கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றுவரும் இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 2ஆவது ரெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின்போது இந்திய அணி எதுவித விக்கெட் இழப்பும் இன்றி 95 ஓட்ட்ங்களை பெற்றுள்ளது.
நேற்றய தினம் இலங்கை அணி 642 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் தனது முதல் இனிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அதி கூடிய ஓட்டமாக 219 ஓட்டங்களை குமார் சங்ககார பெற்றுக்கொண்டதுடன் மஹேல மற்றும் பரனவிதான சதம் அடித்தனர். பரணவித்தாரன 100 ஓட்டங்களையும் சங்கக்கார 219 ஓட்டங்களையும் மஹேல ஜெயவர்தன 174 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.