செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இலங்கை அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது: தமிழீழ விடுதலைப் புலிகள்

அண்மையில் இராணுவத்தினர் புதுக்குடியிருப்பில் மேற்கொண்ட தாக்குதல்களின் போது, இரசாயன ஆயுதங்களை பாவித்துள்ளனர் என விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதியான லோரன்ஸ் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

பெருந்தொகையான ஆயுதங்கள் புதுக்குடியிருப்பில் மீட்பு – பாதுகாப்பு அமைச்சு

puthukuduirruppu_.pngபுதுக் குடியிருப்பு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலிருந்து புலிகளின் பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் நேற்றும் நேற்று முன்தினமும்  மீட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள புதுக்குடியிருப்பில் படையினர் இப்போது தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த தேடுதலின் போது நம்பமுடியாதளவு பெரும் எண்ணிக்கையான புதிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர்  பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தை புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையின்போது படையினர் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட புலிகளது சடலங்களின் ஒருதொகுதியான 72 சடலங்களை படையினர் இப்பிரதேசங்களிலிருந்து மீட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார் 

பாதுகாப்பு வலயத்தில் பாரிய வெடிச்சப்தம்!

map_pudumathalan.jpgபுலிகளின் பிடியிலுள்ள பொது மக்கள் தங்கியுள்ள பாதுகாப்பு வலயத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் பாரிய வெடிச் சப்தம் கேட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களை விடுவிக்குமாறு ஒலிபெருக்கிகள் மூலம் புலிகளுக்கு படையினர் இறுதி எச்சரிக்கை விடுத்தபின்னரே இந்த பாரிய வெடிச் சப்தம் கேட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

அரசின் நிவாரண உதவிகளிலேயே பிரபாகரன் தங்கி வாழ்கிறார்.- அமைச்சர் டளஸ் அழகப்பெரும

dalas_alahapperuma.jpgஅப்பாவித் தமிழ் மக்களுக்காக அரசாங்கம் வழங்கி வரும் நிவாரண உதவிகளிலேயே புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கி வாழ்கிறார். தேவையேற்படின் எல்.ரீ.ரீ.ஈ. களை 4 நாட்களுக்குள் முற்றாக ஒழிப்பதற்கான ஆற்றல் அரசுக்கும் படையினருக்கும் உண்டு என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பு, மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை பாதுகாப்புப் படையினர் உலக யுத்த வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை பதித்துள்ளனர். எமது உண்மையான எதிரிகளான புலிகள் ஒழிந்துள்ள இடத்தை படையினர் கண்டுபிடித்துள்ளபோதும் பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக புலிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதில்லை.

புலிகளுக்கு அரசாங்கத்தினால் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை முடக்கி விட்டால் அவர்கள் இயற்கை மரணத்தை எய்துவார்கள். எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியின்படி உணவை ஒருபோதும் ஆயுதமாகப் பயன்படுத்தாது.

பயங்கரவாதத்துக்கெதிராக அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் ஈட்டிய கௌரவமான வெற்றியை சர்வதேச சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நேற்றுவரை 64147 பேர் வந்துள்ளனர் – அமைச்சர் மஹிந்த

pr-con-02042009.jpgஅரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நேற்றுவரை 64147 பேர் தப்பி வந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

அரசாங்கம் வழங்கியுள்ள வாகனங்கள் மற்றம் ஏனைய வசதிகளைப் பயன்படுத்தி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் 7556 பொது மக்களை அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் கொண்டுவந்துள்ளது. இவர்களுள் 3488 பேர் நோயாளர்களாவர். ஏனைய 4068 பேரும் நோயாளர்களின் உறவினர்களாவர்.

இடம்பெயந்தேர் தங்கியுள்ள 15  இடைத்தங்கல் முகாம்களுக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புது வருடத்துக்கு முன்னர் சகல இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்களைச் சந்திக்கும் விசேட அறைகள் அமைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

பிரபாகரன் உடனடியாக சரணடைய வேண்டும். புலிகளுக்கு கடைசி அறிவிப்பு.

thalai.jpgபிரபாகரன் உடனடியாக சரணடைய வேண்டும். பொதுமக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுதான்  கடைசி அறிவிப்பு. என யுத்த தவிர்ப்பு பிரதேசத்தில் படையினர் ஒலிபெருக்கிகளில் மூலம் இன்று அறிவிப்பு விடுத்துள்ளதாக சில சிங்கள இணைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிவதே கொல்லப்பட்டோருக்கு நாம் செலுத்தும் கெளரவம் – ஜனாதிபதி

mahinda.jpgநாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து ஐக்கிய இலங்கையில் பல்லின மக்களையும் ஒற்றுமையாய் வாழும் சூழலை ஏற்படுத்துவதே பயங்கரவாதத்தால் பலிகொள்ளப்பட்ட தலைவர்களுக்குச் செய்யும் உயர்ந்த கெளரவமாகும். அதற்கெதிரான எத்தகைய அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுக்கத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமரர் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளாகி கொலையுண்ட ஒரு வருட காலத்திற்குள் அதற்குக் காரணமான பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடிக்க முடிந்துள்ளதெனவும் தெரிவித்த ஜனாதிபதி ஜெயராஜ் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய வெற்றிகளைக் கண்டு பெருமிதமடைந்திருப்பார் எனவும் தெரிவித்தார்.

அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் சிரார்த்த தினத்தையொட்டி அன்னாரின் பாராளுமன்ற உரைகள் அடங்கிய தொகுப்பு நாலும் ஞாபகார்த்த முத்திரைவெளியீடும் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. சபாநாயகர் உட்பட பெருமளவிலான அமைச்சர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை அரசியல் ரீதியாகவன்றி எனது சகோதரனாகவே பார்க்கின்றேன். அரசியல் ரீதியான போராட்டங்களிலும் என்னோடு நெருங்கி செயற்பட்டவர் என அவரைக் குறிப்பிட முடியும். அவர் இல்லாத இத்தகைய நிகழ்வொன்றில் நான் உரையாற்றுவேன் என நான் எதிர்பார்த்ததேயில்லை. இது எமது துரதிர்ஷ்டம்.

அவர் இல்லாத போதுதான் அவர் பற்றிய இழப்பு எமக்கு புலப்படுகிறது. நாடு மீளக்கட்டியெழுப்பப்படும் நிலை யில் அவரின் வெற்றிடம் உணரப்படுகிறது. சட்டக் கல்லூரியில் அவருடனான நெருக்கம் ஏற்பட்டது. விடுமுறையில் எமது ஊருக்கு வருவார். நாம் யாழ்தேவி ரயிலில் யாழ்ப்பாணம் சென்றது ஞாபகத்துக்கு வருகிறது.

மும்மொழிகளிலும் தேர்ச்சியுள்ள அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதிலும் விவாதிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். சவாலுக்கு முகங்கொடுக்கக் கூடிய துணிவு, ஆளுமையுள்ள குரல் ஆகியவற்றின் மொத்த உருவமாக அவர் திகழ்ந்தார். பாராளுமன்றத்தில் அனைவரோடும் நெருக்கமும் மிகுந்த அன்பும் கொண்டி ருந்த அவர் 2007 வரவு செலவுத் திட்டத் தின் போது பாராளுமன்றத்தில் மேற் கொண்ட நடவடிக்கை அபாரம். சிலர் கட்சிதாவ முயற்சித்த வேளை சிறந்த தலை வராகவிருந்து செயற்பட்டதை என்னால் நினைவு கூரமுடியும்.

அரசியலில் தீர்மானமெடுக்கும் துணிவு மிக முக்கியமானது. அந்த வகையில் அவ ரது பங்களிப்பு முக்கியமானது. அரசியலில் மட்டுமன்றி நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய சமூக சேவை அளப்பரியது. அவ ரது மரணத்தில் கண்ணீர் செறிந்த ஆயிர மாயிரம் மக்கள் அதற்குச் சான்று. அவர் விட்டுச் சென்ற பணியை அவரது தொகுதி மக்களுக்கு அவரது மனைவி சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தொடருவார் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்

david-milib.jpgஇலங்கையின் நிலைவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாகவும், உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சிவிலியன்கள் மீதான தாக்குதல் குறித்து அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டியது இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் இறுதி நிலப்பரப்பு முற்றுகையிடப்பட்டதாக அரசாங்கத் தரப்பு வெளியிட்டுள்ள செய்திகளைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிவிலியன்களை மனித கேடயமாக புலிகள் பயன்படுத்துவதாக வெளியான தகவல்கள் குறித்து பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோதல் தவிர்ப்பு வலயத்திற்குள் படையினர் பிரவேசித்துள்ளதாகவும், சிவிலியன் பாதுகாப்பு குறித்து பிரித்தானிய அரசாங்கம் பெரும் கவலை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார்.

முன்னொருபோதும் இல்லாதவாறு யுத்த நிறுத்தத்தின் அவசியம் அதிகரித்துள்ளதாகவும், சிவிலியன்கள் அபாயகரமான வலயத்திலிருந்து சுதந்திரமாக வெளியேற தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ஒரேநேரத்தில் கூடுதல் பொது மக்கள் வெளியேறி வரலாமென எதிர்பார்ப்பு

badurdeen.jpgபுதுக் குடியிருப்பு- புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஒரே நேரத்தில் கூடுதலான பொது மக்கள் வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரலாமென எதிர்பார்க்கப்படுவதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இவ்வாறு ஒரே நேரத்தில் வரும் கூடுதலான மக்களைத் தங்க வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கென வவுனியாவில் பாடசாலைகள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரச அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்ததாக அமைச்சர் கூறினார்.

பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறுவதற்கு மக்கள் தயாராகி வருவதாக அரசாங்கத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. நேற்று முன்தினமும் சுமார் இரண்டாயிரம் பேர் வெளியேறி வந்துள்ளார்கள், என்று தெரிவித்த அமைச்சர் பதியுதீன், ஒரே தடவையில் பெருந்திரளானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

இவர்களைத் தங்க வைப்பதற்கு நிவாரணக் கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகக் கூறிய அமைச்சர் ரிஷாட், சிலவேளை, மக்கள் வருவதற்கு முன்னர் இந்தத் தற்காலிகக் குடியிருப்புகளான வீடுகளை நிர்மாணித்து முடிக்கலாமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி முகாம்களிலும் தங்கியுள்ள மக்களின் நலன்கள் குறித்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வவுனியாவில் அரச அதிகாரிகளுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போதே, வெளியேறி வரவிருக்கும் மக்களைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கின்றார்.

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைப் படையினர் முழுமை யாகக் கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அங்கிருந்து பொதுமக்கள் முற்றாக வெளியேறியதன் பின்னரே, புலிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடருமெனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலைமையின் தற்போது புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வெளியே ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அங்குள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன மேற்கொண்டு வருகிறார் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் இவ்வேளையில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்த முயற்சிக்கலாம் – பிரதமர்

pm-srilanka.jpgசர்வதேச யுத்த ஒழுங்கு விதிகளை மீறி அப்பாவி பொது மக்கள் தங்கி இருக்கும் பாதுகாப்பு வலயத்தினுள் மறைந்திருந்தபடி புலிகள் படையினர் மீது தாக்குதல்களை நடாத்துவதாகப் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது குற்றஞ்சாட்டினார்.புலிப் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து சவப்பெட்டிக்குள் அடக்கம் செய்யும் இறுதித் தருணம் நெருங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சவப்பெட்டிக்கு இறுதி ஆணி அடிக்கும் இவ்வேளையில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்த முயற்சிக்கலாம். அதனால் முன்னெச்சரிக்கையோடு பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். புலிப் பயங்கரவாதம் காரணமாக மூன்று தசாப்தங்கள் பின்னடைந்த இந்நாட்டை இரண்டு மூன்று மடங்காக துரித மாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.