ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 64 ஆவது வருடாந்த அமர்வில் இம்முறை இலங்கை சார்பில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 64 ஆவது வருடாந்த அமர்வுகள் இன்று 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகின்றன. இந்த அமர்வுகளின் பொதுவான விவாதங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதிவரையும் மேலும் 28 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளின் தலைவர்கள் இந்த அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.