ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர பிரதிநிதி பாலித கோஹணவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடைலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
தமது புதிய பதவியை ஏற்றுக் கொண்டதன் பின்னர், பான் கீ மூனை முதன் முறையாக பாலித கோஹண சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.