உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

சட்டத்தின் ஆட்சி மூலம் இலங்கையில் ஒரு நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியும் – ஜனாதிபதி அனுர !

சட்டத்தின் ஆட்சி மூலம் இலங்கையில் ஒரு நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியும் – ஜனாதிபதி அனுர !

 

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல் மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் .

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என குறிப்பிட்ட ஜனாதிபதி, அதனை நிலைநாட்டாமல் இலங்கையில் ஒரு நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியாது என்றார் .

7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! திருப்பி அனுப்பாமல் அபிவிருத்தி நிதியை பயன்படுத்தவும் !

7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! திருப்பி அனுப்பாமல் அபிவிருத்தி நிதியை பயன்படுத்தவும் !

 

வடக்கிற்கான அபிவிருத்தி நிதியை வினைத்திறனாக பயன்படுத்துங்கள் என அரசாங்க அதிகாரிகளிடம் ஆளுநரும், கடற்தொழில் அமைச்சரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்திற்கு 7,328 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த நிதி பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அதிகூடிய பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். மக்களின் மீள்குடியமர்வு, விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இடையூறாக இந்த இரு திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்திரசேகரன், மாகாணசபைக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து இதைச் செலவு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் வருகைதரும் நிலையில் அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை அதிகாரிகள் வழங்கவேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

எம்.பி அரச்சுனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் நலிந்த ! பம்முகிறார் அர்ச்சுனா !

எம்.பி அரச்சுனாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் நலிந்த ! பம்முகிறார் அர்ச்சுனா !

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சபாநாயகர் சில நடவடிக்கை எடுப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மனித உரிமைகள் வழக்கறிஞர் ஸ்வஸ்திகா அருள்லிங்கத்திற்கு எதிராக பாலியல் ரீதியான இழிவான கருத்தை வெளியிட்டதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என கூறியுள்ளார்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தான் அப்படி கூறவில்லை என மறுத்து வருகின்றார். பெண்ணியவாதியும் மனித உரிமைவாதியுமான சட்டத்தரணி சுவாஸ்திகா அருணலிங்கத்தை அரசியல் விபச்சாரி, பல ஆண்களோடு திரிகிறார், விபச்சாரி என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிந்த அவர் தற்போது பம்முகின்றார். எம்பி அர்ச்சுனா சட்டத்தரணி ஸ்வதிகாவை “அரசியல் விபச்சாரி” என பாலியல் ரீதியாக பாராளுமன்றத்தில் சொல்லவில்லை என்று மழுப்பல் கதை சொல்கின்றார். தனது முகநூலில் வசை பாடியதை நாசுக்காக மறைக்கின்றார்.

கடந்த பாராளுமன்ற அமர்வில் வட்டக்கச்சியை சேர்ந்த இளம்பெண் “ சாளினியையே” எம்பி அர்ச்சனா விபச்சாரம் செய்கிறார் என ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த விடயம் தொடர்பில் எம்பி அர்ச்சுனா மீது சபாநாயகர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சாளினியின் பெயர் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனப் பெண்ணிய வாதிகள் கோரி வருகின்றனர்.

பா உ அர்ச்சுனாவின் இழிவான நடத்தைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட முத்த தமிழ் பத்திரிகையாளரான முன்னாள் தினக்குரல் ஆசிரியர் வீரகத்த தனபாலசிங்கம் லண்டன் ஊடகவியலாளர் எம்என்எம் அனஸ்க்கு வழங்கிய நேர்காணலில் பா உ அர்ச்சுனாவை கண்டித்துள்ளதுடன் இவர் உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் எதிர்வு கூறியுள்ளார்.

சிறிதரன் வருவார் முன்னே இந்தியா வரும் பின்னே ! வடக்கு தொழிற்சாலைகளை தமிழர்களிடம் கொடாமல் இந்தியாவிடம் கொடுக்க கோருகின்றார் !

சிறிதரன் வருவார் முன்னே இந்தியா வரும் பின்னே ! வடக்கு தொழிற்சாலைகளை தமிழர்களிடம் கொடாமல் இந்தியாவிடம் கொடுக்க கோருகின்றார் !
வடக்கின் தொழிற்சாலைகளை தமிழர்களிடம் கொடுக்காமல் இந்தியாவிடம் கையளிக்க கோருகிறார் பா உ சிறிதரன். சிறிதரன் வருவார் முன்னே இந்தியா வரும் பின்னே என்பது போல் வடக்கை இந்தியாவிடம் கையளிக்கும் திட்டத்துக்கு பா உ சிறிதரன் முழு முயற்சி எடுத்து வருகின்றார். அதன் ஒரு கட்டமாக வடக்கின் உப்பளங்களை இந்தியாவிடம் கையளிக்குமாறு கோரியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் பிரச்சாரங்களில் வடக்கில் உள்ள தொழிற்சாலைகளை மீள இயக்குவதற்கு உறுதியளித்திருந்தது. அதன்படி வடக்கின் அபிவிருத்திக்கு கணிசமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன் அமைச்சர் குழு காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் அச்சுவேலி கைத்தொழில்பேட்டை என்பனவற்றை பார்வையிட்டனர். ஆனையிறவு உப்பளத்தையும் வினைத்திறனுடன் இயங்கச் வைக்க வேண்டும் என்பது தேசிய மக்கள் சக்தியின் இலக்காக உள்ளது.
இதனை அறியாதவராக பா உ சிறிதரன் வடக்கின் பொருளாதாரத்தை வளப்படுத்த உங்களின் திட்டம் என்ன என நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர், வடக்கு – கிழக்கில் இருந்த பல தொழிற்சாலைகள் இயங்காமல் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இப்போதும் மூடப்பட்டு அங்கிருந்த இரும்புகள் களவாடப்பட்டு சீமெந்து அத்திவாரங்கள் மட்டுமே உள்ளன. அவ்விடத்தில் சீமெந்து தொழிற்சாலையை உருவாக்க வசதிகளைக்கூட உருவாக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
பா உ சிறிதரன், தேசிய மக்கள் சக்தி அமைச்சர்குழு தொழிற்சாலைகளைப் பார்வையிட்டு சில வாரங்களுக்குப் பின் நேற்றுக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தேசிய மக்கள் சக்தி தனியாரோடு, அரச – தனியார் கூட்டுத் தாபனமாகச் செயற்படுத்த எண்ணியுள்ளது. இதற்காக புலம்பெயர் தமிழர்களுக்கும் அழைப்பு விடுத்தள்ளது. ஆனால் இவற்றைக் கணக்கெடுக்காமல் வடக்கு கிழக்கு பிரதேசங்களை இந்தியாவுக்கு அடகு வைக்கும் திட்டங்களை பா உ சிறிதரன் முன்வைத்துள்ளார்.
பா சிறிதரன் அண்மையில் இலங்கைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களைச் சிறையில் சென்று நலன் விசாரித்தது தொடர்பில் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன் அயலவர் திருவிழாவுக்குத் தமிழகம் சென்று வந்த பா உ சிறிதரன் அங்கும் வடக்கு மீனவர்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை. இந்திய மீனவர்கள் கடல்வளத்தை மட்டும் அழித்துவிடவில்லை. அவர்கள் கொண்டுவரும் போதைப் பொருட்கள் வடக்கின் இளைஞர் சமூகத்தையும் அழிக்கின்றது. ஆனால் பா உ சிறிதரனும் ஏனைய தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனமாகவே உள்ளனர்.

யாழில் நீர் இழப்பால் இரு ஆசிரியர்கள் திடீர் மரணம் !

யாழில் நீர் இழப்பால் இரு ஆசிரியர்கள் திடீர் மரணம் !

 

மார்ச் 16 ஆம் திகதி 53 வயதான கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலய ஆசிரியை பிரியதர்ஷினி கனகரத்தினம் பாடசாலையில் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். இதேமாதிரி மார்ச் 09 ஆம் திகதி

வடமராட்சி வதிரியைச் சேர்ந்த 47 வயதான நெல்லியடி மத்திய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் தணிகைவேள் என்பவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இம் மரணங்களுக்கு அதிக வெப்பத்தால் நீரிழப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்ததாக யாழ்ப்போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் கற்பிக்கின்ற போதும் அதிக நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை தாண்டும் பொழுதே நீராகாரத்தை உட்கொள்ளுமாறு ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அப்படி இருக்கையில் இலங்கையின் குறிப்பாக வடக்கின் வெப்பநிலைக்கு குடிதண்ணீர் நிலையங்கள் பரவலாக அமைக்கப்பட வேண்டும் குறிப்பாக பாடசாலைகளில் குடிநீருக்கான வசதிகள் பரவலாக அமைக்கப்பட்டிருப்பது மிக அவசியம்.

நோயாளிகளை பணயக்கைதிகளாக வைக்கும் சுகாதார மாபியாக்களுக்கு சுகாதார அமைச்சர் எச்சரிக்கை !

நோயாளிகளை பணயக்கைதிகளாக வைக்கும் சுகாதார மாபியாக்களுக்கு சுகாதார அமைச்சர் எச்சரிக்கை !

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ சுகாதார சேவையை சீர்குலைக்க வேண்டாம் என எச்சரித்தார். நோயாளிகளை பணயக்கைதிகளாக வைத்து எதிர்காலத்தில் சுகாதார சேவையை சீர்குலைத்தால் அரசாங்கம் மக்கள் பக்கத்தில் இருந்து முடிவுகள் எடுக்கும் எனக் கூறினார். சுகாதார சேவையில் ஒன்றரை இலட்சம் பேர் பணியாற்றுவதாகவும், அவர்களினுடைய சேவை நாட்டிற்கு தேவை. அவர்களுடைய பிரச்சினைகளை கலந்துரையாட அரசாங்கம் தாயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சமீபகாலங்களில் திடீரென வைத்தியர் உட்பட சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தங்களில் குதிப்பதால் புறநோயாளிகள் பிரிவு , வார்டு மற்றும் கிளினிக் வரும் நோயாளிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். அந்த அடிப்படையிலேயே அமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறும் போது சுகாதார நிபுணர்கள் இதனை புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

நீயா நானா? ஒளிபரப்புத் தடை பின்னணியில் பிஜேபி !

நீயா நானா? ஒளிபரப்புத் தடை பின்னணியில் பிஜேபி !

 

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா? விவாத நிகழ்ச்சியில், பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்பட்டு இருக்கின்றன. இவை மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. விவாத நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை புதிய தலைப்புடன் வெளியாகும்.

இந்நிலையில், மார்ச் 04 அன்று விஜய் டிவியின் வலைப்பக்கத்தில் மும்மொழிக்கொள்கை ஆதரவு, எதிர்ப்பு நீயா நானா? தொடர்பு போஸ்டர் வெளியானது. அந்த வாரத்தில் இதுதொடர்பான நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றமே மிஞ்சியது. அதேபோல, நடப்பு வாரத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்ட மும்மொழிக்கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சியும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களின் படி பிஜேபி கட்சியினர் விஜய் டிவி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்ததாலேயே “மும்மொழிக்கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சி” ஒளிபரப்படவில்லை என்று கிசுகிசுக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் உளவியல் வைத்தியரும் பெரியாரிஸ்ட்டுமான ஷாலினி பிஜேபியின் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தடையை சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வு என விமர்சித்துள்ளார். விஜய் டீவி இந்த விவகாரத்தில் உத்தியோக பூர்வ விளக்கம் எதனையும் வெளியிடவில்லை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் டொனால் ட்ரம்மிடம் அவமானப்பட்ட கார்ட்டூனை வெளியிட்டமைக்காக நக்கீரன் சஞ்சிகையை பிஜேபி முடிக்கியிருந்ததும் தெரிந்ததே.

மாணவர்களிடம் காட்டுத்தீயாக பரவும் சமூக விரோத செயல்கள் – சக மாணவனை தீமூட்டிய 10 வயது மாணவர்கள் !

மாணவர்களிடம் காட்டுத்தீயாக பரவும் சமூக விரோத செயல்கள் – சக மாணவனை தீமூட்டிய 10 வயது மாணவர்கள் !

கம்பளை பிரதேசத்தில் சக மாணவன் ஒருவனுடைய உடலில் தீமூட்டிய குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 13ம் திகதி கம்பளை, யட்டபாத்த பிரதேசத்தைச் சேர்ந்த ஆரம்பப் பாடசாலை ஒன்றின் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பாடசாலை அலுவலகத்தில் இருந்த பெயிண்ட், தின்னர் என்பவற்றை திருடி கழிவறைக்குள் அவற்றைக் கலந்து தீமூட்டியுள்ளனர்.

அதில் ஒரு மாணவன் தின்னர் திரவத்தை போத்தல் ஒன்றில் அடைத்து தனது புத்தகப் பைக்குள் ஒளித்து வைத்துள்ளார். அதனைப் பற்றி பாடசாலை நிர்வாகத்திடம் இன்னொரு மாணவன் தகவல் அளித்துள்ளார். அதன்காரணமாக கோபமுற்ற சக மாணவர்கள் மூவரும் சேர்ந்து, தின்னரை போத்தல் ஒன்றில் ஊற்றி தீ மூட்டி, நிர்வாகத்திடம் தகவல் அளித்த மாணவன் மீது வீசியெறிந்துள்ளனர். இதன் போது குறித்த மாணவனின் கால்கள் இரண்டும் தீயினால் எரிந்துள்ளன. பாதிக்கப்பட்ட மாணவனின் சார்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே கடந்தவாரம் திருகோணமலை மூதூர் – தாஹா நகர் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்தின் சந்தேகநபரான 15 வயது சிறுமியை சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை நிர்வாண படம் ஒன்றுடன் இணைத்த குற்றச்சாட்டில் கண்டியிலுள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மீது பொலிஸார் விசாரணை ஒன்றை முன்னெடுத்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.

தென்னாபிரிக்கர்களை போல நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்கப்பழக வேண்டும் – புத்த சாசன அமைச்சர் சுனில் செனவி 

தென்னாபிரிக்கர்களை போல நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்கப்பழக வேண்டும் – புத்த சாசன அமைச்சர் சுனில் செனவி

இலங்கைக்கு உண்மை மற்றும் மன்னிப்பு ஆணைக்குழு தேவை, அதே நேரத்தில் இலங்கையை ஒரு வானவில் தேசமாக மாற்ற வேண்டும் என்று மத விவகாரங்கள் மற்றும் புத்த சாசன அமைச்சர் சுனில் செனவி நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார்

வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய அமைச்சர் சுனில் மேலும் தெரிவிக்கையில், உண்மை மற்றும் மன்னிப்பு ஆணைக்குழுவை நிறுவுவதில் எனது அமைச்சகம் முக்கிய பங்கு வகிக்கும். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவைப் போல இலங்கையும் ஒருவருக்கொருவரை மற்றையவர் மன்னிக்க வேண்டும். ஏப்ரல் 21 ஆம் திகதி நெருங்கி வருகிறது, அன்று தேவாலயங்களைத் தாக்கியவர்களை கிறிஸ்தவர்கள் மன்னிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் தொடர்ந்தும் புலிகளுக்கு தடை !

இந்தியாவில் தொடர்ந்தும் புலிகளுக்கு தடை !

 

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட 67 அமைப்புகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 45 பயங்கரவாத அமைப்புகளாகவும், 22 சட்டவிரோத அமைப்புகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் இந்தியாவில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவி செய்வது கடும் குற்றம் எனவும் அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.