வரட்டா??

    Reply
  • santhanam
    santhanam

    இவர்கள் குறித்துமட்டமல்ல, புலம்பெயர் சூழலில் இங்ஙனம் பலர் இவர்களது சிலம்பாட்டம். வியாபாரம். அரசியல் இனையவலை தேசியத்தை சொல்லி மரணம் மீது ஒப்பாரி கவிஞர்கள் அனைவரையும் ரோட்டுக்கு கொண்டுவர நான் ரெடி பல்லி.

    Reply
  • watch
    watch

    நட்சத்திரன், you are the one got the wrong definition of ‘Prof’.
    He is an assistant professor, Next to the professor, above the senior Lecturer. In one department there would be always one professor. Very rare cases there would be more than one.

    Who is this “UTHR(J)”? why they got only 2 members.
    I don’t think it is a proper organisation, So called unti-ltte propaganda like you.

    Anyway …………….., from your article, lots of Jealous spilled over Ceran.

    Reply
  • Tamil
    Tamil

    //சரி ஒரு பாடல் ஆசிரியரா?? இல்லை. – பல்லி//
    மன்னிக்கவும். சேரன் ஒரு திறமை மிக்க கவிஞன் என்பது அவருடைய 80களில் வெளிவந்த கவிதகள் நிரூபித்ததென்னவோ உண்மை…

    Reply
  • Raman
    Raman

    லண்டன் புலிகளின் ‘ஒரு பேப்பர்’பத்திரிகையின் 110 வது இதழில் ‘ஏ.ஜே.பற்றிய குழப்பம்’ என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் அதன் பிரதம ஆசிரியர் திரு கோபி அவர்கள் பேராசிரியர் சேரனும் புதுசு ஆசிரியர் இரவி அருணாசலமும் ஒரு பேப்பர் பத்திரிகையின் ஆலோசகர்கள் என குறிப்பிட்டுள்ளார். நட்சத்திரன் செவ்விந்தியன் இதனைக் கவனிக்கவில்லையா?
    பாவம். பிழைச்சிட்டுப் போகட்டும். விட்டிடுங்கோ

    பேராசிரியரின் நேர்மைபற்றி இன்னுமொரு செய்தி.‘தமிழியல்’ வெளியிட்ட ‘மரணத்துள் வாழ்வோம்’ கவிதைத் தொகுதிபற்றி அனைருக்கும் தெரிந்திருக்கும். இது பத்மநாப ஜயருடன் அலை யேசுராசாவும் புஸ்பராஜனும் சேரனும் சேர்ந்து தொகுத்த தொகுதி. ஆனால் பேராசிரியர் சேரன் அவர்கள் தனது பெயரில் தானே நிர்வகிக்கும் புளக்கில் ‘மரணத்துள் வாழ்வோம்’ இன் தொகுப்பாளராக தன்னை மட்டுமே குறிப்பிடுகிறார்.
    பாவம். சின்னப் பெடியள். என்னத்தையும் பாவிச்சிட்டுப் போகட்டும். விட்டிங்கோ.

    Reply
  • Susee
    Susee

    பேராசிரியர் பலே கில்லாடி. அவருடைய ‘தீரா நதி’ பேட்டியில் இலங்கை அரச படைகளால் கொலை செய்யப்பட்டதாக நமபப்படும் மேர்ஜ் குகமூர்த்தி பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளார். புலிகளால் கொலை செய்யப்பட்ட கவிஞை செல்வி மற்றும் ‘புதியதோர் உலகம்’கோவிந்தன் பற்றி ஒரு சொல்கூட குறிப்பிடவில்லை. நட்சத்திரன் செவ்விந்தியன் கவனிக்கவில்லையா ?.

    Reply
  • Tamil
    Tamil

    //Who is this “UTHR(J)”? why they got only 2 members.
    I don’t think it is a proper organisation – watch //

    When we all decided to run away from IPKF, GOSL, and LTTE human rights abuses, this so called “2 member” organisation (3 when it was started) decided to fight back, even though they all had the opportunities to live a luxury life in the Western world with their educational qualifications.

    If you judge an organisation and their contributions by their size, what contributions have the LTTE made with their tens of thousands of members?

    Reply
  • nesan
    nesan

    Arun Ambalavanar on January 2, 2009 2:44 pm
    Congratulations Sri Lankan forces. Regardless of the shortcomings of Sri Lankan state, Military force’s achievement cannot be ignored. Afterall Sri lankan forces are the one who paid the cost of the war in blood and in flesh. As a fellow Tamil Sri Lankan I take my hat for the pure valour and at the same time I urge the humanity that govern Sri Lankan forces to look after minorities amid hard choices.

    Reply
  • U OF Jaffna
    U OF Jaffna

    Cheran is also another victim of intellectual stupidity.

    Initially, I also thought Dr.Sri & Dr.Hoole were genuine people, who wants to help the tamil community. I do agree that they were well educated on their respective academic fields (Dr. Sri – Differential Equations, Dr.Hoole – Real/Complex Analysis),and not in Human Rights. Dr.Hoole cannot even communicate to their students in Tamil. Dr. Sri (Old boy of St.Joseph’s College) also lived in Colombo for major part of his life. I have my own doubts on the so called ‘facts’ that they have mentioned in ‘Broken Palmarah’, as their cultural in-ability to produce the actual facts from the local people.

    All of a sudden, during the arrival of IPKF they started the UTHR(J), without any official support from University of Jaffna – 4 man army (inlcuding Dr.Rajini & Dr.Soma), and started talking/writing about Human Rights with some help from U OF Jaffna Students (Mano, Selvi, Thillai). I am still not sure why they choose Human Rights, when their lives in danger, with out any personal benefits. I agree they could have had a better life in their respective academic fields. However, I still question them how they have survived the threat from LTTE with out the support from the government (specifically Chandrika government) and funds to do their human rights research (NOT in their academic field) aroud the globe (Harvard university, etc). I do believe two of them had significant influence over banning the LTTE globally.

    If their real motivation behind the human rights work is to help the Tamil Community (not to take revenge for the killing of their dearest friend Rajini), they could have done that very effectively and efficiently based on their international influences. Now, what they have done is also waste of time, and not going to bring any feasible solution to the grieving people.

    What we want is a genuine intellectual/political leadership (Don’t include Prabaharan here) to solve our problem. It seems most of the so called intellectuals, they have their hidden personal agenda, and that is our problem through out the history.

    Reply
  • அம்மணி
    அம்மணி

    “என்று தலைவருக்கு சொக்குப்பொடி போட்டுப் புகழ்ந்த சேரன் தானும் தலைவருக்கு கழுவ “ரெடி” என்று அறிவித்தார். இதன் மூலம் சேரன் தான் 200% புலியாக மாறி விட்டதை அறிவித்தார். (கிட்லரின் உரையொன்றை தலைசிறந்த சிந்தனையாளரும் யூதருமான நோம் சோம்ஸ்கி அதிசிறந்ததாக இருந்ததாகப் புகழ்ந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கிறது சேரன் பிரபாகரனின் உரையை புகழ்வது)”
    சேரனை நோம் சோம்ஸ்கி என்கிறீர்களா?A big Joke and also it shows your glorification about him. ரொம்ப ஓவரப்பா… எத்தனை நாளைக்குத் தான் இந்த கறுமாந்திரங்களைப் பற்றி வாசிப்பது? இதெல்லாம் வுட்டுபுட்டு உம்மக் கவனிப்பா… கவிதை எழுதுப்பா.. படிச்சு ரொம்ப நாளாகுது…

    இன்னொண்டு.. நீர் பிரஸ்தாபிக்கிறது போல, அந்த எழுத்தில சூழ்ச்சிகரமான மாயத் திறமை ஏதும் இருப்பதாய்த் தெரியல தலைவா (நீர் கடைசியா படிச்சது அவரது எழுத்துகள்தானா?!). இக் கவிஞனிட்ட இல்லாதத எவ்வளவு காலத்துக்குத்தான் தேடிப் பிடிச்சு கட்டுரை எழுதப் போறீர்…? சொன்னாக் கேளும், அந்த எழுத்தில மாயக் கவர்ச்சி, ……எதுவும் கிடையாது. தன்னைப் பற்றிய பிரலாபம் தவிர. அதுவும் எத்தன நாளைக்கு செல்லுபடியாகும்.. இந்தக் காலத்தில அந்த எழுத்துகளால துடைக்க முடியாதது. உம் வயசுக்கு, நீர் ஏன் அவரக் கட்டிக் கொண்டு அழுறீர்? காதல் கவிதை எண்டு இருக்கிற உம் வயசில, எண்டைக்கோ கவிஞரிட வாழ்க்கையில நடந்த – இப்ப பெருங் கனவாய் இருக்கிற – விசயங்கள ஞாபகப்படுத்தி அந்தயாளிட வயோதிபத்த ஏன் சோதிக்கிறீர்ற? …………? ஏன இந்த மயக்கம் அவரில? பாத்து, பசப்பு பயலுக பொறாமையின்னு சொல்லுவாங்க.. இனியா சொல்லணும்?! எதுக்கும் பாத்து நடந்துக்க.

    Reply
  • watch
    watch

    I agree with every single comment from ‘U OF Jaffna’.
    If you look at the history of their arrival to Jaffna, it is after 1985. Why they came to Jaffna in 1986.

    They never actually supported or raised their voices against any real Human Rights violation.

    But, they did lot of care about Vijitharan and so-called Political activist – Saba Navaln (Tamil) joint behind them as a student spy.

    Why they only comment about LTTE? Not the people in Vanni or People in Vavunia detention camps? Why they are keeping quite now if they are real Human right safe Guard?

    Tamil, They can’t live in abroad and do hard word to achieve a status.

    Reply
  • தருமி
    தருமி

    //(கிட்லரின் உரையொன்றை தலைசிறந்த சிந்தனையாளரும் யூதருமான நோம் சோம்ஸ்கி அதிசிறந்ததாக இருந்ததாகப் புகழ்ந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கிறது சேரன் பிரபாகரனின் உரையை புகழ்வது)//

    நட்சத்திரன் செவ்விந்தியன்,
    பிரபாவுக்கு கிட்லரை உவமைப்படுத்தலாம் – ரண்டும் ஒரே குட்டை + மட்டை. சொம்ஸ்கியை சேரனோடு ஒப்பிடலாமா? சேரன் உருப்படியா ஐந்து ஆய்வுக்கட்டுரை தன்ரை துறைசார்ந்து எழுதியிருக்கிறாரா? சொம்ஸ்கியோடு ஒப்பிடாதை. உவரை நீரே பப்பாசியில ஏத்திப்போடுவீர் போலக் கிடக்கு (உவமையை மாத்துக நட்சத்திரா!!… )

    இப்படிக்கு தருமி (1000 பொன்னாச்சே)

    Reply
  • Tamil
    Tamil

    // Tamil, They can’t live in abroad and do hard word to achieve a status. – watch //

    Do you know of any evidence to support that?
    Do you know them personally?
    Have you ever worked with them in the past?

    This is the fundamental problem amoung us so called “left”. We are not even prepared to work with people, who are in agreement with on many issues, but only trying to find excuses not to do so…

    Wait for “genuine intellectual/political leadership”, who will be born in the form of Krishna, Jesus or Allah…

    Oh.., even then they might say “…who he is without sin amoung you, let him throw a stone…”

    Reply
  • thennavan
    thennavan

    சொந்த தேசத்து மக்கள் சாரி சாரியாகப் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலிலும் கூட சேரன் பேராசியரா இல்லையா என்று விவாதம் நடத்துறர் நட்சத்திரன் செவ்விந்தியன். இலங்கைப் பிரச்சனை தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் வெளிவந்த செவ்விகளில் சேரனின் செவ்வி மட்டுமே இலங்கைச் சூழலை ஓரளவேனும் தொட்டுச் செல்கிறது. நட்சத்திரச் செவ்விந்தியனுக்கு ஒரு சாதாரண இந்தியத் தென் கோடியனாக ஒரு வேண்டுகோள், சேரனை விட்டு வெளியே வந்தால், இந்த உலகம் பரந்ததாய் உணர முடியும். ” பாட்டெழுதிப் பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிடுவொமே… எதாவது ஒரு அரசியல் பிரச்சனை பற்றி எழுதலாமே….

    Reply
  • Anonymous
    Anonymous

    நட்சத்திரனின் கருத்துக்கள் பின்வரும் விடயங்களை கூறுகின்றன.
    நட்சத்திரனுக்கு சேரனை விட்டால் வேறுவிடயங்கள் தெரியாது.
    சேரனின் கல்வித் தகுதியில் நட்சத்திரனுக்கு பொறாமை.
    நட்சத்திரனுக்கு ஆலோசனை
    சேரனைப்பற்றி ஆய்வு செய்து அவரைபப்ற்றி Phன பட்டம் பெறலாம்

    சேரனை அறிவாளிளயாக உலகிற்கு காட்டும் தொழிலை நட்சத்திரன் சிறப்பாக செய்கினறார்.

    தேசம் – தயவு செய்து இது போன்ற கட்டுரைகளை பிரசுரித்து தேசம் வாசகா;களின் எண்ணிக்கையும் தரத்தையும் குறைக்காதீர்கள்

    நட்சத்திரன் செவ்விந்தியன் -…… செவ்விந்தியர் பற்றி ஏதாவது எழுதியுள்ளீர்களா? அவுஸ்திரெலிய பூர்விகக் குடிகள் பற்றி எழுதலாமே? தேசத்தில் “சேரனை” தவிர்த்து நீங்கள் வேறு எதுவும் எழுதவில்லையே. உங்களுக்கும் சேரனுக்கும் அப்படி என்ன பிரச்சினை?

    Reply
  • mohan
    mohan

    நட்சத்திரன் செவ்விந்தியன் அவர்களே உங்களுடைய பல விடயங்கள் வாசித்தேன் அதில் தனி மனிதர்ளும் அவர்களுடைய தனி முயற்ச்சிகள் தனிமனிதனை விளக்க முற்ப்படும் முறைகளில் கட்டாயம் மாற்றம் தேவை அத்துடன் ஒதுக்கி வைக்க வேண்டிய விடயங்களையும் எமக்கு தர முயற்ச்சிக்கின்றீர் தனிதனிதர்களைப் பற்றி நாம் பலர் நிறையவே அவதானிக்கிறோம் அவர்கள் பற்றிய மதிப்பீடுகளையும் பெறுகிறோம் அதேவேளை அவர்களழன் தேவையில்லாத எம்மால் மதிப்பிடப்பட்ட விடங்களை பொதுவாக எழுதுவதை தவிருங்கள் தயவு செய்து தவிருங்கள் – உங்களது ஆக்க ஆய்வு திறனை வேற் பலவிடங்களிலும் செலவிடவும் என் வேண்டுகிறேன் அன்புடன் இந்தியானி……..

    Reply
  • thennavan
    thennavan

    சேரன் கலாநிதிப் பட்டம் வாங்க ஏதாவது ஒரு கட்டுரை எழுதியிருப்பார், குறைந்த பட்சம் புரபசர் ஆவது எப்படி என்றாவது எழுதியிருப்பார். ஆனால் இந்த நட்சத்திரன் எழுதும் கட்டுரைகளோ சேரனைப் பற்றியது மட்டும் தான். சேரனைப் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதி எங்காவது பேமானிப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ பட்டமாவது வாங்கலாமே?

    Reply
  • Suresh M.M.A
  • Maya
    Maya

    what’s wrong with you? you don’t have any other topic except this professor. why are you so obsessed with this person?

    Reply
  • watch
    watch

    Tamil,//
    Do you know them personally?
    Have you ever worked with them in the past?//
    Yes. Is it enough? you might to continue this useless argument.
    But I am not. I am too busy.

    Reply
  • T.Sriram
    T.Sriram

    Maya on March 17, 2009 12:35 am
    “what’s wrong with you? you don’t have any other topic except this professor. why are you so obsessed with this person”/ -Maya.

    Dear Maya,
    Since the death of Hitler and Stalin, both these leaders attracted more than 100 biographers to write biographies on them. Do U think, Maya all these, excellent biographers are so obsessed with Hitler and Stalin?
    So what? for the welfare of humanity.

    Reply
  • கனகரெத்தினம்
    கனகரெத்தினம்

    //சேரன் கலாநிதிப் பட்டம் வாங்க ஏதாவது ஒரு கட்டுரை எழுதியிருப்பார், குறைந்த பட்சம் புரபசர் ஆவது எப்படி என்றாவது எழுதியிருப்பார். ஆனால் இந்த நட்சத்திரன் எழுதும் கட்டுரைகளோ சேரனைப் பற்றியது மட்டும் தான். சேரனைப் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதி எங்காவது பேமானிப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ பட்டமாவது வாங்கலாமே?//

    நட்சத்திரனுக்கு மேற்படி விடயங்களுக்கு சண்முகலிங்கன் தலமையில் இயங்கிவரும் யாழ் பல்கலைக்கழகம் கலாநிதிப்பட்டமோ அதற்கு மேலான டி.எஸ்.சி பட்டமோ வழங்கி கெளரவ அல்லது ‘வாழ்நாள் பேராசிரியராகக்’ கூட நியமனம் வழங்கக்கூடும். அது கட்டாயமாக நடக்கும். நட்சத்திரன் செவ்விந்தியன் அதற்காக ஒரே ஒரு விடயம் செய்ய வேண்டியிருக்கும். அதாவது, அவர் ஏதாவது ஒரு யாழ் பல்கலைக்கழக அறிவாளிகளின் நிழலுக குழுவில் கெளரவ மெம்பர்ஷிப் பெற்றால் போதுமானது. எல்லாக் குழுக்களுக்கும் போசகர் பாலசுந்தரம்பிள்ளை.

    நட்சத்திரன் முயற்சி பண்ணிப் பார்க்கலாமே???

    Reply
  • தேவராசா
    தேவராசா

    ‘பேமானிப் பல்கலைக் கழகம்’ என்று யாழ்ப்பாணப் பல்கலைக்களகத்தையா குறிப்பிடுகின்றீர்கள் கனகரெத்தினம் மற்றும் தென்னவன்?

    அது பேமானி என்பதனையும் விஞ்சி ‘அதி பேமானித்தனமான’ விடயங்களில் ஊறிக் கெட்டுக் கிடக்கின்றது. ஒரு நாளும் உருப்படமாட்டாது.

    ஆனாலும் ஒரு பல்கலைக்களகத்தை அநியாயமாகத் தூற்றக் கூடாது!

    Reply