காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையை கண்டறிவோம் ! ஜனாதிபதி அனுர
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் உண்மையை கண்டறிவது, பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இன்று யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் பூங்காவில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில் “காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பிலான பிரச்சனை உள்ளது” எனக்கு தெரியும். “உங்களது பிள்ளைகளை நீங்கள் அரசாங்கத்திடமோ அல்லது போலீஸ் நிலையம் ஒன்றிலோ இல்லாவிட்டால் இராணுவ முகாமிலோ கையளித்து இருந்தால் அந்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும். அது ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் கடமையாகும்.
சாதாரணமாக ஒருவர் உயிரிழந்தால் நாம் சடலத்தை காண்போம். இரண்டு மூன்று வாரங்கள் கண்ணீர் வடிப்போம், சிறிது காலத்தின் பின் ஓரளவு வழமை நிலைக்கு திரும்பி விடுவோம். ஆனால் ஒரு பிள்ளை காணாமல் போனால் அவ்வாறு அல்ல. அந்தப் பிள்ளை இன்னும் உயிருடன் வாழ்கின்றார் என்று அந்த தாய் நினைப்பார். அந்த வேதனை எனக்கு நன்றாக தெரியும் எனது உறவும் முறை சகோதரர்களும் காணாமல் போயுள்ளனர்.
எனவே அந்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி உண்மையை நாம் எடுத்துக் கூற வேண்டும், அது யாரையும் பழிவாங்கும் விடயமோ, அல்லது சிறைக்கு அனுப்புவதற்கான விடயமாகவோ இல்லை. அது அரசாங்கத்தின் நல்லிணக்கத்திற்கு தேவைப்படுகிறது. அரசாங்கம் என்பதற்காகவே நாம் அதனை செய்வோம்,” என என ஜனாதிபதி அனுர உறுதியளித்தார்.