சர்வதேச புகழ்பெற்ற விஞ்ஞானி ஆதர் சி. க்ளார்க்கின் முதலாவது சிரார்த்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நினைவு தின சொற்பொழிவொன்று இடம்பெறவுள்ளதாக விஞ்ஞான தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
நவீன தொழில்நுட்பத்துக்கான ஆதர் சி. க்ளார்க் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நினைவு தின சொற்பொழிவை இந்திய விஞ்ஞானியான கலாநிதி கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் நிகழ்த்துவார். பெங்களுரிலுள்ள உயர் கல்விக்கான தேசிய நிறுவனத்தின் பணிப்பாளரான இவர் இந்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனங்கள் பலவற்றிலும் பணியாற்றியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.