பேராசிரியர் கங்கநாத் திஸாநாயக்க வீடு திரும்பியுள்ளார்

rupavahini.jpgவெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்ட ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் தம்மிக்க கங்கநாத் திஸாநாயக்க வீடு திரும்பியுள்ளார். தனது முன்னாள் கட்சி ஆதரவாளர்களே தன்னைக் கடத்தினார்கள் என அவர் கூறியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஊடகத்துறை பேராசிரியரும் முன்னாள் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவருமான பேராசிரியர் தம்மிக்க கங்கநாத் திஸாநாயக்க நேற்று புதன்கிழமை இரவு வெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மகரகம கொட்டாவ மத்தேகொடவிலுள்ள தனது வீட்டில் இவர் இருந்தபோதே நேற்று இரவு 9.45 மணியளவில் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இவரது வீட்டினுள் நுழைந்த ஐவர் இவரைக் கடத்திச் சென்றதாக உறவினர்கள் அவசரப் பொலிஸ் சேவையான “119′ க்கு உடனடியாக அறிவித்ததாகவும் பின்னர் அவர்கள் தங்களுக்கும் முறைப்பாடு செய்ததாகவும் ககாத்துடுவ பொலிஸார் தெரிவித்தனர். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது பேராசிரியர் திஸாநாயக்க அவரது ஊடக ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • palli
    palli

    இவர் அஸ்ராப்பின் முயற்ச்சியால்தான் விடுதலை செய்ய பட்டுள்ளார். ஆகவே அவருக்கு எல்லோரும் ஒரு ஓஒ போடுங்கோ.

    Reply
  • ashroffali
    ashroffali

    பல்லி
    இது தேவையற்ற வம்பு மட்டுமில்லை வரவர உமக்கு குசும்பு கூடிக் கொண்டு போகின்றது. உமக்கெதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தான் நான் வழக்குப் போட வேண்டி வரும். அதன் பிறகு உமக்கு ஊர்ந்து திரிய இடமில்லாமல் வேற்றுக் கிரகம் தேடித்தான் போக வேண்டி வரும்….

    பல்லியாரே.. பேராசிரியார் கங்காநாத் திசாநாயக்கவின் கடத்தல் நாடகம் ஐ.தே.க. அரங்கேற்றம் என்பதாக நான் ஆரம்பத்திலேயே பின்னூட்டம் விடவில்லையா? நடந்திருப்பது அதுதானே? இப்படியான விடயங்களைப் புறம் தள்ளி எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறை கூறுவதைத் தான் நான் தவறு என்று வாதிடுகின்றேன். அதில் என்ன தப்பு.?

    Reply
  • santhanam
    santhanam

    அப்படி என்றால் பல்லி நீங்கள் இவரை முக்கியதேவைக்கு சமாதானகாலப்பகுதியில் பாவித்துள்ளீகள் இதைநான் ????

    Reply
  • palli
    palli

    //உமக்கெதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தான் நான் வழக்குப் போட வேண்டி வரும்//
    அதைதான் பல்லியும் எதிர்பாக்கிறது. அப்படியாவது சர்வதேச நீதிமன்றத்தில் மகிந்தா முதல் அஸ்ரப் வரை தமிழர்க்கு செய்யும் கொடுமையை சொல்லும் வாய்ப்பு கிடைக்கட்டுமே.

    //அதன் பிறகு உமக்கு ஊர்ந்து திரிய இடமில்லாமல் வேற்றுக் கிரகம் தேடித்தான் போக வேண்டி வரும்….//
    இதை 74 ஜனனாயகவாதிகள்; சில கூட்டு குலாவிகள் ஏன் சந்திரராசா உடபட பலர் முயற்ச்சித்தனர். முடியவில்லை. காரனம் தேசம் ஒரு நடுநிலை ஊடகம். ஆக இதுக்காக கஸ்ரபட வேண்டாம். பல்லிக்கு இரை இல்லாவிடில் (பிரச்சனை) பல்லி தானாகவே வேற்று கிரகத்துக்கு போய் விடும். அங்கும் அஸ்ரப் போன்றோர் இருப்பார்கள்தானே.

    // கடத்தல் நாடகம் //
    அதிலை பல்லிக்கும் உடன் பாடுதான். ஆனால் யார் அதை செய்தார்கள் என்பதில் தான் பல்லி பக்குவபடுகிறது. அஸ்ரப் ஆதங்கபடுகிறார்.

    Reply
  • palli
    palli

    சந்தானம் உந்த விளாட்டுக்கு பல்லி வரவில்லை. பின்பு சர்வதேச கோட்டில் சந்தானமும் பல்லிக்கு உதவியாக வர வேண்டும். சர்வதேச நீதிமன்றம் கூட சிலருக்கு கில்லியாட்டம்போல் இருக்கிறது. இருப்பினும் சந்தானம் நன்றி.

    Reply
  • santhanam
    santhanam

    நல்லது நடக்கும் என்றால் நான் ரெடி நவநீதம்பிள்ளை வன்னி தளபதிகளை போர்குற்றத்தில் நிறுத்தபோகிறவாம் அரசுக்கு இல்லை.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பல்லி! உம்மை மாதிரி சின்னதனமாக பின்னோட்டம் விட முடியவில்லை. உம் தராதரத்திற்கு என்னையும் இறக்கிக்கொள்வது அழகில்லை.
    ……………………………………………..
    வள்ளுவர் பிசா ஒளவையார் பிசா 59;60 என்றெல்லாம் பின்னோட்டம் விட்டது உமக்கு மறந்து போகாது என நினைக்கிறேன். இப்ப திரும்பவும் 74 ஜனநாயகவாதிகள் கூட்டுகலவி என்று கதை சொல்லுகிறீர். நீர் எதை நினைத்து எதை இடிகிறீர். இதற்கும் சந்திரராஜாவுக்கும் என்ன சம்பந்தம். இப்படி தப்பும் தவறுமாக கதைவிடுகிற உமக்கு எப்படி ஒரு சரியான அரசியல் கருத்தை சொல்ல முடியும். கடி ஏற்பட்டால் முதுகு சொறிவதற்கு உமது கல்உரசியாக நீர் கணக்கு போட்டிருக்கும் தோழர் ஆனந்தசங்கரி கருனா பிள்ளையான் மகிந்தாவுடன் உரசி கடியை தீர்த்து கொள்ளவேண்டியது தானே!அளவுக்கு அதிகமாக யாரையும் புகழாதீர் அவர்களே இறுதியில் காலை வாரிவிடுபவர்கள்…………………………………

    Reply
  • mohamed jaleel
    mohamed jaleel

    கோபப்படாதீர்கள் அஸ்ரப் அலி. அவசரப் படாதீர்கள் அஸ்ரப் அலி. களத்துக்கு வந்து விட்டால் பலரும் பல கேள்விகளைக் கேட்கத்தான் செய்வார்கள். நீங்கள் நினைப்பது போல் இங்கு பின்னோட்டம் விடுபவர்கள் எல்லாம் தத்தக்கா பித்தக்காக்கள் கிடையாது. ஏற்கனவே நன்கு புடம் போடப்பட்டவர்கள். எல்லாக்கலையிலும் ஊறித்திளைத்தவர்கள். எடுத்தேன் பிடித்தேன் என எல்லாவற்றுக்கும் ஆமாப் போட்டுவிட மாட்டார்கள். ஆராய்ந்து >ஆராய்ந்துதான் முடிவெடுப்பார்கள். 57ம் ஆண்டிலிருந்து சிங்களத்திடம் பட்ட வேதனைகள், சோதனைகள் அந்த ஆத்மாக்களுக்குத்தான் தெரியும். இப்போ மஹிந்த ராஜபக்ஷ படம் காட்டினால் மொத்த தமிழனும் நம்பிவிட வேண்டும் என்கின்றீர்களா? சிங்களம் வன்னிக்குள்ள போய் அடிக்கிறான் புலிக்கு, என இங்கு சந்தோஷப்பட்டு பின்னோட்டம் விடும் தமிழனேல்லாம் புலித்தலைமையை வெறுப்பவனே தவிர ஒவ்வொரு ஜீவன்களையும் நேசிப்பவன், மதிப்பவன் சகோதரரே. நீங்கள் எந்த நாட்டில் இருந்து எழுதுகின்றீர்கள் என எனக்குத் தெரியாது. ஆனால் ஐரொப்பாக்களில் மொத்த தமிழனும் ( புலி ஆதரவாளன்/புலியை எதிர்ப்பவன்) உட்கார்ந்து சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது அஸ்ரப் அலி. அவ்வளவு வேதனைகளை பல வருடங்களாக சிங்கள அரசுகள் செய்திருக்கின்றன சகோதரரே. பிளீஸ். சரித்திரங்களை படியுங்கள். அது அடங்காத்தமிழன் சுந்தரலிங்கத்திலிருந்து தொடங்குகிறது. பிளீஸ் சகோதரரே.பிளீஸ். தவறு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் அஸ்ரப் அலி.

    Reply
  • palli
    palli

    சந்திரா உமக்கு பல பின்னோட்டம் பல்லி விட்டது. 7ம் மாடி இலக்கியம் வரை ஆனால் அதை ஏனோ தேசம் தணிக்கை செய்து விட்டது. பல்லி ஏப்போதும் முதுகு சொறிவதில்லை. ஆனால் மற்றவர்கள் மக்களின் முதுகை சொறியும் போது பார்த்து வாழ்க என சொல்லும் அளவுக்கு அரக்கன் அல்ல. சந்திரா இத்தனை பேர் பின்னோட்டம் விடும்போது பல்லியை மட்டும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு போடுவதாக ஒரு நபர் சொல்லுகிறார் எனில் பல்லியின் பின்னோட்டம் ஏதோ ஒரு வகையில் சிலரை கடிக்குது என தானே அர்த்தம். சரி உம்மிடம் வருகிறேன் உமது திருவிளையாடல் ஒன்று. உமக்காக அல்ல தேசநண்பர்களுக்காக.

    //பல்லியாரே! பல்லியாரே!! இலங்கை மக்களின் துன்பத்திற்கு நீர் சாத்திரம் சொல்லுமுன்பு நீர் உமக்கு சாத்திரம் பார்ப்பது தான் அழகு. கூழ்பானை கிழைகிடப்பதறியாமல் சாத்திரம் சொல்லுகிறீர் சாமவேளை அறியாமல். உம்முடைய கடுப்பு யாரையும் ஒன்றும் செய்து விடப்போவதில்லை.
    காலநேரம் பார்த்து கடுப்பை ஏத்தியிறக்கவும்//chandren.raja

    வருவாய்காக பின்னோட்டமோ அரசியலோ பேசும் பழக்கம் பல்லிக்கு கிடையாது. தேசத்துக்கு தடைபோட பரிஸில் துடித்தது பல்லியா சந்திராவா?? பல்லி தவறு செய்தால் கண்டிப்பாக திருத்தி கொள்ளும். ஆனால் இந்த அஸ்ரப் சந்திரா போன்றவர்களுக்காக பல்லி பயம் கொள்ளாது.

    Reply
  • palli
    palli

    சந்தானம் எனது நண்பன் சொன்னார் பல்லி சந்தானம் போன்றோர் சர்வதேச நீதிமன்றத்துக்கு போக முடியாதாம். இவர் அஸ்ராப் பல்லியை மிரட்டவே இப்படி சொன்னாராம். பல்லி சந்தானத்துக்கு தீர்ப்பு சொல்லும் அதிகாரல் 18பட்டியையும் கூட்டி வினுசக்கரவர்த்தி தலமையில் தான் முடியுமாம் (சினிமாவில்) ஆகநாம் நமது பின்னோட்டங்களை பயம் இன்றி விடலாமென சட்டம் தெரிந்த எனது நண்பன் சொன்னான்.

    Reply