கல்முனை பிரதேசத்தில் நேற்று முன்தினம் உடைக்கப்பட்ட தேங்காய் ஒன்றினுள் குழந்தையொன்றின் கை வடிவத்தில் தேங்காய் முளை காணப்பட்டுள்ளது. இந்த கை வடிவத்திலான விரல்களுடன் கூடியதாகக் காணப்படும் இத் தேங்காய் முளையை பெருந்திரளான மக்கள் அதிசயமாகக் கருது பார்வையிடுகின்றனர்.
கல்முனைக்குடி – 14, எம். சி. அஹ்மது அவெனியூவில் வசித்துவரும் நிஸாம் மெளலவியின் வீட்டில் உணவு சமைப்பதற்காக உடைக்கப்பட்ட தேங்காயிலேயே இவ்வாறு முளை காணப்பட்டிருக்கின்றது.