மாற்றம் கோரி பிரித்தானிய தமிழ் பேரவை கூட்டத்தில் வாக்குவாதம் : தேசம்நெற் வாசகர்

BTF Banner._._._._._.
இவ்வாக்கத்தை இங்கு பதிவு செய்துள்ளவர் தேசம்நெற் கருத்துக்களம் பகுதியில் கருத்துக்களைப் பதிவு செய்து வருபவர். தேசம்நெற் க்கு தன்னை அடையாளப்படுத்தியும் உள்ளார். இவர் அண்மைக் காலங்களில் பிரித்தானியாவில் நடாத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் மட்டுமல்ல போராட்டங்களை முன்னெடுத்தவரும் கூட.
._._._._._.

செம்பரம்பர் 6 லண்டன் ரெயினஸ் லேன் பகுதியில் பிரித்தானிய தமிழர் பேரவை தனது அமைப்பின் செயற்பாடுகள் பற்றிய ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. இந்த கூட்டத்திற்கு பிரித்தானிய தமிழ் பேரவையின் ரெயினஸ் லேன் பகுதி உறுப்பினர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டத்திற்கு இந்தியாவில் இருந்து சைக்கிளில் உலகம் சுற்றிய ஒரு சிறப்பு பிரதிநிதி ஒருவரும் அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்தில் கடந்தகால, எதிர்கால திட்டம் பற்றியும், தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பான தமது நடவடிக்கைகள் பற்றிய விளக்கமும் கொடுக்கப்பட்டது.

அங்கு பிரிஎப் தலைவர்கள் கொடுத்த அரசியல் விளக்கம் அவர்களின் அரசியல் தேர்ச்சியை வெளிப்படுத்தியது. லப்ரொப்பைக் கொண்டு வந்து பவர்பொயின்றில் படம் காட்டியவர்களின் பிறைனில் பிளெக்ஹோல் தான் தெரிந்தது. நகைச்சுவையாகவும் இருந்தது. ‘லண்டனில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் உடனடியாக கொன்ஸவேற்றிவ் கட்சியில் உறுப்பினராக வேண்டும்’ என்று ஒருவர் கருத்து வெளியிட்டார். காரணம் ‘கொன்சவேட்டிவ் தான் இனி ஆட்சியமைக்கும்’ என்றார். அவர் நிறுத்தவில்லை தொடர்ந்தார். திறப்பு போராட்டம் பற்றி குறிப்பிட்டார். ‘ஒரு திறப்பை அவர்கள் அச்சிட்டிருக்கினம். இதை நாம் அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.’ என்றவர் ‘இதுதான் வன்னி தடுப்பு முகாமின் திறப்பு’ என்றார். ‘அட பாவிகாள இந்த திறப்பு அடிச்ச காசை அங்கை அனுப்பியிருந்தால் ஒரு நேர சாப்பாடாவது அந்த சனம் சாப்பிட்டிருக்கும்’ என ஆதங்கத்தில் பேச முனைந்த போது தடுத்து விட்டனர். பின்னர் எமக்கு பேச சந்தர்ப்பம் தருவதாக கூறினார்கள்.

வரிசைப்படி பேச சந்தர்ப்பம் கொடுத்த போதும் வரிசையின் இறுதியில் இருந்த பிரிஎப் சாதாரண உறுப்பினர்கள் இருவர் தம் கருத்தை கூற முன் வந்தனர். அவர்களின் அவசரத்திற்கான காரணம் இனியும் மற்றவர்கள் சொல்லும் கருத்தை கேட்டால் தலை வெடிக்குமளவிற்கு அங்கிருந்தவர்கள் பேசியதே.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் பற்றியோ அல்லது நடந்து முடிந்த யுத்த அவலம் பற்றிய ஒரு சுயவிமர்சனத்தை வைக்காது திரும்பவும் எவ்வாறு லண்டன் வாழ் மக்களிடம் காசு புடுங்கலாம் என்ற திட்டங்களே அங்கு பேசப்பட்டது. லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் விளம்பரம் போட வேண்டும் என்று அதற்கு காசு சேர்க்கவும் முனைந்தனர். அந்த இரு உறுப்பினரும் ‘இனியும் சனத்தை பேக்காட்டிறதை விட்டு விட்டு உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்’ என்று கோரினார்கள்.

‘நாங்கள் அண்மையில் கூட்டிய ஊர்வலத்திற்கு சனம் வராததற்கு காரணம் ஊரில் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை’ என்று பிரிஎப் பேச்சாளர் அளித்த காரணத்திற்குப் பதில் அழித்த ஒருவர், ‘மக்களை காசு போடும் வங்கிகளாக பார்த்த நீங்கள் அவர்களை அரசியல் மயப்படுத்தி நீங்கள் ஒழுங்கான அரசியல் செய்திருந்தால் மக்கள் தாமாகவே வந்திருப்பார்கள்’ என்று சாடினார். ‘இன்றைய மக்களின் தேவை அவர்களின் மறுவாழ்வே ஒழிய மீண்டும் உங்களுடைய சுத்துமாத்து அரசியல் அல்ல’ என்று அவர் தொடர்ந்தும் கூற அங்கிருந்த ஒருவர் ‘சிங்களவனோடு போய் வேலை செய்வதே’ என்று கூக்குரல் இட்டார்.

இங்கு வந்திருந்தவர்கள் அனைவருமே பிரிஎப் இன் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள். பிரிஎப் யை கேள்விக்கு உட்படுத்திய இரு உறுப்பினர்களும் பிரித்தானியாவில் பிரிஎப் ஆல் நடத்தப்பட்ட கடந்த கால போராட்டங்களில் முன்னின்றவர்கள். இன்று கேள்வி கேட்கும் இவர்களை பிரிஎப் எட்டத்தில் வைத்திருக்கவே முயல்கிறது. ஏனெனில் பிரிஎப் இடம் பதிலில்லை.

விடுதலைப் புலிகளின் இறுதி நேர மனித உரிமை மீறில்கள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்ட போது யாராலும் அங்கு பதில் கூற முடியவில்லை. மாறாக ‘அது அரசின் பொய் பிரச்சாரம்’ என்று பதில் கொடுக்கப்பட்டது. ‘தன் சொந்த குடும்பமே இவ்வாறு பாதிக்கப்பட்டது’ என்று ஒரு உறுப்பினர் கூற அங்கு அதற்கு மறுமொழி கொடுக்க யாரும் இருக்கவில்லை.

‘தமிழ் மக்களின் அவலங்களுக்கு ஆறுதல் தரவோ அல்லது அந்த மக்கள் பற்றிய நலனில் எந்தவித அக்கைறையும் இல்லாத அமைப்பில் இணைந்து வேலை செய்வது மடைத்தனம்’ என்று கூறிய அந்த இரு பிரிஎப் உறுப்பினரும் ‘மக்களை பலகாலம் பேய்க்கட்ட முடியாது’ என்று கூறிவிட்டு வெளியேறினர்.

இவர்கள் இருவரும் வெளியேறியதும் இருவரையும் சிறீலங்கா அரசின் ஏஜன்டுகள் என்று பழி சுமத்தி விட்டு தமது கூட்டத்தை தொடர்ந்தனர். இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பின் விடுதலைப் புலிகளின் தலைவரின் முன்னைநாள் மெய்பாதுகாவலராக இருந்த ஒருவர் இந்த இருவருக்கும் தொலைபேசியில் மிரட்டியிருக்கறார். ‘இயக்கதிற்கு எதிராக வேலை செய்வதை நிறுத்தாவிட்டால் பின் நடப்பவைக்கு தன்னில் பிழை கூற வேண்டாம்’ என்று. அவர்களில் ஒருவர் இது சம்பந்தமாக பொலிசாரிற்கு புகார் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்ட நபர்களின் பெயர் விபரங்களை பொலிசாருக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

46 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    விடுதலைப்புலிகள் எப்படி பணச் சுருட்டலில்கள் நடத்தினார்களோ, அதே பாணியில் பிரித்தானியாவிலுள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை, வெண்புறா போன்றனவும் செயற்படுகின்றன. பிரித்தானிய தமிழர் பேரவை தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் வந்து சுருட்டிய பணங்களுக்கு இன்றுவரை கணக்கு வழக்கு இல்லை. இவர்கள் சுருட்டிய பணத்தில் சம்மந்தப்பட்ட ஊடகங்களுக்கும் கமிசன் கிடைத்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. பிரித்தானியாவிலுள்ள மக்கள் தொடர்ந்தும் ஏமாளிகளாகவே இருக்கப் போகின்றார்களா???

    Reply
  • jeeva
    jeeva

    மாற்றத்தைக் கோருவோர் தமது மாற்றுத்திட்டத்தைத் தெரிவித்தனரா? மேலெழுந்தமானமாக மாற்ரத்தைக் கோரினர், அல்லது மாற்றம் வேண்டும் எனச் சொல்வது இலகு. எவ்வாறான் போராட்டங்கள் பலன் தரும். அவற்றை எவ்வாறு நடைமுறப்படுத்தலாம் என்பனவற்றை அவர்கள் ஏன் சொல்லவில்லை? அதற்காக நான் பிரித்தானிய தமிழர் பேரவைக்கு வக்காலத்து வாங்கவில்லை, அதற்கான தேவையும் எனக்கில்லை, நான் பிரித்தானிய வாசியுமல்ல.

    Reply
  • jalpani
    jalpani

    திருடர்களாகப் பார்த்து திருந்த மாட்டார்கள். சனங்களாப் பார்த்து திருந்தினால்தான் விமோசனம் உண்டு.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    jeeva,
    மாற்றம் தேவையென வாதிட்டவர்களை ஏன் தொடர்ந்து பேச அனுமதிக்காது, அவர்கள் அரசின் ஏஜன்டுகள் என்று பழி சுமத்தி பேசவிடாது தடுத்தனர். இந்த நிலையில் அவர்களால் எப்படி தமது மாற்றுத் திட்டங்களை வெளியிட முடியும்? இதுவரை வன்னி மக்களுக்கென்று பிரித்தானியத் தமிழர் பேரவை சேர்த்த பல இலட்சம் பிரித்தானிய பெளண்டுகளை என்ன செய்தார்கள் என்பதையும் நீங்கள் விளக்குவீர்களா?? ஆமா நீங்கள் பிரித்தானியாத் தமிழர் பேரவைக்கு வக்காலத்து வாங்கவில்லையெனவே வைத்துக் கொள்வோம்!!

    Reply
  • BC
    BC

    தமிழ் மக்களை இன்னும் அடி ஒட்டச் வறுகுவதற்குப் எதற்க்கு மாற்றம் தேவை?
    இப்போதுள்ள நடைமுறையே சிறந்தது.நீங்கள் ஒன்றும் பிரித்தானியத் தமிழர் பேரவையை ஏமாற்ற முடியாது.

    Reply
  • மாத்தையா
    மாத்தையா

    இனவாதத்துக்கு எதிராக போர் கொடி எழுப்பிய கட்சிகள், இனவாத மகிந்த ( அப்படி வைத்துக் கொள்வோம்) இனவாத பெயர் கட்சிகளை தடை செய்ய முற்பட்ட போது எதிர்த்தார்கள். அதை செய்தவர்கள் தமிழ் கட்சிகளும், முஸ்லீம் கட்சிகளுமேயாகும். இனவாத ஜேவீபீ மற்றும் சிங்கள உருமய கூட வாய் திறக்கவில்லை. சிங்களக் கட்சிகளை விட அந்த அளவு சுயநலவாத கட்சிகள் தமிழ் பேசும் கட்சிகள். இவர்கள் இனவாதத்துக்கு எதிராக மேடையில் பேசும் கட்சிகள். ( உண்மையை உணருங்கள்? )

    அதேபோல சாதி ஒழிப்பில் இறங்கியவர்கள், தலித்தியம் என தொண்டை கிழியக் கத்துபவர்கள். இல்லாத சாதியத்தை கூட தாம் வாழ, சாதியை வாழ வைப்பவர்கள் இவர்கள்?

    அடுத்து மாற்றம் வேண்டும் என வாதிடுவோர் அல்லது இயங்குவோர் மக்கள் சாக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபடவில்லை. புலிகளைத் தவிர எந்த இயக்கமும் (இலங்கையில்) தற்கொலைப் போராளிகளை ஊக்கப்படுத்தவில்லை. இராணுவத்தில் சரணடைந்த அல்லது பிடிபட்ட பெரும்பாலான புலிப் போராளிகள், தற்போது வெளிநாடுகளுக்கு வந்து விட்டார்கள். தாயக விடுதலைக்காக என கடைசி போர் வரை தற்கொலை செய்து கொண்ட எத்தனையோ அஞ்சா நெஞ்சர்கள், இளம் சிங்கங்கள், வீரர்கள், இன்று எம்மிடம் இல்லை? அவர்களது அழிவு தமிழீழத்தை பெற்றுத் தந்ததா? இல்லை. அவர்களது உயிர் இனி திரும்பி வருமா? இல்லை. இது யாரால்? இதற்கு விடை கிடைக்குமா?

    மாற்றுத் திட்டத்தைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். அதை அமுல்படுத்த விடாது சாவு மணி அடித்துக் கொண்டு, தமது பைகளை நிரப்புவது இன்று புலத்து புலிகள்தான் என்பதை இனியும் உணராதவர்கள் மனிதர்களே இல்லை?

    இந்த கலந்துரையாடலை தற்செயலாக கேட்க முடிந்தது. இங்கே மாற்றுக் கருத்துகள் பக்க சார்பற்று பேசப்படுவதை கேட்க மகிழ்வாக இருக்கிறது. அரசியலுக்கு மேல் மனிதம் மனம் திறக்கிறது. எத்தனை வீதம் உண்மை என்பதை விட இப்படியும் உண்மைகள் வெளிவருவது மகிழ்ச்சி.
    கேளுங்கள்:
    http://www.zshare.net/audio/65527037788f9126/

    Reply
  • jeeva
    jeeva

    பார்த்திபன்,
    இங்கே தேசம் நெற்றில் விவாதங்களில் பலரும் மாற்றுத்திட்டம் எங்கே எனக் கேட்டுள்ளனர். மாற்றுத்திட்டம் என்பதை ‘புலி அரங்கில்’ தான் வைக்கவேண்டுமென்பதில்லை. இந்த வெளியேறிய ஆட்கள்பற்றி தேசத்தில் குறைபடும் கட்டுரையாளர் ஏன் இந்த மாற்றுத்திட்டம் பற்றி இவர்களின் பின்னால் சென்று சேகரித்து எழுதவில்லை. ஈழபோராட்ட அரசியலில் ‘மாற்றுக்கருத்து’ என்ற சொல்லாக்கம் வந்து எவ்வளவு நாட்கள் சொல்லுங்கள்? ஆனால் ஏன் ஒரு மாற்றுத்திட்டம் இன்னும் இல்லை? அது அரசிடமோ அன்றி மாற்றுக் கருத்தாளர்களிடமோ ஏன் இன்னும் இல்லை என எண்ணினால் குழப்பமே எஞ்சும். இன்னோர் விடயம் மாற்றுத்திட்டம் என சொல்வோர் அரச பத்திரிகைகள் ரேஞ்சுக்கு ஒற்றை வரிகளில் ஆளாளுக்கு தமது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப 10 பொயின்ரில் நோட்டீஸ் விடுவதை எல்லாம் மாற்றுத்திட்டம் என்கின்றனர். கட்டுரையாளருக்கு வெளியேறிய ஆட்களைத்தெரியும் தானே? இன்னும் காலம் கடக்கவில்லை. அவர்களை அழைத்து இங்கே எழுதும்படி கேட்கிறேன்………

    Reply
  • Keran
    Keran

    ஒரே ஒரு மாற்றம் தேவை.
    புலி ஆதரவாளர்கள் பேசாமல் இருப்பது தான்.
    அப்பதான் ஈழத்தில் ஒரு நல்ல அரசியல் தெளிவும், அறிவும் கொண்ட தமிழ் சமுகத்தை கட்டிஎழுப்ப முடிவதுடன் முன்னேற்றமும் அடையலாம்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    தமிழர் அமைப்புக்களினது கூட்டங்களையும் பிரித்தானிய தமிழ் அமைப்பின் அங்கத்தவர்களின் பேச்சுக்களையும் அவர்களது செயற்பாடுகளையும் அவதானிக்கும்போது கடந்த காலங்களில் புலிகள் எப்படி தமிழர்களது உரிமைப் போராட்டத்தை விளங்காமல் நடாத்தினார்களோ, அதே போலவே தொடர்ந்தும் இவர்கள் செயற்பட முனைவது தெரிகிறது. விடுதலைப்புலிகள் தேசம் என்பதன் அர்த்தம் அது வெறும் நிலமாகவே கருதினர் அதே போல பிரிஎப்ம் கருதுகிறது என பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.

    பிரிஎப் டன் யாரும் ஒரு 30 நிமிடங்கள் பேசினால் இவைகள் புரிந்துவிடும். இந்த பிரிஎப் ம் கடந்தகாலங்களில் புலிகள் அமைப்பும், மக்கள் வெகுஜன அமைப்புக்கள், அந்த மக்கள் வெகுஜன அமைப்புக்களின் போராட்டங்கள், போராட்டவடிவங்கள் அவற்றை நெறிப்படுத்துவது போன்ற படிப்பினைகளை படிக்க முனைப்படவில்லை. அப்படி அவர்கள் அறிந்திருந்தால் புலிகள் இராணுவ அமைப்பினையும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் செயற்ப்பாடுகளையும் வேறுபடுத்தி செயற்படுத்தியிருப்பர்.

    வெகுஜன போராட்ட வடிவங்கள் பற்றி தமிழர் கலாச்சாரத்தில் ஊன்றும் காலங்களிலேயே புலிகள் மற்ற அமைப்பினரை கொலை செய்தும், கருத்து வேறுபாடு கொண்டவர்களை கொலை செய்தும், இந்த மக்கள் வெகுஜன போராட்ட வடிவங்களை ஆரம்பத்திலேயே நசுக்கி விட்டனர்.

    இயக்க ஆரம்ப காலங்களுக்கு முன்பே தமிழர் பிரதேசங்களில் மாக்சிச கட்சியினர் பலர் இப்போராட்ட வடிவங்களையும் அதன் அவசியங்கள் பற்றியும் பல தடவைகள் எடுத்துக் கூறியும் முன் உதாரணமாக செய்தும் காட்டினர். இதில் கம்யூனிஸிசக் கட்சிகள் குறிப்பாக சண்முகதாஸன் மற்றும் பல தோழர்கள் உதாரணமாக விளங்கினர். இவர்கள் தமிழர் பிரதேசங்களில் செயற்பட அனுமதித்திருந்தாலும் இவர்களிடமிருந்து பல பாடங்களைப் பெற்றிருக்கலாம் அல்லது எமது உரிமைப் போராட்டம் அவர்களது வழிநடத்தலை பெற்றிருக்கும் அல்லது குறைந்த பட்சம் மக்களின் இறப்பை குறைத்திருக்கும் எனவும் கருத்துக்களுண்டு.

    ஆனால் புலிகள் எப்பவுமே மக்களை தவறாகவே தமது இயக்கத்தின் பாதுகாப்பிற்காக பாவித்துள்ளனர். தமது ஆதரவாளர்களையும் இயக்க உறுப்பினர்களையும் பாவித்து மக்கள் தமக்காக அணிதிரளுகின்றார்கள் என்ற மாயைத்தோற்றத்தையே உலகுக்கு காட்டியுள்ளனர்.

    இங்கு மக்கள் தமக்காக போராட அனுமதிக்கப்படவில்லை என்பதை கவனம் எடுக்க வேண்டும். அப்படி அனுமதித்திருந்தால் அல்லது சுயமாக செயற்பட அனுமதித்திருந்தால் மக்களில் பலர் உயிர் பிழைத்திருப்பர். சிலவேளை புலிகளில் பலர் காடுகளில் ஒளித்து தப்பிபிழைத்திருப்பர் என பல முன்னாள் புலிகள் அபிப்பிராயப்பட்டுள்ளனர். எல்லாமே மக்கள் போராட்டம் பற்றிய தப்பான அறிவும் பயங்கரவாதிகளுக்குள்ள குணாதிசயங்களுடன் புலிகள் செயற்ப்பட்டதுமேயாகும்.

    மேற்கூறிய விடயங்களை பிற்காலத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் அதில் தமக்குப் பின்னால் மக்கள் உள்ளனர் என்ற ஒரு மாயையை உலகுக்கும் காட்டவே வெளிநாடுகளில் செய்யப்பட்ட முயற்சியாகும். சிலர் இல்லை இப்படி மக்கள் ஆதரவளித்தனர் என்று சொல்லலாம். ஆனால் இன்று மக்கள் புலிகளின் மீது அவதூறு போற்றுவதன் மர்மம் என்ன? புலிகளை ஏற்றுக் கொண்டவர்கள் புலிகள் அரசினால் வீழ்த்தடிக்கப்பட்டதும் ஏன் தாம் ஆதரித்த இயக்கத்தின் மீது அவதூறு பொழிகிறார்கள்.

    தமது மக்களுக்காக என்ற உயர்ந்த நோக்கத்துடனேயே ஊர்வலங்களுக்கும் பொங்கு தமிழுக்கும் மக்கள் கூட்டம் வருகை தருகிறார்கள். அப்படி அவர்களது வருகையை தாம் எப்படி பணமாக திரட்டுவது என்பதிலேயே இந்த பிரிஎப், புலம்பெயர் புலிகள் அக்கறையுடன் செயற்படுத்தினர். பின்னர் தாம் திரட்டிய பணத்தை திரும்ப புலிகள் கேட்டாலும் என்று, தாம் திரட்டிய பணத்தை திருடிக்கொள்ள புலிகளே இவர்களை அழியவும் திட்டங்கள் கொடுத்திருக்கலாம் எனவும் புலிகளின் உறுப்பினர்களே கருத்துக்கள் கூற ஆரம்பித்துவிட்டனர். இதில் முக்கியமாக பிரிஎப் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, ‘முள்ளிவாய்க்கால் காலத்தில் பிரபாகரனுக்கு பிரிஎப் தான் தமக்கு 72 பிரித்தானிய எம்பிக்கள் ஆதரவு உண்டு. இவர்களின் உதவியுடனும் இவர்களால் வழங்கப்பட்ட மக்கள் தொகையாக இலங்கை அரசால் அழிக்கப்படும்போது தாம் சர்வதேச நாடுகளை தலையீடு செய்ய வைப்போம்’ என்ற நம்பிக்கையூட்டல் பற்றியும் இன்றும் பலரும் பரவலாக பேசப்படும் விடயம்.

    இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அரசினால் குண்டு மழை பொழியும் பிரதேசங்கள், இடங்களிலேயே புலிகள் மக்களை வைத்திருந்தனர் என்பதும் மக்கள் செறிவாக இருந்த பிரதேசங்களிலிருந்தே செல்தாக்குதல்களை செய்ததும் ஏன்? என்பதுமாகும். இவை புலிகளும் பிரிஎப் ம் மக்கள் பெருவாரியாக அழியும்போது தாம் வெளிநாடுகளை தலையிட வைப்போம் என்று உறுதி கூறியதாகவே களத்திலிருந்து வெளியேறிய புலிகள் உறுப்பினர்கள் கருத்துக்கொள்கின்றனர். வன்னிப்போராட்டத்தின் போது தமது தலைவர் முக்கியமாக புலம்பெயர் லண்டனில் உள்ளவர்களின் புத்திமதிகளை கேட்டு நடந்ததாகவும் இது தமக்கு வியப்பாக இருந்ததாயும் இந்த புலிகள் கருத்து வெளியிட்டுள்னளனர்.

    இந்த நம்பிக்கையிலேயே பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் தன்னையும் மக்களையும் புலிப்போராளிகளையும் ஒதுக்கிக் கொண்டார் என்பதும் – புலிகளின் பல பேராளிகளும் தளபதிகளும் காட்டுப்பகுதிக்குள் தப்பிப்போக நேரமும் காலமும் இருந்தும் போகாமல் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தங்கினர் என்பது இன்றும் ரிஎன்ஏ உறுப்பினர்கள் உட்பட பல முன்னாள் புலிகளின் கருத்தாக உள்ளது. இதன் காரணமாகவே பிரிஎப் ஜபிசி ஜிரிவி போன்றவர்கள் லண்டனிலும் வெளிநாடகளிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களை இந்த தந்திரோபாயத்திற்கு ஆதரவாகவே நடாத்தினர் என்பதும் இந்த புலிகளின் கருத்தாக உள்ளது. எனவே பிரிஎப் ஜபிசி ஜிரிவி போன்றவர்களும் தமிழர்களின் முள்ளிவாய்ககால் அழிவிற்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் என்பதும் இந்த புலிகளின் உறுப்பினர்களின் அபிப்பிராயமாகும்.

    மீண்டும் பிரிஎப் தமது நிதி சேகரிக்கும் தந்திரங்களையும் திருடிய பணத்தை எப்படியும் காப்பாற்றும் திட்டங்களுடனுமே இன்றும் பிரிஎப் போன்றவர்கள் செயற்ப்படுகிறார்கள் என பிரிஎப் டன் இணைந்து வேலை செய்த புலிகளின் ஆதரவாளர்களின் கருத்தாகவும் உள்ளது.

    புலிகளின் உடமைகள் சொத்துக்கள் கையிருப்புக்கள் புலிகள் இயக்கத்தின் இன்றய நிலை அவர்களது அரசியல் நிலைப்பாடுகள் பற்றிய எந்த முன்னுரைகளும் இதுவரை வெளிப்படாமைக்கான காரணங்கள் என்ன?

    எல்லாமே தாம் சேர்த்துக்கொண்ட பணத்தையும் சொத்துக்களையும் காப்பாற்றும் பொருட்டாக நடத்தும் நாடகமேயாகும். இப்படியாக சில கூட்டங்களை சில குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை நடாத்தினால் தாம் புலிகள் அமைப்பு பற்றிய சலசலப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு காலத்தை கடத்திவிட்டு பின்னர் சொத்துக்கள் திருடிய பணத்தடன் மெதுவாக விலகிக் கொள்ளலாம் என்ற திட்டமே என்பது பல முன்னாள் புலிகளின் கருத்தாக உள்ளது.

    தமது இயக்கம் விட்ட தவறுகளையும் அரசியற் தவறுகளையும் விமர்சித்து தாம் (முன்னாள் புலிகள்:: 2009 மே மாத்தின் பின்னர் புலிகள் இயக்கத்தை தெடரமுடியாமல் இருக்கும் புலிகள் உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது) புதிய வழியில் செற்பட வேண்டும் என்ற கருத்துடன் உள்ள புலிகளின் கருத்தாகவும் உள்ளது. ஆனால் இவர்களுக்கும் சொத்துக்களையும் பணத்தையும் வைத்திருப்பவர்களுக்கும் என்றுமே தொடர்பு இருந்திருக்கவில்லை என்பதாகும் காரணம் இவர்கள் தாம் தமது தலைமை இருக்கும் என்ற நம்பிக்கையில் செயற்பட்டதேயாகும்.

    மொத்தத்தில் புலிகளால் தமிழ் மக்களின் போராட்டம் எல்லா தளங்களிலும் இனிமேல் போராட எழமுடியாத அளவு சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் இதனாலேயே பலர் புலிகள் தமிழர்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் என்கிறார்கள். இந்த தமிழர்கள் மீண்டும் தமது சொந்த உணர்வுகளுடன் சுயமரியாதையுடன் துணிவுடன் செயற்பட அரசு இடம்அளிக்காது என்பதே பலரின் அபிப்பிராயமாகும். ஆகவே இனிமேல் போராட்டம் என்பதைவிட சிங்கள மக்களுடன் கூட்டுறவு முறையில் தமது உரிமைப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கும்

    புலிகளும் புலி ஆதரவாளர்களும் சிங்கள மக்களைக் கூட தமிழர்களின் எதிரியாகவே பல தடவைகள் நடாத்தியுள்ளனர் (உதாரணம் புலம் பெயர்நாடுகளிலும் ஜபிசி யிலும் ஜிரிவி லும் செய்யப்பட்ட பிரச்சாரங்கள் பாராளுமன்றத்தின் முன் நடாத்தப்பட்ட கோசங்கள் வெளிப்படையானவைகள் இன்றும் பல புலிகளின் இணையத்தளத்தில் இவற்றைக் காணலாம்)

    கடந்த 30 வருட போராட்டத்தில் புலிகள் குறைந்த பட்சம் தமிழர்களின் போராட்ட நியாயத்தை சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறியிருக்கலாம்.

    மேல் உள்ள பிரிஎப் ன் கூட்டத்தில் நடைபெற்ற விடயங்களுக்கு வந்தால் பிரிஎப் என்றுமே ஜனநாயக கூட்டங்களை பார்த்து கேட்டு பழக்கப்பட்டவர்கள் அல்ல. இவர்கள் இராணுவ அமைப்பு போன்றே செயற்பட விரும்புபவர்கள். இந்த பிரிஎப் டன் கூட்டு சேர்ந்து செயற்பட்டவர்களின் பல கருத்துக்கள் இனி வருங்காலங்களில் புலிகளின் அனுபவங்கள் போன்று வெளிவரும் போது மேலும் விளக்கம் பெறமுடியும்.

    இங்கு கவனிக்க வேண்டியது “இந்த கூட்டங்களில் மாற்று இயக்கத்தவர்களோ அல்லது புலிகளால் துரோகிகள் என்று முத்திரையிடப்பட்டவர்களோ இங்கு வாதாட வரவில்லை”. இந்த பிரிஎப் அங்கத்தவர்கள் அல்லது புலிகளின் ஆதரவாளர்களே இவர்களுடன் விவாதிக்க வந்தனர். இவர்களை தமது ஆதரவாளர்களின் கருத்துக்கள் இவை மிக முக்கியமானவை என்றுகூட சிந்திக்கவில்லை. இவர்களிடம் யாரும் ஜனநாயகத்தை என்றுமே எதிர்பார்க்க முடியாது.

    இவர்களுக்கு ஜனநாயகம் என்பது அவசியமில்லை. சேர்த்த பணத்திற்கு இவர்கள் கணக்கு வழக்கு கேட்காமல் விட்டால் சரி அவ்வளவுதான். இவைபற்றி திட்டவட்டமாக இன்னும் சிலவருடங்களில் மக்களுக்கு தெரியவரும். அதுவரை இவர்கள் இப்படி கூட்டங்களை அங்கொன்று இங்கொன்றாக நடாத்துவார்கள். அவவளவுதான் பின்னர் இப்டி கேள்வி கேட்போர் சோர்ந்து விடுவர். சேர்த்த பணம் அவர்களுக்கே சொந்தமாகி விடும் என்பது பிரிஎப் டன் இணைந்து வேலை செய்த புலிகளின் ஆதரவாளர்களின் கருத்தாகவும் உள்ளது.

    உண்மையிலேயே பிரிஎப் உறுப்பினர்களிடம் அரசியல் ஜனநாயக அறிவு இல்லை என்பது வெளிப்படையான உண்மை இவர்கள் என்றுமே தமது புலி ஊடகங்கள் தவிர வேறு தமிழ் ஊடகங்களுக்கு பதில் அளிக்க வரமாட்டார்கள். வந்தாலும் தாம் அமைப்பு சார்பாக வரவில்லை தனிப்பட வந்தோம் என்பார்கள். அப்படி சன்ரைஸ் ரேடியோவுக்கு வந்த பிரிஎப் டாக்டர் இந்துவின் கருத்துக்களை மீள செவிமடுத்தால் விளங்கும் என்ற கருத்தும் உள்ளது.

    கடந்த போராட்டகாலங்களில் எத்தனை விவாதங்கள் கருத்தறியும் நிகழ்வுகளை புலிகளும் புலிகளின் ஆதரவு அமைப்புகளும் நடத்தியுள்ளது? இது ஒன்றே போதும் மக்களின் அபிப்பிராயங்களுக்கு இடம் அளிக்கப்படாத போராட்டம் ஒன்றை புலிகள் நடத்தியுள்ளனர் என்பதற்கு. மக்கள் வன்னியில் பசி பட்னியால் அழுது கொண்டிருந்த வேளையிலும், மக்களுக்கு உணவு சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்ட உணவு காசுக்கு விற்கப்பட்டுள்ளதும், காசு இல்லாதவர்களிடம் அவர்கள் தங்க நகைகளை பெற்றுக் கொண்டே உணவு வழங்கப்பட்டதும், சிலரின் வாகனங்களை வாங்கிக் கொண்டே உணவு வழங்கப்பட்டதும், இப்படி பறிக்கப்பட்ட தங்க நகைகளை இராணுவத்தினர் பல தடவைகள் பல இடங்களில் மீண்டுள்ளதும் நல்ல உதாரணங்களாகும்.

    அன்றும் இன்றும் இவர்கள் பணத்தின் பின்னாலே அன்றி மக்களுக்கான போராட்டத்திற்காக அல்ல இல்லை என்றால், வன்னியில் எப்படி 3 லொறி நிரம்பிய பணத்தை ஏன் வைத்திருந்தார்கள்? பின்னர் ஏன் அதை எரித்தார்கள்? என்று அகதி முகாம் மக்கள் கேட்கின்றனர்.

    இன்றும் மக்களின் உரிமைப்போராட்டம் பற்றி சிந்திக்கும் புலிப்போராளிகள், பிரிஎப் ன் உறுப்பினர்கள், தம்மை முழுமையாக விமர்சனம் செய்து மக்களுக்கான செயற்பாட்டாளர்களுடன் இயங்க வேண்டும் என்பதே எல்லோரினதும் கருத்தாக உள்ளது.

    இனி ஒரு கோரக் கொலை, வெள்ளை முள்ளி வாய்க்கால் வேண்டவே வேண்டாம்

    Reply
  • nadesh
    nadesh

    முந்தி தமிழீழம் வித்தமாதிரி இப்ப திறப்பு விக்கினம். கம்பி கூட்டுக்குள்ளை இருக்கற சனம் அதுக்குள்ளை இருக்கும்வரைதான் விற்கலாம். வில்லுங்கோ. வில்லுங்கோ.. அதுக்குப்பிறகு வேற ஏதாவது காரணம் சொல்லி வேற ஏதாவது விக்கலாம். திறப்பு முடிய செருப்பு எண்டாலும் விற்கலாம்தானே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //அப்படி சன்ரைஸ் ரேடியோவுக்கு வந்த பிரிஎப் டாக்டர் இந்துவின் கருத்துக்களை மீள செவிமடுத்தால் விளங்கும் என்ற கருத்தும் உள்ளது.- T Sothilingam //

    சன்ரைஸ் ரேடியோ என்றவுடன் பச்சோந்தித்தனம் தான் ஞாபகம் வந்தது. லண்டன்ரைம் வானொலியில் அப்பப்போ புலிகளை வாரி வந்த, சண்டை நடந்த காலங்களில் சன்ரைஸ் ரேடியோவில் பிரிததானியத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளை தாமாக தொடர்பு கொண்டு பேச வைத்ததுடன் தனது நிகழ்ச்சிகளுக்கு காசும் கேட்டனர். திடீரென புலிகளில் பாசமழை பொழிந்த புலிகளையோ, பிரித்தானியத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளையோ சன்ரைஸ் ரேடியோவில் விமர்சித்தவர்களை அவர்கள் போனபின் மிகவும் கேவலமாக விமர்சித்தார். இவரும் கமிசன் அடிப்படையில் இந்தப் போலியமைப்புகள் பணம் சேர்க்க உதவினார் என்ற குற்றச்சாட்டும் வெளிவந்தது. பிரித்தானியத் தமிழர் பேரவை சார்பாக அடிக்கடி சன்ரைஸ் ரேடியோவில் முருகானந்தம் என்பவரும் தயாசீலன் என்பவரும் அடிக்கடி கருத்துக் கூறிவந்தார்கள். இதில் தயாசீலன் என்பவர் பகுதி நேர அறிவிப்பாளராக லண்டன்ரைம் வானொலியில் கடமையாற்றியும் வந்தார். சன்ரைஸ் ரேடியோவில் புலிகளையோ, பிரித்தானியத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளையோ விமர்சித்தவர்களை வானொலியிலேயே மிரட்டவும் செய்தார்.

    Reply
  • Kanna
    Kanna

    உங்களைத் திருத்தவே முடியாது.நீங்களும் செய்யமாட்டீர்கள் செய்பவர்களையும் செய்யவிடமாட்டீர்கள். ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன்.. சிங்களவன் சிங்களதேசம் கேட்டிருந்தால் பெற்றிருப்பான். ஏன் தெரியுமா அவ்வளவு ஒற்றுமை. ஆனால் தமிழனோ கலைவாருவதையே குலத்தொழிலாக வைத்துள்ளான், அதுவும் தேசம்நொட் அதற்கு சில காமெண்ட் என ஒரு கூட்டம் குட்டையைக் குழப்ப இருக்குது.

    இவ்வளவு கதைக்கிறீர்களே நீங்கள் பேய்போராடி இருக்கலாமே? எப்ப முளைச்சனீங்கள் . குறை கூறுவதை விடுத்து ஒன்றாகச் செயல்பட நினையுங்கள்.

    கண்ணன்

    Reply
  • gobi
    gobi

    கண்ணன் சிங்களவன் சிங்கள தேசத்தில்தான் இருக்கிறான். பிறகு எதுக்கு சிங்களதேசம்? தமிழன் தான் ஒற்றுமையில்லாதத்தால் உலகமெல்லாம் இருக்கிறான்.
    மற்றது எப்ப முளைச்ச ஆட்கள் போராடலாம் அல்லது கதைக்கலாம் என்பதை சொல்லுவீங்களா?

    Reply
  • palli
    palli

    இதில் கருத்து எழுதிய நபர் அந்த கூட்டத்துக்கு தான் தனிநபராக சென்றாரா? அல்லது தேசம் சார்பாய் பல்லி போல் விடுப்பு பார்க்க போனாரா? இதை கட்டுரையாளர் புரிய வைக்க வேண்டும்; அடுத்து யார் அந்த பிரபாவின் பொய் பாதுகாவலர்? ஏன் அவரது பெயர் மறைக்கபடுகிறது? இதுக்கு முன்பும் புலியாலும் புலியற்ற புலியாலும் தேசம் நண்பர்கள் கூட்டங்களில் அவமானபட்டும், வார்த்தைகளால் தாக்கபட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறது, (தேசம் என்றாலே பலருக்கு இப்போது பன்றிகாச்சலை விடபயம்)

    கட்டுரையாளர் பின்னோட்டத்தில் கலந்து கொள்வது சில புலம்பெயர் மிருகங்களை அம்பலபடுத்த வசதியாக இருக்கும்; (பல்லியை இந்த இடத்துக்கு அழைத்து செல்லபடாதா) இத்தனைக்கும் எமக்கு பதில் கிடைக்கும்போது ஜீவாவுக்கு நாம் பதில் சொல்ல வேண்டி இருக்காது, இருப்பினும் ஜீவாவின் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாய் பல்லி பதில் சொல்லுகிறேன்; ஆனால் ஜீவா 30 வருடமாய் சதிராடிய புலியிடம் எந்த தீர்வை பற்றியும் கேளாது சில மாதங்களே தவறுகளை சுட்டிகாட்டும் தேசத்திடம் உங்கள் தீர்வு என்ன என கேப்பது அவர் தேசத்திடம் இருந்து இந்த மக்களுக்கு ஒரு யதார்த்தமான தீர்வு கிடைக்காதா? என்னும் ஆதங்கமே, ஆனால் தீர்வு சொல்ல தேசத்தில் பலர் இருந்தாலும் அந்த தீர்வுகளை ஏற்றுகொள்ளும் மனநிலையிலோ அல்லது வாழ்விலோ அந்த அப்பாவி மக்கள் இல்லை என்பதை தேசம் அறியும்; அதனால்தான் தீர்வைவிட அவர்களது உடனடி தேவைகளை பூர்த்தி செய்யகூடிய விடயங்களில் தேசம்(சிறு உதவி) முனைகிறது, அதில் ஜீவாவும் இனைந்து உதவி அடுத்து என்ன செய்யலாம் என கட்டுரை எழுதலாம், அந்த தேச மக்களுக்காக இந்த தேசத்தில் விவாதிப்போம் செயல்படுவோம்,

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //உங்களைத் திருத்தவே முடியாது.நீங்களும் செய்யமாட்டீர்கள் செய்பவர்களையும் செய்யவிடமாட்டீர்கள்.- kanna //

    இன்றுவரை போராட்டமென்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி பணச் சுருட்டல்களை நடாத்தியும், அந்த வன்னி மக்களிடம் இருந்ததையும் பறித்து அநாதைகளாக்கி பிச்சைக்காரர்களாக்கி சிங்கள அரசின் காலடியில் போட்ட செயற்பாடுகளின் பின்னாலும், உங்களைப் போன்றவர்கள் இன்னும் திருந்தாது ஊரை ஏமாற்றிப் பிழைப்பவர்களுக்கே வக்காலத்து வாங்குவதை என்ன சொல்ல!!!!

    Reply
  • jeeva
    jeeva

    நன்றி பல்லி,
    நான் தேசத்திடம் தீர்வைக் கேட்கவில்லை, மாறாக பிரித்தானிய தமிழர் பேரவையின் நிகழ்வுக்குச் சென்று அங்கு வந்த மாற்றுத்திட்டக்காரருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என கூறும் கட்டுரையாளரிடம் கேட்டேன். அதுவும் கட்டுரையாளர் அம்மாற்றுத்திட்டக்காரரிடம் வெளியில் வந்தோ அன்றி பின்னர் தொடர்புகொண்டோ கேட்டு எழுதியிருக்கலாமே எனத்தான் கேட்டேன். தேசம் ஒரு கருத்தாடலுக்கான களம் அன்றி கருத்துக்கு சொந்தக்காரர் இல்லை என்பது நான் அறியாததல்ல. நீங்கள் சொன்னதுபோல கட்டுரையாளர் பின்னூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறைதான். இதை எனது பின்னூட்டத்தில் தேசத்துக்கு தெரிவித்திருந்தேன்.

    பல்லி உங்கள் ஆதங்கத்தின் அடிப்படையில் தவறுள்ளதாகவே கருதுகிறேன். ‘சதிராட்டம்’ ஆடிய புலி தீர்வு தமிழீழமே என எத்தனையோ முறை சொல்லிவிட்டது! அது பிழை என கூறிய மாற்றுக்கருத்தாளர்கள் பிழை..பிழை எனச் சொன்னார்களே அன்றி மாற்றாக என்ன வைத்திருந்தனர்? 30 வருடமாக அவர்களும் மாற்றுக்கருத்து ‘கரகம்’ ஆடினர் என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்களா? இப்போது கேட்டால் என்ன அவசரம் என்கிறார்கள்! 30 வருடமாக அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்ள எனக்கு வருத்தமில்லை!

    தீர்வுகளுடன் பலர் இருந்தும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை என கவலைப்படுகிறீர்கள். ஏன் என விளக்கமாகச் சொல்லுவீர்களா? சும்மா மக்கள் தயாரில்லை என ஏன் சொல்லவேண்டும்?

    என்னை ‘சிறு உதவி’ யில் இணையச்சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. ஆனால் இங்கே இக்கட்டுரையில் பி.ரி.எஃப் ஐக் குற்றம் சாட்டியோர் பதிலிறுக்க வேண்டுமல்லவா? அதை விடுத்து வேறுவழிகளில் விவாதத்தினை மாற்ற வேண்டாம்.

    Reply
  • yoganathan
    yoganathan

    ஒற்றை வரிகளில் ஆளாளுக்கு தமது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப 10 பொயின்ரில் நோட்டீஸ் விடுவதை எல்லாம் மாற்றுத்திட்டம் என்கின்றனர்.//
    ஜீவா இது எங்கே உள்ளது. தயவுசெய்து அறியத்தரவும்.

    Reply
  • nadesh
    nadesh

    30 வருஷமாக புலிப் பயங்கரவாதிகள் தங்கட கரகாட்டத்துக்கு இசைந்துபோன ஆட்களைத்தவிர மற்றவை எல்லாரையும் மாற்றுக் கருத்தாளர் எண்டு பெயர்சூட்டி போட்டுத்தள்ளின வேலைதான் பார்த்தது. அதுக்கு புலி வைத்த பெயர்தான் தமிழீழப் போராட்டம். அந்தவழி வந்த கருணா பிள்ளையானும் சரி இப்ப காம்பினுள் காட்டிக்குடுக்கிற வேலை செய்யும் புலிகளும் சரி அதைத்தான் செய்யினம். இவையை குருவாய்க் கொண்ட புலத்துப்புலி வித்தியாசமாயோ நடக்கப் போகுது.

    Reply
  • visuvan
    visuvan

    தம்பி கண்ணன் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த போது இருந்த அனைத்து இயக்கங்களையும் அடித்து கலைத்தது யார்? எங்களை எல்லாம் கலைச்சுப்போட்டு இப்ப உணர்ச்சிவசப்பட்டு பிரியொசனம் இல்லை. புதுக்குடியிரப்பு முற்றுகையில் புலிகள் மாட்டியிருக்கையில் புலிகளின் தளபதி ஒருவர் புளட் தலைவர் சித்தாவுடன் தொடர்புகொண்டு ஒரு பற்றாலியன் அனுப்பி வைக்க முடியுமா என கேட்டாராம். அதற்கு சித்தா இருந்த எல்லா பற்றாலியனையும் நீங்கள் போட்டுத்தள்ளி விட்டீங்கள். இஞ்சை ஒரு பத்துப்பேர் இஞ்சை குப்பை கொட்டிறம். என்று நகைச்சுவை உணர்வுடன் பதிலளித்தாராம். இந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் உமாவின் உத்தரவின் பேரில் ஒரு பற்றாலியன் புலிகளை முள்ளியவளை முற்றுகையில் காப்பற்றியிருந்தனர். நடந்து 2 மாத காலத்துள் காப்பாற்றிய பற்றாலியனை மாத்தைய அழைத்து பேசினார். பேசி முடிந்து பேகையில் கருணா அவரகளை போட்டுத்தள்ளனார்.

    கண்ணா உள்ள எல்லா இயக்கங்களையும் போராடவிடாது போட்டுத்தள்ளிய நீஙகள் அன்று நம்மை போட்டுத் தள்ளியிருக்காவிட்டால் யாராவது ஒரு இயக்கமாவது வந்து காப்பற்றியிருக்குமல்லவா?

    இனி நீங்கள் கொஞ்சம் பேசாதிருப்பது தான் நல்லது.

    Reply
  • palli
    palli

    தமிழீழம் என்பது தமிழ் மக்கள் தீர்வல்ல; புலியமைப்பினது தீர்வு என வேண்டுமென்றால் சொல்லலாம்; அதுகூட பல பேச்சுவார்த்தையில் தமிழ் செல்வன் பாலசிங்கம் ஆகியோர் சமஸ்ற்றி கந்தஸட்டி ஒற்றையாட்ச்சி தனியாட்ச்சி என படம்காட்டியது ஜீவா அறியாதது மனவருத்தம்தான்;

    //தீர்வுகளுடன் பலர் இருந்தும் தீர்வுகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை என கவலைப்படுகிறீர்கள். ஏன் என விளக்கமாகச் சொல்லுவீர்களா? சும்மா மக்கள் தயாரில்லை என ஏன் சொல்லவேண்டும்//

    இதுதான் எமக்கு உள்ள பெரிய பிரச்சனை;
    மக்களை பற்றி கவலைபடாமல் தமது நிலையை அமைப்புகள் மக்கள் மீது திணிப்பது; மக்களுக்காகதான் தீர்வு வேண்டும்; தீர்வுக்காக மக்களை தயார்படுத்த முற்படகூடாது;

    Reply
  • jeeva
    jeeva

    //தமிழீழம் என்பது தமிழ் மக்கள் தீர்வல்ல//
    1977 தேர்தலுக்கு வாக்களித்தமக்கள் எதற்கு வாக்களித்தனர்? அதன் பின்னர் மாற்றுத்தீர்வை வைத்து எந்த தேர்தலும் நடக்கவில்லை!
    நீங்கள் சொன்னது போல புலிகள் படங்காட்டி இருப்பின் அவர்கள் செய்தது சரியானதே. வெறும் படம் காட்டினரே அன்றி தமது குறிக்கோளில் இருந்து மாறவில்லை!

    //மக்களை பற்றி கவலைபடாமல் தமது நிலையை அமைப்புகள் மக்கள் மீது திணிப்பது; //
    கடைசித்தேர்தலில் ஏன் தோற்றொம் என மாற்றுத்திட்ட காரரான சித்தார்த்தனும் சங்கரியரும் கருத்துச் சொல்லி இருக்கிறர்களே அறியவில்லையா? எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் (80%) வாக்க்களிக்கவே செல்லவில்லை!

    இதோ மாற்றுத்திட்டக்காரருக்கு ஒரு பந்தயம்! உங்கள் மாற்றுத்திட்டத்தையும் அவற்றை எவ்வாறு அடைவீர்கள் எனவும் ஈழமக்களின் முன் வையுங்கள். சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் முன்னிலையி ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்துவோம். தயாரா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் (80%) வாக்க்களிக்கவே செல்லவில்லை!- jeeva //

    உங்களுக்குள்ள பிரைச்சினையே இது தான். எந்தத் தகவலையும் மேலோட்டமாக அறிந்து கொண்டு கருத்தெழுதுகின்றீர்கள். யாழ்ப்பாணத்தில் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் கொடுக்கப்பட்ட முகவரிகளில் சம்மந்தப்பட்டவர்கள் இல்லாததால் விநியோகிக்கப்படவில்லை. விநியோகிப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் வாக்களித்துள்ளார்கள்.

    அதுபோல் வவுனியாவில் நடந்த தேர்தலில் கூட்டடைப்பு புளொட்டை நூற்றுச் சொச்ச வாக்குகளே அதிகம் பெற்றிருந்தனர். கூட்டமைப்பை தவிர்த்து ஏனைய கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளைப் பார்த்தால் கூட்டமைப்பிற்கு எதிராக விழுந்த வாக்குகளே அதிகம். அதிலிருந்தே தங்களுக்குப் புரியவில்லையா வன்னி மக்கள் கூட தமிழீழத்தை ஆதரிக்க விரும்பவில்லையென்பதை. இன்று அவர்களே ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒர கண்ணியமான தீர்வு கிடைத்தாலே போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். அவ்வளவிற்கு புலிகளாலேயே போதுமான கொடுமைகளை அனுபவித்து விட்டார்கள். இந்த இலட்சணத்தில் நீங்கள் இன்னும் புலிகளுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய நிலையில், ஏன் இருக்கின்றீர்கள் என்பதும் புரிகின்றது.

    Reply
  • jeeva
    jeeva

    கண்ணியமான தீர்வு எனச் சொல்லும் நீங்கள் அது என்ன, அதை எவ்வகையில் அடையலாம் என்பது பற்றிய திட்டத்தைத்தானே கேட்கிறார்கள். எடுத்து விடுங்கள், ஏன் இன்னும் மறைத்து வைத்திருக்கிறீர்கள்? புலிசெத்துப்போச்சு என்கிறீர்கள் இன்னும் ஏன் புலியளை இழுக்கிறீர்கள்?

    கட்டுரையாளர் எழுதியவர்கூட ஒழித்து விளையாடுகிறார்!

    Reply
  • palli
    palli

    ஜீவா தங்களுக்கு பல்லி நட்புடன் பதில் சொல்லவே விரும்பினேன்; ஆனால் நீங்களோ இல்லை பல்லியின் பாணியில் பதில் சொல்லும்படி பல்லியை வம்புக்கு இழுக்கிறியள்; உங்கள் கேள்விக்கு பதில் தெரியாத பாமரன் அல்ல பல்லி, தேவாரம் பாடாமல் திருபுகழ் பாட தாங்கள் துடிப்பது சரியல்ல ,திரும்பவும் தங்களுக்காக பல்லியின் கடந்து போன பின்னோட்டம், கவனியுங்கள்,
    //தமிழீழம் என்பது தமிழ் மக்கள் தீர்வல்ல; புலியமைப்பினது தீர்வு என வேண்டுமென்றால் சொல்லலாம்; அதுகூட பல பேச்சுவார்த்தையில் தமிழ் செல்வன் பாலசிங்கம் ஆகியோர் சமஸ்ற்றி கந்தஸட்டி ஒற்றையாட்ச்சி தனியாட்ச்சி என படம்காட்டியது ஜீவா அறியாதது மனவருத்தம்தான்; //

    இது பல்லியின் பின்னோட்டம்; அதை விட்டு உங்களுக்கு தெரிந்த பதிலுக்கான கேள்வியை தெரிவு செய்து பின்னோட்டம் இடுவது வேடிக்கை,

    ஜீவா உடுப்பில்லாமல் இருப்பவனுக்கு கோமணத்தின் அருமை தெரியாது அதுபோல் புலியின் நிலை தெரியாது சவால் விடும் உங்களை எப்படி சமாதான படுத்துவது, நான் மக்கள் பற்றி சிந்திக்கிறேன்; நீங்களோ அதே மக்களை வைத்து சூது ஆட என்னை அழைப்பது ;;;;;;;;;;; இப்படிதான் இருக்கு;
    ஜீவா நீங்க கூறும் மக்கள் ஓட்டு போட்டு தெரிவு செய்த கூடமைப்பே இன்று புலியின் தவறான செயலை எம்மிடமல்ல அரசிடம் சொல்லி தலைகுனிகிறது;

    // சித்தார்த்தனும் சங்கரியரும் கருத்துச் சொல்லி இருக்கிறர்களே அறியவில்லையா?//
    கவனித்தோம் அதுக்கான பின்னோட்டமும் இதே தேசத்தில் தூக்கத்தை இழந்து எழுதியும் உள்ளோம்; ஆனால் தோழரின் பேட்டியை தாங்கள் கவனிக்காதது ஏனோ, கூட்டமைப்பு வடக்கே ஒரு கூட்டம் கூட போட முடியாத நிலைக்கு காரணம் தோழரெனில்; தோழர் புலியை விட பலம் வாய்ந்தவரா?

    Reply
  • மாயா
    மாயா

    // புலிசெத்துப்போச்சு என்கிறீர்கள் இன்னும் ஏன் புலியளை இழுக்கிறீர்கள்? – jeeva //

    புலிகளும் , புலி பினாமிகளும் பல தசாப்தங்களுக்கு முன் எழுதிய மகாவம்சத்தையும் , கறுப்பு ஜுலையையும் பேசி அரசியல் நடத்தியதை கண்டு கொள்ளதவர்கள், நேற்று செத்தவர்களை ஏன் இழுக்கிறியள் என்பது வேடிக்கையானது.

    இறந்த காலத்தை வைத்துத்தான் எதிர் காலத்தை உங்களால் நிர்ணயிக்கலாம் என்றால், ஏனையவர்களும் அதைத்தான் செய்கிறார்கள். அதை ஜீரணிக்க வேண்டியது சிலரது விதி. இதிலிருந்துதான் நாளைய இலங்கை தமிழன் வாழ்வு உயரும். இல்லாவிடில் இருப்போரும் அழிவை நோக்கியே தள்ளப்படுவர்.

    Reply
  • palli
    palli

    //கண்ணியமான தீர்வு எனச் சொல்லும் நீங்கள் அது என்ன, அதை எவ்வகையில் அடையலாம் என்பது பற்றிய திட்டத்தைத்தானே கேட்கிறார்கள். எடுத்து விடுங்கள், ஏன் இன்னும் மறைத்து வைத்திருக்கிறீர்கள்? புலிசெத்துப்போச்சு என்கிறீர்கள் இன்னும் ஏன் புலியளை இழுக்கிறீர்கள்//

    எடுத்து விட இதுவென்ன ரத்தினதுரையின் எழிச்சி கானங்களா??
    மக்கள் வாழ்க்கை; அவர்கள் முன்பு தமது சொந்த இடத்தில் தாமாக இருக்கட்டும் (பலகாலம் புலியின் திறந்தவெளி சிறையில் பின்பு சிங்கத்தின் அடைத்த பிரதேசத்தில் இப்போது சிலர் மட்டும் உறவின் பராமரிப்பில் மிகுதி கூட்டில்தான் இதுவரை)ஆக அவர்கள் மனிதர்களாக சுவாசிக்கட்டும் அதன்பின் அவர்கள் பிறந்த வீடா புகுந்த வீடா என முடிவு செய்வார்கள் அப்போது அதுக்கான உதவிகளை (அது நிதியாக இருக்கலாம்; அல்லது எழுத்தாக இருக்கலாம், ஏன் யோசனைகளாக கூட இருக்கலாம்) அதுவரை நாம் அவர்கள் தமது காத்தை சுவாசிக்கவே செயல்பட வேண்டும் செயல்படுகிறோம் ஆக எடுத்து விடும்போது தவறாமல் கேழுங்கள்;

    ஏன் மறைத்து வைத்திருக்கிறியள், /
    ஜீவா இது ஒன்றும் ஈழவிமானபடையின் குட்டி ஜெற்(விமானம்) அல்ல பங்கரில் ஒழித்து வைக்க, பேசும்போது பேசாமல் இருப்பதும்; பேசாமல் இருக்க வேண்டிய நேரத்தில் பேசுவதும் சரியான போக்கல்ல என்பது பார்த்திபனுக்கு நன்றாகவே தெரியும்,(கவனிக்கவும் அவரது தகவல்களை) இப்ப புரிய வேண்டுமே ஏன் மறைத்து வைத்திருக்கோமென;

    செத்துபோனதை ஏன் திரும்பவும் வம்புக்கு அழைக்கிறியள்/ இது ஜீவாவின் கவலை,
    இறப்பென்பது உயிர் போவது மட்டும்தானா? புலிக்கு தலமை யார் என்பதை சொல்லகூட பயமாக இருக்கும்போது புலி அழிந்தால் என்ன இருந்தால் என்ன, ஆனால் அவர்களால் எனி செயல்பட முடியாது என்பது உன்மைதானே? வேண்டுமானால் தேசியத்தை விட்டுவிட்டு தேசிய தொலைக்காட்ச்சியை தொடரலாம்; அதுதான் அவர்கள் தற்ப்போது செய்கின்றனர்;

    ஏன் இழுக்கிறியள். /
    இது என்ன வம்பாய் போச்சு. நாம் தவறுகளை சுட்டிகாட்டுகிறோம். அதில் கேபி, உருத்திர; அவர்கள் ,இவர்கள் மட்டுமல்ல சங்கரி இருந்து பிள்ளையான் வரை விமர்சிக்கிறோம், ஆனால் சிலரை விமர்சித்தால் ஜீவா போல் பலர் வந்து மல்லுக்கு நிற்ப்பதால் புலி அழிந்தாலும் புழி கரையவில்லை என்பது யதார்த்தமாக தெரிகிறது, இவர்கள் பேச்சு திரும்பவும் தமிழருக்கு அடிவாங்கி தந்துவிடுமோ என நாம் சிந்திப்பதால் அதை நேரடியாக எழுதுகிறோம்; உதாரனத்துக்கு ஒரு விடயம்; GTV பிறேம் என நினைக்கிறேன் ஒரு ஆய்வில் சொல்லுகிறார் பிரான்ஸ் லண்டனுடன் நூற்றாண்டு காலத்துக்கு மேல் போரிட்டது; அதில் வெற்றியும் கொண்டது அதனால் எமது போராட்ட 30 வருடமெல்லாம் ஒரு காலம் அல்ல என; பிராண்ஸ்க்கும் லண்டனுக்கும் நடந்த போரில் பிரான்ஸ் சகோதர யுத்தம் செய்யவில்லை தமது நாட்டு பொருளாதாரத்தை அழிக்கவில்லை; அதையும் விட திறமைசாலிகளுக்கு முன்னுரிமை வழங்கபட்டது, ஒரு வயது குறைந்த பெண்மனியின் யோசனையின்படி நடந்த போரே லண்டனை பிரான்ஸ் வெற்றி கொண்டதாக சொல்லுகிறார்கள்; ஆனால் எமது நாட்டில் 39 இயக்கம் அதையும் விட அவைக்கு உதவ புலம்பெயரில் கணக்கற்ற அமைப்புகள் இவை யாவும் சிந்திக்க தெரியாத புண்ணாக்குகள் ஆய்வு செய்தால் இப்படிதான் பெற்றோலுக்கு பதிலாய் பெருச்சாளி வரும் ; ஆக நாங்கள் இப்போது புலிகளைவிட புழிகளை விமர்சிப்பது மிகஅவசியம் ஜீவா, எமது கருத்தில் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கிறோம், ஆனால் நாம் தவறுகளை விமர்சிப்பதாலும் அதில் தாம் சார்ந்தவர்கள் பாதிக்கபடுவதாலும் எம்மை புறம் பேசாதீர்கள்; பல்லியின் விமர்சனம் புலிக்கு எதிரானதல்ல தேசத்துக்கும் எதிராக எழுதுவேன் இந்த தேசம் அந்த தேச மக்களுக்காக செயல்படும் போது,
    தொடரும் பல்லி;

    Reply
  • Jeeva
    Jeeva

    பீ.ரி.எஃப் மீற்றிங் இல் மாற்றுத்திட்டம் இருக்கு என கூட்டத்தினர் முன்னால் வெளியேறினவர்கள் வெளியில வந்து சொன்ன மாற்றுத் திட்டத்தையாதல் கேட்டு எழுதுங்கோ எனத்தானே கேட்கிறேன்!

    பல்லி முக்கியமான ஒருவிடயம். இக்கட்டுரை பீ.ரி.எஃப் ஐயும் அக்கூட்டத்தில் இருந்து வெளியேறியவர்களின் ஆதங்கமும் பற்றியது. அவர்களின் மாற்றுத் திட்டத்தினை சொல்வதற்கு வாய்ப்பளிக்க மறுத்த ஜனநாயக மீறலை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டினையும் உடையது. அவ்வாதங்கத்தினை வெளிப்படுத்த தேசம் வழிசமைத்துக் கொடுத்தது பாராட்டப்பட வேண்டியது.

    அதேபோல இங்கு பதிலளிக்க வேண்டிய தர்மீகக்கடமையும் கட்டுரையாளருக்கு உண்டு. ஆனால் ஆளையே காணோம்! அனானியாக எழுதிய அவர் தேசத்திடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டும் உள்ளார். அதுபற்றி விளக்கம் சொல்லாதிருப்பது நல்ல விவாதப்பண்பாகாது.நீங்கள் அறியாததல்ல.

    Reply
  • Jeeva
    Jeeva

    பிரான்ஸ்/இங்கிலாந்துப் போரில் சகோதரயுத்தம்/பொருளாதார அழிவு இல்லையா? இப்போரில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று பிரான்சில் கூலிப்படைகள்போன்றியங்கிய ராணுவத்தினர் கொள்ளைகளில் கொலைகளில் ஈடுபட்டனர் என்பது. மேலும் இப்போர் பிரான்ஸின் சனத்தொகையை 1/3பங்காக்கிய பெருமையும் கொண்டது. இங்கிலாந்தில் கோஷ்டிகோஷ்டியாக பிரிந்த மக்கள் அரச அதிகாரிகளைக் கொலை செய்து அவர்களின் வீடுகளையும் அலுவலகங்களையும் கொழுத்தினர். இங்கிலாந்து வெறும் தீவாக தனிமைப்படுத்தப்பட்டது. இப்பொருளாதார அழிவே இங்கிலாந்தினை காலானிய தேடலுக்கு தள்ளியது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடல்வழி சென்று பொருளாதாரத்தை ஈடுகொடுக்க தூண்டியது. 1937 இல் ஆரம்பித்து 100 வருடம் நடந்த யுத்தத்தினை ஒருவரியில் விளக்குதல் நல்லதல்ல. இவ்வாறே ரஷ்யப்புரட்சி சீனப்புரட்சி பற்றி எமக்கு கொள்கை வகுப்புகள் நடாத்தப்பட்டன. இப்போது பார்த்தால் ரஷ்யா, சீனாவில் நடக்காத அட்டூழியமே அகராதியில் இல்லை எனலாம். அதேபோலத்தான் இந்திய சுதந்திரப்போரில் ‘அகிம்சை’ என்றார்கள். போர்முடிந்து காந்தி மரணிக்க முன்னர் பிரிவினையின் போது நடந்ததை கேட்டால் கப்சிப்!

    மேலும் பிரான்ஸ்/இங்கிலாந்து யுத்தம் பற்றி விவாதிக்கலாம் ஆனால் தலைப்பு பீ.ரி.எஃப் மற்றும் மாற்றுத்திட்டம் பற்றியது!

    Reply
  • Thaksan
    Thaksan

    புளொட்டிடம் புலிகள் தலைமை புதுக்குடியிருப்புக்கு பற்றாலியனை அனுப்ப கோரியதாக அறியவில்லை. ஆனால் இந்திய அனுசரணையை பெற்றுத்தருமாறு புலிகள் தலைமை மே 08 க்கு பின்னர் நேரடியாகவே கேட்டுக் கொண்டதாகவும் புளொட் அதற்கு முயற்சித்ததாகவும் அப்போது இந்தியாவிலிருந்த தேர்தல் நிலைமைகளால் அதற்கு சார்பான பதில்கள் கிடைக்கவில்லையென்பதும் நம்பகமான தகவல். ஜனவரி தொடக்கத்தில் புலிகள் இந்த கோரிக்கையை விடுத்திருந்தால் இந்தியா மாற்றுவழி எதையேனும் ஏற்படுத்தியிருக்க நிறைய வாய்ப்பிருந்ததாக தெரிகிறது. ஆயினும் பெப்ரவரி இறுதி – மார்ச் தொடக்கத்தில் ப.சிதம்பரம் தலைமையில் (கனிமொழி உட்பட)தயாரிக்கப்பட்ட (நிபந்தனைக்களுக்குட்பட்ட)இணக்கப்பாட்டிற்கு பிரபாவை சம்மதிக்க வைக்காமல் தேர்தல் முடிவுகள் வரும்வரை தாக்குப்பிடிக்குமாறு அறிவுறுத்தி பேரழிவு ஏற்பட பிரதான காரணகர்த்தாக்கள் வை.கோவும் த.பாண்டியனுமே என ஆளுமையுள்ள தமிழக வட்டாரங்கள் தெரிவித்திருந்ததாம். ஆயினும் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்குள் முடிந்தளவு புலிகளை அழித்துவிடுமாறு இந்திய புலனாய்வு துறைகள் இலங்கையரசிற்கு ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கியிருந்தனவாம். எண்ணப்பட்டுக் கொண்டிருந்த இறுதி நாட்களில் அமெரிக்காவின் தலையீடு தலை காக்குமென புலம்பெயர் புலி முக்கியஸ்தர்களும் முள்ளிவாய்காலுக்கு தகவல் அனுப்பிக் கொண்டேயிருந்துள்ளனர். ஆனாலும் இயற்கையின் பொறுமைக்கு அதற்கு மேல் இடமிருக்கமில்லை.

    Reply
  • palli
    palli

    ஜீவா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நீங்கள் சப்பிட்டவர்க்கு பழம் கொடுக்க அவதிபடுறியள்; பல்லியோ பசியில் இருப்பவருக்கு பசி போக்க ஏதாவது செய்ய முடியாதா என கலங்குகிறேன்; முடிந்தவரை எனது எண்ணத்தை செயல்படுத்த முயற்ச்சிப்பேன்; அதுபோல் உங்கள் தவறை
    சுட்டி காட்டுவேன்; நட்புடன் நட்புடன்;

    Reply
  • palli
    palli

    ஜீவா தாங்கள் சொல்வதில் நியாம் இருக்கலாம். ஆனால் பல்லி விவாதத்தை திசை திருப்பவில்லை. அது எனது பணியும் அல்ல, பல்லி கட்டுரையாளனின் வக்கிலும் அல்ல; ஆனால் இப்படி வெளிநாட்டு யுத்தங்களை சொல்லி சில கோமாளிகள் மக்களை ஏமாளிகள் ஆக்கி தாம் சுக வாழ்வு வாழ நினைக்கிறார்கள், அதைதான் தரணம் கிடைக்கும் போதெல்லாம் சுட்டி காட்டுகிறேன், ரஸியா; சீனா பற்றி தாங்கள் சொல்லிய விடயத்தில் பல்லி முழுமையாக உடன்படுகிறேன்: அதனால்தான் சொல்லுகிறேன் புத்தகங்களை படித்துவிட்டு வட்டமேசையில் நாலு தண்ணீர் போத்தலை வைத்து சுற்றி இருந்து கோலம் போடுவதல்ல எம்மக்களுக்கு தீர்வு, இதுவரை நடந்த நடக்கின்ற ஏதோ ஒரு ஆட்டத்தை அனுபவமாக கொண்டு அந்த மக்களும் மனிதர்களாக வாழ அவர்கள் விருப்பம் அறிந்து அவர்களுக்கு உதவவேண்டும் என்பதுதான் என் எழுத்து; நாம் அவர்கள் வாழ்வுக்கோ அல்லது தீர்வுக்கோ ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர தீர்வு திட்டத்தின் ஆக்கிரமிப்பாளர்களாக இருக்ககூடாது என்பதுவே பல்லியின் நோக்கம்;

    ஜீவா இந்த கட்டுரை பற்றி எனது முதல் பின்னோட்டத்தை கவனிக்கவும்; அதில் கட்டுரையாளரை சில வினாக்கள் தொடுதபின்பே
    பின்னோட்டத்தை தொடர்ந்தேன்; கட்டுரையாளர்கள் பின்னோட்டத்தில் கலந்து கொள்வதால் அவர் எதை எண்ணி கட்டுரை எழுதினாரோ அந்த திசைநோக்கி பின்னோட்டங்கள் செல்ல இலகுவாக இருக்கும். இதுக்கு ஜெயபாலன், குலன்; நக்கீரன்; சோதி, இப்படி சிலரது கட்டுரையை பார்க்கலாம், இவர்கள் கட்டுரையாளரிடம் வரும் வினாக்களுக்கு விடைகொடுக்க தவறுவதில்லை; ஆனால் சிலர் கட்டுரை மட்டும் நீளமாக இருக்கும் விளக்கம் இருக்காது; இதுக்கு உதாரணமாய் ரவியின் கட்டுரை பாகங்களை கவனிக்கலாம், முதல் பாகமே புரியாதபோது இதில் நாலாவது பாகம் வெற்றிநடை போடுகிறது; நான் சிலவேளை சிந்திப்பதுண்டு இப்படிதான் உலக வரலாறுகள் புனைய பட்டிருக்குமா என; ஆகவே எந்த பிரச்சனையென்றாலும் விவாதிப்போம்; தெரிந்ததை எழுதுவோம்: தெரியாததை தெரிந்து கொள்வோம்.
    தொடரும் பல்லி….

    Reply
  • jeeva
    jeeva

    பல்லி,
    இங்கே விவாதம் எனக்கும், உங்களுக்கும் தேசத்துக்கும் இடையில் அல்ல. எனது கேள்வி எல்லாம் எங்கே மாற்றுத்திட்டம் அதனை வெளிவிடுவதில் என்ன தயக்கம் என்பது தான். அக்கேள்விகளுக்கெல்லாம் எனக்குக் கிடைக்கும் பதில்கள் ஏமற்றமானவையே. போகிறபோக்கில் ‘தர்ம அடி’ மாதிரியான பதில்களே. 25 வருடமாக ஒரு மாற்றுத்திட்டம் தன்னிலும் இல்லை என ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. மாற்றுத்திட்டம் எங்கே எனக்கேட்டால் அகதி முகாம் என்கின்றனர். 120 நாட்களுக்கு முன்னர் வந்த அகதி முகாமைக்காட்டி 25 வருடமாக வைத்திருக்கும் மாற்றுத்திட்டத்தினை வெளியிட மறுக்கலாமா? இந்த அகதி முகாம் வர முன்னரும் கேட்டார்களே? இங்கே தேசத்திலேயே கேட்டார்களே? அன்றும் சொல்லவில்லைத்தானே.
    திட்டத்தையே வெளியிட முடியாதவர்களிடம் அடையும் வழியை வேறு கேட்டு காலத்தை வீணாக்குகிறேனோ என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது.

    இன்னொருவிடயம் ’…ஆனால் இப்படி வெளிநாட்டு யுத்தங்களை சொல்லி சில கோமாளிகள் மக்களை ஏமாளிகள் ஆக்கி தாம் சுக வாழ்வு வாழ நினைக்கிறார்கள்..’ எனச் சொன்ன நீங்கள் கோமாளிகள் ஆக்கப்பட்ட மக்களை ‘..பிராண்ஸ்க்கும் லண்டனுக்கும் நடந்த போரில் பிரான்ஸ் சகோதர யுத்தம் செய்யவில்லை தமது நாட்டு பொருளாதாரத்தை அழிக்கவில்லை; …’ எனச் சொல்லி இன்னும் ஏமாளிகள் ஆக்கவும் கூடாதல்லவா? அதற்காகவே நான் பிரான்ஸ்/இங்கிலாந்து யுத்தம் பற்றியும் அங்கே நடந்த பொருளாதார, சகோதர யுத்தங்கள் பற்றி எழுத வேண்டி வந்தது. நீங்கள் சகோதர/பொருளாதார அழிவு இல்லை என எந்த யுத்தத்தினைச் சொல்கிறீர்களோ அவ்யுத்தத்தில் நடந்த பொருளாதார அழிவே உலக காலானியாதிக்கத்துக்கு வழிகோலி கீழை நாடுகளின் பொருளாதார அழிவுக்கு அத்திவாரம் போட்டது என்பதற்கும் ஒரு கண்டத்தின் சமூக கட்டமைப்பையே தகர்த்து அக்கண்ட மக்களை உலகெங்கும் அடிமைகளாக அலைக்கழித்து அவர்களின் சந்ததியையே சின்னாபின்னமாக்கியடு என்கின்ற அம்மக்களின் கருத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். மீண்டும் சொல்கிறேன் இன்னொருவரைக் குற்ரம் சொல்லும் போக்கில் இன்னொரு வீண்பழியைச் சுமத்தாதிருப்பதும் அவசியம்.

    இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டு 5 நாட்களாகிறது. மாற்றுத்திட்டம் பற்றி ஒரு சொல்கூட இல்லை!நன்றி.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    நண்பர் ஜீவா மே 18 2009 வரையான 30 ஆண்டுகளில் தமிழீழம் என்ற ஒன்றே தீர்வு அதற்கு அப்பால் சிந்தித்தால் துரோகி கொலை தற்கொலைத் தாக்குதல் என்றெல்லாம் நிலைமைகள் இருந்தது. ஆனால் மே 18 2009க்கு பிறகு ஒரு காலாண்டு மட்டுமே போயுள்ள நிலையில் மாற்றுத்திட்டம் எங்கே மாற்றுத்திட்டம் எங்கே எனறு குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது. இது காலவரை வந்து போன மாற்றுத் திட்டங்கள் ஏன் உங்களுக்கு தெரியாமல் போனது என்று தெரியவில்லை.

    தேசம்நெற்றும் பல்லியும் ஜீவாவும் சேர்ந்தும் ஒரு மாற்றுத்திட்டம் எழுதி வீட்டு சுவரில் தொங்கவிடலாம். தேசம்நெற்றில் பிரசுரிக்கலாம். அதல்ல விடயம்.

    இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி யுனிவர்சிற்றி கொலிஜ் லண்டனில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய ஒரு கல்வியியலாளர் ”இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களுக்கு எந்தக் குறைவும் இல்லை. நூற்றுக் கணக்கான தீர்வுத் திட்டங்கள் உள்ளது. ஆனால் தீர்ப்பதற்கான உண்மையான விருப்பம் உள்ளவர்கள் (அரசியலாளர்கள்) தான் இல்லை” எனத் தெரிவித்தார். இது தான் யதார்த்தம்.

    நம்எல்லோருக்கும் இனப்பிரச்சினையை இப்படித் தீர்க்கலாம் என்று வெவ்வேறு திட்டங்கள் உள்ளது. ஆனால் அதனை அமுல்படுத்தும் அதிகாரம் எங்களிடம் இல்லை. அதனால் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் கலந்துபேசி விவாதித்து ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

    ரிஎன்ஏ விரைவில் ஒரு மாற்றுத்திட்டத்தை வைக்கப் போவதாக சொல்லி உள்ளது. ஏன் 20 000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்படும்வரை ரிஎன்ஏ மாற்றுத்திட்டம் வைக்கவில்லை. நீலன் திருச்செல்வம் வைத்த மாற்றுத் திட்டத்தை அவர்கள் ஏன் ஏற்கவில்லை.

    இதோ உங்களுக்காக சில தீர்வுத் திட்டங்கள்
    ஆளும் அரசு – ஒற்றையாட்சி
    யுஎன்பி – மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கம்
    ஜேவிபி – மத்தியில் அதிகாரம் நாடு முழுவதும் நிர்வாகப்பரவலாக்கம்
    ஈபிடிபி – மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி
    ரியுஎல்எப் சங்கரி – இந்தியன் மொடல்
    ஈஎன்டிஎல்எப் – எல்லாம் இந்தியாவிட்ட வழி
    இந்தியா – 13 பிளஸ்
    ரிஎம்விபி (அம்மான்) – 13 மைனஸ்
    ரிஎம்விபி (பிள்ளையான்)- 13 அமன்ட்மன்ட்
    எல்ரிரிஈ (மே 18க்கு முன்) – தமிழீழம்
    எல்ரிரிஈ (மே 18க்கு பின்) – நாடுகடந்த தமிழீழம்
    பிரிஎப் (மே 18க்கு முன்)- தமிழீழம்
    பிரிஎப் (மே 18க்கு பின்) – தமிழீழப் பாராளுமன்றம்
    ரிஎன்ஏ (மே 18க்கு முன்) – தமிழீழம்
    ரிஎன்ஏ (மே 18க்கு பின்) – திட்டம் தயாரிப்பில் உள்ளது

    கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர் என் சண்முகதாசன் – சுவிஸ் கன்ரோன் முறை
    குளோபல் பீஸ் போறம் – தென்னாபிரிக்க தீர்வு முறை
    கந்தன் – கனடா மொடல்
    வேலன் – வேல்ஸ் மொடல்

    இன்னும் நிறைய மொடல்கள் இருக்கின்றது. பல்லி தொடருங்கள்…

    Reply
  • palli
    palli

    ஜீவா உங்களுக்கு என்னால் விளக்கம்தர முடியாது என்பது உறுதி; ஆனால் சிலவேளை நடகர் சீமானது மாற்றுதிட்டம் உங்களை மகிழ்ச்சிபடுத்தலாம்; அதில் எனக்கு உடன்பாடு இல்லை; இருப்பினும் பல்லியை பொறுத்த மட்டில் இதுவரை திட்டமே இல்லாதபோது இப்போது எப்படி மாற்றுதிட்டம் சொல்ல முடியும்; திட்டம் போடுவதும் தீர்வு சொல்வது அவதிபடும் மக்களாக இருக்க வேண்டுமே தவிர பல்லியும் ஜீவாவுமாக இருக்ககூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்; பிரான்ஸ் லண்டன் விவாகாரம் இலங்கயில் ஒரு கிராமதில் இருந்து கொண்டூ ஆகாயத்தை பார்த்து பல்லி சொல்லவில்லை; புத்தகங்களை வாசித்து எழுதவில்லை; மக்களை ஏமாளிகள் ஆக்கும் சிலரது கருத்துக்கு உகமை சொன்னேன்,

    பொருளாதாரம் பற்றி சொன்னீர்கள் புல்லரிக்குது; காரணம் இன்று பிரான்ஸ் வல்லரசு என்பதை நினைத்தும்; கூலிபடைக்கும் சகோதர யுத்தத்துக்கும் வித்தியாசம் காணமுடியாதவரா ஜீவா. அதையும் விட எப்போதும் சகல விடயத்துக்கும் மறுபக்கம் உண்டு பல்லி எப்போது மறைக்கபடும் பக்கத்தையே தேடுவேன்; அப்படி தேடியதில் எனது நண்பர்கள் (பிரான்ஸ் தமிழ்) தந்த தகவல்கள்தான் நான் குறிப்பிட்டது; நான் ஒன்றும் சில நூற்றாட்டுக்கு முன்பு பிறந்த முனிவனல்ல; 25 வருடமாகத் கீர்வுதிட்டம் இல்லை உன்மைதான்; ஆனால் சில தீர்வு திட்டங்களுடன் புறபட்ட அமிர்தலிங்கம் அணிஎங்கே என்பது ஜீவாவுக்கு தெரியாதா.!

    சிறிகாந்தாவின் (கூட்டமைப்பு) இன்றய அறிக்கையை கவனியுங்கள்; அதில் அவர் தாம் எப்படி முகந்த்துக்கு பயந்து முந்தானை விரித்தோம் என சொல்லியுள்ளார்; சபாலிங்கத்தை ஜீவா அறிந்திருந்தால் அவர் ஏன் கொல்லபட்டார் என்பது தெரிந்திருக்கும்; தாய் எதுக்கோ அழ குத்தியன் (மகன்) எதுக்கோ சினுங்கினானாம் என்பதுபோல் தீர்வுதிட்டத்தை தீட்டகூடாது; நாம் தீர்வுதிட்டம் சொல்ல தகுதியானவர்களா; (புலி உட்பட) இல்லை என்பதில் பல்லிக்கு சந்தேகம் இல்லை; ஆனால் அந்த நிலைக்கு மக்களை கொண்டு வர வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவன்; ஆகவே முகாமில் இருப்பவர்களை எண்ணாமல் தீர்வு பற்றி கொடிபிடிக்க முற்படும் முட்டாள்தனமானவர்கள் யாராக இருந்தாலும் விமர்சிக்கபடுவார்கள்; பல்லிக்கு உங்களது சதிராட்டங்கள் தெரியாவிட்டாலும் உலக வண்டவாளங்கள் புரியாவிட்டாலும் எமது மக்களது மனநிலை சற்றேனும் தெரியும் என்பதால் பல்லியின் எழுத்து இப்படிதான் இருக்கும்;
    தொடரும் பல்லி;;;;;;;;;;;

    Reply
  • jalpani
    jalpani

    லட்சக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கில் தடுப்பு முகாங்களில் மக்கள் அடைபட்டு விலைமதிப்பற்ற இளம் போராளிகள் பலி கொடுக்கப்பட்ட பின்னர் மாற்று திட்டம் பற்றி கேள்வி கேடகிறவர்களை நினைத்தால் …………… தேவைப்படுகிறது. எங்கேயாம் இவ்வளவு காலமும் வெள்ளி பார்த்துக் கொண்டிருந்தவர்கள்?

    Reply
  • jeeva
    jeeva

    ‘… ”இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களுக்கு எந்தக் குறைவும் இல்லை. நூற்றுக் கணக்கான தீர்வுத் திட்டங்கள் உள்ளது. ஆனால் தீர்ப்பதற்கான உண்மையான விருப்பம் உள்ளவர்கள் (அரசியலாளர்கள்) தான் இல்லை” எனத் தெரிவித்தார். இது தான் யதார்த்தம்….

    சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். இதற்கு யூனிவசிற்றி கொலிச்சில் எல்லாம் தேடத்தேவையில்லை. சாதாரன தமிழனே போதும். அதனால் தான் தந்தை செல்வாவும் தளபதி அமிரும் தமிழீழமே இறுதித்தீர்வு என்ச் சொல்லி வாக்குக்கேட்டார்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    என்னிடமும் ஒரு மாற்று திட்டம் இருக்கிறது. இதையும் பரிசீலித்துப் பாருங்கள். நிச்சியம் வெற்றியுண்டு. முடியுமா? என்பதே கேள்வி.
    இது சாத்தியமாகும் நேரத்தில் அரைவாசித் தமிழன் தமக்குள்ளேயே அடிபட்டு இறந்து விடுவான் என்பதே என் ஐயம். தமிழ்நாட்டை தவிர்த்து கொண்டால் எல்லா தமிழரும் ஒரு குடைக்கு கீழ் வரவேண்டும். ஒரு தமிழரை தலைவனாகப் பெற்றுக் கொள்ளவேண்டும். மலையக
    மக்கள் புத்தளத்திற்கும் பிற இடங்களுக்கும் பிரிந்துபோன வடக்கில்லிருந்து விரட்டி அடிக்கப்பட்ட மூஸ்லீம் மக்கள் கிழக்கு மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் சாதியால் பிளவுண்டு கிடக்கிற தமிழ்மக்களை ஒன்று சேர்க்க முடியுமா? ஒரு தலைவனை உருவாக்க முடியுமா? உருவாக்க முடியுமென்றால் தமிழனுக்குரிய வேலைத்திட்டமும் தயாராகிவிட்டது என்றே அர்த்தப்படும்.

    தமிழனைப் பொறுத்தவரை இனஒற்றுமையில் இன்னமும் நாகரீகம் அடையவில்லை. பழைமை வாதமும் சுயநலப்போக்குகளும் தம்மினத்தில் பிறந்தவர்களை தம்மினமென கருதமுடியாத மனவிகாரமான போக்கு இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம் அதுவரைக்கும் தலைமையை தேடும்வரைக்கும் ஒருசூழல் வரும்வரைக்கும் இலங்கைஅரசுடன் ஒருஇணக்கப் போக்கை கடைப்பிடித்து அமைதியான வாழ்வைத் தங்கவைத்து கொள்வதே தமிழ்மக்களுக்கு உகந்தது.

    Reply
  • palli
    palli

    // இதற்கு யூனிவசிற்றி கொலிச்சில் எல்லாம் தேடத்தேவையில்லை. சாதாரன தமிழனே போதும். அதனால் தான் தந்தை செல்வாவும் தளபதி அமிரும் தமிழீழமே இறுதித்தீர்வு //
    ஒகோ அதுக்காகதான் செலவாவுடன் போய் தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் என தளபதி அனுப்பபட்டாரா?

    தமிழுக்காக எந்தலையை கொடுக்கவா??
    எம்மினத்துக்காக எதிரியின் தலயை எடுக்கவா?? என கோசமிட்ட தமிழ் தறுதலை குழு இன்று கேபாரற்று தெருதெருவாய் திரிவது ஜீவாவுக்கு தெரிந்தும் இந்த தளபதி பட்டங்கள் தேவையா? இப்படிதான் கருனானிதியும் வைகோவை போர் வள் மீன் வால் என புகழ்ந்து பேசி காட்டுக்கை அனுப்பி இன்று அவர் வால் அறுத்த வவ்வாலாய் கொப்பு மாறி தொங்குகிறார்:

    அதுசரி இதுவரை மாற்றுதிட்டம் கேட்டியள், பொறுக்க முடியாமல் ஜெயபாலனும் எது தேவையோ எடுத்து கொள்ளுங்கள் என மொத்தமாக கொட்டிவிட்டார் (என்னும் இருப்பில் இருக்காம்) ஆனால் இப்போ இதுக்கு படிப்பு தேவையில்லை என்பது சின்னபிள்ளை தனமாக இல்லையா? உங்களுடைய பிரச்சனைதான் என்ன? உயிருடன் இல்லாத தளபதிகளின் தீர்வுதிட்டம் உயிருக்காக போராடும் மக்களை காப்பாற்றாது,

    ஜீவா தீர்வு திட்டமல்ல திண்ணையில் இருந்து அரசியல் பேசும் அண்ணாச்சிகளுக்கு கூட தேச நண்பர்கள் யோசனை தருவார்கள்;
    காரணம் அனுபவமே தவிர வாசிப்பு அல்ல; ஆக திரும்பவும் விட்ட இடத்துக்கே வருகிறேன்; தீர்வு திட்டங்கள் ஜெயபாலன் சொல்லியது போல் பல இருக்கு என்னும் சிலது தயாராகிய வண்ணம் உள்ளது; ஆனால் அதை தூக்கி செல்லவோ அல்லது தாங்கி நிக்கவோ சரியான அரசியல்வாதி இல்லாவிட்டாலும் நம்பிக்கையான மனிதர் தமிழரில் இல்லை என்பதே உன்மை; அத்துடன் சந்திரன் ராஜாவின் கவலையும் மிக நியாயமானதே ,ஒற்றுமைக்கு பின்லாடன் புஸ்க்கு அடுத்து எமது தமிழ் அரசியல் வாதிகளைதான் சொல்ல வேண்டும்; இப்படி பல இருக்கு, இருந்தாலும் அதையும் மீறி ஒரு தீர்வுடன் நாம் அரசை சந்திப்பதானால் அதில் மக்கள் பிரதனிதிகளாக சிலர் வேண்டுமே, அதுக்கு அனாதரவாய் இருக்கும் எம்மினத்தில் இருந்து நால்வர் தயாராகட்டும் அதுவரை நாம் விடுதலை தவிர்ந்த விடயங்களில் கவனம் செலுத்துவோம்; ஜீவா வணங்கா மண்ணுக்கு கூட நாம் மாற்றுதிட்டம் சொன்னோம் கேட்டீர்களா? இன்று நயினா தீவு தேர் போல் வணங்காமண் மகிந்தாவின் மேற்பார்வையில் பாஸி பிடிக்குது, திட்டங்கள் மட்டும் எல்லாத்தையும் சாதித்து விடாது, அதுக்கான கால நேரம் மிக முக்கியம்;

    Reply
  • nada
    nada

    தமிழ் மக்களின் அவலங்களுக்கு ஆறுதல் தரவோ அல்லது அந்த மக்கள் பற்றிய நலனில் எந்தவித அக்கைறையும் இல்லாத அமைப்பில் இணைந்து வேலை செய்வது மடைத்தனம்’ என்று கூறிய அந்த இரு பிரிஎப் உறுப்பினரும் ‘மக்களை பலகாலம் பேய்க்கட்ட முடியாது’ என்று கூறிவிட்டு வெளியேறினர். இவர்கள் இருவரும் வெளியேறியதும் இருவரையும் சிறீலங்கா அரசின் ஏஜன்டுகள் என்று பழி சுமத்திவிட்டு தமது கூட்டத்தை தொடர்ந்தனர்.//

    இங்கு வெளியேறிய இருவரும் தம்மிடம் மாற்றுத்திட்டம் தமிழர்க்கு தீர்வு கையில் வைத்திருக்கிறம் என்று எங்கே சொன்னார்கள்.ஆளாளுக்கு எழுதித் தள்ளுறீங்கள்.

    இனிமேல் எந்தகூட்டத்திலும் கேள்வி கேட்கப்போறவர்கள் கையில் ஒரு தீர்வுத் திட்டத்துடன்தான் போக வேண்டும்போல.

    Reply
  • santhanam
    santhanam

    அவர்கள் கையில் எதை திரும்பவும் தூக்குகிறார்கள் எதை தமிழ்மக்கள் மீது செல்வா அமீர் அவர்கள் தங்கள் அரசியல் இருப்பிற்காக திணித்தார்களோ அதே வட்டுக்கோட்டை முள்ளிவாய்க்காளில் வேட்டையாடப்பட்ட கோட்பாட்டை திரும்பவும் புலத்துபுலிகள் தங்கள் இருப்பிற்காக 33 வருடங்களின் பின்பு புலத்தில் தூக்குகிறார்கள் இதற்கு விடை யாரிடமுள்ளதா??

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    கெரன்
    ஒரே ஒரு மாற்றம் தேவை. புலி ஆதரவாளர்கள் பேசாமல் இருப்பது தான். அப்பதான் ஈழத்தில் ஒரு நல்ல அரசியல் தெளிவும், அறிவும் கொண்ட தமிழ் சமுகத்தை கட்டிஎழுப்ப முடிவதுடன் முன்னேற்றமும் அடையலாம்.

    திரும்பவும் புலத்துபுலிகள் தங்கள் இருப்பிற்காக 33 வருடங்களின் பின்பு புலத்தில் தூக்குகிறார்கள் இதற்கு விடை யாரிடமுள்ளதா?? //
    ஐயா புலத்தில் இருசாரர் வசிகிறார்கள் ஒன்று நாட்டில் பாதிக்கப்படு வந்தவர்கள் மறுசரர் சம்பதிக்க வந்தவர்கள் அவர்கள் பார்வைவேறு எங்கள் பார்வைவேறு

    Reply
  • thayabaran
    thayabaran

    கடந்த காலம் முழுவதும் புலிகளிற்கு குருட்டுத்தனமாக ஆதரவு கொடுத்து பின்னர் கடந்த ஜனவரி முதல் பீரிஎவ்வின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஆதரவு கொடுத்து வந்தேன். இந்த கூட்டத்தில் கேள்வி கேட்டவன் என்ற முறையில் எனது ஆதங்கத்தை இங்கு கூறலாம் என நினைக்கிறேன்.

    கடந்த மே மாதம் தலைவர் இறந்ததும் அவர்கள் இறந்த விதமும் நம்மை மிகவும் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புலிகள் மக்களுக்காத் தான் தியாகம் செய்கிறார்கள் என்ற பொய் மிக துல்லியமாக தெரிந்தது. தலைவரின் உயிரை காக்க ஆயுதங்களை மெளனித்த இயக்கம் இதை முன்பே செய்திருந்தால் மக்களை காப்பாற்றியிருக்கலாம் என்ற கோபம் வந்தது. இந்த புலிகளின் மோசமான செயற்பாட்டுக்கு நாமும் துணைபோயிருப்பதை உணர்ந்த போது என்ன செய்வது என்று புரியவில்லை. இவர்களை திட்டி தீர்ப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவல்லை. காரணம் யாரே ஒழுங்கு செய்யும் நிகழ்வுக்கு போய் பழக்கப்பட்ட நம்மால் ஒரு எதிர்ப்பை ஒழுங்கு செய்ய முடியவில்லை. புலிகளுக்கு எதிராக கதைத்தவர்கள் கூட இன்று மெளனித்து விடடார்கள். சிறீலங்கா அரசு ஒரு புறமும் புலிகள் ஒரு புறமுமாக வதைத்த மக்களிற்கு என்ன செய்வது என்ற அங்கலாய்பில் இருந்த போது இந்த கூட்டம் பற்றி அறிவித்தார்கள். நானும் எனது நண்பரும் இந்த கூட்டத்திற்கு போக முடிவு செய்தோம். இந்த கூட்டத்தில் நிச்சயம் அங்கு அல்லல்படும் மக்களிற்கு ஏதாவது செய்வார்கள் என்றால் அவர்கள் அங்கு லப்டொப்பை வைத்து படம் காட்டியதை பார்த்ததும் ஆத்திரம் தாங்க முடியவில்லை. இவங்கள் இன்னுமா எங்களை பேய்காட்டுகிறாரகள் என்ற கோபத்தில் நாம் அங்கு கூற நினைத்த பல விடயங்களை கூற முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் நாம் நினைத்த பல விடயங்களை கேட்ட போது அவர்களிடம் பதில் இல்லை.

    நாம் கோரிய மாற்றம் இது தான்.

    இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் பற்றி கதைப்பதை விடுத்து உருப்படியாக அவர்களுக்கு உதவி செய்யவது பற்றி மட்டும் பேசுங்கள்.

    உங்களால் நேரடியாக உதவி செய்ய முடியாவிடின் அங்கு உதவி செய்ய கூடயவர்களிற்கு நீங்கள் கொடுங்கள்.

    வவுனியா, முல்லைத்தீவு அரச அதிபர்களுடன் தொடர்பு கொண்டு மக்கள் மீழ குடியமரர்வு சம்பந்தமாக பேசி அதற்கான உதவிகளை வழங்குங்கள்.

    தனி நாட்டு கோரிக்கை தமிழ் மக்களை முள்ளிவாய்காலில் பலியெடுத்து விட்டது எனவே அந்த மக்களிற்கு மீண்டும் தமிழீழம் என்று பயம் காட்டுவதை விடுத்து அவர்களின் மறுவாழ்வுக்கு உதவ ஆவன செய்யுங்கள். இதற்கு அரசுடன் பேச்சு நடாத்தி அவர்களுடன் இணைந்து வேலை செய்ய ஒரு வேலைதிட்டத்தை கொண்டு வாருங்கள்.

    மக்கள் மீழக்குடியமர்ந்த வழமையான வாழ்வுக்கு திரும்பிய பின் அவர்கள் என்ன அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்களோ அதற்கு குரல் கொடுங்கள்.

    Reply
  • palli
    palli

    தயாபரன் நீங்கள் கேக்கும் கேள்வியைதான் பல்லி பலமுறை கேட்டு கொண்டே இருக்கிறேன்; புலி ஆதரவாளர்களிடம் மட்டுமல்ல; புலி எதிர்பாளர்களிடமும்;

    உதாரனத்துக்கு ஜெயபாலன் சிலரது தீர்வு திட்டத்தை எழுதியுள்ளர்; இதை மக்கள் ஏற்பார்களா? ஏற்க்கும் நிலையில் உள்ளனரா? இதுக்காக நகசுவையாக ஒரு பின்னோட்டம் 21.09.09 23.30 விட்டேன். ஏனோ அது சிலரது ………புண்ணாக்கி விடும் என்பதாலோ என்னவோ அது தணிக்கயில் மாட்டிவிட்டது,

    ஆக மக்கள்தான் தம்மை தாமே பாதுகாக்க வேண்டும்; அதுக்கு நாம் உதவ வேண்டுமே தவிர உத்தரவு போடப்படாது;

    தயாபரன் மகிழ்ச்சி: தாங்கள் புலியில் இருந்து திருந்தியதால் அல்ல; மக்களை எண்ணி வருந்தியதால்;

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நானும் புலி எதிர்பாளன்தான். ஒரு பத்திரிக்கையாளன் போராளி ஒரு தமிழ்மகனால் சுடுபட்டு இறக்கும் போது புலிஎதிர்பாளன் ஆகினேன். 1986 ஆண்டு தமிழ்மகனால் தமிழ்மகன் நாட்டைநேசித்த குற்றத்திற்காக ஒரு பைத்தியகாரனின் பேச்சுக்கும் ஆலா வர்ணங்களுக்கும் அடிபணிய மறுத்துதன் மூலம் உயிர்ருடன் எரிமூட்ட சம்பவத்திற்கு பிறகு நிரந்தர புலிஎதிர்பாளன் ஆனேன்.

    புலிஎதிர்பாளர் சாதித்தது என்ன? யாரும் கேட்கலாம்.இந்த புலிஎதிர்பாளர் தமிழ்மக்களுக்கு விடுதலை எடுத்து தருவதாக யாருக்கும் வாக்கு தத்தம் செய்து கொடுக்கவில்லை. விடுதலை என்ற பெயரில் அதற்கு நாமே உரிமை உள்ளவர்என யாரையும் மிரட்டவும்மில்லை அடிபணியப் பண்ணவும்மில்லை. யாருக்கும் துரோகிப்பட்டம் கொடுக்கவில்லை. ஜமலோகத்திற்கு அனுப்பி வைக்கவும் இல்லை.

    இந்தபுலி எதிர்பாளனில் ஒருவனாகிய நான் இன்றும் கேட்டுக்கொள்வது என்னவென்றால் மக்களை மக்களாக வாழவிடுங்கள் என்பதே. மக்கள் போராடப் புறப்படும்போது எது தமக்கு ஆயுதமாக வரவேண்டுமென்பதை தீர்மானிப்பார்கள். போராட்டம் என்னும்போது உங்கள் செல்லரிச்ச மூளையில் உதயமாவது இரும்பு ஆயுதமும் வெடிகுண்டு என்பதில் சந்தேகம் இல்லை. மக்கள்தான் வரலாற்றின் உந்துசக்தி. இதை முழுமையாக புரிந்து கொள்வதற்கு தமிழ் அவசரக் குடுக்கைகள் இன்னும் சிலகாலம் பொறுத்துதான் இருக்கவேண்டும்.

    Reply
  • palli
    palli

    இதிலும் உங்களுடன் உடன் படுகிறேன் சந்திர ராஜா.

    Reply
  • Visuvan
    Visuvan

    புலியெதிர்ப்பளனாக மட்டுமில்லாது அனைத்து அடக்கு முறையையும் எதிரப்பவர்களாக தமிழ் சமூகம் மாற வேண்டிய தேவை இன்று உள்ளது. புலிகளுக்கு இணையாக வன்முறைகளில் ஈடுபட்டதால் தான் இன்று வடக்கில் டக்களஸ் தேவானந்தா 50வீத வாக்குகளுக்கு மேல் பெற முடியது இருக்கறார். வவுனியாவில் புளட் அமைப்பின் தன்மையும் அதுவே! கிழக்கில் பிள்ளையான் புலிகளுடன் மட்டுமே மோதியமையாலோ என்னவோ இன்று அங்கு செல்வாக்குள்ள ஒரு நபராக விளங்குகிறார். சில புலியெதிர்பாளர்கள் புலிகளின் வன்முறையை கண்டித்த அதே நேரம் அரச பயங்கரவாதம் பற்றி மூச்சுவிட கூட தயாராக இல்லை! சிங்கள் இளைஞர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு அரச பயங்கரவாதத்தால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போது அனேகமான தமிழ் மக்கள் மெளனம் சாதித்தார்கள். அடக்குமுறை எந்த வடிவில் ஒரு மனிதம் மீது திணிக்கப்படும் போது அதை சக மனிதம் தட்டிக்கேட்க தவறுவதன் விளைவே இன்றைய யதார்தம்!

    Reply