காலியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் 5ஆவது நாளான இன்று முரளிதரன் விளையாடும் இறுதி டெஸ்ட் நாளாகும்.
இன்றைய போட்டியில் சற்று நேரத்திற்கு முன் தனது 799ஆவது டெஸ்ட் விக்கட்டைப் பூர்த்தி செய்தார். இன்னும் ஒரு விக்கட்டைப் பெற்றால் 800 விக்கட்டுகள் பெற்ற சாதனைக்குரிய வீரராக முரளி மாறிவிடுவார்.
கிரிக்கட் உலகில் சாதனை நாயகனாகத் திகழும் முரளி மீதமான ஒரு விக்கட்டையும் கைப்பற்றி டெஸ்ட் கிரிக்க் உலகில் மற்றுமொரு சாதனையைப் படைக்க தேசம்நெற் இன் வாழ்த்து.