இலங்கை – இந்தியா – நியூசி லாந்து ஆகிய அணிகளுக்கிடையி லான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் நேற்று இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கிடையே தம்புள்ளயில் நடைபெற்ற முதலா வது போட்டியில் நியூசிலாந்து அணி 200 ஓட்டங்களால் அபாரமாக வெற்றியீட்டியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசி லாந்து அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் ரொஸ் டெய்லர் 95 ஓட்டங்களையும் ஸ்கொட் ஸ்டை ரிஸ் 89 ஓட்டங்களையும் நியூசி லாந்து அணிக்கு பெற்றுக் கொடுத்த னர். பந்து வீச்சில் அஸிஸ் நெஹ்ரா 4 விக்கெட்டுகளையும், பிரவீன் குமார் 3 விக்கெட்டுகளையும் பெற்ற னர். பதிலளித்து ஆடிய இந்திய அணி 29.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 88 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
ரவீந்திர ஜடேஜா 20 ஓட்டங்க ளையும், விரேந்தர் சேவாக் 19 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 14 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் டெரல் டஃபி 3 விக்கெட்டுகளையும், கைல் மில்ஸ், ஜேக்கப் ஓராம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் பெற் றனர்.