“கெயர்” எனப்படும் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொள்ளும் அரசியல் சார்பற்ற அமைப்பின் ஊழியர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை மோதல்கள் இடம்பெறும் வன்னி பிரதேசத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக “கெயர்” நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பலியானவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் “கெயர்” நிறுவனம் சார்பில் பணிகளை மேற்கொண்டு வந்த ஆர்.சபீசன் (வயது24) என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எறிகணை தாக்குதல் காரணமாக அவரது காலில் காயம் ஏற்பட்டதாகவும் போதிய மருத்துவ வசதி கிடைக்காத காரணத்தால் அவர் மரணம் ஆனதாக கெயர்” மேலும் தெரிவித்துள்ளது.