கொடிகாமத்தில் இனம் காணப்படாத புதுவித காய்ச்சலினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று 17ம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமாகியுள்ளார்.
கொடிகாமம் கச்சாய் வீதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தாயான இப்பெண் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் ஒருவிதமான மூளைக்காய்ச்சலாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவரின் கொடிகாமம் வீட்டிற்கு விரைந்த சுகாதார மருத்துவக் குழுவினர் தடுப்பு மருந்துகளை அப்பகுதிகளில் விசிறினர்.
இதேவேளை இவரது வீட்டில் தங்கியிருந்த ஆறு பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகன்றனர்.
palli
புது புது நாடுகள் அல்ல, புது புது வருத்தங்கள் (சுகயினம்) கூட இலங்கை மக்களை தாக்க தொடங்கிவிட்டதுக்கு இந்த பெண்ணின் மரணம் ஒரு உதாரணம்; இந்த பெண்ணின் குடும்பத்துக்கும் உறவுகளுக்கு பல்லி குடும்ப கண்ணீர் துளிகள்;
பல்லி,