சுவீடன் நாட்டில் கெலிக்கொப்டரில் 3 அல்லது 4பேர் அடங்கிய கொள்ளைக் கூட்டத்தினர் 100மில்லியன் சுவீடன் குரோன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை 23.09.2009 ஜி4எஸ் எனும் பாதுகாப்பாளர்கள் (Security) நிலையத்தில் இக்கொள்ளை துரிதமாக நடந்தேறியுள்ளது. இந்த பாதுகாப்பு அமைப்புத்தான் வங்கிப் பணங்களை பாதுகாப்புடன், பாதுகாப்பான இடத்திற்குக் கொண்ட செல்லும். இந்த ஜி4எஸ் எனும் பாதுகாப்பு அமைப்பு உலகிலே மிகப்பெரிய பாதுகாப்பாளர் சேவையை உலகெங்கும் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைக் கிணறுகளுக்குக் கூட இவர்களே பாதுகாப்புக் கொடுக்கிறார்கள்.
சுவீடனிலுள்ள ஸ்ரொக்கோம் எனும் இடத்தில் உள்ள பொலிஸ் கெலிக்கொப்டருக்கு அருகில் வெடிகுண்டுபோல் தயாரிக்கப்பட்ட சிவம்பு மின்னிபொருத்திய பார்சல் ஒன்றை வைத்துவிட்டு கொள்ளையர் தம்கொள்ளை நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். களவாடப்பட்ட கெலிக்கொப்டரில் சென்ற கொள்ளையர்கள் நெருப்புப் பற்றாதவாறு திடமாகப் பலமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஜி4எஸ் கட்டிடத்தின் மேல் கெலிக்கொப்டரில் கொண்டு வரப்பட்ட பெரிய பாரமான சுத்தியல் போன்ற கூரான ஒரு இரும்புக் குற்றியை கூரையினூடாகப் போட்டு கொள்ளையர்கள் உள்ளே இறங்கினர். அதே வேளை கெலிக்கொப்டரானது மாடியில் நிறுத்த வசதியிருந்தும் நிறுத்தப்படாமல் பறப்பில் சமநிலையில் நின்று கொண்டிருந்தது. இதில் இருந்து நாம் அறிவது என்ன வென்றால் கெலிக்கொப்டரை நிறுத்தினால் அதை திரும்ப இயக்கி எழும்ப நேரம் எடுக்கும் என்பதால் அதை பறப்பிலேயே வைத்திருந்திருக்கிறார்கள். இதை பல நிமிடங்கள் பறப்பில் சமநிலையில் வைத்திருப்பதற்கு விமான ஒட்டியானவன் குறைந்தது 100 மணித்தியாலங்களாவது பயிற்சி எடுத்திருக்க வேண்டும்.
எடுத்த பணத்துடன் வடக்குநோக்கிப் பறந்த கெலிக்கொப்டரானது கொள்ளை நடந்த இடத்துக்கு தெற்கே 3 மைல்களுக்கப்பால் கைவிடப்பட்டுள்ளது. பொலிஸின் அனுபவப்படி கொள்ளையர்கள் பணத்தையும் கொள்ளையர்களையும் வடக்கே விட்டுவிட்டு விமான ஓட்டிமட்டும் விமானத்தை தெற்கில் கைவிட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.
கொள்ளைச்செய்தி கேட்டு தமது கெலிக்கொப்டரை எடுக்க வந்தபோது குண்டுப்பார்சல் சிவப்புச் சமிக்ஞையுடன் கண்ணடித்துக் கொண்டு இருந்தது. உடன் வெடிகுண்டு விற்பனர்கள் அழைக்கப்பட்டு அந்தப்பார்சல் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. கண்டது வெறும் புஸ்வாணம் தான். இந்த நேரத்துக்குள் கொள்ளை நாடகம் முற்றாக நிறைவேயிருந்தது.
இக்கொள்ளை காரணமாக சுவீடனில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்று பொருளியல் விற்பனர்கள் கூறுகிறார்கள்.
gobi
பாதுகாப்பு கொடுக்கிறவங்கள்தான் பிளான்பண்ணிச் செய்துமிருப்பாங்கள் .
sumita
உலகநாடுகளுக்கு பாதுகாப்பு கொடுத்த சுவீடனுக்கே அல்வாயா? எங்கே போகின்றது இந்த உலகம்.
Nackeera
கொள்ளையின் பின்புலம்;
உலங்குவானூர்தியில் சென்று சுவீடனில் கொள்ளையடித்த திட்டத்தின் பின்புலத்தில் 40வயதுடைய இராணுவப்பயிற்சி பெற்ற பல்க்கான் மாபியா ஒருவர் இருப்பதாக அறியவருகிறது. இவர் கடைசிக்காலங்களில் தாய் நாடான சர்பியாவில் இருந்தபோதும் தனது வலைப்பின்னலில் சுவீடன் சட்டவிரோதிகளுடனும் தொடர்பில் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறார். சுவீடன் பொலிசாருக்கு சர்பியா கொடுத்த தகவலின்படி ஒரு விமானவோட்டி தேவைப்படுவதாகவும் அவருக்கு சுவீடனில் பயிற்சி வழங்கப்படும் என்றும் ஒரு விளம்பரம் சிலமாதங்களுக்கு முன் வெளிவந்ததாம்.
இங்கே கொள்ளையடிக்கப்பட்ட தொகை வரவரக் குறைகிறது. 100 மில்லியன் குரோண்கள் என்பதிலிருந்து இப்போது 45மில்லியன் குரோண்கள் என்கிறார்கள். ஏதோ கௌரவப்பிரச்சனை போல் தெரிகிறது. மேலும் கொள்ளையரைப் பிடிப்பதற்கான பலசாத்தியக்கூறுகள் இருப்பதாக சுவீடன் பொலிசார் தெரிவிக்கின்றனர். இக்கொள்ளையின் போது 2 மணித்தியாலங்களுக்கு மேல் கெலி பறப்பில் இருந்திருக்கிறது. பாவிக்கப்பட்ட உலங்குவானூர்தி பெல் 206 யெற் ரேஞ்சர் ஆகும். இதை இராணுவ இரடார்கள் கண்டுபிடிக்காமைக்குக் காரணம் மிகத்தாழ்வாகப் பறந்தமையே ஆகும். இருப்பினும் தமது இராடார் ஒன்றில் இந்த கெலிக்கொப்டர் விழுந்திருப்பதாக விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்கிறார்கள் சுவீடன் நாட்டு பொலிசார். சாதாரண விமானத்தில் இருந்து போர் விமானம் வரை தயாரிக்கும் நாட்டில் ஒரு கெலிக்கொப்டர் கண்ணைக் குத்திச் சென்றிருக்கிறது. எல்லாம் காலம்தான்.
சுவீடன் கொள்ளையரைப் பிடிப்பதற்கு 100க்கும் அதிகமான பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் தகவலின்படி கொள்ளையர்கள் நாட்டை விட்டுப் போய்விட்டார்கள் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. முன்பும் சர்பிய இராணுவத்தளபதி ஒருவர் அகதியாக சுவீடனில் இருந்தவர் சுவீடனில் பெரியவங்கிக் கொள்ளை ஒன்றை நடத்தினார்.
முதலாவது உலகமகாயுத்தத்தின் காரணிகளும் அதன் தொடர்பாக வந்த இரண்டாவது உலகமகாயுத்தத்தின் தொடர்ச்சிக்காரணிகளும் சர்பர்களே என்பது குறிப்பிடத்தக்கது. இப்போ என்ன மூன்றாம் உலகயுத்தத்துக்கு வழிவகுக்கிறார்களா?