எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ராமர் கோயில் கட்டியபிறகே ஜெய்ஸ்ரீராம் சொல்வேன்: அத்வானி

advanil000.jpgஅயோத்தி யில் ராமர் கோயில் கட்டி முடித்த பின்னரே பெருமையுடன் ஜெய்ஸ்ரீராம் சொல்வேன் என பா.ஜ.பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். அலகாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அத்வானி, ராமர் பிறந்த அயோத்தியில் எப்போது கோயில் கட்டி முடிக்கப்படுகிறதோ அப்போது தான் என்னால் மன திருப்தியுடன் பெருமையுடன் ஜெய்ஸ்ரீராம் சொல்ல முடியும். வரும் தேர்தலில் பா.ஜ.கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிக தன்னம்பிக்கை காரணமாக 2004 ல் கோட்டை விட்டோம். அந்த தவறை மீண்டும் செய்து விடக்கூடாது.

மத்தியில் காங்கிரஸ் அல்லது பா.ஜ. உதவி இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே மத்தியில் ஆட்சியைப் பிடிப்போம் என 3 வது அணியினர் கூறுவதை சீரியசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளின் வங்கிகளில் மறைந்து கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களில் அவை முதலீடு செய்யப்படும்.

பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்த போது பொடா போன்ற தீவிரவாத தடுப்பு சட்டங்களால் தீவிரவாத குழுக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாக்குவங்கி அரசியலுக்காக பொடாவை ரத்து செய்துவிட்டது.

அப்சல் குருவின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்த பின்னரும் மத்திய அரசு நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்துள்ளது. அப்சலை தூக்கிலிடக்கூடாது என எந்த முஸ்லிமும் கோரிக்கை வைக்கவில்லை. அப்சலை தூக்கு தண்டனையை தள்ளிப்போட்டால் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என அரசு நினைக்கிறது. உண்மையில் இது முஸ்லிம்களை அவமதிக்கும் செயலாகும் என்றார்.

ஹரியானா-காங். எம்பி நவீன் மீது ஷூ

10-naveen.jpgஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தின் போது காங்கிரஸ் எம்.பி நவீன் ஜின்டால் மீது ஷூ வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் ஷூ விசியவரை கைது செய்தனர்.

சமிபத்தில் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீது சீக்கிய நிருபர் ஜர்னைல் சிங் ஷூவை விசி இந்திய அரசியலை பரபரப்பாக்கினார். இந்நிலையில்  காங்கிரஸ் எம்.பி ஜின்டால் இம்முறை தான் மீண்டும் போட்டியிடும் குருஷேத்ரா தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த ராம் குமார் என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஜின்டால் மீது ஷூ வீசினார். ஆனால், ஷூ அவர் மீது படாமல் சென்றது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து, கூட்டத்தில் இருந்து தூக்கி சென்றனர்.

அப்போது ராம் குமார் கூறுகையி்ல, காங்கிரசின் கொள்கைகள் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் ஷூ வீசினேன் என்றார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிரமங்கள்

rain-wanne.jpgவடக்கில் பெய்யும் மழை காரணமாக  காயமடைந்து புதுமாத்தளன் வைத்தியசாலைக்குச் செல்கின்ற காயமடைந்தவர்களையும்,  ஏனைய நோயாளர்களையும் பொறுப்பேற்று சிகிச்சையளிப்பதில் வைத்தியர்களும், ஊழியர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நேற்றிரவு காற்றுடன் தொடங்கிய மழை சிறிது நேர இடைவெளியின் பின்னர் தொடர்ச்சியாகப் பெய்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேனனுடன் பேச தமிழ்க் கூட்டமைப்புக்கு அழைப்பு. தற்போதைய சூழ்நிலையில் அதை ஏற்றுக்கொள்வதில்லை -கூட்டமைப்பு

tna-mp-22.jpgஇலங்கை நிலைவரம் தொடர்பாக இந்திய வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு அடுத்த வாரம் புதுடில்லிக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் தற்போதைய சூழ்நிலையில் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. 

இந்த அழைப்புத் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி ஆராய்ந்தது. கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ்நாடு சென்றிருப்பதால் பாராளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவின் அழைப்பை ஏற்றுக்கொள்வதில்லையென்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

சோனியாகாந்திக்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியான செய்தியை நடேசன் மறுப்பு

p_nadesan.jpgஇந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி உட்பட்ட இந்திய தலைவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாக உள்ளதாக வெளியான செய்தியை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் மறுத்துள்ளார். இந்திய உளவுத் துறை விடுத்துள்ள அந்த எச்சரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து சி.என்.என்-ஐ.பி.என் எனும் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் மின்னஞ்சல் விடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில்,  தமிழர்களின் அவலத்தையும், அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும் மறைக்கவும், திசை திருப்பவும் இப்படிப்பட்ட விஷமத்தனமாக பிரச்சாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுதலைப் புலிகள் தாக்கலாம் என்று இந்தியாவின் உளவுத் துறை வெளியிட்ட எச்சரிக்கை, இந்திய மக்களை திசைதிருப்பும் நடவடிக்கை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியுள்ளது. சோனியா காந்திக்கோ அல்லது அவருடைய பிள்ளைகளுக்கோ எங்களிடமிருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று நடேசன் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியுடன் பான் கீ மூன் உரையாடல்

mahinda-banki.jpgஇலங்கையில் யுத்தம் காரணமாக நிலவும் மனிதாபிமான சூழ்நிலை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில் விசேட தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

யுத்த வலயத்தில் சிக்கியுள்ள சிவிலியன்கள் பாதுகாப்பாக இடம்நகர்த்தப்பட வேண்டுமென பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். மோதல்கள் உக்கிரமடைந்து செல்லும் இந்தத் தருவாயில் அப்பாவிச் சிவிலியன்களது நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவலை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

லண்டன் இந்திய தூதரம் முன்னுள்ள நேருவின் உருவச்சிலை சேதம்

indiahouse.jpgலண்டனிலுள்ள இந்திய தூதரகம் முன்னுள்ள ஜவஹர் லால் நேருவினுடைய உருவச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

“உருவச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளது  குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .சம்பவம் நடைபெற்ற அன்று இரவு பொலிஸார் கடமையில் இருந்துள்ளனர்” என பிரித்தானியாவிற்கான இந்தியத் தூதுவர் சிவ்சங்கர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

அதேவேளை இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்கொட்லண்ட் யாட் பேச்சாளர்” இக்குற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

உண்ணாவிரத அலை எதிரொலி! நெதர்லாந்தில் உண்ணாவிரதமிருந்த தமிழர்கள் கைது: தமிழ் மாணவர்கள் மீதும் காவற்துறையினர் தாக்குதல்- வி. அருட்செல்வன்

protest-landon.jpgதாயகத்தில் உடனடியாகப் போரை நிறுத்தச்சொல்லி நேற்றும் நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்களால் தொடர் போராட்டம் நடாத்தப்பட்டது.

இதுவரை போர் நிறுத்தப்படாமல் சிறீலங்கா அரசானது தொடர்ந்து வன்னியில் தமிழ்மக்கள்மீது தாக்குதல்களை நடாத்தியதை அறிந்து நேற்று மாலையிலிருந்து மூன்று தாய்மார்,  இரண்டு ஆண்கள் என ஐந்து பொதுமக்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தனர். ஆனால், இதற்கு காவற்துறை அனுமதி மறுத்திருந்தது. உண்ணாவிரதம் இருந்தவர்களையும் அவர்களிற்கு ஆதரவாக போராட்டத்தினை நடாத்தியவர்களையும் கலைந்து போகுமாறும் இல்லையேல் கைது செய்வோம் எனவும் காவற்துறை எச்சரித்திருந்தது.

இருந்தும் எமது உறவுகள் படுகொலை செய்யப்படுகின்றபொழுது இதனை உடன் தடுத்து நிறுத்தும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என காவற்துறைக்கு அறிவித்து போராட்டத்தில் உறுதியாக இருந்தனர்.

இதன்பின் அனைவரையும் சுற்றிவளைத்து காவற்துறையினர் கைது செய்தபொழுது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இக் கைதை எதிர்த்து கோசங்களை எழுப்பியபொழுது அம்மாணவர்களை காவற்துறையினர் தாக்கி கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். முப்பது பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

பிரித்தானியாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் மாணவர்கள்  ஐ.நா சபைக்கு அனுப்பிவைக்கப்படுவர்

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரியும் அங்கு போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்தக்கோரியும் லண்டனில் வெஸ்ற் மினிஸ்ரர் பாராளுமன்றம் முன்னாக நடைபெற்று வரும் போராட்டம் 5வது நாளாகவும்  தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப் போராட்டத்துடன் இணைந்த வகையில் இலண்டனில் ஈழத்தமிழர்கள் இருவர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து இன்று 4ஆவது நாளாகும்

பிரித்தானியாவில் தமிழர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்திவரும், இலண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இந்த இளைஞர்கள் இருவரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இன்று 4ஆவது நாளாகவும் தொடர்ந்து நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரன், சிவதர்சன் ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக போவதை அறிந்து காவற்துறை மருத்துவர்கள் அடிக்கடி இவர்களின் உடல்நிலையை பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.

இறுதியாக, நீர் அருந்தாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என தெரிவித்திருந்தனர்.  இதனை அறிந்த மிட்சம் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மைக் டொனால்ட் நேரடியாக உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு வந்து நீரை அருந்துமாறு வேண்டிக்கொண்டார்.

ஆனால், தமிழினப் படுகொலைகளை தடுத்து நிறுத்த உடனடிப் போர் நிறுத்தத்தை இம்மாணவர்கள் வலியுறுத்தினர். இறுதியாக, அடுத்த வாரம் அமெரிக்கா, நியூயோர்க்கில் அமைந்திருக்கும் ஐ. நா சபைக்கு இம்மாணவர்களை அனுப்புவதாக திரு.மைக் டொனால்ட் உறுதியளித்தார். இதன்பின்னர், இம்மாணவர்கள் நீர் அருந்தி உண்ணாவிரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர்.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்திற்கு வருகை சிவதர்ஷன் உண்ணாவிரதம் இடைநிறுத்தம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்திற்கு வருகை தந்து சந்திப்பை நடத்தியிருக்கின்றார்.  இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பிற்கு செல்ல வேண்டிய காரணத்தால் சிவதர்சன் சிவகுமாரின் உண்ணாநிலைப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு பிரித்தானிய அரசின் சார்பில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். உறுதிமொழியை அடுத்தே சிவதர்சன் சிவகுமாரின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்வார் என்று பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் ஏற்றப்பட்டிருந்த தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியையும் இறக்குமாறு பிரித்தானிய அரசு கேட்டுக்கொண்டதையடுத்து அங்கு ஏற்றப்பட்டிருந்த புலிக்கொடியும் இறக்கப்பட்டுள்ளதுடன் ஒலிபெருக்கிகளில் முழக்கமிடுவதையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் நிறுத்தியுள்ளனர்.

நியுசிலாந்தில் மூவர் உண்ணாநிலைப் போராட்டம்

நியுசிலாந்தில் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக நியுசிலாந்தில் வசிக்கும் புலம்பெயர் தமிழர் மூவர் உண்ணாநிலை போராட்டத்தை  நேற்றிலிருந்து ஆரம்பித்திருந்தனர்.
 
பிரான்சில் புதிய இடத்தில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வில் உண்ணாவிரதம்.

protest-france-jpg.jpgகடந்த திங்கட்கிழமையில் இருந்து,  இன்வலிட் பகுதியில்  ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சியான கவனயீர்ப்பு நிகழ்வானது, நேற்றுப் புதன்கிழமையில் இருந்து ஈவிள் கோபுரம் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் தொடரப்பட்டது. பேரெழுச்சியுடன் நடைபெற்றிருந்த கவனயீர்ப்பு நிகழ்வில் பல ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை நிலவரம் தொடர்பில் கடந்த புதன்கிழமை இரவு முதல் பிரான்ஸில் தமிழர்கள் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். ரவிராஜ் ஆனந்தகுமாரசாமி, வர்ணன் விக்கினேஸ்வரன் ஆகிய இருவரும் இணைந்தே இவ் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். இதே வேளை வியாழக்கிழமை (09.04.2009) பாரீஸ் நகரத்தில் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டமும், உண்ணாநிலைப் போராட்டமும் தொடரப்பட்டு வருவதுடன், மேலும் நவநீதம் சண்முகராஜா, செல்வகுமார் அல்பேட் ஆகியோரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப் பதிவு

1102-vaiko.jpg“பிரபாகரனுக்கு ஏதாவது ஏற்பட்டால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும். இந்தியா ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது” என்று உரையாற்றிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது பொலீஸார் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.

வைகோ மீது சென்னை வடக்கு கடற்கரை போலீஸார், இந்திய தண்டனை சட்டம் 505 (1) (பி) மற்றும் 2004 சட்டவிரோத செயல்கள் தடுப்பு திருத்த சட்டம் 13 (1) (பி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் வைகோ கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதேவேளை வைகோவின் இந்தப் பேச்சு சட்டம் ஒழுங்கு தொடர்பானது என்று கூறிய மத்திய துணைத் தேர்தல் ஆணையர் பிரகாஷ், வைகோ மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

புலிகளிடமிருந்து பொது மக்களை மீட்கும் விசேட படை நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும்- பிரியதர்ஷன யாப்பா

anura-piriyadarshana-yappa.jpgபுலிகளின் பிடியிலிருந்து பொது மக்களை மீட்கும் விசேட படை நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் தொடாந்தும் கூறுகையில்,

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் அரசின் மனிதாபிமான நடவடிக்கை பாரிய வெற்றி பெற்றுள்ளது. புலிகளிடமிருந்த முழு நிலப்பரப்பும் படையினரால் மீட்கப்பட்டதையடுத்து அவர்கள் இப்போது பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தி ஒழிந்து வாழ்கின்றனர்.

இந்த அப்பாவித் தமிழ் மக்களை மீட்டு பயங்கரவாதிகளை முற்றாக அழித்து நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் அதனைத் தொடர்ந்த பாரிய அபிவிருத்தியையும் ஏற்படுத்தும் நோக்கில் அரசு விசேட படை நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்கும். அது எப்போது எவ்வாறு ஆரம்பிக்கப்படும் என்பதைக் கூறமுடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்த நடவடிக்கைகளுக்கு அரசு மிகப் பெரும் தொகைப் பணத்தைச் செலவிடுகின்றது. கடந்த வருடம் 164 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இவ்வருடம் 171 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டாலும் அதன் பலன் நாட்டுக்குக் கிட்டியுள்ளது. மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள புலிகளையும் விரைவில் அழித்து நாட்டில் அமைதியையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவோம்..யுத்தச் செலவுகளுக்கு மத்தியிலும் பொது மக்களுக்கு அரசு வழங்கும் மானியங்களை நாம் ;குறைத்து விடவில்லை. இவ்வரும் ஏப்ரல் மாதம் வரையில் 25000 மில்லியன் ரூபாவுக்கு உர மானியம் வழங்கியுள்ளோம். 

கடந்த வருடத்தில் எமது நாட்டின் விவசாய உற்பத்திகள் 23 சத வீதத்தால் உயர்ந்துள்ளன. அதனால்தான் உலக பொருளாதா வீழ்ச்சியின் தாக்கத்தை எமது இலங்கை மக்கள் வெகுவாக உணரவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.