“பிரபாகரனுக்கு ஏதாவது ஏற்பட்டால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும். இந்தியா ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது” என்று உரையாற்றிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது பொலீஸார் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.
வைகோ மீது சென்னை வடக்கு கடற்கரை போலீஸார், இந்திய தண்டனை சட்டம் 505 (1) (பி) மற்றும் 2004 சட்டவிரோத செயல்கள் தடுப்பு திருத்த சட்டம் 13 (1) (பி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் வைகோ கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதேவேளை வைகோவின் இந்தப் பேச்சு சட்டம் ஒழுங்கு தொடர்பானது என்று கூறிய மத்திய துணைத் தேர்தல் ஆணையர் பிரகாஷ், வைகோ மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது எனவும் தெரிவித்துள்ளார்.