உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

புளியம்பொக்கணை வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கஞ்சா மீட்பு !

புளியம்பொக்கணை வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கஞ்சா மீட்பு !

ஏப்பிரல் 16 பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலிd; mடிப்படையில் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் 85 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கிளிநொச்சி புளியம் பொக்கணை இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் நுட்பமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பளையை சொந்த இடமாகக் கொண்ட சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் கஞ்சா வியாபாரத்திற்காக புளியம் பொக்கணை நாகேந்திரபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பெண் ஆளுமைகளில் ஒருவர் புஸ்பராணி – காலமானார்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பெண் ஆளுமைகளில் ஒருவர் புஸ்பராணி – காலமானார்

ஈழப் போராட்டத்தின் மூத்த பெண் போராளி, சிறையில் அடைக்கப்பட்ட முதல் இரு பெண்களில் ஒருவர். ஈழப் போராட்டத்தில் தன் அனுபவத்தை “அகாலம்” நூலாக தந்தவர். புஸ்பராணி சிதம்பரி நேற்று ஏப்ரல் 17இல் காலமானார். புற்றுநோயல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வாழ்ந்த இவர் நேற்று அவர் புலம்பெயர்ந்த மண்ணாண பாரிஸில் காலமானார்.

அவருடைய வாழ்க்கையின் ஒரு காலத்தை அவரே தன் எழுத்துக்களால் பதிவு செய்த குறிப்பு: “என் சகோதரன் புஷ்பராஜா வெலிக்கடைச்சிறை ஆண்கள் பிரிவிலும், கண்டிச் சிறையில் தம்பி வரதனும் (பபா), தங்கை ஜீவரட்ணராணி சில மாதங்கள் என்னுடன் வெலிக்கடைச் சிறை பெண்கள் பிரிவிலும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருந்த காலங்களில் காவல் நிலையங்களிலும், சிறை வாசல்களிலும் எமக்காகத் தவம் கிடந்து பரிதவித்து ஊணுறக்கமில்லால், கண்ணீருடன் அலைந்த என் அம்மா.

அம்மாவை நினைத்தாலே இந்த நினைவுகள்தான் கண்ணீருடன் முன்னே வருகின்றன. நான் வெளிநாடு வரப் புறப்பட்டபோது, அந்த ஏக்கத்தில் யாருமே எதிர்பாராமல், தனது ஐம்பதாவது வயதில் எம்மைவிட்டு அம்மா மறைந்தது ஒரு கனவுபோல் இருக்கின்றது. பிள்ளைகளால் மகிழ்ச்சிகளை அனுபவிக்க வேண்டிய தருணத்தில் துர்பாக்கியமாக என் தாய் எம்மைவிட்டுப் பிரிந்ததை எண்ணுந்தோறும் கலங்குகின்றோம் பிள்ளைகள் நாம். எம்மைத் தவிக்க விட்டு அம்மா மறைந்த நினைவுநாள் இன்று” என ஏப்ரல் 4 இல் தன் முகநூல் பதிவில் பதிந்திருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையை கண்டறிவோம் ! ஜனாதிபதி அனுர

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையை கண்டறிவோம் ! ஜனாதிபதி அனுர

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் உண்மையை கண்டறிவது, பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இன்று யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் பூங்காவில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் “காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பிலான பிரச்சனை உள்ளது” எனக்கு தெரியும். “உங்களது பிள்ளைகளை நீங்கள் அரசாங்கத்திடமோ அல்லது போலீஸ் நிலையம் ஒன்றிலோ இல்லாவிட்டால் இராணுவ முகாமிலோ கையளித்து இருந்தால் அந்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும். அது ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் கடமையாகும்.

சாதாரணமாக ஒருவர் உயிரிழந்தால் நாம் சடலத்தை காண்போம். இரண்டு மூன்று வாரங்கள் கண்ணீர் வடிப்போம், சிறிது காலத்தின் பின் ஓரளவு வழமை நிலைக்கு திரும்பி விடுவோம். ஆனால் ஒரு பிள்ளை காணாமல் போனால் அவ்வாறு அல்ல. அந்தப் பிள்ளை இன்னும் உயிருடன் வாழ்கின்றார் என்று அந்த தாய் நினைப்பார். அந்த வேதனை எனக்கு நன்றாக தெரியும் எனது உறவும் முறை சகோதரர்களும் காணாமல் போயுள்ளனர்.

எனவே அந்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி உண்மையை நாம் எடுத்துக் கூற வேண்டும், அது யாரையும் பழிவாங்கும் விடயமோ, அல்லது சிறைக்கு அனுப்புவதற்கான விடயமாகவோ இல்லை. அது அரசாங்கத்தின் நல்லிணக்கத்திற்கு தேவைப்படுகிறது. அரசாங்கம் என்பதற்காகவே நாம் அதனை செய்வோம்,” என என ஜனாதிபதி அனுர உறுதியளித்தார்.

அனுர – தமிழர் தேன்நிலவு, ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளையும் தாண்டி ஓகோ என்றுள்ளது ! ஜனாதிபதி அனுரா தமிழ் மக்களின் மனங்களோடு உறவாடுகிறார் !

அனுர – தமிழர் தேன்நிலவு, ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாளையும் தாண்டி ஓகோ என்றுள்ளது ! ஜனாதிபதி அனுரா தமிழ் மக்களின் மனங்களோடு உறவாடுகிறார் !

ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்காவின் வடக்கு – கிழக்கு சுனாமிப் பயணம் மீண்டுமொரு அலையைக் கிளப்பியுள்ளது. அனுர ஜனாதிபதியாகி ஏழுமாதங்களான பின்னும் தமிழ் மக்களுக்கும் அனுராவுக்குமான தேன்நிலவு தொடர்கின்றது. ஏப்ரல் 17ம் திகதி வடக்கிற்கும் அதற்கு முன் கிழக்கிற்கும் பயணித்த ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தும் வகையில் தனது உரையை நிகழ்த்தினார்.

இராணுவ வசமிருந்த காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும், தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படும், தமிழ் மக்களின் கடல்பரப்பு பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு உறுதியளித்தார். மக்களும் கைதட்டி ஆரவாரித்து தங்கள் அதரவை வழங்கினர்.

பாதுகாப்பு காரணத்துக்காக மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டு காணப்படுகின்றன எனவும் தற்போது யுத்தம் என்ற ஒன்று நம் நாட்டில் இல்லை எனினும் பாதுகாப்பு காரணத்தை முன்னிறுத்தி பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் தன் வசம் வைத்திருப்பதற்கு எவ்வித உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் தையிட்டி விகாரையும் ஒரு பெரிய பிரச்சினையில்லைஇ வடக்கில் இதனை வைத்து அரசியல் செய்யும் தமிழ் கட்சிகள் அதிலிருந்து விலத்த வேண்டும். தெற்கில் இதனை வைத்து அரசியல் செய்யும் சிங்களக் கட்சிகள் விலத்த வேண்டும். இப்பிரச்சினையை சாதாரணமாகத் தீர்த்துவிட முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கில் மீனவர் பிரச்சினை தொடர்பில் நாங்கள் இந்தியப் பிரதமருடன் பேசியுள்ளோம். எமது எல்லைகளைப் பாதுகாக்கும்படி கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் இந்திய மீன்பிடிப் படகுகளின் வருகை கணிசமான அளவு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான கைதுகுள் மற்றும் அபராதம் என்பன இலங்கைக் கடற்பரப்பினுள் நுழையும் இந்திய மீனவர்களுக்கு லாபத்தைத் தராது என்ற நிலையேற்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதி வழங்கி இருந்தார். தமிழ் – சிங்கள தேசியவாதத்தை முன்நிறுத்தும் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை, மதவாதத்தை வளர்க்க முற்படுகின்றனர். ஆனால் தேசிய மக்கள் கட்சி அதற்கு அனுமதிக்காது என ஜனாதிபதி அனுர கண்டிப்புடன் தெரிவித்தார்.

மே 6இல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் இடம்பெற்ற பிரசாரத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

விடுவிக்க கூடிய அனைத்து காணிகளையும் நாம் விடுவிப்போம், அதில் சென்று மக்கள் வசிக்கலாம், அதில் விவசாயம் செய்யலாம், நாம் அந்த காணிகளை உங்களுக்கு மீண்டும் வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும் என நினைத்து ஏனையவர்கள் காணிகளை தொடர்ந்தும் இராணுவ முகாம்களாக அவ்வாறே வைத்திருந்தனர் எனினும் நாம் அவ்வாறு செயல்படுவதில்லை. மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும் என்ற எண்ணத்துடன் நாம் செயல்படவில்லை, மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாது என்றும் ஜனாதிபதி அனுரா உறுதியளித்தார்.

 

அர்ச்சுனா: பெண்களின் நிர்வாணத்தில் இருந்து ஹோமோபோபியா வரை !

அர்ச்சுனா: பெண்களின் நிர்வாணத்தில் இருந்து ஹோமோபோபியா வரை !

ஊழல் ஒழிப்பு அணி வன்னி, வடக்கு புலனாய்வு, ஊர்க்குருவி, யாழ்ப்பாண புலனாய்வு, மயிர் புலனாய்வு, மட்டை புலனாய்வு மற்றும் மண்ணாங்கட்டி புலனாய்வு என இன்ன பல போலி முகநூல் கணக்குகளில் ஒளிந்திருக்கும் கோழைகளின் கொட்டத்தை என்பிபி அரசாங்கம் உடனடியாக அடக்க வேண்டும். ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களை ஆளும் என்பிபி அரசாங்கம் இயற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைத்தளம் ஊடாக பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்படியான பதிவுகளை போலி முகநூல் கணக்குகளை இயக்குபவர்கள் ஓரினசேர்க்கையை சட்டபூர்வமாக அங்கீகரித்த நாடுகளிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கு துணிவு இருந்தால் தமது முகங்களை காட்டி சொந்த முகநூல் கணக்கில் வந்து பதிவுகளை இட வேண்டும். அப்போது அவர்கள் வாழும் நாடுகளிலேயே அதற்கான வரவேற்பை பெறுவார்கள். கம்பி எண்ணுவார்கள். அது மட்டுமல்ல இவர்களது பிள்ளைகளும் குடும்ப உறுப்பினர்களுமே இவர்களைத் துரத்திவிடுவார்கள்.

ஊழல் ஒழுப்பு அணி வன்னி “ஓரினசேர்க்கை கழுதைகளை அடையாளம் காட்டி கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பதிவையும் ஒரு சிலர் பகிர்ந்தும் ஆதரித்தும் கருத்திட்டும் உள்ளனர். எல்ஜிபிரிகியு (LGBTG) சமூகத்தினரை மிக இழிவாகவும், அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் விடப்பட்டுள்ளது. பகிரங்கமாக இவ்வாறான கொலை அச்சுறுத்தல் விடுவதை இலங்கை அரசாங்கம் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.

ஆரம்பத்தில் ஊழலை வெளிப்படுத்துகிறோம் என ஆரம்பித்து பெண்களின் நிர்வாணத்தை வெளியிட்டு கீழ்த்தரமான பிரபல்யம் தேடிய போலி முகநூல் கணக்குகள், இப்போது ஓரினச் சேர்க்கை வெறுப்பாகவும் பரிணமித்துள்ளது. பெண்கள் மீதான கருத்தியல் ரீதியான வன்முறையும் தொடர்கின்றது. இதுவும் யாழ்ப்பாண ஆண் மையவாத கருத்தியலின் நீட்சியாகவே தான் பார்க்க வேண்டியுள்ளது. சமூக ஊடகங்களில் துலங்கும் பெண்களை ஒடுக்கும் முனையும் இந்த போலி முகநூல் கணக்குகளும் அவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆண்களும் சீழ்பிடித்த பழமைவாத அழிவுச் சமூகத்தின் எச்சங்களேயாகும்.

மனவக்கிரமும் உளவியல் சிக்கல்களுமுடைய இந்த ஆண்களையும் இவர்களை ஆதரிக்கும் ஒரு சில பெண்களையும் அடையாளங் கண்டு விலக்குவதன் மூலமே ஆரோக்கியமான முற்போக்கான தமிழ்ச் சமூகத்தை வளர்த்தெடுக்கலாம். ஈழத்தமிழர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய இனம். அந்தவகையில் எல்ஜிபிரிகியூ (LGBTG) சமூகத்தினர் சந்தித்து வருகின்ற ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் எதிராக குரல் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். துணிவோடு வெட்கமின்றி பிற்போக்குத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான ஹோமோபோவியோக் கருத்துக்களை பரப்புவர்களை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை அரசாங்கம் சட்டம் கொண்டு வர வேண்டும். அதன்மூலம் எல்ஜிபிரிகியூ சமூகத்தினரின் நலன்கள் மற்றும் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும்.

காணாமல் போன இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு !

காணாமல் போன இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு !

வவுனியா பாவற்குளம் சூடுவெந்த புலவு அலைக்கரையிலிருந்து இரத்தக் காயங்களுடன் உளுக்குளம் பொலிஸாரால் சடலமொன்று மீட்க்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் விநாயகபுரத்தைச் சேர்ந்த 33 வயதான கோபிதாஸன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் 14 ஆம் திகதியிலிருந்து காணாமல் போய்யிருந்ததாக உறவினர்களால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்றைய தினம் சடலாமாக மீட்கப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

 

டொனால்ட் ரம்புடன் பேச இலங்கை குழு அமெரிக்கா பயணம் !

டொனால்ட் ரம்புடன் பேச இலங்கை குழு அமெரிக்கா பயணம் !

சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீதம் சுங்க வரியை விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவிற்கு ஆடை ஏற்றுமதி செய்வதில் கணிசமானளவு அந்நியச் செலாவானியை ஈட்டி வந்த இலங்கை பெருதும் பாதிப்படைந்துள்ளது. டொனால்ட் டிரம்புடன் வரி விதிப்பு தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்த அரசாங்க குழுவொன்று இலங்கையிலிருந்து விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது.

 

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலியர்களுக்கு தடை வித்தித்த அழகிய குட்டித் தீவு !

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலியர்களுக்கு தடை வித்தித்த அழகிய குட்டித் தீவு !

பாலஸ்தீனத்தில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகளை வன்மையாகக் கண்டித்து பாதிக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு தோளோடு தோள் கொடுக்கின்ற வகையில் இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதற்குத் தடைவிதித்துள்ளது அழகிய குட்டித்தீவுகள் கொண்ட மாலை தீவு. மாலைதீவு ஜனாதிபதி மொகமட் மொய்சு இதற்கான சட்டமூலத்தை ஏப்ரல் 14 அன்று கையெழுத்திட்டுள்ளார். மாலைதீவினுடைய இந்நடவடிக்கை பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்தாவிட்டாலும் ஏனைய முஸ்லீம் நாடுகள் இவ்வாறான இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

2022 இல் 16,000 இஸ்ரேலிய உல்லாசப் பயணிகள் மாலைதீவுக்குச் சென்றிருந்தனர். கடல்அலைச் சறுக்கல் விளையாட்டுகளுக்காகவும் நிம்மதியான விடுமுறைக்காகவும் இவர்கள் மாலைதீவுக்குச் செல்கின்றனர். இஸரேலியர்களுடைய மற்றுமொரு சுற்றுலாத்தலமாக இலங்கை குறிப்பாக அறுகம்பே உள்ளது. மாலைதீவு இஸ்ரேலியர்களுக்கான தடையை கொண்டு வந்தள்ளதால் இவர்கள் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகளே அதிகம். இலங்கை அரசில் உள்ள சிலர் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை விரும்பினாலும் இலங்கை அரசு சுற்றுலாத்துறை வருமானத்தை நம்பியே இருப்பதால் இவ்வாறான நடவடிக்கைகளுக்குச் செல்வது பொருளாதாரத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் இலங்கை இஸ்ரேலுக்கு தொழிலாளர்களையும் அனுப்பி வருகின்றது. அதனால் இஸ்ரேலுக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இலங்கை செல்வாதற்கான வாய்ப்பு இல்லை

புலிகளுக்கும் எங்களுக்கும் இலக்கு ஒன்று அணுகுமுறை தான் வேறு – ஈபிடிபி

புலிகளுக்கும் எங்களுக்கும் இலக்கு ஒன்று அணுகுமுறை தான் வேறு – ஈபிடிபி

ஈபிடிபி ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் சிறிகாந் யாழ் ஊடகவியாளர் சந்திப்பில், ‘புலித் தலைமையும் எமது செயலாளர் நாயகமும் ஒரே கொள்கைக்காக போராடியவர்கள். அவர்களுடைய அணுகுமுறைகள் தான் வெவ்வேறானவை. இலக்கு ஒன்றேயாகும். எமது செயலாளர் நாயகமும் பூகோள அரசியல் யதார்த்த சூழ்நிலைகளை புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்புக்களூடாக எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கலாம்’ என நம்பினார். ‘மாறாக புலிகள் தலைமை எவ்வளவு இழப்புக்களை கொடுத்தாலும் எந்த விட்டுக் கொடுப்பும் செய்யாமல் எம் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட பாரிய அழிவுகளை எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாநந்தா எப்போதும் வெளிப்படையாக எதிர்த்தும் கண்டித்தும் வந்துள்ளார்.

புலிகளின் தியாகங்களை வைத்து அரசியல் செய்பவர்கள் எமது செயலாளர் நாயகத்தின் கருத்துக்களை வெட்டியொட்டி ஈபிடிபிக்கு எதிராக பரப்பி வருகின்றனர்’ எனக் குற்றஞ்சாட்டினார் பன்னீர்செல்வம் சிறிகாந். தேர்தல்காலங்களில் எப்போதும் இவ்வாறான விசமத்தனமான வீடியோ பிரச்சாரங்கள் வைரலாவதாகவும் ஆதங்கப்பட்டார். இறுதியாக ‘புலிகளும் நாங்களும் ஒரே இலக்கில் வெவ்வேறு பாதைகளில் பயணித்த போராளிகள்’ என முடித்தார்.

சிறுவர் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அலன் தமிழரசுக் கட்சியிலிருந்து இடைநீக்கம் !

சிறுவர் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அலன் தமிழரசுக் கட்சியிலிருந்து இடைநீக்கம் !

கிளிநொச்சி விவேகாநந்தா நகரைச் சேர்ந்த அலன் என்று அழைக்கப்படும் திரு. சந்தியோ அலன்டீலன் கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் 16 மாணவர்களுக்கு எதிராக இடம் பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் அங்கத்தவர். மற்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் விசுவாசியாவார். அலனை தமிழரசுக் கட்சியிலிருந்து குற்றச்சாட்டின் பாரதூர தன்மையை கருத்திற் கொண்டு உடனடியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்துவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.

எம். ஏ. சுமந்திரன் அலன் விடயத்தில் காட்டிய அதிரடியை ஏன் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் என குற்றம் சாட்டப்படும் ஏனைய தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கவில்லை என விசனம் வெளியிட்டுள்ளனர்.