மட்டக் களப்பில் நீண்ட நாட்களுக்குப்பின் வெள்ளை வான் கடத்தல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. Sep 15ம் திகதி மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த முனுசாமி நரேந்திரன் (வயது30) என்பவர் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நிற வானில் குறித்த நபரின் வீட்டுக்கு வந்தவர்கள் அவரை வெளியே அழைத்து பலவந்தமாக வானில் தூக்கிச் சென்றதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கடத்தல் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அண்மையில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச் சேர்ந்த பிரகாசம் சகாயமணி என்பவர் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.