ஜனாதிபதி மஹிந்த தலைமையில் நேற்று அரச இலக்கிய விருது விழா – செங்கை ஆழியானுக்கு உயர் விருது வழங்கி கெளரவம்

mahinda-rajapaksha.jpgஅரச இலக்கிய விருது விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

2009ம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது தமிழில் 15 நூல்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் உயர் இலக்கிய விருதான சாகித்திய ரத்னா விருது “செங்கை ஆழியான்” கலாநிதி க. குணராசாவிற்கு வழங்கப்பட்டு ள்ளது.

நேற்றைய இவ்விழாவில் கலாநிதி க. குணராசாவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாகித்திய ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார். அத்துடன் சிங்கள மொழி இலக்கியவாதி பேராசிரியர் திஸ்ஸ காரியவசம், ஆங்கில இலக்கியத்துக்காக பேராசிரியர் ஏஸ்லிஹெல்பேவுக்கும் ஜனாதிபதியினால் சாஹித்திய ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவர்கள் மூவருக்கும் விருதுகளுடன் தலா 75,000ரூபா பணப் பரிசும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Thirumalai Vasan
    Thirumalai Vasan

    யாழ்ப்பாணத்திலிருந்து திடீரென்று காணாமல்போன சிவப்புக்கைக் கடலார் திடீரென்று கொழும்பில் தோற்றம் பெற்றிருக்கிறார். எல்லாம் டக்ளஸ் மயம்.

    Reply
  • kamalam
    kamalam

    தமிழ் விருதுகள் முதுகு சொரிவோருக்கே வழங்கப்படுபவை. தகுதியோனாருக்கல்ல. செ.ஆழியான் மூன்றான்தரமான வியாபார எழுத்தாளர். மீனுக்கு தலையும் வாலுக்கு பாம்பும் காட்டிப்பிழைக்கும் வித்தைதெரிந்த ஆழியான்.

    Reply