::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

நியூஸிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

sri-lankan-cricketers.jpgஇந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணியை, நியூசிலாந்து வீழ்த்தியது. நேற்று தம்புள்ளவில் நடந்த 2 வது போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. நியூஸிலாந்து அணியை இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 48.1ஓவர்களில் 192  ஓட்டங்களடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களைப் பெற்றது.

உபுல் தரங்க ஒரு நாள் அரங்கில் 17 வது அரை சதம் கடந்தார். 9 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் சேர்த்து தரங்க இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

100 விக்கெட்

நேற்றைய போட்டியில், நியூசிலாந்து வீரர் கப்டிலை அவுட்டாக்கிய இலங்கை வீரர் மலிங்கா, ஒரு நாள் போட்டிகளில் 100 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். தவிர, இந்த இலக்கை எட்டும் இலங்கையின் 11 வது வீரரானார்.

இதுவரை 68 போட்டிகளில் பந்து வீசிய மலிங்கா, 102 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் மிகக் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமை பெற்றார்.

நியூஸிலாந்து, இலங்கை இன்று மோதல்

sri-lankan-cricketers.jpgஇலங் கையில் நடைபெறும் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரில் இன்று 2வது ஆட்டத்தில் இலங்கை அணி, நியூஸிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. முதல் போட்டியில் இந்தியாவை 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. அதே உற்சாகத்துடன் இலங்கை அணியை அந்த அணி சந்திக்க உள்ளது.

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட்: – நியூசிலாந்து அணி 200 ஓட்டங்களால் வெற்றி

india.jpgஇலங்கை – இந்தியா – நியூசி லாந்து ஆகிய அணிகளுக்கிடையி லான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் நேற்று இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கிடையே தம்புள்ளயில் நடைபெற்ற முதலா வது போட்டியில் நியூசிலாந்து அணி 200 ஓட்டங்களால் அபாரமாக வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசி லாந்து அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் ரொஸ் டெய்லர் 95 ஓட்டங்களையும் ஸ்கொட் ஸ்டை ரிஸ் 89 ஓட்டங்களையும் நியூசி லாந்து அணிக்கு பெற்றுக் கொடுத்த னர். பந்து வீச்சில் அஸிஸ் நெஹ்ரா 4 விக்கெட்டுகளையும், பிரவீன் குமார் 3 விக்கெட்டுகளையும் பெற்ற னர். பதிலளித்து ஆடிய இந்திய அணி 29.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 88 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

ரவீந்திர ஜடேஜா 20 ஓட்டங்க ளையும், விரேந்தர் சேவாக் 19 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் டெரல் டஃபி 3 விக்கெட்டுகளையும், கைல் மில்ஸ், ஜேக்கப் ஓராம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பெற் றனர்.

3 ஆவது ரெஸ்ட் போட்டி – இலங்கை 425 ஓட்டங்கள்

samaraweera.jpgஇலங்கை இந்திய அணிகளுக்கிடையேயான 3 ஆவது ரெஸ்ட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணியினர் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 425 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் டி.எம்.டில்ஷான் 48 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ரன்னவுட் முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது, சங்கக்கார 75 ஓட்டங்களையும் ஜயவர்தன 56 ஓட்டங்களையும் சமரவீர ஆட்டமிழக்காது 137 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

2ஆவது ரெஸ்ட் போட்டி – இலங்கை அணி 642 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்

cri.jpgகொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றுவரும் இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 2ஆவது ரெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்போது இந்திய அணி எதுவித விக்கெட் இழப்பும் இன்றி 95 ஓட்ட்ங்களை பெற்றுள்ளது.

நேற்றய தினம் இலங்கை அணி 642 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தனது முதல் இனிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது.  இலங்கை அணி சார்பில் அதி கூடிய ஓட்டமாக 219 ஓட்டங்களை குமார் சங்ககார பெற்றுக்கொண்டதுடன் மஹேல மற்றும் பரனவிதான சதம் அடித்தனர். பரணவித்தாரன 100 ஓட்டங்களையும் சங்கக்கார 219 ஓட்டங்களையும் மஹேல ஜெயவர்தன 174 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முரளி – 799ஆவது டெஸ்ட் விக்கட்

murali.jpgகாலியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் 5ஆவது நாளான இன்று முரளிதரன் விளையாடும் இறுதி டெஸ்ட் நாளாகும்.

இன்றைய போட்டியில் சற்று நேரத்திற்கு முன் தனது 799ஆவது டெஸ்ட் விக்கட்டைப் பூர்த்தி செய்தார். இன்னும் ஒரு விக்கட்டைப் பெற்றால் 800 விக்கட்டுகள் பெற்ற சாதனைக்குரிய வீரராக முரளி மாறிவிடுவார்.

கிரிக்கட் உலகில் சாதனை நாயகனாகத் திகழும் முரளி மீதமான ஒரு விக்கட்டையும் கைப்பற்றி டெஸ்ட் கிரிக்க் உலகில் மற்றுமொரு சாதனையைப் படைக்க தேசம்நெற் இன் வாழ்த்து.

800ஐ எட்டுவாரா முரளி?

murali.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை சாதனையை எட்டுவார் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தற்போது நடைபெறும் இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் இன்று வரை 6 விக்கெட்களை வீழ்த்தி மொத்தம் 798 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றியுள்ளார்.

murali.jpg

3ம் நாள் ஆட்டம்: இலங்கை 8/520, இந்தியா 3/140

muralitharan.jpgஇலங்கை இந்திய அணிகளுக்கிடையே நடைபெறும் முதலாவது ரெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் நிறைவின் போது முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 520 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதலாவது இனிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது. துடுப்பாட்டத்தில் பரனவிதாரண 111 ஓட்டங்களையும் சங்கக்கார 103 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் மிதுன் 105 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பறியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நாள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷெவாக் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களுடனும் லக்ஷ்மன் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

சுசந்திகாவுக்கு ஒலிம்பிக் வௌ்ளிப்பதக்கம்

su.jpgஇலங்கையின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ 2000ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டருக்கான ஓட்டப்போட்டியில் அவர் பெற்ற வௌ்ளிப்பதக்கத்தை அணிவித்தார்.

சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டருக்கான ஓட்டப்போட்டியில் மேரியன் ஜோன்ஸ் முதலாமிடம் பெற்றிருந்த நிலையில் அவர் தடைசெய்யப்பட்ட மருந்துவகைகளை உட்கொண்டமை தெரியவந்ததால் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காலி டெஸ்ட்: 2ம் நாள் ஆட்டம் மழையால் தடை

muralitharan.jpgஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கப்டன் சங்கக்கார, பரனவிதனா சதமடித்து கைகொடுக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் உள்ளது. இலங்கை – இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலியில் நேற்று துவங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை கப்டன் சங்கக்கார துடுப்பெடுத்தாட தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு டில்ஷான், பரனவிதனா சுமாரான துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ஓட்டங்கள் சேர்த்த போது அபிமன்யூ மிதுன் வேகத்தில் தில்ஷான் (25) அவுட்டானார். பின்னர் இணைந்த கப்டன் சங்கக்கார பரனவிதனா ஜோடி இந்திய பந்து வீச்சை எளிதாக சமாளித்தது.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்கக்கார, டெஸ்ட் அரங்கில் தனது 22வது சதமடைத்தார். இவர் 103 ஓட்டங்கள் எடுத்த நிலையில் செவாக் சுழலில் சிக்கினார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய பரனவிதனா டெஸ்ட் அரங்கில தனது முதல் சதமடித்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்கு 256 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பரனவிதான (110) மஹேல ஜயவர்தன (8) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய சார்பிபல் அபிமன்யூ மிதுன் செவாக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.