மலையக தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 14 நாட்களாக மேற்கொண்டு வந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு 800 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி. எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் நலனை முன்நிறுத்துவதாகக் கூறும் சில தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைப் பலிகொடுத்து, தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.