செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மட்டு. மாவட்டத்தில் மெய்வல்லுநர் போட்டிகள்

மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் இம்மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட மட்டத்தில் மெய்வல்லுநர் போட்டி நிகழ்ச்சியொன்றினை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் அனுசரணையுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளில் பங்குபற்ற விரும்பும் விளையாட்டு வீரர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று சங்கத்தின் செயலாளர் த. சோமஸ் காந்தன் அறிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்காகவும், திறந்த போட்டியாகவும் இரண்டு பிரிவுகளாக மெய்வல்லுநர் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டியில் பங்கு கொள்வதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 22 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பி வைக்குமாறும் சங்கத்தின் செயலாளர் கேட்டுள்ளார். குறுந்தூர ஓட்டப் போட்டி கள், மரதன் ஓட்டம் மற்றும் அஞ்சலோட்டம் உட்பட 16 வகை யான போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த தலைமையில் நேற்று அரச இலக்கிய விருது விழா – செங்கை ஆழியானுக்கு உயர் விருது வழங்கி கெளரவம்

mahinda-rajapaksha.jpgஅரச இலக்கிய விருது விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

2009ம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது தமிழில் 15 நூல்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் உயர் இலக்கிய விருதான சாகித்திய ரத்னா விருது “செங்கை ஆழியான்” கலாநிதி க. குணராசாவிற்கு வழங்கப்பட்டு ள்ளது.

நேற்றைய இவ்விழாவில் கலாநிதி க. குணராசாவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாகித்திய ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார். அத்துடன் சிங்கள மொழி இலக்கியவாதி பேராசிரியர் திஸ்ஸ காரியவசம், ஆங்கில இலக்கியத்துக்காக பேராசிரியர் ஏஸ்லிஹெல்பேவுக்கும் ஜனாதிபதியினால் சாஹித்திய ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவர்கள் மூவருக்கும் விருதுகளுடன் தலா 75,000ரூபா பணப் பரிசும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

பொகவந்தலாவையில் பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்!

150909police22.jpgபொகவந்த லாவைப் பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று பொகவந்தலாவை நகரில் நடத்திய பேரணியைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தோட்டப் பகுதிகளில் இன்று 500 ரூபா சம்பள உயர்வு கோரி பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தெழிலாளர்கள் மறியல் போராட்டம் ஒன்றையும் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கட்டம் ஒன்றுக்கு கல் வீசியதையடுத்து இவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் பெற்றோலிய ஆராய்ச்சியில் இந்தியாவின் அம்பானிக் குழுமம் ஆர்வம்!

oil_research.jpgமன்னார் பிரதேசத்தின் பெற்றோலிய ஆய்வு நடவடிக்கைகளில்  இந்தியாவின் முன்னணி வர்த்தக நிறுவனமான முகேஷ் அம்பானி குழுமத்தின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்துப்  பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக  முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவின் திசாநாயக்க நாளை மும்பாய் பயணமாகவுள்ளார்.

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் இலங்கையில் பெற்றோலிய ஆய்வு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டிவருவதாகவும்  அதற்கான எண்ணெய் ஆராய்ச்சிப் பகுதிகள் மன்னார் மாவட்டத்தில் இனங்காணப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

5ஆவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி

999cri.jpgலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 4ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவே வென்றுள்ளதால், 7 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது ஆஸி.

இன்று இரு  அணிகளுக்குமிடையிலான 5ஆவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

England innings
 AJ Strauss*  lbw b Hauritz  35 
 JL Denly  c Hussey b Johnson  45 
 RS Bopara  c Hauritz b Watson  18
 MJ Prior†  st †Paine b Hauritz  37
 OA Shah  c †Paine b Johnson  31
 EJG Morgan  c Siddle b Bracken  58 
 AD Mascarenhas  c Johnson b Watson  19 
 SCJ Broad  run out (Ponting)  22
AU Rashid  run out (†Paine)  18 
 TT Bresnan  c Bracken b Siddle  4 
 RJ Sidebottom  not out  3  
 Extras (lb 1, w 6, nb 2) 9     
      
Total (all out; 50 overs) 299 (5.98 runs per over)

Fall of wickets1-61 (Strauss, 13.2 ov), 2-95 (Bopara, 19.4 ov), 3-105 (Denly, 22.3 ov), 4-165 (Prior, 33.3 ov), 5-192 (Shah, 38.1 ov), 6-230 (Mascarenhas, 41.6 ov), 7-267 (Broad, 46.6 ov), 8-272 (Morgan, 47.3 ov), 9-278 (Bresnan, 48.3 ov), 10-299 (Rashid, 49.6 ov) 
        
 Bowling
 PM Siddle 10 1 50 1 
 NW Bracken 8 1 43 1
 MG Johnson 10 0 80 2
 SR Watson 10 0 60 2 
 NM Hauritz 10 0 54 2
 MJ Clarke 2 0 11 0 5

Australia innings (target: 300 runs from 50 overs)
 

SR Watson  c Mascarenhas b Bresnan  36
 TD Paine†  c Rashid b Bresnan  16
 RT Ponting*  c Shah b Broad  126 
 MJ Clarke  c Shah b Rashid  52 
MEK Hussey  c Sidebottom b Mascarenhas  6
 CJ Ferguson  lbw b Broad  17 
 CL White  not out  24
 MG Johnson  not out  18
 Extras (b 1, w 6) 7     
      
Total (6 wickets; 48.2 overs) 302 (6.24 runs per over)
Did not bat NM Hauritz, NW Bracken, PM Siddle 
Fall of wickets1-45 (Paine, 8.6 ov), 2-76 (Watson, 14.5 ov), 3-209 (Clarke, 36.3 ov), 4-226 (Hussey, 39.3 ov), 5-255 (Ferguson, 43.3 ov), 6-261 (Ponting, 43.6 ov) 
        
 Bowling 
 SCJ Broad 9 0 57 2
 RJ Sidebottom 9.2 0 43 0  
 TT Bresnan 10 0 76 2 
AD Mascarenhas 10
AU Rashid 7 0 55 1 
 RS Bopara 3 0 21 0

ஐ.நா. சபை அமர்வில் பிரதமர்

1509sri-lankan-prime-minister.jpgஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 64 ஆவது வருடாந்த அமர்வில் இம்முறை இலங்கை சார்பில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 64 ஆவது வருடாந்த அமர்வுகள் இன்று 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகின்றன. இந்த அமர்வுகளின் பொதுவான விவாதங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதிவரையும் மேலும் 28 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது.  ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளின் தலைவர்கள் இந்த அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க. ஓபன் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை வில்லியம்ஸ் சகோதரிகள் தமதாக்கினர்

venus-williams.jpgஅமெரிக்க. கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் இரட்டையர் சாம்பியன் பட்டத்தை அமெரிக்க சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் வென்றனர்.

முதலாம் தரவரிசை இரட்டையர் வீராங்கனைகளான காரா பிளாக்-லீசல் ஹூபர் இணையை வில்லியம்ஸ் இணை 6- 2, 6- 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

இந்த 89 நிமிட இறுதிப் போட்டியில் வில்லியம்ஸ் சகோதரிகள் ஒரு சர்வைக் கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி மூலம் இந்த ஆண்டில் ஆஸ்ட்ரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் தற்போது. யு.எஸ்.ஓபன் பட்டங்களை வில்லியம்ஸ் சகோதரிகள் வென்றுள்ளனர். சாம்பியன் பட்டம் வென்ற செரீனா, வீனஸ் சகோதரிகள் 4,20,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையை பகிர்ந்து கொண்டனர். ,

இலங்கை குறித்த அறிக்கை அமெரிக்க காங்கிரஸ் ஆராயும்

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் பற்றி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தயாரித்த அறிக்கை ஒன்று அடுத்தவாரம் அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது என்று யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பான அமெரிக்க தூதுவர் ஸ்ரெபன் றெப் தெரிவித்துள்ளார்.
 

நடுவரை மிரட்டிய விவகாரம்: செரீனாவுக்கு ரூ. 5.25 லட்சம் அபராதம்

serena-williams.jpgஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் அரை இறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கிலிஸ்டர்ஸிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார். இந்தப் போட்டியின்போது செரீனா நடந்துகொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செரீனா சர்விஸ் போடும் போது புட்டால்ட் (எல்லை கோட்டை தாண்டுதல்) செய்ததாக லைன்ஸ் உமன் (நடுவர்) அறிவித்தார். இதனால் அந்த புள்ளி கிலிஸ்டர்சுக்கு கிடைத்து அவர் வெற்றிபெற்றார்.

இதில் ஆத்திரம் அடைந்த செரீனா பெண்நடுவரை நோக்கி உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தான் நடுவரை மிரட்டவில்லை என்று செரீனா பின்னர் மறுத்து இருந்தார்.

செரீனா தன்னை மிரட்டியதாக லைன்ஸ் உமன் புகார் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் அவர் மீது நடவடிக்கை எடுத்து உள்ளனர். செரீனாவுக்கு ரூ. 5.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாலித கோஹண – பான் கீ மூன் சந்திப்பு

1409kohona-banki.jpgஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர பிரதிநிதி பாலித கோஹணவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடைலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

தமது புதிய பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர், பான் கீ மூனை முதன் முறையாக பாலித கோஹண சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.