மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலுள்ள தொழுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹாலியத்த, நாரங்விட்ட மற்றும் முல்கம ஆகிய பிரதேசங்களிலுள்ள விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரத்ன சமர்ப்பித்திருந்தார்.
செய்திகள்
செய்திகள்
செய்திகள்
தரவரி சையில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்தாலும் சம்பியன்ஸ் கோப்பையை வெல்ல அவுஸ்திரேலிய அணிக்கே வாய்ப்பு இருப்பதாக இந்திய வீரர் ராகுல் டிராவிட் கணித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ‘அவுஸ்திரேலியா மிகவும் அபாயகரமான அணி. சமீபத்தில் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் அவர்களின் கைதான் ஓங்கி இருக்கிறது. எனவே அவர்களுக்கு தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக திருத்தச் சட்டமூலம் திருத்தங் கள் எதுவுமின்றி நேற்று பாராளுமன்றத்தில் நிறை வேறியது.
1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகச் சட்டமூலத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் பாராளுமன்றம் கூடியபோது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சட்டமூலத்தை சமர்ப்பிக்க முற்பட்டார். இதனைத் தடுப்பதற்காக ஐ. தே. க வினர் முயற்சிகளை மேற்கொண்டனர்.
நீதிமன்றத்தில் வழக்கொன்று இருப்பதால் இதனை சமர்ப்பிக்க முடியாதென சபையில் தெரிவித்தனர். இதனால் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சுமார் ஒருமணி நேரம் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. சட்டமூலத்தை சமர்ப்பிக்க இடமளிக்காதிருப்பதற்காக ஐ.தே. க எடுத்த முயற்சிகள் யாவும் வீணானதுடன் அமைச்சர் கெஹலிய திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.
சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போதும் ஐ.தே.க எம்பிக்களான ஜோசப்மைக்கல் பெரேரா, ரங்கே பண்டார ஆகியோர் திருத்தங்களைக் கொண்டு வந்தனர். இத்திருத்தங்களை எவ்வகையிலும் பெற்றுக்கொள்ள முடியாதென சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்ததுடன் திருத்தங்கள் எதுவுமின்றி ஐ.தே.க வினரின் எதிர்ப்புக்கு மத்தியில் திருத்தச் சட்டமூலம் சபையில் நிறைவேறியது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுப்பதற்காக ஆரம்பத்திலும் இறுதியிலும் ஐ.தே.கவினர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் நிராகரிக் கப்பட்டுவிட்டன.
பயிர்ச் செய்கைக்கான விதைகள் ஆராய்ச்சி ஆய்வுகூடம் நிறுவும் சார்க் நாடுகளின் திட்டத்தின் கீழ் இலங்கையிலும் ஓர் ஆய்வுகூடத்தை அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்திருந்தார்.
இத்திட்டத்துக்கு இந்திய அரசாங்கம் 7.7 மில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்குகிறது.
வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிச்சயம் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவர் என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி அளித்திருப்பது தமக்கு மகிழ்வைத் தருவதாக ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெர்வித்தார்.
இடம் பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் விசேடப் பிரதிநிதி வோல்டர் கெலின் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனை அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்கள் தொடர்பாகக் வோல்டர் கெலின் கேட்டறிந்து கொண்டார்.
இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் மிகவும் சிறப்பாக செய்து கொடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர் றிஷாத் பதியுதீன், ஐக்கிய நாடுகள் சபை, இடம்பெயர்ந்த மக்களுக்குச் செய்து வரும் உதவிகளுக்குத் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.எதிர்காலத்திலும் இவைபோன்ற உதவிகளை ஐக்கிய நாடுகள் சபை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் இடம்பெயர்ந்த மக்களை விரைவில் மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாகவும் அமைச்சர், வோல்டர் கெலினிடம் தெரிவித்தார்.
அங்கு கருத்துத் தெரிவித்த விசேட பிரதிநிதி வோல்டர் கெலின், இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன் நன்றியையும் தெரிவித்தார். அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை விரைவில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் எப்பொழுதும் உதவத் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் லிபிய அதிபர் கடாபி. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்த கடாபி, பொதுச் சபையில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கடுமையாக சாடிப் பேசிய கடாபி, காஷ்மீர் பிரச்சினையையும் பெரிதாகப் பேசி இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் பேசுகையில், ஐ.நா. சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க்க கூடாது. பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக்கடாது. ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில், அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஜான் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைகள் குறித்து சரியான விசாரணை நடத்தப்படவில்லை. அதை ஐ.நா. செய்ய வேண்டும். அதேபோல கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். பின்லேடன் ஒரு தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல, அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல. பன்றிக் காய்ச்சல் தானாக பரவவில்லை. மாறாக ராணுவ ஆய்வகத்திலிருந்து பரப்பி விடப்பட்டுள்ளது இது. அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நிரந்தரமாக நீடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.
காஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமானதல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தமானதல்ல. அது ஒரு தனி நாடாக, சுதந்திர நாடாக இருக்க வேண்டும். அது இந்தியா, பாகிஸ்தானுக்கு உரிமை இல்லாத தனி நாடாக வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு நாம் முடிவு கட்டலாம்.
பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களுள் இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் தத்தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல், ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களை அவசரமாக மீள்குடியமர்த்துமாறு ஐ.தே.க. தலைவரான ரணில் விக்ரமசிங்க மற்றும் மங்கள சமரவீர போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்தும் கூறி வருவதை ஊடகங்கள் மூலமாக அறிந்தேன். அவர்கள் கூறுவதைப் போல இடம்பெயர்ந்த மக்களை எவ்வித முன்னேற்பாடுகளுமின்றி அவரசாமாகக் குடியேற்றி அம்மக்களை மற்றுமொரு சிரமத்தினுள் ஆழ்த்த அரசாங்கம் தயாரில்லை.
வட பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இப்பணி பூர்த்தியானதும் அம்மக்களுக்குத் தேவையான சகல வாழ்வாதார வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு விரைவில் அவர்கள் மீள்குடியமர்த்தப்படுவார்கள்.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் ரணில் உட்பட எதிர்க்கட்சியினருக்கு எந்தப் பொறுப்புணர்வும் கிடையாது. ஆனால் அரசாங்கம் என்ற வகையில் எமக்கு அந்தப் பொறுப்பு உண்டு. நாம் அதனை கடமையுணர்வுடன் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.
இதுவரை மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 40 ஆயிரம் மக்கள் தத்தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்துக்கான ‘பி’ பிரிவின் மூன்றாவது போட்டி நியூசிலாந்து -தென்ஆபிரிக்க அணிகளுக்கிடையே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பகல் நேர ஆட்டமாக தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கும் போட்டியின் ஸ்கோர் விபரம் கீழே தொகுத்துத் தரப்படுகிறது.
South Africa won the toss and elected to field
ICC Champions Trophy – 3rd Match, Group B
ODI no. 2895 | 2009/10 season
Played at SuperSport Park, Centurion
24 September 2009 (50-over match)
Umpires Aleem Dar (Pakistan) and Asad Rauf (Pakistan)
TV umpire DJ Harper (Australia)
Match referee RS Mahanama (Sri Lanka)
Reserve umpire IJ Gould (England)
New Zealand innings
BB McCullum† c Duminy b Botha 44
JD Ryder c van der Merwe b Parnell 8
MJ Guptill c Amla b Parnell 21
LRPL Taylor lbw b Parnell 72
GD Elliott b van der Merwe 39
NT Broom lbw b van der Merwe 1
GJ Hopkins c Duminy b Parnell 13
KD Mills c de Villiers b Steyn 0
DL Vettori* not out 1
DR Tuffey c Duminy b Parnell 4
SE Bond c de Villiers b Steyn 0
Extras (b 4, lb 5, w 1, nb 1) 11
Total (all out; 47.5 overs) 214 (4.47 runs per over)
Fall of wickets1-12 (Ryder, 3.6 ov), 2-58 (Guptill, 12.6 ov), 3-92 (McCullum, 23.1 ov), 4-163 (Elliott, 38.6 ov), 5-171 (Broom, 40.5 ov), 6-203 (Hopkins, 44.6 ov), 7-204 (Mills, 45.5 ov), 8-209 (Taylor, 46.3 ov), 9-213 (Tuffey, 46.5 ov), 10-214 (Bond, 47.5 ov)
Bowling
DW Steyn 9.5 1 32 2
WD Parnell 8 0 57 5
JH Kallis 8 0 24 0
JA Morkel 3 0 13 0
J Botha 9 1 44 1
RE van der Merwe 10 1 35 2
South Africa innings (target: 215 runs from 50 overs)
GC Smith* c Vettori b Tuffey 7
HM Amla lbw b Vettori 38
JH Kallis c †McCullum b Bond 36
AB de Villiers not out 70
JP Duminy c †McCullum b Mills 11
MV Boucher† c †McCullum b Tuffey 28
JA Morkel not out 19
Extras (lb 2, w 4, nb 2) 8
Total (5 wickets; 41.1 overs) 217 (5.27 runs per over)
Did not bat J Botha, RE van der Merwe, DW Steyn, WD Parnell
Fall of wickets1-22 (Smith, 5.6 ov), 2-74 (Kallis, 16.3 ov), 3-108 (Amla, 23.2 ov), 4-138 (Duminy, 26.5 ov), 5-180 (Boucher, 35.5 ov)
Bowling
KD Mills 8.1 0 45 1
SE Bond 10 0 51 1
DR Tuffey 9 1 52 2
DL Vettori 10 1 34 1
JD Ryder 2 0 15 0
MJ Guptill 1 0 13 0
GD Elliott 1 0 5 0
Player of the match WD Parnell (South Africa)
சுவீடன் நாட்டில் கெலிக்கொப்டரில் 3 அல்லது 4பேர் அடங்கிய கொள்ளைக் கூட்டத்தினர் 100மில்லியன் சுவீடன் குரோன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை 23.09.2009 ஜி4எஸ் எனும் பாதுகாப்பாளர்கள் (Security) நிலையத்தில் இக்கொள்ளை துரிதமாக நடந்தேறியுள்ளது. இந்த பாதுகாப்பு அமைப்புத்தான் வங்கிப் பணங்களை பாதுகாப்புடன், பாதுகாப்பான இடத்திற்குக் கொண்ட செல்லும். இந்த ஜி4எஸ் எனும் பாதுகாப்பு அமைப்பு உலகிலே மிகப்பெரிய பாதுகாப்பாளர் சேவையை உலகெங்கும் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைக் கிணறுகளுக்குக் கூட இவர்களே பாதுகாப்புக் கொடுக்கிறார்கள்.
சுவீடனிலுள்ள ஸ்ரொக்கோம் எனும் இடத்தில் உள்ள பொலிஸ் கெலிக்கொப்டருக்கு அருகில் வெடிகுண்டுபோல் தயாரிக்கப்பட்ட சிவம்பு மின்னிபொருத்திய பார்சல் ஒன்றை வைத்துவிட்டு கொள்ளையர் தம்கொள்ளை நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். களவாடப்பட்ட கெலிக்கொப்டரில் சென்ற கொள்ளையர்கள் நெருப்புப் பற்றாதவாறு திடமாகப் பலமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஜி4எஸ் கட்டிடத்தின் மேல் கெலிக்கொப்டரில் கொண்டு வரப்பட்ட பெரிய பாரமான சுத்தியல் போன்ற கூரான ஒரு இரும்புக் குற்றியை கூரையினூடாகப் போட்டு கொள்ளையர்கள் உள்ளே இறங்கினர். அதே வேளை கெலிக்கொப்டரானது மாடியில் நிறுத்த வசதியிருந்தும் நிறுத்தப்படாமல் பறப்பில் சமநிலையில் நின்று கொண்டிருந்தது. இதில் இருந்து நாம் அறிவது என்ன வென்றால் கெலிக்கொப்டரை நிறுத்தினால் அதை திரும்ப இயக்கி எழும்ப நேரம் எடுக்கும் என்பதால் அதை பறப்பிலேயே வைத்திருந்திருக்கிறார்கள். இதை பல நிமிடங்கள் பறப்பில் சமநிலையில் வைத்திருப்பதற்கு விமான ஒட்டியானவன் குறைந்தது 100 மணித்தியாலங்களாவது பயிற்சி எடுத்திருக்க வேண்டும்.
எடுத்த பணத்துடன் வடக்குநோக்கிப் பறந்த கெலிக்கொப்டரானது கொள்ளை நடந்த இடத்துக்கு தெற்கே 3 மைல்களுக்கப்பால் கைவிடப்பட்டுள்ளது. பொலிஸின் அனுபவப்படி கொள்ளையர்கள் பணத்தையும் கொள்ளையர்களையும் வடக்கே விட்டுவிட்டு விமான ஓட்டிமட்டும் விமானத்தை தெற்கில் கைவிட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.
கொள்ளைச்செய்தி கேட்டு தமது கெலிக்கொப்டரை எடுக்க வந்தபோது குண்டுப்பார்சல் சிவப்புச் சமிக்ஞையுடன் கண்ணடித்துக் கொண்டு இருந்தது. உடன் வெடிகுண்டு விற்பனர்கள் அழைக்கப்பட்டு அந்தப்பார்சல் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. கண்டது வெறும் புஸ்வாணம் தான். இந்த நேரத்துக்குள் கொள்ளை நாடகம் முற்றாக நிறைவேயிருந்தது.
இக்கொள்ளை காரணமாக சுவீடனில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்று பொருளியல் விற்பனர்கள் கூறுகிறார்கள்.