தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பெண் ஆளுமைகளில் ஒருவர் புஸ்பராணி – காலமானார்
ஈழப் போராட்டத்தின் மூத்த பெண் போராளி, சிறையில் அடைக்கப்பட்ட முதல் இரு பெண்களில் ஒருவர். ஈழப் போராட்டத்தில் தன் அனுபவத்தை “அகாலம்” நூலாக தந்தவர். புஸ்பராணி சிதம்பரி நேற்று ஏப்ரல் 17இல் காலமானார். புற்றுநோயல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வாழ்ந்த இவர் நேற்று அவர் புலம்பெயர்ந்த மண்ணாண பாரிஸில் காலமானார்.
அவருடைய வாழ்க்கையின் ஒரு காலத்தை அவரே தன் எழுத்துக்களால் பதிவு செய்த குறிப்பு: “என் சகோதரன் புஷ்பராஜா வெலிக்கடைச்சிறை ஆண்கள் பிரிவிலும், கண்டிச் சிறையில் தம்பி வரதனும் (பபா), தங்கை ஜீவரட்ணராணி சில மாதங்கள் என்னுடன் வெலிக்கடைச் சிறை பெண்கள் பிரிவிலும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருந்த காலங்களில் காவல் நிலையங்களிலும், சிறை வாசல்களிலும் எமக்காகத் தவம் கிடந்து பரிதவித்து ஊணுறக்கமில்லால், கண்ணீருடன் அலைந்த என் அம்மா.
அம்மாவை நினைத்தாலே இந்த நினைவுகள்தான் கண்ணீருடன் முன்னே வருகின்றன. நான் வெளிநாடு வரப் புறப்பட்டபோது, அந்த ஏக்கத்தில் யாருமே எதிர்பாராமல், தனது ஐம்பதாவது வயதில் எம்மைவிட்டு அம்மா மறைந்தது ஒரு கனவுபோல் இருக்கின்றது. பிள்ளைகளால் மகிழ்ச்சிகளை அனுபவிக்க வேண்டிய தருணத்தில் துர்பாக்கியமாக என் தாய் எம்மைவிட்டுப் பிரிந்ததை எண்ணுந்தோறும் கலங்குகின்றோம் பிள்ளைகள் நாம். எம்மைத் தவிக்க விட்டு அம்மா மறைந்த நினைவுநாள் இன்று” என ஏப்ரல் 4 இல் தன் முகநூல் பதிவில் பதிந்திருந்தார்.