கரடியனாறு பொலிஸ் நிலையக் கட்டிடம் சிதைவடைந்திருப்பதால், கரடியனாறு பொலிஸ் பிரிவு நடவடிக்கைகளை தற்காலிகமாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திலிருந்து மேற்கொள்ளுவதற்கு சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பொலிஸ் மா அதிபர் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதேநேரம் கரடியனாறு பொலிஸ் நிலையத்தைத் துரித கதியில் பொருத்தமான இடத்தில் நிர்மாணிப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும் அவர் வழங்கியுள்ளார்
செய்திகள்
செய்திகள்
செய்திகள்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வு நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி, கரச்சி பிரதேச செயலக அலுவலகத்தில் நேற்றுக்காலை அதன் தலைவர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையில் ஆரம்பமான அமர்வில் பெருமளவிலான பொதுமக்கள் நேரடியாகச் சாட்சியமளித்தனர்.
மேற்படி பிரதேச மக்கள் சுதந்திரமாக சாட்சியமளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கென விசேட மொழிபெயர்ப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இங்கு சாட்சியமளித்த பெரும்பாலானவர்கள் காணாமல் போனோர் தொடர்பாகவும், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பாகவும் மிகவும் உணர்வுபூர்வமாக கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஆணைக்குழு உறுப்பினர்கள் இதனை மிகவும் அவதானத்துடன் செவிமடுத்ததோடு சாட்சியமளித்தவர்களிடம் அவ்வப்போது குறுக்கு விசாரணைகளையும் நடத்தினர். அதேநேரம் சாட்சியமளித்த அனைவருமே காணாமல் போனோர், தடுத்து வைக்கப் பட்டுள்ளோர் தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதைச் செவிமடுத்த ஆணைக்குழுத் தலைவர், அவைகளை எழுத்து மூலமாகத் தரும்படி கேட்டுக்கொண்டதோடு, அவர்களுக்கு வெள்ளைத் தாள்களை வழங்குமாறு அதிகாரிகளுக்குப் பணித்தார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா, “காணாமல் போனோர், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பாக சி.ஐ.டி.யினரை அழைத்துப் பேசவுள்ளேன்” என்றார். இதற்காக ஆணைக்குழுவின் ஒருநாள் அமர்வுக்கு சி.ஐ.டி.யினர் அழைக்கப்படுவர் என்று கூறினார். இது தொடர்பாக சி.ஐ.டி.யினரிடம் ஆராய்ந்து உண்மை நிலையை அறிவிப்பேன் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.
காணி, தண்ணீர்ப் பிரச்சினைகள் தொடர்பாகவும் பெரும்பாலானோர் எடுத்துக் கூறினர். அந்த இடத்தில் அரசாங்க அதிபர், மற்றும் அதிகாரிகளை அழைத்த ஆணைக்குழு வின் தலைவர், பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு தெரிவித்தார்.
ஆணைக்குழு உறுப்பினர்கள், இரணமடுக் குளம், புலிகளின் விமானப்படைத்தளம் அமைந்திருந்த இடங்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டாவளை, பூநகரி ஆகிய இடங்களில் அமர்வு நடைபெறும். நாளை திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாங்குளம், நந்திக்கடல் பிரதேசத்தில் அமர்வு இடம்பெறவுள்ளது.
கொடிகாமத்தில் இனம் காணப்படாத புதுவித காய்ச்சலினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று 17ம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமாகியுள்ளார்.
கொடிகாமம் கச்சாய் வீதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தாயான இப்பெண் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் ஒருவிதமான மூளைக்காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவரின் கொடிகாமம் வீட்டிற்கு விரைந்த சுகாதார மருத்துவக் குழுவினர் தடுப்பு மருந்துகளை அப்பகுதிகளில் விசிறினர்.
இதேவேளை இவரது வீட்டில் தங்கியிருந்த ஆறு பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகன்றனர்.
முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் கிராம அலுவலர் பிரிவில் 110 குடும்பங்கள் மீள்குடியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திஙகள் கிழமை இக்குடும்பங்களச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் குடியமர்த்தப்படுவர் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
செட்டிக்குளம் இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களே இவ்வாறு அவர்களின் சொந்த இடத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லிணக்க ஆணைக்குழு இன்று அதன் விசாரணைகளை கிளிநொச்சியில் நடத்துகின்றது. இன்றும் நாளையும் இந்த விசாரணைகள் கிளிநொச்சியில் நடைபெறும் என தெரவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு இன்றும் நாளையும் கிளிநொச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்டறியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழ கடந்த சில வாரங்களாக அதன் விசாரணைகளையும் பல்வேறு தரப்பினரது சாட்சியங்ளையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள 18வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற சபைக்கான பிரதிநிதியாக தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமித்த போதிலும் அதனை கூட்டமைப்பபு நிராகரித்தள்ளது. 18 வது அரசமைப்பத் திருத்தச் சட்டத்தை கூட்டமைப்பு எதிர்ப்பதால் ரணில் விக்கிரமசிங்க சுமந்திரனை நியமித்ததை தாம் நிராகரித்ததாக கூட்டமைப்பு தெரிவித்தள்ளது.
18வ அரசமைப்பு திருத்தச்சட்டமானது ஏற்கனவே நடைமுறையில் இருந்த 17வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்கிறது. அத்துடன். தேர்தல் ஆணையாளர். மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுச்சேவை, பொலிஸ் சேவை ஆகியவற்றிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு பொறுப்பாக இருந்து வந்த அரசியல் அமைப்பு சபைக்கு பதிலாக நடாளுமன்ற சபை என்கிற அமைப்பை நியமிப்பதறகு 18வது அரசமைப்புத் திருத்தசட்டம் வழிவகுத்துள்ளது. இந்த நாடாளுமன்ற சபையில் பிரதமர். எதிர்க்கட்சித் தலைவர், மற்றும்,சபாநாயகர் ஆகியோர் அங்கம் வகிப்பர். அத்துடன் பிரதமரும் எதிர்கட்சித் தலைவரும் தமக்கு விருப்பமான வேறு இனக் குழுமத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை நியமிப்பதற்கு அதிகாரம் பெற்றுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்படுகின்ற இருவர் உட்பட ஐவர் கொண்டதாக அப்பாராளுமன்ற சபை இருக்கும்
இச்சபையே நீதிச்சேவை, பொதுச்சேவை, தகவல்துறை, தேர்தல் ஆணையகம், மனித உரிமை போன்ற துறைகளுக்கான பெயர்களையும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான பெயர்களையும் ஜனாதிபதிக்கு சிபார்சு செய்யும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. இவ்வாறு சிபார்சு செய்யப்படுகின்றவர்களை ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்கிற கட்டாயம் 18வது அரசமைப்பத்திருத்தச் சட்டத்தில் இல்லை.
இந்த அடிப்படையிலேயே நாடாளுமன்ற சபையின் உறுப்பினராக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்டார். எனினும் கூட்டமைப்பு இந்த நியமனத்தை நிராகரித்துள்ளது.
இதே வேளை, கூட்டமைப்பு இதனை நிராகரிக்கும் எனத்தெரிந்து கொண்டே தான் தாம் சுமந்திரனை நாடாளுமன்ற சபைக்குழுத் தலைவாராக பிரேரித்ததாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 18 வது அரசமைப்புத் திருத்தச்சட்டம் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் எதிர்ப்பினை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை சிக்கலில் மாட்டிவிடும் வகையிலேயே தாம் நகர்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதியின் மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டி கின்னஸ் சாதனை படைக்க சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தானில் ஒரே நாளில் 5லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு சாதனை ஏற்படுத்தப்பட்டது. இச்சாதனையை பின்னர் 6லட்சத்து 11 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டி இந்தியா முறியடித்தது. ஜனாதிபதியின் பிறந்த நாளன்று இலங்கை 6லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டி அதனை முறியடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் நிலையில் அப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. சில பாடசாலைகள் முன்பிருந்த அதன் சொந்தக் கட்டடங்கிளிலேயே இயங்க ஆரம்பித்துள்ளன.
செம்பியன்பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை கடந்த செவ்வாய் கிழமை தொடக்கம் இயங்க ஆரமபித்துள்ளது. உடுத்துறை மகாவித்தியாலயம், மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலை ஆகியன எதிர்வரும் வாரத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆழியவளை சி.சி.த.க.பாடசாலை, மாமுனை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, எனபனவும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக் களப்பில் நீண்ட நாட்களுக்குப்பின் வெள்ளை வான் கடத்தல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. Sep 15ம் திகதி மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த முனுசாமி நரேந்திரன் (வயது30) என்பவர் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நிற வானில் குறித்த நபரின் வீட்டுக்கு வந்தவர்கள் அவரை வெளியே அழைத்து பலவந்தமாக வானில் தூக்கிச் சென்றதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கடத்தல் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அண்மையில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த பிரகாசம் சகாயமணி என்பவர் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அப்துல் காதர், மனுஷா நாணயக்கார, உபேக்சா ஸ்வர்ணமாலி, நில்வலா விஜியசிங்க ஆகியோரினை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியில் போட்டியிட்டு பின்னர் அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்ட மாற்றுக்கட்சிகளின் பி.திகாம்பரம், ஜே.ஸ்ரீரங்கா மற்றும் பிரபா கணேசன் ஆகியோருடன் எவ்வித தொடர்புகளையும் கட்சி கொண்டிருக்க போவதில்லை என்றும கட்சியின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.
அதேவேளை நீதி நடவடிக்கைகளை நாடியுள்ள, அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்ட ஏர்ல் குணசேகர, லச்மன் செனவிரட்ன ஆகியோர் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.