செய்திகள்
செய்திகள்
செய்திகள்
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி) ஆண்டுதோறும் விருதுகளை அறிவித்து வருவதுடன் இம்முறை முன்னைய கிரிக்கெட் தசாப்தத்தினைக் குறிக்கும் வகையில் பல்வேறு விருதுகளுக்கான வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் நான்கு இலங்கை வீரர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் ஆண் வீரர்கள்:
விராட் கோலி (இந்தியா)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)
ஏ.பி.டி.வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)
ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)
ரவிச்சரந்திரன் அஸ்வின் (இந்தியா)
குமார் சங்கக்கார (இலங்கை)
தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் பெண் வீராங்கனைகள்:
எல்லிஸ் பெர்ரி (அவுஸ்திரேலியா)
மெக் லானிங் (அவுஸ்திரேலியா)
சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து)
ஸ்டாஃபனி டெய்லர் (மே.இ.தீவுகள்)
சாரா டெய்லர் (இங்கிலாந்து)
தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள்:
விராட் கோலி (இந்தியா)
ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து)
ரங்கன ஹேரத் (இலங்கை)
ஜோ ரூட் (இங்கிலாந்து)
யஷிர் சஹா (பாகிஸ்தான்)
ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)
கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)
தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள்:
மகேந்திர சிங் தோனி (இந்தியா)
விராட் கோலி (இந்தியா)
ரோகித் சர்மா (இந்தியா)
லசித் மலிங்க (இலங்கை)
குமார் சங்கக்கார (இலங்கை)
மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா)
ஏ.பி.டி.வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா)
தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகள்:
மிதாலி ராஜ் (இந்தியா)
ஜூலன் கோஸ்வாமி (இந்தியா)
மெக் லானிங் (அவுஸ்திரேலியா)
எல்லிஸ் பெர்ரி (அவுஸ்திரேலியா)
சுசி பேட்ஸ் (நியூஸிலாந்து)
ஸ்டாஃபனி டெய்லர் (மே.இ.தீவுகள்)
தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் 20:20 கிரிக்கெட் வீரர்கள்:
ரோகித் சர்மா (இந்தியா)
விராட் கோலி (இந்தியா)
ஆரோன் பின்ஞ்ச் (அவுஸ்திரேலியா)
கிறிஸ் கெய்ல் (மே.இ.தீவுகள்)
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
லசித் மலிங்க (இலங்கை)
இம்ரான் தாகீர் (தென்னாபிரிக்கா)
தசாப்தத்துக்கான ஐ.சி.சி.யின் ‘Spirit of Cricket’ வீரருக்கான வீரர்கள்:
விராட் கோலி (இந்தியா)
மகேந்திரசிங் தோனி (இந்தியா)
கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)
அன்யா ஷ்ரப்சோல் (இங்கிலாந்து)
மிஸ்பா உல்-ஹக் (பாகிஸ்தான்)
பிரெண்டன் மெக்கல்லம் (நியூஸிலாந்து)
கேத்ரின் ப்ரண்ட் (இங்கிலாந்து)
மஹேல ஜெயவர்தன (இலங்கை)
டேனியல் விக்டோரி (நியூஸிலாந்து) ஆகியோரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
“கோட்டாபய அரசின் ஆட்சிக் காலத்தில் கிடைக்காது என்பது தமிழர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில்
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இலங்கையில் போரில் இறந்த தங்கள் உறவுகளை நினைவுகூர மூவின மக்களுக்கும் உரிமையுண்டு. அதில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற வேறுபாடுகள் இருக்கவேகூடாது. எனவே, நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது.
நல்லாட்சியில் இருந்த நினைவேந்தல் உரிமை, கோட்டாபய அரசின் ஆட்சிக் காலத்தில் கிடைக்காது என்பது தமிழர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்தான். போரில் இறந்த உறவுகளை நினைவுகூர அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் வழங்கப்பட வேண்டும். இதில் நான் உறுதியாக இருக்கின்றேன்” என்றார்.
LPL கிரிக்கெட் போட்டி தொடரின் காலி க்ளேடியேடர்ஸ் அணிக்கு தலைவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான சஹிட் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
குறித்த அணிக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க தலைவராகா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் LPL தொடரில் இருந்து விலகுவதாக அவர் அண்மையில் அறிவித்திருந்தார் .
மேற்படி அணியின் உப தலைவராக பானுக ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .
உலக டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் (Rafael Nadal) அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
உலகின் முன்னிலை வீரர்கள் 8 பேர் பங்கேற்கும் ATP Finals டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகின்றது.
வீரர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கபட்டு விளையாடி வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஒன்றில், உலக தரவரிசையில் 2ஆம் இடத்திலுள்ள ஸ்பெயின் ரஃபேல் நடால், கிரேக்க வீரர் Stefanos Tsitsipas-ஐ எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-4, 4-6, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நாளை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில், ரஷ்ய வீரர் Daniil Medvedev-வை, ரஃபேல் நடால் எதிர்கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் வரும் நவம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகின்றது. டிசம்பர் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடர், ஹம்பாட்தோட்டை, சூரியவௌ மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ள மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில் மொத்தமாக 23 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் யாழ்ப்பாண பகுதியை மையப்படுத்தி கலந்து கொள்ளும் Jaffna Stallions அணியின் உரிமையாளர்களில் ஒருவராக Microsoft Ventures நிறுவனத்தின் நிறுவுனரும், அமெரிக்காவின் Seattle மாநிலத்தை தளமாகக் கொண்டியங்கும் தொழில்முனைவருமான Rahul Sood, இணைந்துள்ளார்.
Jaffna Stallions அணியின் வளர்ச்சியிலும் சர்வதேச ரீதியாக அதனைப் பிரபலப்படுத்துவதிலும் Rahul Sood முக்கிய பங்காற்றவுள்ளார் .
இது தொடர்பாக Jaffna Stallions அணியின் பிரதம மூலோபாய அதிகாரியான (Chief Strategy Officer) ஆனந்தன் ஆர்னல்ட் குறிப்பிடும் போது “Jaffna Stallions அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவராக Rahul Soodஐ வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சர்வதேச வர்த்தகத்திலும், புதிய தொழில் முயற்சிகள் ஆரம்பிப்பதிலும் அவருக்கு இருக்கும் அனுபவம் எங்களிற்கு பயனுள்ளதாக இருக்கும். எங்களது அணியை சர்வதேச ரீதியாக பிரபலப்படுத்துவதிலும் அதன் வளர்ச்சியிலும் Rahul Sood அளப்பரிய பங்காற்றுவார்” என தெரிவித்துள்ளார். .
இதே நேரம் , இந்தத் தொடருக்கான ஒளிபரப்பாளர்கள் உரிமையைப் பெற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளின் பெயர் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை சுயாதீனத் தொலைக்காட்சியான ஐ.ரி.என்., இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ், பாகிஸ்தானின் ஜியோ மற்றும் பி.டி.வி (Geo and PTV) ஆகிய அலைவரிசைகள் உரிமையைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார். முன்னதாகவே இந்தப்போட்டிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட கொரோனா தொற்றுக் காரணமாக பிற்போடப்பட்ட இப்போட்டிகள் இம்மாதம் 27 ஆம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் LPL போட்டியிலிருந்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளார். கண்டி டஸ்கர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த கெயில், சொந்தக் காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற IPL போட்டியில் பங்கேற்ற கெயில், பஞ்சாப் அணிக்காக 7 ஆட்டங்களில் விளையாடி 288 ஓட்டங்களை எடுத்தார்.
உலகக் கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று போட்டிகளில் பிரேஸில், ஆர்ஜென்டினா அணிகள் வெற்றி பெற்றன. 22ஆவது உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி கத்தாரில் 2022ஆம் ஆண்டில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான தென்அமெரிக்க கண்டத்துக்குரிய அணிகளுக்கான தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 5ஆவது இடம் பிடிக்கும் அணி ‘பிளே-ஆப்’ சுற்று மூலம் வாய்ப்பை பெற முடியும்.
இந் நிலையில் உருகுவே தலைநகர் மோன்ட் வீடியோவில் நடந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் 5 முறை சம்பியனான பிரேஸில் அணி, 2 தடவை சம்பியனான உருகுவேயை எதிர்கொண்டது.குறித்த போட்டியில் பிரேஸில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில் முன்னாள் சம்பியனான ஆர்ஜென்டினா அணி, பெருவை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை சாய்த்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்கிறது. இதன்படி ,மொத்தம் உள்ள 9 அணிகளும் உள்ளூர், வெளிநாடு அடிப்படையில் குறைந்தது 6 தொடர்களில் பங்கேற்க வேண்டும்.
இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதும்.
இதுவரை நடந்த போட்டியின் அடிப்படையில் இந்தியா 360 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 292 புள்ளிகளுடனும், நியூசிலாந்து 180 புள்ளிகளுடனும், பாகிஸ்தான் 166 புள்ளிகளுடனும் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.
கொரோனா வைரஸ் திடீரென ஏற்பட்டதால் பல்வேறு தொடர்கள் ரத்து செய்யப்பட்டன. டெஸ்ட் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இதனால் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஐ.சி.சி. புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி புள்ளிகளின் சதவீத அடிப்படையில் இறுதிப் போட்டிக்கான அணிகளை தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சதவீத அடிப்படையில் ஆஸ்திரேலியா 82.2 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 75 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 60.83 சதவீதத்துடன் 3-வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.









