எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

2 மகள்களை 10 வருடமாக கற்பழித்த காமவெறி தந்தை கைது

19-father.jpgநெஞ்சை உறைய வைக்கும் வகையில், தனது இரு மகள்களை கடந்த பத்து வருடங்களாக கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்து கற்பழித்து வந்த காமக் கொடூர தந்தையை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

சமீபத்தில்தான் ஆஸ்திரியாவில் ஜோசப் பிரிட்ஸல் என்பவரை அங்குள்ள போலீஸார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் என்னவென்றால், தனது மகளை 25 ஆண்டுகளாக வீட்டின் இருட்டறையில் அடைத்து வைத்து கற்பழித்தார் என்பதே.  இந்த நிலையில் மும்பையில் இப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் 61 வயதாகும் ஒரு தொழிலதிபர். இந்த கொடும் குற்றத்திற்கு அவரது மனைவியும் துணை போயுள்ளார் என்பதுதான் நெஞ்சை பதற வைக்கும் செய்தியாக உள்ளது. அந்த தொழிலதிபர் தனது 21 வயது மகளை கடந்த பத்து வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார். மேலும் 15 வயதாகும் 2வது மகளையும் கடந்த சில மாதங்களாக இதே செயலுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். தனது தங்கையையும் தந்தை கேவலப்படுத்த ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த மகள் தனது தாய் வழி பாட்டியிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். இதையடுத்து இந்த அசிங்கமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

ஹஸ்முக் ரத்தோட் என்ற மடச் சாமியார் ஒருவர் கொடுத்த அட்வைஸ்படிதான் இந்த அசிங்கமான செயலை செய்து வந்துள்ளார் அந்த தொழிலதிபர். அந்த கேடிச் சாமியார்தான், உங்களது மகள்களை கற்பழித்தால் குடும்பம் விருத்தி அடையும் என கூறினாராம். தனது மூத்த மகளை 11வயதிலிருந்து கற்பழித்து வந்துள்ளார் அந்தத் தந்தை. மேலும் சாமியாரின் பேச்சைக் கேட்டு தனது இளைய மகளையும் கற்பழிக்க ஆரம்பித்தார். இதில் கொடுமை என்னவென்றால், அந்த சாமியாரும், தொழிலதிபரின் 2வது மகளை சிலமுறை கற்பழித்துள்ளார் என்பதுதான். தற்போது போலீஸார் அந்த கொடூர தந்தை, அத்தனையும் தெரிந்தும் அமைதியாக இருந்து வந்த அவரது மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளனர் என இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

மகளுடன் கூடா உறுவுகொண்ட தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்

ஆஸ்டிரியாவில் தன் சொந்தப் புதல்வியுடன் தகாத உறவு கொண்டு அவரை இருபது ஆண்டுகளுக்கும் மேல் பூட்டிவைத்து, அவர் மூலம் 7 குழந்தைகளப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜோசப் பிரிட்சில் என்ற ஆஸ்டிரிய குடிமகன் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந்த திடிர் மாற்றத்துக்கான காரணம் என்ன என்று நீதிபதி கேட்டபோது, வீடியோ ஒலிபதிவில் தனது புதல்வியின் சாட்சியத்தை தாம் கேட்டமையே இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

பிரிட்சில்லுக்கு தற்போது வயது 73. இவருக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கப்படலாம். குடும்பத்துக்குள் கூடா உறவு மற்றும் கற்பழிப்பு, தவறாக தடுத்து வைத்தல் ஆகிய குற்றங்களை ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்த பிரிட்சில் புதல்வியை அடிமைப் படுத்தி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்துவந்தார். மகளுக்கு பிறந்த குழந்தைகளில் ஒன்றை, அது பிறந்த சில நாட்களுக்குள்ளாகவே கொலை செய்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்து வந்தார்.

TMVP ஆட்சியிலிருந்த களுவாஞ்சிக்குடி பிரதேச சபை நேற்று முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சபையாக மாற்றம்

slfp-tmvp.jpgTMVP ஆட்சியிலிருந்த களுவாஞ்சிக்குடி பிரதேச சபை நேற்று (மார். 18) முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சபையின் தவிசாளரான எஸ். பாக்கியராசா, உப தவிசாளருடன் மேலும் மூன்று ரி. எம். வி. பி. உறுப் பினர்களும் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஒன்பது உறுப்பினர்களில் 6 பேர் ரி. எம். வி. பி. கட்சியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒருவர் தொடர்ந்தும் அக் கட்சியிலேயே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக் கட்சிக்கு மாறிய உறுப்பினர்கள் அக் கட்சியின் உறுப்புரிமையையும் பெற்றுக்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் கீழ் வரும் இரண்டாவது பிரதேச சபை இதுவாகும். ஏற்கனவே, ஓட்டமாவடி பிரதேச சபை இக்கட்சியின் ஆட்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

55வது படையணியின் கட்டுப்பாட்டுக்குள் பட்டிக்கரை பிரதேசம்.

safe_zone.jpgசாலைப் பிரதேசத்துக்கு தெற்காக 55வது படையணியினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடந்த மார்ச் 17ம் திகதி நடந்த கடும் மோதலைத் தொடர்ந்து பட்டிக்கரைப் பகுதியில் தமது முழுக்கட்டுப்பாட்டை 55வது டிவிசன் கொண்டு வந்துள்ளனர். இதே வேளை இப்பகுதிக்கு தெற்காக புலிகள் அமைத்திருந்த பாரிய மண் அணைக்கட்டை படையினர் கைப்பற்றி புலிகளுக்கு கடும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் பட்டிக்கரைப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினரின் சினைப்பர் தாக்குதலில் 8 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது

திருமலை சிறுமியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் வரதராஜா ஜனார்த்தனன் சயனைட் அருந்தி தற்கொலை

Regie_Varsaஜூட் ரெஜி வர்ஷா (வயது 6 ) என்ற சிறுமியை கடத்தி பின்னர் படுகொலை செய்த சம்பவம் தொடர்புடைய சந்தேக நபரொருவர் இன்று சயனைட் அருந்தி தற்கொலை செய்துள்ளார். ஜனா எனப்படும் வரதராஜா ஜனார்த்தனன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் என பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

உப்புவெளி பகுதியில் தங்களது ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் காட்டுவதாகக் கூறியதையடுத்து பொலிஸார் இவரை அங்கு அழைத்துச் சென்ற போது அங்கு இரண்டு கைக்குண்டுகள் கண்டுபிடிக்கபப்ட்டதாகவும், அந்த சமயம் இவர் சயனைட் உட்கொண்டதாகவும் பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. பின்னர் இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.

இச்சிறுமியின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைதான போதிலும் பிரதான சந்தேக நபர் ஏற்கனவே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தார். இன்று சயனைட் உட்கொண்ட நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன 

மோதல் இடம்பெறும் பிரதேசத்தில் “கெயர்” நிறுவனப் பணியாளர் ஒருவர் பலி

care.jpg“கெயர்” எனப்படும் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்ளும் அரசியல் சார்பற்ற அமைப்பின் ஊழியர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை மோதல்கள் இடம்பெறும் வன்னி பிரதேசத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக “கெயர்” நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பலியானவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் “கெயர்” நிறுவனம் சார்பில் பணிகளை மேற்கொண்டு வந்த ஆர்.சபீசன் (வயது24) என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எறிகணை தாக்குதல் காரணமாக அவரது காலில் காயம் ஏற்பட்டதாகவும் போதிய மருத்துவ வசதி கிடைக்காத காரணத்தால் அவர் மரணம் ஆனதாக கெயர்” மேலும் தெரிவித்துள்ளது. 

திருகோணமலைச் சிறுமியின் கொலையுடன் ரிஎம்விபி யினரின் தொடர்பு மூடி மறைக்கப்படுகின்றது. – அனுரகுமார திசாநாயக்க

Regie_Varsaதிருகோண மலையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் கொலையுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு உள்ள தொடர்பை மூடி மறைக்க பல வழிகளாலும் முயற்சிகள் இடம் பெறுவதாக ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதை தெரிவித்த அவர் அம்முயற்சியின் ஒரு பகுதியாக திருமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டரை இடமாற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இக்கொலை தொடர்பான விசாரணைகள் திருமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்த்தன அவர்களின் தலமையில் இடம்பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இருவார காலத்தில் 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் முல்லைத்தீவுக்கு! – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தகவல்

sb_diwarathnass.jpgகடந்த இருவார காலத்தில்; 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் முல்லைத்தீவில் விடுவிக்கப்படாத பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு ஆணையாளர் மேலும் கூறியதாவது,

இந்த 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் இரு கட்டங்களாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட கப்பல்மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. முல்லைத்தீவில் துறைமுகம் இல்லாத காரணத்தால் கப்பல் கடலில் நங்கூரமிடப்பட்டு சிறு படகுகள் மூலமே தரையிறக்கப்பட்டன. பின்னர் இக்கப்பல் மூலம் முல்லைத்தீவில் புலிகளிடம் சிக்கியுள்ள நோயாளிகள் திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இவ்வாறு கடந்த பெப்ரவரி மாதம் முதல் இம்மாதம் 16 ஆம் திகதிவரையில்  4116 நோயாளிகள் திருகோணமலைக்கு கப்பல் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

புலிகளால் அச்சுறுத்தல் இருந்தபோதும் ஒரு மாதத்துக்கு மூன்று முறை இக்கப்பல் மூலம் முல்லைத்தீவுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் நடவடிக்கை பல கஷ்டங்களுக்கும் மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

மட்டக்களப்புவரை நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் சேவை! அமைச்சர் டளஸ் அழகப்பெரும பாராளுமன்றத்தில் அறிவிப்பு

parliament.jpgகொழும்புக் கோட்டையிருந்து மட்டக்களப்பு வரையில் நகரங்களுக்கு இடையிலான புதிய ரயில் சேவையொன்று இவ்வார இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சகல ரயில் என்ஜின்களும் இப்பொது சேவையிலீடுபடடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஆதர்- சி – க்ளார்க் நினைவு தின சொற்பொழிவு இன்று

arthur_c_clarke.jpgசர்வதேச புகழ்பெற்ற விஞ்ஞானி ஆதர் சி. க்ளார்க்கின் முதலாவது சிரார்த்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நினைவு தின சொற்பொழிவொன்று இடம்பெறவுள்ளதாக விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

நவீன தொழில்நுட்பத்துக்கான ஆதர் சி. க்ளார்க் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நினைவு தின சொற்பொழிவை இந்திய விஞ்ஞானியான கலாநிதி கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் நிகழ்த்துவார். பெங்களுரிலுள்ள உயர் கல்விக்கான தேசிய நிறுவனத்தின் பணிப்பாளரான இவர் இந்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனங்கள் பலவற்றிலும் பணியாற்றியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச வங்கிகளில் கடன்களை மீளச் செலுத்தாத 5512 பேருக்கு எதிராக வழக்கு – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தகவல்

ranjithsiyabalapitiya.jpg இலங்கையின் அரச வங்கிகளில் பெற்ற கடன்களை மீளச் செலுத்தாத 5512 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரச வருமான மற்றும் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறு பெற்றுக்கொண்ட கடன்களின் மொத்தப் பெறுமதி 17800 மில்லியன் ரூபாவாகும் எனத் தெரிவித்த அமைச்சர் கடன்களை மீளச் செலுத்தாதவர்களுக்கு சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்;.